ராம்சரணை இயக்கும் ‘புஷ்பா’ பட இயக்குனர்.; இசையமைப்பாளர் இவரா.?

ராம்சரணை இயக்கும் ‘புஷ்பா’ பட இயக்குனர்.; இசையமைப்பாளர் இவரா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நடிகர் ராம்சரணை இயக்கும் ‘புஷ்பா’ பட இயக்குனர்.; இசையமைப்பாளர் இவரா.?

குளோபல் ஸ்டார்’ ராம்சரண்- மைத்ரி மூவி மேக்கர்ஸ் – இயக்குநர் சுகுமார் கூட்டணியில் படம்..

இயக்குநர் சுகுமாரும், ராம்சரணும் காவிய பாணியிலான சினிமா முயற்சியில் இணையவுள்ளனர்.

எஸ். எஸ். ராஜமௌலியின் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் சுகுமாருடன் ராம் சரண் இணைந்திருப்பது.. நடிகரின் திரையுலக பயணத்தில் புதிய மைல்கல்லை குறிக்கிறது.

‘ஆர் ஆர் ஆர்’ படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டிற்கு பிறகு ராம்சரண் உலகளாவிய நட்சத்திரமாக உயர்ந்தபோது.. இயக்குநர் சுகுமார் அவரது இயக்கத்தில் வெளியான ‘புஷ்பா’ படத்தின் வெற்றியால் பெரும் புகழை பெற்றார்.

இவர்கள் இருவரும் இணையும் திரைப்படத்தின் தயாரிப்பு பணிகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெயரிடப்படாத இப்படம் 2025 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் பிரம்மாண்டமாக வெளியிடுவதை இலக்காகக் கொண்டிருக்கிறது.

‘ரங்கஸ்தலம்’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ராம்சரண் -சுகுமார் -மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் ‘ராக்ஸ்டார்’ டிஎஸ்பி கூட்டணி 2வது முறையாக இணைந்துள்ளது.

இந்தத் திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கிறது.

‘குளோபல் ஸ்டார்’ ராம்சரண் மற்றும் சுகுமார் இணைந்திருப்பதால்.. ரசிகர்கள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பான் இந்திய சினிமா அனுபவத்தை எதிர்பார்க்கலாம்..

RC17 Update Ramcharan acting in Sugumar direction

குடும்ப சண்டையை தாண்டி சகோதரர்கள் வாழ்வில் ஜெயிக்க ‘ஃபேமிலி படம்’

குடும்ப சண்டையை தாண்டி சகோதரர்கள் வாழ்வில் ஜெயிக்க ‘ஃபேமிலி படம்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

குடும்ப சண்டையை தாண்டி அண்ணன் தம்பிகள் வாழ்வில் ஜெயிக்க ‘ஃபேமிலி படம்’

“ஃபேமிலி படம் படத்தின் படப்பிடிப்பு கோலாகலமாக துவங்கியது

UK Creations சார்பில் K பாலாஜி தயாரிப்பில், இயக்குநர் செல்வ குமார் திருமாறன் இயக்கத்தில் நடிகர்கள் உதய் கார்த்திக் சுபிக்‌ஷா நடிக்கும் அழகான ஃபீல் குட் எண்டர்டெயினர் திரைப்படமான “ஃபேமிலி படம்” எனும் படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன், இனிதே துவங்கியது.

ஒரு குடும்பத்தில் இருக்கும் மூன்று அண்ணன் தம்பிகள், வாழ்வில் ஜெயிக்க போராடுகிறார்கள், அவர்களுக்குள் நிகழும் சண்டைகள், காதல், காமெடி என அனைத்தும் கலந்த ஒரு அழகான குடும்பத்தின் வாழ்க்கையை, அற்புதமான ஃபீல் குட் எண்டர்டெயினர் படமாக உருவாக்குகிறார் அறிமுக இயக்குநர் செல்வ குமார் திருமாறன். இப்படம் குடும்பத்தோடு அனைவரும் பார்த்து ரசிக்கும் ஜனரஞ்சக படைப்பாக இருக்கும்.

இப்படத்தில் நாயகனாக டைனோசர்ஸ் பட நாயகன் உதய் கார்த்திக் நடிக்கிறார். நாயகியாக சுபிக்‌ஷா நடிக்கிறார். இவர்களுடன் விவேக் பிரசன்னா, பார்த்திபன், ஶ்ரீஜா, சந்தோஷ், மோகன சுந்தரம், RJ பிரியங்கா, ஜனனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இப்படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. படத்தின் முக்கியமான சில காட்சிகளை மதுரையில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிவீ இசையமைக்கிறார். KP நந்து கலை இயக்கம் செய்கிறார். R சுதர்ஷன் எடிட்டிங் செய்கிறார். பெரும் பொருட்செலவில் UK Creations சார்பில் K பாலாஜி தயாரிக்க, R சின்னப்பன், நதீஷ் A ஆகியோர் இணை தயாரிப்பு செய்கிறார்கள்.

படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Family padam movie news updates

மலராத ‘மங்கை’… ‘ஒயிட் ரோஸ்’ ஆக மாறி திரைக்கு வரும் ஆனந்தி

மலராத ‘மங்கை’… ‘ஒயிட் ரோஸ்’ ஆக மாறி திரைக்கு வரும் ஆனந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலராத ‘மங்கை’… ‘ஒயிட் ரோஸ்’ ஆக மாறி திரைக்கு வரும் ஆனந்தி

நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகிறது

ஆனந்தி நடிப்பில் உருவான ‘மங்கை’ திரைப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.. ஆனால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் போதை மருந்து கடத்தலில் கைதாகி சிறையில் உள்ளார்.

இது ஆனந்தி மற்றும் படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நிலையில் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு படமான ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது அறிவித்துள்ளனர் படக்குழுவினர்.

அதன் விவரம் வருமாறு…

பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி நாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’.

இதில் நடிகர்கள் விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டிற்குத் தயாராகி இருக்கிறது. படம் ஏப்ரல் 5, 2024 அன்று வெளியாகும் எனப் படக்குழு மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.

இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதற்காக, பல லட்ச ரூபாய் செலவில் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.

இப்படத்தின் மூலமாக சுசிகணேசனின் உதவியாளர் ராஜசேகர் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். இளையராஜா ஒளிப்பதிவை கவனிக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள எழுதியுள்ளார். சுதர்ஷன் இசையமைத்துள்ளார்.

மேலும் ஜோகன் செவனேஷ் ஒரு பாடலுக்கு இசையமைத்துள்ளார். டி.என். கபிலன் கலையை கவனிக்கிறார். படத்தின் போஸ்ட் புரடெக்‌ஷன் வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படம் மிக விரைவில் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக தயாரிப்பாளர் ரஞ்சனி தெரிவித்துள்ளார்.

*நடிகர்கள்*: கயல் ஆனந்தி, ஆர்.கே சுரேஷ், விஜித், பேபி நக்ஷத்திரா, சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

*தொழில்நுட்பக் குழு விவரம்:*

இயக்குநர்: ராஜசேகர்,
தயாரிப்பாளர்: ரஞ்சனி,
தயாரிப்பு: பூம்பாரை முருகன் புரடக்‌ஷன்ஸ்,
பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,
ஒளிப்பதிவு: இளையராஜா,
இசை: சுதர்ஷன்,
ஒரு பாடல்: ஜோகன் செவனேஷ்,
கலை: டி.என். கபிலன்,
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா.

Anandhi starring White Rose got its release date

சூர்யா – சிவா கூட்டணியின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடியை கடந்து அசத்தல்

சூர்யா – சிவா கூட்டணியின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடியை கடந்து அசத்தல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா – சிவா கூட்டணியின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடியை கடந்து அசத்தல்

நடிகர் சூர்யாவின் ’கங்குவா’ பட டீசர் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது

மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கங்குவா டீசர் பிரமாண்டமாக வெளியிடப்பட்டது.

ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸ் வம்சி- பிரமோத் தயாரிப்பில், இயக்குநர் சிவா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு இதன் அறிவிப்பில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

மேக்கிங் மற்றும் விஎஃப்எக்ஸ் வேலைகளுக்காக உலகம் முழுவதிலுமிருந்து அமோகமான பாராட்டுகளை டீசர் பெற்றுள்ளது. இந்த பாராட்டுகளால் மகிழ்ச்சி அடைந்துள்ள விஎஃப்எக்ஸ் குழு படத்தில் இன்னும் சிறப்பான அவுட்புட் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

நடிகர் சூர்யாவின் ஈர்க்கும் திரை இருப்பும், தேவி ஸ்ரீ பிரசாத்தின் வசீகரிக்கும் பின்னணி இசையும், அசத்தலான காட்சியமைப்பும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. கூடுதலாக, ’அனிமல்’ படத்தின் வெற்றி மூலம் அனைவரையும் ஈர்த்த நடிகர் பாபி தியோலின் வலுவான நடிப்பும் படத்திற்கு இன்னும் வலு சேர்த்திருக்கிறது.

டீசர் வெளியான குறுகிய காலத்தில் 2 கோடி பார்வைகளைப் பெற்றுள்ளது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

சிவா இயக்கத்தில், வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் ‘கங்குவா’ படம் பிரமாண்டமாக தயாரிக்கப்பட்டு பல மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மிலன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, நிஷாத் யூசுப் எடிட்டராக பணியாற்றினார். சுப்ரீம் சுந்தர் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைத்துள்ளார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி வசனங்களை எழுதியுள்ளார். விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

சவுண்ட் அண்ட் விஷன் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த லாரன்ஸ் விஷ்ணு ரெக்கார்டிங் இன்ஜினியர். அனு வர்தன் மற்றும் தட்ஷா பிள்ளை ஆகியோர் ராஜனுடன் இணைந்து ஆடை வடிவமைப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

செரினாவும் குப்புசாமியும் ஒப்பனையை கவனித்திருக்க, ரஞ்சித் அம்பாடி சிறப்பு ஒப்பனையை கையாண்டுள்ளார். ஷோபி மற்றும் பிரேம் ரக்ஷித் படத்திற்கு நடன இயக்குநர்கள்.

இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் கே.இ. ஞானவேல் ராஜா மற்றும் யுவி கிரியேஷன்ஸின் வம்சி-பிரமோத் தயாரித்திருக்க நடிகர்கள் சூர்யா, பாபி தியோல், திஷா பதானி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Suriyas Ganguva teaser reached 20M views

யோகிபாபு – ரோபோசங்கர் – பாஸ்கர் – ஷேஷூ ஆகிய ‘பூமர் அங்கிள்’-ஸ் உடன் இணைந்த ஓவியா

யோகிபாபு – ரோபோசங்கர் – பாஸ்கர் – ஷேஷூ ஆகிய ‘பூமர் அங்கிள்’-ஸ் உடன் இணைந்த ஓவியா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு – ரோபோசங்கர் – பாஸ்கர் ஆகிய ‘பூமர் அங்கிள்’-ஸ் உடன் இணைந்த ஓவியா

ஒலிம்பியா மூவிஸ் எஸ். அம்பேத்குமார், ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் இணைந்து வழங்கும் படம் ‘பூமர் அங்கிள்’.

இந்தப் படத்தினை தில்லைராஜா எழுத ஸ்வதேஷ் இயக்கியுள்ளார்.

இதில் ஓவியா, யோகிபாபு, ரோபோ ஷங்கர், எம்.எஸ். பாஸ்கர், ஷேஷு, பாலா, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவை கவனிக்க இளையராஜா படத்தொகுப்பை மேற்கொள்கிறார். தர்ம பிரகாஷ் இசை அமைக்க ஆனந்த் கலை பணிகளை கவனிக்கிறார்.

இந்தப் படம் மார்ச் 29ஆம் தேதி வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

மேலும், இதன் தமிழ்நாடு திரையரங்க உரிமத்தை ஏவிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

‘பூமர் அங்கிள்’ காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்துள்ளது..

Boomer Uncle Movie releasing on March 29

90’s Kid’s Anthem Mia khalifa Song #BOOMER UNCLE . Movie releasing on March 29 in theatres @avsprabhu release

@iYogiBabu @OviyaaSweetz @Ankamedia2
@dopkthillai @SubashDhandapa2
@IAmAnbu5 @SDharmaprakash
@swadeshh @EditorElayaraja @johnmediamanagr @santhanmusician
@bala_vijayTv @thangadurai123 @iamsatishmohan @Mrtmusicoff
@avsprabhu

உண்மையான ஹீரோ பாரதிராஜா.. நானும் தீனாவும் அவருக்கு வில்லன்.. – ஜிவி பிரகாஷ்

உண்மையான ஹீரோ பாரதிராஜா.. நானும் தீனாவும் அவருக்கு வில்லன்.. – ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

உண்மையான ஹீரோ பாரதிராஜா.. நானும் தீனாவும் அவருக்கு வில்லன்.. – ஜிவி பிரகாஷ்

கள்வன் பட இசை வெளியீட்டு விழா

ஆக்சஸ் பிலிம் பேக்டரி ஜி. டில்லி பாபு வழங்கும், இயக்குநர் பிவி ஷங்கர் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ்-பாரதிராஜா நடிக்கும் ‘கள்வன்’ படம் ஏப்ரல் 4 அன்று வெளியாகிறது.

இதன் இசை வெளியீட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது.

பாடலாசிரியர் சிநேகன்..

“ஜிவி சாருடன் சேர்ந்து நிறைய படங்களில் பயணப்பட்டிருக்கிறேன். பாடல்களும் ஹிட் ஆகி இருக்கிறது. இசையமைப்பாளர்களுக்கு பாடல் எழுதும்போது வரிகளை ரசிக்கும் இசையமைப்பாளர் இருந்தால் எழுதுவதற்கு இன்னும் உற்சாகமாக இருக்கும். அப்படியான ஒருவர்தான் ஜிவி.

இந்தப் படத்தின் பாடல்களும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இயக்குநர் ஷங்கர் அவ்வளவு ஒற்றுமையுடன் அணியை எடுத்துச் சென்றார். ஜிவி பிரகாஷ் நடிகராகவும் இசையமைப்பாளராகவும் அடுத்தடுத்த உயரத்திற்குச் செல்வார்”.

இசையமைப்பாளர் ரேவா…

“’கள்வன்’ படம் எங்கள் எல்லோருக்குமே ஸ்பெஷல் படம். என்னை நம்பி இசையமைக்க வாய்ப்புக் கொடுத்தத் தயாரிப்பாளர், ஜிவி பிரகாஷ், இயக்குநர் என அனைவருக்கும் நன்றி. பாரதிராஜா சார், ஜிவி பிரகாஷ் சிறப்பாக நடித்துள்ளனர். நிச்சயம் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும்”.

இயக்குநர் பேரரசு…

“பாரதிராஜா சார் நடிப்பதற்காக சினிமாவுக்கு வந்து இயக்குநர் இமயம் ஆனவர். என்னைக் கேட்டால், வந்த புதிதில் அவர் நடிக்காமல் போனது நல்ல விஷயம். ஏனெனில், என்னைப் போன்ற பல நபர்கள் சினிமாவுக்கு வருவதற்கு ஊக்கம் கொடுத்தவர் அவர்தான். இயக்குநர் இமயம் நடிகர் இமயமாக இன்னும் உயர வேண்டும்.

நடிகை இவானா நடித்த ‘லவ் டுடே’ ரசித்துப் பார்த்தோம். பொதுவாக கதாநாயகிகள் பூ, புடவை என்றால்தான் அழகாக இருப்பார்கள். ஆனால், நைட்டியில் பார்க்கும்போது கூட இவானா அழகாகத் தெரிந்தார்.

ஜிவி பிரகாஷ் இப்போது வெற்றிகரமான கதாநாயகனாக வலம் வருகிறார். நல்ல கதை இருந்தால் புதுமுக இயக்குநருக்கு தயங்காமல் வாய்ப்புக் கொடுக்கிறார்.

’கள்வன்’ படம் யானையை முதன்மையாக வைத்து இருக்கிறது. எம்.ஜி.ஆர்., ரஜினி, பிரபாஸ், விக்ரம் பிரபு என யானையை வைத்து அவர்கள் நடித்த படங்கள் எல்லாம் ஹிட் ஆகி இருக்கிறது.

அந்த செண்டிமெண்ட் இந்தப் படத்திற்கும் ஹிட் கொடுக்க வாழ்த்துகள்”

கலை இயக்குநர் என்.கே. ராகவ், “எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர், இயக்குநர், ஹீரோ அனைவருக்கும் நன்றி”.

இயக்குநர் லிங்குசாமி…

“இதேபோல ஒரு ஆடியோ ஃபங்கனில் ஜிவி பிரகாஷைப் பார்த்துவிட்டு ஹீரோ போல இருக்கிறார் என்று சொன்னேன். ரூட்டை மாற்றி விட்டேன் போல. இப்போது பார்த்த இந்தப் பாடலில் அவ்வளவு அருமையாக நடித்துள்ளார்.

’பொல்லாதான்’ படத்தில் தனுஷ் நடித்த அளவிற்கு ஜிவி நடிப்பில் மிரட்டியுள்ளார். ஜிவி பிரகாஷ்- இவானா ஜோடி நன்றாக உள்ளது. இந்த விழாவிற்கு நான் வர முக்கியக் காரணம் பாரதிராஜா. அவரைப் பார்த்துதான் நாங்கள் சினிமாவுக்கு வந்துள்ளோம். அவருக்கு சீக்கிரம் விழா எடுக்கவுள்ளோம்.

பாரதிராஜா சாரும் பாதுகாக்கப்பட வேண்டிய அதிசயம். உங்கள் பயோபிக்கும் சீக்கிரம் யாராவது எடுப்பார்கள். பாரதிராஜா அருகில் உட்கார தகுதியானவர் வெற்றிமாறன். எனக்குப் பிடித்த இயக்குநர் அவர். ஷங்கர் என்ற பெயர் யானை மாதிரியான பிரம்மாண்டம் கொண்டது. அந்தப் பெயர் கொண்ட இயக்குநர், படக்குழுவுக்கு வாழ்த்துகள்!”

எடிட்டர் சான் லோகேஷ்…

“எனக்கு வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர், இயக்குநருக்கு நன்றி. படம் குடும்பமாக எல்லோருக்கும் பிடிக்கும். ஏப்ரல் 4 அன்று படம் பாருங்கள்”.

தயாரிப்பாளர் தனஞ்செயன்…

“’மரகதநாணயம்’, ‘ராட்சசன்’ போன்ற ஹிட் படங்களைக் கொடுத்த டெல்லி பாபு தயாரிப்பில் ‘கள்வன்’ வந்துள்ளது. ஜிவி சார் போல மல்டி டேலண்டட் நபரைப் பார்க்க முடியாது. அவருக்கு மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். மேக்கிங் சூப்பராக உள்ளது. ’நாச்சியார்’, ‘லவ் டுடே’ போல இவானாவுக்கு இந்தப் படமும் ஹிட் ஆக வேண்டும்.

மிகப்பெரிய ஹீரோக்கள் வெளி மாநில தயாரிப்பாளர்களுக்கு படம் நடித்துக் கொடுப்பது போல தமிழ்நாட்டில் உள்ள தயாரிப்பாளர்களுக்கும் படம் நடிக்க வேண்டும் என்பது என் வேண்டுகோள். அந்த வகையில் புதிய தயாரிப்பாளர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புக் கொடுத்து வரும் ஜிவி பிரகாஷூக்கு வாழ்த்துகள். தமிழ் சினிமா ஜெயிக்க வேண்டும்!”.

படத்தின் வசனகர்த்தா ராஜேஷ் கண்ணா…

“பாரதிராஜா இருக்கும் படத்தில் நானும் ஒரு அங்கம் என்பது மகிழ்ச்சி. ’நாச்சியார்’ என ஜிவி சாரின் ஒவ்வொரு படத்திலும் அவரது நடிப்பைப் பார்த்து ரசித்திருக்கிறேன். இயக்குநர் ஷங்கர், வாய்ப்புக் கொடுத்த தயாரிப்பாளர் டில்லி பாபு என படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!”

புகைப்படக்கலைஞர் வெங்கட்ராம்…

“ஜிவி பிரகாஷ் சாருக்கு அவர் தந்தை சொல்லி 15 வருடங்களுக்கு முன்னால் இசையமைப்பாளராக போர்ட்ஃபோலியோ செய்திருக்கிறேன். இப்போது நடிகராக சிறப்பாக நடித்து வருகிறார். இயக்குநர் ஷங்கருக்கும் வாழ்த்துகள்”

இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்…

“காட்டுக்குள் சென்று படம் எடுத்தாலே அது வெற்றிப் படம்தான். மாற்றுத்திறனாளியை வைத்து ஹிட் படம் கொடுத்த ஒரே இயக்குநர் பாரதிராஜா. அவர் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். மத்திய அரசுக்கு நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன்.

ஸ்டுடியோவில் இருந்த சினிமாவை கிராமத்துக்கு எடுத்து வந்தவர் பாரதிராஜா. அவருக்கு உயரிய தாதா சாகேப் பால்கே விருது கொடுக்க வேண்டும்.

இவர் ஒரு சினிமா கம்பன். சீக்கிரம் அவருக்கு விழா எடுக்க வேண்டும். அவர் நடித்துள்ள ‘கள்வன்’ படம் நிச்சயம் வெற்றிப் பெறும்”.

தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன்…

“படத்தின் டிரெய்லர் சிறப்பாக உள்ளது. இயக்குநர் ஷங்கருக்கு வாழ்த்துகள். இளையராஜா போல ஜிவி பிரகாஷின் இசையும் படத்தை அடுத்த லெவலுக்க்கு எடுத்துப் போகும். நிச்சயம் அவர் அடுத்தடுத்து நடிகராகவும் பெரிய வெற்றிகளைப் பார்க்க வேண்டும். ‘லவ் டுடே’ இவானாவுக்கும் வாழ்த்துகள்.

’திருச்சிற்றம்பலம்’ படத்தில் பாரதிராஜா சாரின் நடிப்பைப் பார்த்துவிட்டு சிலிர்த்து விட்டேன். சிறப்பான நடிகர். நான் சினிமாவுக்கு வர காரணமே அவரது ‘16 வயதினிலே’ படம்தான். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”.

தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா…

“பாரதிராஜா சாரிடம் உதவி இயக்குநராக பணி புரிய ஆசைப்பட்டேன். இப்போது அவர் படத்தின் விழாவில் கலந்து கொள்வது பெருமை. தன் வாழ்வில் மிகச்சிறந்த படத்தில் நடித்திருப்பதாக பாரதிராஜா சொல்வார். அதில் இருந்தே ‘கள்வன்’ படம் மீது எனக்கு அதிக ஆர்வம் உள்ளது. தயாரிப்பாளர் டில்லி பாபு சாருக்கு நன்றி. படம் வெற்றிப் பெற வேண்டும்”.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன்..

“தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் பலரும் இந்தப் படத்திறகாக ஒன்றிணைந்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. வியாபாரம் தாண்டி டில்லி பாபு சார் எனக்குக் கொடுத்து வரும் ஆதரவு பெரியது. அவருக்கு நன்றி. முழு அர்ப்பணிப்போடு இந்தப் படத்தில் அனைவரும் உழைத்துள்ளனர். பாரதிராஜா சாரின் மிகப்பெரிய ரசிகன் நான். அவரது நடிப்பை இதில் பார்த்து ரசிக்க ஆவலுடன் உள்ளேன்” என்றார்.

ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பாளர் டில்லி பாபு…

“அம்மா கிரியேஷன்ஸ், சத்ய ஜோதி போன்ற பேனர்களுக்காகவே நான் போய் படங்கள் பார்த்த காலம் உண்டு. தனஞ்செயன் தமிழ் சினிமாவின் என்சைக்ளோபீடியா.

கிளைமாக்ஸ் காட்சிக்கு முந்தின நாள் யானக்கு மதம் பிடித்து விட்டது. அதற்காக சில காலம் காத்திருந்தோம். படம் சிறிய பட்ஜெட் என்றாலும் டெக்னீஷியன்ஸ் எல்லோருமே பெரியவர்கள் தான். பாலக்காட்டில் கிளைமாக்ஸ் ஷூட்டு ஒரு வாரத்திற்க்கு மட்டும் ஒன்றரை கோடி செலவானது. பாரதிராஜா சார், ஜிவி பிரகாஷ், இவனா என எல்லாருமே சிறப்பாக நடித்துள்ள படம் வெற்றி அடைய வேண்டும்.

பாரதிராஜா சாரின் பயோபிக் உருவாகிறது என்றால் அதை வெற்றிமாறன் இயக்க வேண்டும் நாங்கள் தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்” என்றார்.

நடிகை இவானா…

“‘நாச்சியார்’ படத்திற்குப் பிறகு ஜிவி பிரகாஷூடன் சேர்ந்து நடிக்கிறேன். அப்போது அவருடன் சரியாக நிறைய பேச முடியவில்லை. இப்போது நாங்கள் நல்ல நண்பர்கள். பாரதிராஜா சாருடன் நான் நடித்திருப்பது எனக்குப் பெருமை. படத்தில் ஒத்துழைப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி. ஏப்ரல் 4 அன்று உங்கள் இதயங்களை ‘கள்வன்’ நிச்சயம் திருடுவான்”.

நடிகர் தீனா…

“இந்தப் படத்தில் ஜிவி சாருக்கும் இவானாவுக்கும் நிறைய காதல் காட்சி உள்ளது. இயக்குநர் ஷங்கர் சிறப்பாக செய்துள்ளார். இந்த படத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன்”.

இயக்குநர் ஷங்கர், “படத்திற்காக வந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. படம் பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.

இயக்குநர் வெற்றிமாறன்…

“’கள்வன்’ படத்துக்கும் எனக்கும் சில தொடர்புகள் உள்ளது. நான் விடுதலை படத்தில் பாரதிராஜா தான் நடிக்க வேண்டும் என முடியெல்லாம் வெட்டி லுக் டெஸ்ட் பண்ணேன்.

நான் லொகேஷன் பார்க்க சென்ற பிறகு அவர் வேண்டாம் என நினைத்தேன். அதற்கு என்னிடம் பாரதிராஜா செல்லமாக கோபித்துக் கொண்டார். அதன்பிறகு கொஞ்ச நாள் கழித்து, இதே முடியோடு என்னை வைத்து ஒருத்தர் படம் எடுக்கப் போறாருன்னு சொன்னாரு. அது தான் ‘கள்வன்’ படம்.

நாங்க ‘விடுதலை’ படம் ஷூட் பண்ண இடத்தில் தான் ‘கள்வன்’ படமும் ஷூட் பண்ணினார்கள். காட்டில் படப்பிடிப்பு என்பது ரொம்ப கஷ்டம். ஒளிப்பதிவாளருக்கு எவ்வளவு சவால் இருந்திருக்கும் என்பது தெரியும்.

ஒரு படத்துக்காக காத்திருப்பது என்பது மற்றவர்களை விட இயக்குநருக்கு ரொம்ப சவாலாக இருந்திருக்கும். 6 மாதம் வரை ஒரு நம்பிக்கை வரும். பின் போகும், திரும்ப நம்பிக்கை வரும் என பல விஷயங்கள் உள்ளது.

நம்ம யானையை வைத்தோ, டைனோசரை வைத்தோ படம் எடுத்தாலும் திரைக்கதையும், கதையும் நல்லா இருந்தா மட்டும் தான் படம் ஓடும். ஜிவி நடிகராக சிறப்பாக பரிணமித்து வருகிறார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்” என தெரிவித்தார்.

இயக்குநர் பாரதிராஜா…

“இயக்குநர் ஷங்கர் பிடிவாதக்காரன். நிச்சயம் அந்த பிடிவாதம் ஜெயிக்கும். சினிமாவில் அவனுக்குப் பெரிய இடம் காத்திருக்கிறது. இவானாவை ஒருநாள் திட்டிவிட்டேன்.

திறமையான நடிகை அவர். ஜிவி நல்ல இசையமைப்பாளர், நடிகர் அதைத்தாண்டி நல்ல மனிதர். வேறொரு டைமன்ஷனில் ஜிவியைப் பார்க்கலாம். இவானா சிறப்பாக நடித்துள்ளார். வெற்றிமாறன் போன்ற சிறந்த இயக்குநர் இங்கு இருப்பது சந்தோஷமான விஷயம்”.

நடிகர் ஜிவி பிரகாஷ்…

“இந்தப் படத்தின் உண்மையான ஹீரோ பாரதிராஜா சார்தான். அவருக்கு நானும் தீனாவும் வில்லனாக நடித்துள்ளோம். இந்தப் படத்தில் அவர் நடிப்புக்காக நிச்சயம் தேசிய விருது வாங்குவார். அவருடன் நாங்கள் இருந்த நேரத்தை பொக்கிஷமாக வைத்திருப்போம். அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டோம். அவரும் ராஜா சாரும் தமிழ் சினிமாவின் கிராமர் புக், என்சைக்ளோபீடியா. இயக்குநர் ஷங்கர் மிகவும் திறமையானவர். அதை நீங்கள் படம் வரும்போது புரிந்து கொள்வீர்கள். இவானா, தீனா எல்லாரும் சிறப்பாக நடித்துள்ளனர். தயாரிப்பாளர் டில்லி பாபு சார், சக்திவேலன் சாருக்கு நன்றி. ஏப்ரல் 4 ரிலீஸ் தேதியும் சிறப்பாக அமைந்துள்ளது. பார்த்துவிட்டு சொல்லுங்கள்”.

Real hero Bharathiraja says GV Prakash at Kalvan audio launch

More Articles
Follows