ராணா – மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்தம்; சிவகார்த்திகேயன் வாழ்த்து

ராணா – மிஹீகா பஜாஜ் நிச்சயதார்த்தம்; சிவகார்த்திகேயன் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rana Dabbugati Engagement Confirmed with Miheeka Bajana Todayகடந்த மே 12ம் தேதி தன் காதலி மிஹீகா பஜாஜுடன் சேர்ந்து இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் பாகுபலி வில்லன் நடிகர் ராணா.

தன்னை திருமணம் செய்து கொள்ள மிஹீகா சம்மதம் தெரிவித்துவிட்டார் என்றார்.

இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று மே 21ஆம் தேதி மற்றொரு போட்டோவை பகிர்ந்துள்ளார் ராணா.

அதில் எந்த தகவலையும் பதிவிடவில்லை. And it’s official!! என்று மட்டுமே தெரிவித்துள்ளார். எனவே இது நிச்சயம்தார்த்தம் என்கின்றனர் நெட்டிசன்கள்.

அவர்கள் இருவரும் இருக்கும் உடையை பார்த்தால் நிச்சயதார்த்தம் நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.

ராணா வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த சிவகார்த்திகேயன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதை பார்த்த ராணா நன்றி ப்ரோ என்று கூறினார்.

திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Rana Dabbugati Engagement Confirmed with Miheeka Bajana Today

BREAKING டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி.; விதிமுறைகள் இதோ…

BREAKING டிவி சூட்டிங் நடத்த தமிழக அரசு அனுமதி.; விதிமுறைகள் இதோ…

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TN Govt grants permission to resume TV shooting at indoorகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் பொது முடக்கம் மே 31ஆம் தேதி அமலில் இருக்கும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்.

ஆனால் கொரோனா பாதிப்பு குறைவான உள்ள பகுதிகளில் சில தளர்வுகளுடன் சில வணிக நிறுவனங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் மே 11 முதல் சினிமா மற்றும் சீரியல் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கு மட்டும் நிபந்தனையுடன் கூடிய அனுமதியை தமிழக அரசு அளித்துள்ளது.

அதாவது எடிட்டிங், டப்பிங், கிராபிக்ஸ், பின்னணி இசை, ஒலிக்கலவை போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது.

இதனிடையில் பெப்சி அமைப்பின் தலைவர் செல்வமணி, அமைச்சர் கடம்பூர் ராஜூவைச் சந்தித்து பேசினார்.

அப்போது சூட்டிங் அரங்குகள், வீடுகள் ஆகியவற்றின் உள்ளே நடைபெறும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கு அனுமதி தரவேண்டும்.

சின்னத்திரை படப்பிடிப்புகள் தொழிற்சாலைகள் போல அரங்குகளின் உள்ளே பணிகள் நடைபெறக்கூடியவை. இதனால் எவ்வித பாதிப்பும் நேராது.

இதற்கு ஏதாவது நிபந்தனைகளை அரசு விதித்தாலும் ஏற்றுக்கொள்கிறோம்.

சின்னத்திரைப் படப்பிடிப்புகள் தொடர்ந்தால் 5000 தொழிலாளர்கள் பணிபுரியக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும்.

டிவி நிகழ்ச்சிகளும் புத்துயிர் பெறும். வீட்டில் இருக்கும் பொதுமக்களுக்கும் உற்சாகம் ஏற்படும் என அமைச்சரிடம் பெப்சி அமைப்பினர் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று மே 21ஆம் சின்னத்திரை சூட்டிங்க்கு அனுமதியளித்துள்ளது தமிழக அரசு.

இது தொடர்பான விதிமுறைகள் இதோ…

  • சளி, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களை படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்க கூடாது.
  • தடை செய்யப்பட்ட பகுதி மற்றும் பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது
  • பார்வையாளர்களை கண்டிப்பாக அனுமதிக்க கூடாது
  • படப்பிடிப்பில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தவிர தொழில்நுட்ப கலைஞர்கள் முக கவசம் அணிய வேண்டும்
  • படப்பிடிப்பிற்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள், சாதனங்கள் கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
  • சென்னையில் படப்பிடிப்பு நடத்துவதற்கு மாநகராட்சி ஆணையரிடமும், பிறமாவட்டங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடமும் முன்அனுமதி பெறவேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சின்னத்திரை சூட்டிங் தொடர்பாக தமிழக அரசின் அனுமதிக்கு நடிகை குஷ்பூ தமிழக முதல்வருக்கும் அமைச்சர் கடம்பூர் ராஜீக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

TN Govt grants permission to resume TV shooting at indoor

தமிழக மதுபிரியர்களை மிரட்டி சரக்கு வாங்கிய புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது.!

தமிழக மதுபிரியர்களை மிரட்டி சரக்கு வாங்கிய புதுச்சேரி போலீசார் 3 பேர் கைது.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

pondicherry policeகொரோனா பொது முடக்கம் அமலில் உள்ள போதும் தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

ஆனால் மதுவுக்கு பெயர் பெற்ற புதுச்சேரியில் மதுக்கடைகள் இதுவரை திறக்கப்படவில்லை..

எனவே தமிழக மதுபாட்டில்கள் புதுச்சேரி பகுதிக்குள் வராமல் தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் திருக்கனூர், விழுப்புரம் பகுதி சித்தலம்பட்டில் மதுபிரியர்கள் சிலர் மது குடித்துக் கொண்டு இருந்துள்ளனர்.

அப்போது அங்கு சென்ற புதுச்சேரி மாநில காவலர்கள் மணிகண்டன், செல்வம், கோகுல், பிரசன்னா ஆகியோர் மதுகுடித்தவர்களை மிரட்டி, அவர்களிடம் இருந்த மதுவை பறித்துள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி மாநில போலீஸ் தலைமையகத்திற்கு புகார் சென்றது.

இதன் பேரில் திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்..

இதில் காவலர்கள் நால்வரும் மதுபாட்டில்களை தங்களது சொந்த தேவைக்கு எடுத்துள்ளது தெரியவந்தது.

இதையடுத்து 4 காவலர்களையும் சஸ்பெண்டு செய்து சீனியர் காவல் கண்காணிப்பாளர் ராகுல் ஆல்வா உத்தரவிட்டார்.

மேலும் 4 பேர்கள் மீது திருக்கனூர் போலீசார் 7 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருக்கிறார்களாம்.

இதில் செல்வம், கோகுல், மணிகண்டன் ஆகியோர் பிடிபட்டனர்.

தலைமறைவாக இருக்கும் காவலர் பிரசன்னாவை போலீசார் தேடி வருகின்றனர்.

பிடிப்பட்டவர்களிடம் கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

சிவகார்த்திகேயன் ரசிகர்களே ‘டாக்டர்’ ரிலீஸ் தேதியை முடிவு செஞ்ச்சிட்டாங்க…!

சிவகார்த்திகேயன் ரசிகர்களே ‘டாக்டர்’ ரிலீஸ் தேதியை முடிவு செஞ்ச்சிட்டாங்க…!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan doctor movie posterசிவகார்த்திகேயன் நடிக்கும் ‘டாக்டர்’ படத்தை ‘கோலமாவு கோகிலா’ பட இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கி வருகிறார்.

இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸுடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

அனிருத் இசையமைக்க யோகி பாபு மற்றும் வினய் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

‘கேங் லீடர்’ பட புகழ் பிரியங்கா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அறிமுகமாகிறார்.

இப்பட சூட்டிங் கடந்த பிப்ரவரியில் கோவாவில் தொடங்கி நடைபெற்று வந்தது.

ஆனால் தற்போது கொரோனா பொது முடக்கம் காரணமாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் “டாக்டர்” பட ரிலீஸ் தகவல் ஒன்றை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் உலவவிட்டுள்ளனர்.

அதாவது நவம்பரில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டால் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று “டாக்டர்” படம் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவித்துள்ளனர்.

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்

சிதறிப்போன தன் வாழ்வை மீட்கும் ‘நான்தான் சிவா’ – இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

naan than siva‘ரேணிகுண்டா’ மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம். இதையடுத்து ’18 வயசு’ மற்றும் விஜயசேதுபதி நடித்த ‘கருப்பன்’ போன்றவ்படங்களை இயக்கினார். தற்போது, என்.லிங்குசாமி வழங்கும்
‘நான்தான் சிவா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். அப்படத்தைப் பற்றி அவர் கூறியதாவது :

ஒரு இளைஞன், அவனது வாழ்க்கையில் இருவரை சந்திக்கின்றான். அந்த இருவரும் அவனின் வாழ்வை வெவ்வேறு வகையில் சிதறடிக்கிறார்கள். அதிலிருந்து அந்த இளைஞன் எப்படி மீண்டு வருகிறான் என்பதே இப்படத்தின் ஒரு வரி கதை. இதை காதல் மற்றும் சண்டைக் காட்சிகள் மூலம் கூறியிருக்கிறோம்.இதன் படபிடிப்பு கும்பகோணம், திருச்சி பகுதிகளில் நடந்தது. படபிடிப்பு முடிவடைந்து அடுத்தகட்ட வேலைகள் நடைபெற்று வருகிறது.
இன்று இதன் பாடல் வெளியீடு சோனி ஆன்லைனில் வெளியாகிறது.

கதாநாயகனாக புதுமுகம் வினோத் நடிக்க, கதாநாயகியாக ‘உதயம் NH4’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான அர்ஷிதா ஷெட்டி நடிக்கிறார். பிரசாந்த் நாராயண், அழகம் பெருமாள், சுஜாதா, விசாலினி மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

இவ்வாறு இயக்குநர் ஆர்.பன்னிர்செல்வம் கூறினார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :

தயாரிப்பு – என்.சுபாஷ் சந்திரபோஸ்

இயக்குநர் – ஆர்.பன்னீர் செல்வம்

ஒளிப்பதிவு – பி.ராஜசேகர்

சண்டைப் பயிற்சி – ராஜசேகர்

நடனம் – தினேஷ்

மக்கள் தொடர்பு – ஜான்சன்

பாடல்கள் – யுகபாரதி

இசை – டி.இமான்

கலை – சீனு

தயாரிப்பு மேலாளர் – ஜி.ஆர்.நிர்மல்

படத்தொகுப்பு – ஆண்டனி

இணைத் தயாரிப்பு – ஜி.ஆர்.வெங்கடேஷ்
‘பையா’, அஞ்சான், ரஜினிமுருகன்,மஞ்சப்பை, வழக்கு எண் 18/9, தீபாவளி, கும்கி, உத்தமவில்லன் போன்ற பல வெற்றி படைப்புகளை தந்த என்.லிங்குசாமி வழங்கும் திருப்பதி பிரதர்ஸ் “நான்தான் சிவா” படத்தை தயாரிக்கிறார்கள்.

உடற்பயிற்சிக்கூடம் திறக்க அனுமதிக்க வேண்டி தமிழக முதலமைச்சருக்கு Tamil Nadu Gym Owners Association கடிதம்

உடற்பயிற்சிக்கூடம் திறக்க அனுமதிக்க வேண்டி தமிழக முதலமைச்சருக்கு Tamil Nadu Gym Owners Association கடிதம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

fitnessஉலகத்தையே மிரட்டிவரும்‌ கொரோனாவை தங்களின்‌ அரசு மிகத்திறமையாக கையாண்டு மக்களை காப்பாற்றிக்‌ கொண்டிருக்கிறது. தங்களின்‌ திறமையான ஆட்சியை எங்களின்‌ TAMIL NADU GYM OWNERS ASSOCIATION வெகுவாக பாராட்டி, பெருமையுடன்‌ வணங்குகிறது.

இந்த தருணத்தில்‌ சிறு வணிகர்கள்‌, சிறு தொழில்கள்‌ மற்றும்‌ தொழிலாலர்கள்‌ பாதிப்படையாமல்‌ தங்களின்‌ அம்மா அரசு எடுத்துவரும்‌ பல நடவடிக்கைகள்‌ மிகவும்‌ பாராட்டதக்கது.

அதேபோல்‌ எங்களின்‌ GYM& FITNESS STUDIO துறையும்‌ மிகவும்‌ பாதிப்படைந்துள்ளது. GYM நிர்வாகிகள்‌, பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ தூய்மைப்‌ பளரியாளர்கள்‌ இவர்களின்‌ வாழ்வாதாரம்‌ மிகவும்‌ பாதித்துள்ளது. இவர்களின்‌ துயர்‌ துடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும்‌ என தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

மேலும்‌ உடற்பயிற்சிக்கூடத்தை நிர்வகித்து நடத்திவரும்‌ நாங்கள்‌ வங்கியில்‌ கடன்‌ பெற்று GYM நடத்தி வருகிறோம்‌. கடந்த 60 நாட்களாக உடற்பயிற்சிக்கூடம்‌ மூடப்பட்டதால்‌ வருமானம்‌ இல்லாமல்‌ எங்களின்‌ வாழ்வாதாரமும்‌ முதலீடும்‌ மிகவும்‌ பாதித்துள்ளது. பல கடன்சுமைகளுக்கு ஆளாகியுள்ளோம்‌

எனவே உடற்பயிற்சிக்கூடம்‌ திறக்க தாயுள்ளம்கொண்ட ஐயா அவர்கள்‌ ஆவன செய்ய வேண்டும்‌. சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, நோய்‌ தொற்று ஏற்படாமல்‌ அரசின்‌ வழிமுறைகளை நாங்கள்‌ பின்பற்றுவோம்‌ என்பதை நாங்கள்‌ உறுதி தருகிறோம்‌.

மேலும்‌ எங்களின்‌ பல வாடிக்கையாளர்‌ டாக்டரின்‌ ஆலோசனைபடி உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில்‌ உள்ளனர்‌. குறிப்பாக DIABETES PATIENT & ABDOMINAL FAT உள்ளவர்கள்‌ உடற்பயிற்சி செய்தே ஆகவேண்டும்‌. மேலும்‌ உடற்பயிற்சியின்‌ மூலம்‌ உடலில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும்‌. எனவே எங்களுக்கு வழிமுறைகளை வகுத்து கொடுத்து, எங்கள்‌ மேல்‌ கருணைகொண்டு உடற்பயிற்சி நிலையத்தை விரைவில்‌ திறக்க மாண்புமிகு முதலமைச்சர்‌ ஐயா அவர்கள்‌ ஆவன செய்ய வேண்டும்‌. அரசு கூறும்‌ அனைத்துவிதமான பாதுகாப்பு நடவடிக்கைகளையும நாங்கள்‌ பின்பற்றுவோம்‌ என உறுதி கூறுகிறோம்‌.

மேலும்‌ TAMIL NADU GYM OWNERS ASSOCIATION சில கோரிக்கைகளை தங்களின்‌ கனிவான பார்வைக்கு முன்வைக்கிறோம்‌. எங்களின்‌ இந்த துயரத்திற்கு ஒரு நல்ல தீர்வு ஏற்படுத்தி தருமாறு மிகதாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

A. 60 நாட்களாக மக்களின்‌ பாதுகாப்பு காரணங்களுக்காக உடற்பயிற்சிக்கூடம்‌ மூடப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டங்களில்‌ எந்தவிதமான வருமானமும்‌ GYM நிர்வாகத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால்‌ வாடகை கேட்டு வணிக கட்டிட உரிமையாளர்கள்‌ எங்களை வற்புறுத்துகிறார்கள்‌. வருமானம்‌ இல்லாததால்‌ கடந்த ஊரடங்கு காலகட்டத்தில்‌ முழு வாடகை தொகை செலுத்த இயலாத நிலையில்‌ உள்ளோம்‌. இதற்கு தங்களின்‌ தயவான தீர்வினை அளிக்குமாறு தயவுகூர்ந்து கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

B. கடந்த 60 நாட்களாக GYM & FITNESS STUDIO திறக்கவில்லை மின்சாரத்தையும்‌ பயன்படுத்தவில்லை. ஆனால் சென்ற மாதம்‌ செலுத்திய மின்கட்டனத்தை கட்ட சொல்கிறார்கள. சென்ற மாதம்‌ செலுத்திய பெருந்தொகை தற்போது வருமானமே சுத்தமாக இல்லாத இந்த சூழ்நிலையில்‌ எங்களால்‌ மின்கட்டணம்‌ செலுத்த இயலாத நிலையில்‌ உள்ளோம்‌. எனவே மின்சாரம்‌ பயன்படுத்தாத ஊரடங்கு காலகட்டத்தில்‌ மின்‌ கட்டணத்தில்‌ இருந்து எங்களுக்கு விலக்களிக்க வேண்டும்‌

என தங்களை வணங்கி மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

மாண்புமிகு தமிழக முதல்வர்‌ ஐயா அவர்கள்‌ எங்களின்‌ குறைகளை நேரில்‌ தெரிவிக்க நேரம்‌ ஒதுக்கி தருமாறு மிகத்‌ தாழ்மையுடன்‌ கேட்டுக்கொள்கிறோம்‌.

நன்றி!
இப்படிக்கு
தங்களை வணங்கி எதிர்பார்க்கும்‌

TAMILNADU GYM OWNERS ASSOCIATION.
Fahad / Prassana/ Rajesh 7339411222 / 9962224466/ 9884345766

————————————————————————————-

தமிழ்நாடு ஜிம் உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பாக தமிழக அரசிடம் சமர்பிக்கப்பட்ட ஜிம்மிற்கான விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள்

1. உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் லிஃப்ட்/எஸ்கலேட்டர் ஆகியவை பயன்படுத்த அனுமதி கிடையாது.
2. பயிர்சியாளர்கள், உறுப்பினர்கள், தூய்மை பணியாளர்கள் அனைவரும் நுழைவாயிலில் அகச்சிவப்பு வெப்பமானி மூலம் சோதிக்கப்படுவர். மேலும் உடனடியாக கைகளை சுத்தப்படுத்த கிருமிநாசினி வழங்கப்படும்.
3. ஒவ்வொரு உறுப்பினர்களும் முககவசம் & கையுறைகளை அணிய வேண்டும். workoutடின் போது கூட அவர்கள் அதை அகற்றக்கூடாது. ஊழியர்கள்கூட பணிபுரியும் நேரங்களில் முககவசம் மற்றும் கையுறைகளை அணிந்திருக்க வேண்டும்.
4. உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் சொந்தமாக தண்ணீர் பாட்டிலை எடுத்துவர வேண்டும். (எந்த விதமான தண்ணீர் குளிர்விப்பான்கள் தளத்தில் வைக்கப்பட மாட்டாது)
5. குழுவாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் ஜூன் இறுதி வரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும்.
6. ஒவ்வொரு உறுப்பினர்களின் பயிற்சி நேரம் அதிகபட்சம் 60 நிமிடங்களுக்கு வரையறுக்கப்பட்டுள்ளது. 60 நிமிடங்களுக்குமேல் எந்த உறுப்பினர்களும் பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.
7. பயிற்சியை முடித்ததும் GYM உபகரணங்களை முறையாக அதன் இடத்தில் வரிசையா அடுக்கி வைக்க வேண்டும். மேலும் எவரும் கூட்டமாக நின்று பயிற்சியோ செய்வதோ, ஆலோசனையோ, பேச்சுக்களோ இருக்கக்கூடாது. GYM கேட்டின் அருகே கூட்டம் கூட்டக்கூடாது.
8. ஏர் கண்டிஷனரை அணைக்க வேண்டும். இயற்கை காற்றோட்டம் மற்றும் விசிறி பயன்முறை ஏசி (Fan mode AC) மட்டுமே பயன்படுத்த வேண்டும் (ஏர் கண்டிஷனரைத் தவிர்க்க அரசால் நமக்கு பரிந்துரைக்கப்படுகிறது)
9. ஊழியர்கள் GYM -ல் அதிக நேரம் செலவிடுவதால் ஊழியர்கள் பணிக்கு முன்னும் பின்னும் அவர்களின் உடல் வெப்பநிலையை சரிபார்க்க வேண்டும்.
10. கண்டிப்பாக தும்மல், இருமல் மற்றும் சுரம் உள்ள எவரும் ஜிம்மிற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். (ஊழியர்கள் உட்பட)
11. ஒரு துடைக்கும் துணி மற்றும் டெட்டோல் (Dettol) கலந்த கிருமி நாசினி பாட்டில்கள் ஜிம்மின் ஒவ்வொரு மூலையிலும் வைக்கப்படும். உறுப்பினர்கள் பயிற்சியில் ஈடுபடுவதற்கு முன்பு உபகரணங்களைத் துடைக்க வேண்டும்.
12. நீராவி குளியல் மற்றும் shower bath தற்காலிகமாக ஜூன் இறுதி வரை நிறுத்தப்படும். உறுப்பினர்கள் ஓய்வறை மற்றும் லாக்கர்களை பயன்படுத்தலாம்.
13. 18 முதல் 55 வயதுக்கு உட்பட்டவர்கள் மட்டுமே ஜிம்மில் அனுமதிக்கப்படுவார்கள்.
14. ஜிம் இடத்திற்கு ஏற்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை அனுமதிக்கப்படுகிறது. உதாரணமாக
1000 சதுரஅடி உள்ள இடத்தில் 10 உறுப்பினர்கள், 2000 சதுரஅடி உள்ள இடத்தில் 20 உறுப்பினர்கள், 3000 சதுரஅடி உள்ள இடத்தில் 35 உறுப்பினர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் இரண்டு அல்லது மூன்று மாடிகளை கொண்ட ஜிம்களில் ஒரு தளத்திற்கு 10 உறுப்பினர்களை மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

for TAMILNADU GYM OWNERS ASSOCIATION

சங்க நிர்வாகிகள்

More Articles
Follows