நட்பா? காதலா? எது வெல்லும் என்பதை சொல்லும் டீ கடை பெஞ்ச்

நட்பா? காதலா? எது வெல்லும் என்பதை சொல்லும் டீ கடை பெஞ்ச்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ramakrishnan starrer Tea Kadai bench movie updatesஅருள்மிகு ராம ஆஞ்சநேயா மூவிஸ், தங்கம்மன் மூவிஸ், செரா பிக்சர்ஸ் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “டீக்கடை பெஞ்ச் “

இந்த படத்தில் ராமகிருஷ்ணன் நாயகனாக நடிக்க நாயகியாக தருஷி நடிக்கிறார்.

இவர்களுடன் நிரஞ்சன், நட்ராஜன், அத்திக், சித்ராலட்சுமணன், டி.பி.கஜேந்திரன், பட்டிமன்றம் ராஜா, பருத்திவீரன் சுஜாதா, கருத்தம்மா ராஜஸ்ரீ, பருத்திவீரன் செவ்வாழை, மனிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

இயக்குனர் ராம் ஷேவாவிடம் படத்தைப் பற்றி கேட்டோம்..

இது செண்டிமென் கலந்த ஒரு நகைச்சுவை திரைப்படம். நாயகன் ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு சொந்தமான பரம்பரை சொத்து ஒன்றை நாயகி தருஷி நாயகன் வீட்டிலிருந்த அவருக்கு தெரியாமல் எடுத்து செல்கிறாள்.

இதை அறிந்த நாயகன் அவளிடம் கேட்க இருவருக்கும் மோதல் உண்டாகிறது, இதனால் நண்பர்களான நிரஞ்சன், நடராஜ், அத்திக், சிவா மற்றும் குடும்பத்தினரிடமும் பகையாகிறான்.

இறுதியில் அங்கே நட்பு வென்றதா? இல்லை காதல் வென்றதா என்பதை நகைச்சுவை கலந்த காதல் கதையாக உருவாக்கி இருக்கிறோம். ஜனரஞ்சகமான படமாக டீக்கடை பெஞ்ச் படம் உருவாகி உள்ளது.

ஐந்து பாடல்களும் சிறப்பா இருக்கும். கானா பாலா ஒரு பாடலை பாடி நடனமாடி இருக்கிறார்.
படப்பிடிப்பு பழனி கொடைக்கானல் பொள்ளாச்சி சென்னை போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது.

ஒளிப்பதிவு – வெங்கடேஸ்வர் ராவ்
இசை – V.ஸ்ரீ சாய் தேவ்
கலை – அன்பு
எடிட்டிங் – ஆனந்த்
நடனம் – கிரீஷ், ஹபீப்
தயாரிப்பு நிர்வாகம் – சரவணன்.ஜி
தயாரிப்பு – V.J.ரெட்டி, S.செந்தில்குமார், N.செந்தில்குமார்.
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இயக்கம் – ராம்ஷேவா.

Ramakrishnan starrer Tea Kadai bench movie updates

tea kadai

பொள்ளாச்சி திருவிழா: ரஜினியின் 2.0 பலூனில் பறக்க ரூ. 15000 கட்டணம்

பொள்ளாச்சி திருவிழா: ரஜினியின் 2.0 பலூனில் பறக்க ரூ. 15000 கட்டணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinis 2point0 promo balloon in Pollachi International Balloon festivalபொங்கல் திருவிழாவையொட்டி பொள்ளாச்சியில் பலூன் திருவிழா நடைபெற்று வருகிறது.

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் விதமாக, சுற்றுலாத்துறை மற்றும் தனியார் நிறுவனங்கள் இணைந்து கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த சர்வதேச பலூன் திருவிழாவை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், 4-வது சர்வதேச பலூன் திருவிழா, பொள்ளாச்சியில் நேற்று மாலை தொடங்கியது.

பொள்ளாச்சி சப் கலெக்டர் காயத்திரி கிருஷ்ணன் இதைத் தொடங்கி வைத்தார்.

இதில், அமெரிக்கா, மெக்ஸிகோ, ஜெர்மனி, நெதர்லாந்து உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 12 பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளன. பொள்ளாச்சி, சக்தி மில்ஸ் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்தத் திருவிழா, வரும் 16-ம் தேதி வரை நடக்கிறது.

சுற்றுலாத்துறையின் பிரமாண்ட தேசியக்கொடி வடிவிலான பலூன், ரஜினியின் எந்திரன் 2.0 பலூன், ஆங்ரி பேர்டு பலூன் ஆகியவை 12 பலூன்களில் முக்கியமானவையாகக் கருதப்படுகிறது.

இந்த பலூனில் பறக்க ஒரு நபருக்கு ரூ.15,000 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு பலூனில் 4 நபர்கள் அமரலாம். இந்த பலூன் ஒரு சுற்றுக்கு 3 கிமீ வரை செல்கிறதாம்.

Rajinis 2point0 promo balloon in Pollachi International Balloon festival

சினிமாவில் சிஎம்-ஆக வாழ்ந்துட்டேன்..; பவர் ஸ்டார் பரவசம்

சினிமாவில் சிஎம்-ஆக வாழ்ந்துட்டேன்..; பவர் ஸ்டார் பரவசம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

My CM dream fulfilled in Kilambitangayya Kilambitangayya movie says PowerStar Srinivasanஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது.

அதில் தனது வழக்கமான ஸ்டைலில் “பவர் ஸ்டார்” சீனிவாசன் பேசும் போது, அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.

அவர் பேசியதாவது, “முதல் நாள் சூட்டிங் போன போது அங்கே நிறைய போலீஸ் இருந்தார்கள்.

இங்கேயும் நம்மை கைது செய்ய வந்துவிட்டார்களோ என்று ஒரு நிமிடம் திகைத்து போனேன். எவ்வளவோ போலீசை பார்த்தாச்சு என்று உள்ளே போன போது தான் அது டம்மி போலீஸ் என்று தெரிந்தது.

சரி… இயக்குநர் நமக்கு என்ன வேஷம் கொடுக்கப் போகிறாரோ என்று பார்த்தால், பொசுக்கென்று சி.எம் கேரக்டர் கொடுத்துட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோசமாக இருந்தது. இனிமேல் கட்சி ஆரம்பித்து முதல்வர் ஆவதெல்லாம் கனவிலும் நடக்காத காரியம்.

அடுத்த ஜென்மத்தில் கூட சி.எம் ஆவேனா? என்று தெரியாது. அதனால் இந்தப் படத்தில் சிஎம் ஆக வாழ்ந்து பார்த்துவிட்டேன்.

“லத்திகா” படத்தை நான் தான் 100 நாட்களுக்கு ஓட வைத்தேன். அதே போல இந்தப் படத்தையும் 100 நாள் ஓட வைப்பேன். ஏன்னா நான் முதல்வராக நடித்த படம் ஜெயித்தே தீரவேண்டும்” என்று கலகலப்பூட்டினார்.

தற்போது இருக்கிற அரசியல் சூழலை மறைமுகமாக கிண்டல் செய்து பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்…

“இந்தப் படத்தின் இயக்குநர் ரசாக் நிறைய கஷ்டப்பட்டார். ஏனென்றால் 6 இயக்குநர்களை ஒன்றாக வைத்து வேலை வாங்குவது சாதாரண காரியமில்லை. எங்கள் எல்லோரிடமும் அழகாக வேலை வாங்கி, மிரட்டலான ஒரு காமெடி படத்தை எடுத்திருக்கிறார்.

இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, கட்சி ஆரம்பிப்பதே சுலபமென்றாகிவிட்டது. நான் கூட ஒரு கட்சி தொடங்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

படம் எடுப்பதற்கும், கட்சி தொடங்குவதற்கும் பட்ஜெட் தான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. அதனால் தான் என் யோசனையை தள்ளி வைத்து விட்டு நடிப்பில் கவனம் செலுத்தலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்” என்று பேசினார்.

இதில் கே.பாக்யராஜ் போலீஸ் அதிகாரியாகவும், மன்சூர் அலிகான் காட்டுவாசித் தலைவராகவும், ‘பவர்ஸ்டார்’ சீனிவாசன் அரசியல்வாதியாகவும் நடித்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்திய இப்படத்தில் திரில்லர், ஆக்‌ஷன், திகில் கலந்து உருவாக்கி இருக்கிறார்கள். பெரும்பாலான படப்பிடிப்பு மலைப்பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு – ஸ்ரீதர், இசை – ஸ்ரீகாந்த், படத்தொகுப்பு – ராஜ்குமார், பாடல்கள் – யுக பாரதி, ரசாக், திலகா, பாடியவர்கள் – கானா பாலா,ஹரிஷ் ராகவேந்திரா, பாலக்காடு ஸ்ரீராம், மன்சூர் அலிகான், முகேஷ், டாக்டர் நாராயணன், தயாரிப்பு – ஹெவன் எண்டர்டெய்ன்மெண்ட், கதை எழுதி, இயக்கியிருக்கிறார் இயக்குநர் ரசாக்.

My CM dream fulfilled in Kilambitangayya Kilambitangayya movie says PowerStar Srinivasan

Kilambitangayya Kilambitangayya Movie Press Meet (9)

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா… அரசியலுக்கு செல்லும் நடிகர்களை பார்த்து பாக்யராஜ் கிண்டல்

கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா… அரசியலுக்கு செல்லும் நடிகர்களை பார்த்து பாக்யராஜ் கிண்டல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Bhagyaraj speech at Kilambitangayya Kilambitangayya press meetஹெவன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் 6 இயக்குனர்கள், 4500 துணை நடிகர்கள் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா’.

இந்தப் படத்தில் இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஆர்.வி.உதயகுமார், ஆர்.சுந்தராஜன், மன்சூர் அலிகான், அனுமோகன், ராஜ்கபூர் இவர்களுடன் பவர் ஸ்டார் சீனிவாசன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள்.

மேலும் இந்தப் படத்தின் மூலம் பின்னணி பாடகர் மனோவின் மகன் ரத்திஷ் நாயகனாகவும், நடிகை இனியாவின் தங்கை தாரா கதாநாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். மேலும் மஸ்காரா அஸ்மிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்தப் படத்தில் நடித்த அனுபவம் குறித்து, இயக்குநர் பாக்யராஜ் பேசும் போது…

“முன்னமே வைக்கப்பட்ட இந்த படத்தின் தலைப்பு, இப்போது நடந்துகொண்டிருக்கிற சம்பவங்களோடு அப்படியே பொருந்தும் வகையில் இருக்கிறது.

காரணம், இப்போது சினிமாவில் இருப்பவர்கள் எல்லாம் அரசியலை நோக்கிக் கிளம்பிக் கொண்டிருக்கிற காலம் இது. எனவே இந்த “கிளம்பிட்டாங்கய்யா.. கிளம்பிட்டாங்கய்யா” என்கிற தலைப்பு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.

எனக்கு இந்தப் படத்தில் ஆச்சர்யம் என்னவென்றால், எப்படி இவ்வளவு நடிகர்களிடம் ரசாக் வேலை வாங்கினார் என்பது தான். அதுவே மிகப்பெரிய அட்வெஞ்சர் அனுபவம் தான்.

அதை விட அட்வெஞ்சர் படத்திற்கு புரடியூஸ் செய்வது. படப்பிடிப்பு தளங்களில் மிக சாதாரணமாகத் தான் இருந்தது. அதையே திரையில் பார்க்கும் போது மிக பிரம்மாண்டமாய் இருந்தது.

இப்போதெல்லாம் படம் எடுப்பதை விட, தியேட்டருக்குக் கொண்டு வருவது தான் பெரிய வேலையாக இருக்கிறது. விரைவில் இந்தப்படம் திரைக்கு வந்து, நிச்சயம் உங்களை மகிழ்விக்கும்” என பேசினார்.

Bhagyaraj speech at Kilambitangayya Kilambitangayya press meet

Kilambitangayya Kilambitangayya Movie Press Meet (3)

உள்ளே வெளியே-2 எடுக்கும் பார்த்திபன்; சில்க் போல பெண் தேவையாம்!

உள்ளே வெளியே-2 எடுக்கும் பார்த்திபன்; சில்க் போல பெண் தேவையாம்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Parthiban silk smithaதான் இயக்கி நடித்த புதிய பாதை என்ற முதல் படத்திலேயே தேசிய விருதை தமிழ் சினிமாவுக்கு பெற்றுத் தந்தவர் பார்த்திபன்.

இதனையடுத்து ஒரு சில படங்களை இயக்கி நடித்தாலும் எதுவும் பெரிய வெற்றிப் பெறவில்லை.

எனவே கவர்ச்சியின் எல்லையைத் தொட்டு உள்ளே வெளியே என்ற படத்தை இயக்கி தயாரித்து நடித்தார் பார்த்திபன்.

சிட்டி முதல் பட்டி தொட்டி வரை இப்படம் ஹிட்டானது.

தற்போது 24 வருடங்களுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகத்தை எடுக்கவிருக்கிறார்.

இப்படத்திற்கு சில்க் ஸ்மிதா போன்ற ஒரு கவர்ச்சியான பெண் தேவையாம். அதை அவர் தன் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அதை அவர் எப்படி பதிவிட்டு இருக்கிறாரோ? அப்படியே இங்கே தருகிறோம்.

R.Parthiban‏Verified account @rparthiepan

2. 0. 1. 8-ன்

18-ல் துவங்கும் ‘உள்ளெ வெளியே’

18-ற்கான commercial comedy thriller படத்திற்கு

18-வயதில் அமைதி+வசீகரமான பெண்ணும்,

28-வயதில் கவர்ந்திழுக்கும் சிலுக்கு பெண்ணும்,

38-வயதில் இளம் பெண்ணின் அழகிய அம்மாவும் தேவை! புகைப்படத்துடன் அணுக-ரம்யா 044-43523255/9092728965

மூத்த கலைஞர்கள் அவமதிப்பு..?; எஸ்வி.சேகர் ராஜினாமா குறித்து விஷால்

மூத்த கலைஞர்கள் அவமதிப்பு..?; எஸ்வி.சேகர் ராஜினாமா குறித்து விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vishal and sveshekherகடந்த சில தினங்களுக்கு முன் மலேசியாவில் நட்சத்திரக் கலைவிழா நடைபெற்றது.

இந்த விழாவில் மூத்த கலைஞர்களுக்கு தகுந்த மரியாதை அளிக்கப்படவில்லை என குற்றம் சாட்டிய எஸ்.வி.சேகர், தன் சங்க ட்ரஸ்ட் பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் மலேசியாவில் இருந்து சென்னை திரும்பிய விஷால் அங்கிருந்த நிருபர்களிடம் கூறியதாவது:-

நட்சத்திர கலைவிழா சிறந்த முறையில் நடந்தது.

அதில் திரட்டப்பட்ட நிதியை விரைவில் தெரிவிப்போம்.

கலை விழாவில் மூத்த கலைஞர்கள் அனைவரையும் மரியாதையாக நடத்தினோம்.

எஸ்.வி.சேகர் அவர்கள் அறங்காவலர் பதவியை ராஜினாமா செய்ததற்கு ஒரு காரணம் சொல்லி இருக்கிறார். அதை ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

More Articles
Follows