திராவிடம் இல்லை.. ஆன்மிகம் தான்.; கட்சி பெயரை முடிவு செய்த ரஜினி

திராவிடம் இல்லை.. ஆன்மிகம் தான்.; கட்சி பெயரை முடிவு செய்த ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajinikanths political party name and symbol updates கடந்த 25 வருடங்களாக பரபரப்பாக பேசப்பட்ட ரஜினியின் அரசியல் வருகை கடந்த 4 ஆண்டுகளில் அவரின் அரசியல் பிரவேசத்தை உறுதி செய்திருந்தது.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் ரஜினி கட்சி ஆரம்பித்து போட்டியிடவுள்ளார்.

பாபா முத்திரை தான் ரஜினி கட்சி சின்னம் என்பது தெரிந்துவிட்டது.

ஆனால் அவரின் கட்சி பெயர் என்னவாக இருக்கும்? என்பதே பலரின் கேள்வியாக இருந்தது.

தற்போது தமிழகத்தில் (தேசிய கட்சிக்களை தவிர) உள்ள கட்சிகளுக்கு திராவிடம் என்பதே கொள்கையாக உள்ளது.

எனவே அவர்களின் கட்சி பெயர்களில் திராவிடம் என்ற வார்த்தை இடம் பெற்றிருக்கும்.

திமுக… அதிமுக… தேமுதிக.. ஆகிய கட்சிகள் திராவிடத்தை சார்ந்தே இருக்கும்.

சீமானின் கட்சிக்கு நாம் தமிழர் என்ற பெயரும்… கமலின் கட்சிக்கு மக்கள் நீதி மய்யம் என்ற பெயரும் திராவிடம் சாராமல் உள்ளது.

இந்த நிலையில் ரஜினி கட்சிக்கு திராவிடம் என்ற வார்த்தை இருக்காதாம்.

மாறாக ஆன்மிக சொல் இடம் பெற்றிருக்கும் என தகவல்கள் வந்துள்ளன.

இந்த தகவல் உண்மைதானா என 2020 நவம்பர் மாதம் வரை காத்திருந்து பார்ப்போம்.

Rajinikanths political party name and symbol updates

அருவி தொடங்கி ஆஹா…; ஹாட்ரிக் அடிப்பாரா சிவகார்த்திகேயன்..?

அருவி தொடங்கி ஆஹா…; ஹாட்ரிக் அடிப்பாரா சிவகார்த்திகேயன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

First single from Arun Prabhus Vaazhl release updatesஅருவி படத்தின் மூலம் தமிழக திரையுலகினரின் கவனத்தை ஈர்த்தவர் அப்பட இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன்.

ரசிகர்களும் இந்த படத்தை ஆஹா ஓஹோவென கொண்டாடினர்.

எனவே இவரின் அடுத்த படத்திற்கு ரசிகர்கள் காத்திருந்தனர்.

தற்போது நீண்ட வருடங்களுக்கு பிறகு இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் வாழ்.

பிரதீப், பானு, திவா, யாத்ரா உள்ளிட்டோர் கதையின் கேரக்டர்களாக நடித்துள்ளனர். ஷெல்லி இப்படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய, ப்ரதீப் குமார் என்பவர் இசையமைத்துள்ளார்.

வாழ் படத்தில் இடம்பெற்றுள்ள ஆஹா என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது

இந்த பாடல் படமாக்கப்பட்ட விதம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ஆஹா.. அருமை… என ரசிகர்கள் இந்த பாடல் வீடியோவை பார்த்து ரசித்து வருகின்றனர்.

கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா ஆகிய 2 வெற்றிப் படங்களைத் தயாரித்த நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக வாழ் படத்தை தயாரித்துள்ளார்.

3வது படமும் வெற்றியடைந்து ஹாட்ரிக் கொடுப்பாரா? என்பதை காத்திருந்து பார்ப்போம்.

First single from Arun Prabhus Vaazhl release updates

பிறந்தநாளில் நிச்சயத்தார்த்தம்..: 2வது திருமணத்திற்கு ரெடியான விஷ்ணு விஷால் & ஜூவாலா கட்டா

பிறந்தநாளில் நிச்சயத்தார்த்தம்..: 2வது திருமணத்திற்கு ரெடியான விஷ்ணு விஷால் & ஜூவாலா கட்டா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Jwala Gutta gets engaged with Vishnu Vishal on her birthdayவெண்ணிலா கபடிக்குழு, ஜீவா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்தவர் விஷ்ணு விஷால்.

பிரபு சாலமன் இயக்கிய காடன் என்ற படத்தில் ராணாவுடன் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

கடந்த 2011-ம் ஆண்டு ரஜினி நட்ராஜ் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார் விஷ்ணு விஷால்.

இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2018-ம் ஆண்டு விவாகரத்து செய்தனர்.

இதன் பின்னர்… மனைவியை விவாகரத்து செய்த பின் ஜூவாலா கட்டாவைச் சந்தித்தேன். அவரும் தன் மண வாழ்வில் பிரிவைச் சந்தித்துள்ளார். நாங்கள் மனம் விட்டுப் பேசினோம். வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்கலாம் என்றார்.

அதன் பின்னர் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை காதலித்து வந்தார் விஷ்ணு விஷால்.

இவ்விருவரும் தங்கள் காதலை வெளியுலகுக்கு அதிகாரபூர்வமாக அறிவித்தார்கள்.

கரோனா ஊரடங்கால் விஷ்ணுவை நினைத்து உருக்கமாக இன்ஸ்டகிராமில் பதிவு எழுதினார் ஜூவாலா கட்டா.

இன்று தனது 37-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் ஜூவாலா கட்டா.

இந்த நிலையில் ஜுவாலாவின் பிறந்த நாளை முன்னிட்டு இருவரும் மோதிரம் மாற்றிக் கொண்டு, திருமணம் செய்து கொள்ள போவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

எக்ஸ்ட்ரா தகவல்… ஜுவாலா கட்டா அவர்கள் சேட்டன் ஆனந்த் என்பவருடன் 2005 முதல் 2011 (July 17, 2005 to June 29, 2011) வரை திருமண பந்தத்தில் இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jwala Gutta gets engaged with Vishnu Vishal on her birthday

மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது..; தாயும் சேயும் நலம் என கணவர் தகவல்!

மைனா நந்தினிக்கு குழந்தை பிறந்தது..; தாயும் சேயும் நலம் என கணவர் தகவல்!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சரவணன் மீனாட்சி டிவி சீரியல் மூலம் புகழ் பெற்றவர் மைனா நந்தினி.

இவர் சீரியல் & சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் நந்தினி கர்ப்பமாக உள்ள நிலையில் அவருக்கு வளைகாப்பு நடந்தது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு baby Coming Soon என அவரது கணவர் யோகேஷ்வரன் தெரிவித்திருந்தார்.

தற்போது நந்தினிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

மேலும் தாயும் குழந்தையும் நலமாக இருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

myna nandhini

myna nandhini became mother

I am a தமிழ் பேசும் Indian.. ஹிந்தி தெரியாது போடா..; திடீரென கிளம்பிய ஸ்டார்ஸ்.. ஏன்.?

I am a தமிழ் பேசும் Indian.. ஹிந்தி தெரியாது போடா..; திடீரென கிளம்பிய ஸ்டார்ஸ்.. ஏன்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

hindi theriyathu podaஇயக்குநர் வெற்றிமாறன் அளித்த சமீபத்திய பேட்டியில்… தனக்கு ஹிந்தி தெரியாததால், தன்னை 1 மணி நேரம் ஒரு ஆபிசர் ஏர்போர்ட்டிலே நிற்க வைத்தார் என சொல்லியிருந்தார்

இந்த பேட்டி, பெரும் சலசலப்பை கோலிவுட்டில் ஏற்படுத்தியது.

இதனையடுத்து இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா…

I am a தமிழ் பேசும் இந்தியன் என வாசகம் உள்ள டீ-சர்ட்டை போட்டு போட்டோ எடுத்துள்ளார்.

அவருடன் மெட்ரோ பட ஹீரோ சிரிஷ் நிற்கிறார்.

அவர் பனியனில் ஹிந்தி தெரியாது போடா என்ற வாசகம் உள்ளது.

இதேமாதிரியான டீ-சர்ட் ஐ நடிகர் சாந்தனு & அவரது மனைவியும் அணிந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளனர்.

இவர்களை போல் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் & தனது தம்பி நடிகர் மணிகண்டனுடன் போஸ் கொடுத்துள்ளார்.

பலரும் ஹிந்தி தெரியாது போடா என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

திமுக எம்பி. கனிமொழி இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இத்துடன் திமுக வேணாம் போடா என்ற வாக்கியமும் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

hindi theriyathu poda t-shirts set twitter-on-fire

சினிமா போதும்.. தமிழகத்தை ஆள வா..; சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்

சினிமா போதும்.. தமிழகத்தை ஆள வா..; சூர்யாவை அரசியலுக்கு அழைக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழக அரசியல் கோட்டை கோடம்பாக்கத்தில் உருவாகும் போல.. நடிகர்களே சும்மா இருந்தாலும் அவர்களை அரசியலுக்கு அழைப்பதையே வழக்கமாக வைத்துள்ளனர் ரசிகர்கள்.

எம்ஜிஆர்.. ஜெயலலிதா தொடங்கி சரத்குமார், விஜயகாந்த், கமல்ஹாசன் என அனைவரும் அரசியலுக்கு வந்துவிட்டனர்.

ரஜினிகாந்த் விரைவில் அரசியல் களம் காணவிருக்கிறார்.

விஜய் & அஜித் ரசிகர்கள் அவர்களை அரசியலுக்கு அழைத்து போஸ்டர்கள் ஒட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யா ரசிகர்களும் இது போல போஸ்டர் களத்தில் இறங்கி உள்ளனர்.

மதுரை நகரில், சூர்யாவை புரட்சியாளர் சேகுவாரா போல் சித்தரித்து உள்ளனர்.

‘திரையுலகை ஆண்டது போதும் தமிழகத்தை ஆள வா புரட்சி வேங்கையே’ என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

இந்த போஸ்டரில் தமிழக சட்டமன்ற படமும் இடம் பெற்றுள்ளது.

Suriya fans mass political poster designs goes viral

suriya_poster_fans

More Articles
Follows