பதவிக்கு பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்..; ரஜினிகாந்த் எச்சரிக்கை

பதவிக்கு பணம் வாங்கினால் கட்சியிலிருந்து நீக்கம்..; ரஜினிகாந்த் எச்சரிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini warns his fans and his political party members விரைவில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளார் ரஜினிகாந்த்.

அவரது கட்சி பெயர் மக்கள் சேவை கட்சி என்றும் அவரது சின்னம் ஆட்டோ என்றும் தகவல்கள் வந்தன.

ஆனால் கட்சி தலைமை உறுதி செய்யும் வரை ரசிகர்கள் காத்திருக்குமாறு ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை வெளியிட்டது.

எனவே டிசம்பர் 31ஆம் தேதி இதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பூத் கமிட்டி அமைப்பதற்கான வேலைகளை ரஜினி முடுக்கிவிட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

அதாவது.. ஒரு கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த பூத் கமிட்டி அவசியமானது.

இந்த கமிட்டி உறுப்பினர்கள் ஒவ்வொரு வீடு வீடாக சென்று கட்சியின் செல்வாக்கை உயர்த்த பாடுபடுவர். வாக்காளர்களை தவறாமல் வாக்களிக்க வருகை புரிய வைப்பதில் பூத் கமிட்டியின் செயல்பாடுகள் மிக முக்கியமானதாக ஆகும்.

இதுவரை தமிழகம் முழுவதும் 47000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் இன்னும் 20000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என ரஜினி மக்கள் மன்றம் அறிவுறுத்தி உள்ளதாம்.

வரும் 25ஆம் தேதிக்குள் பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமித்து, அதற்கான பட்டியலை தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனத்தில் பணம் பெற்றால் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஊழலை ஒழிக்கவே நமது அரசியல் கட்சி எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

Rajini warns his fans and his political party members

ஒரு நாள் தியானம் செய்ய கோர்ட்டிடம் அனுமதி கேட்கும் இளையராஜா..; ஏன்..?

ஒரு நாள் தியானம் செய்ய கோர்ட்டிடம் அனுமதி கேட்கும் இளையராஜா..; ஏன்..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Music Composer ilayaraja and Prasad Studio court case updatesசென்னை சாலிகிராமத்தில் உள்ள அருணாச்சலம் சாலையில் அமைந்துள்ளது பிரசாத் ஸ்டூடியோ. அதில் கடந்த 35 ஆண்டுகளாக உள்ள ஒலிப்பதிவு கூடத்தில் தன் இசை பணிகளை செய்து வந்தார் இளையராஜா.

ஒலிப்பதிவு கூடத்தை, காலி செய்யும்படி, பிரசாத் நிர்வாகம், இளையராஜாவை கேட்ட நிலையில் இளையராஜா மறுக்கவே விவகாரம் கோர்ட் வரை சென்றது.

சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தன்னை வலுக்கட்டாயமாக பிரசாத் நிர்வாகம் வெளியேற்றியதாக புகார் கூறினார் இளையராஜா.

இதனையடுத்து பாரதிராஜா தலைமையில் திரைத்துறையினர் இளையராஜாவுக்கு ஆதரவாக புறப்பட்டு பிரசாத் ஸ்டூடீயோ சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்த நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் தன்னை ஒரு நாள் தியானம் செய்யவும், உடமைகளை எடுத்து செல்லவும் அனுமதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், இளையராஜா வழக்கு தொடுத்தார்.

இத்துடன் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் கேட்டார்.

இவ்வழக்கு, நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இளையாராஜா சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகினார்.

பிரசாத் ஸ்டுடியோ சார்பில், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், வழக்கறிஞர்கள் இளம்பாரதி, அப்துல் சலிம் ஆகியோரும் ஆஜராகினர்.

இளையராஜா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ”இவ்வளவு ஆண்டுகள், இசை அமைத்த இடத்தில், ஒரு நாள் தியானம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர் கைப்பட எழுதியுள்ள குறிப்புகள், இசை கருவிகள், பெற்ற விருதுகள், அங்கு தான் உள்ளன,” என தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிபதி, ‘இளையராஜா அங்கு பல நாட்கள் இருந்துள்ளார். அவர் அங்கு சென்று தியானம் செய்வதால், உங்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட போகிறது” என கேட்டார்.

உடனே, வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், இதுகுறித்து, நிர்வாகத்தினரிடம் பதில் பெற்று நீதிபதியுடம் தெரிவிப்பதாக கூறினார்.
இதனையடுத்து அடுத்த கட்ட விசாரணையை, வரும், திங்கட்கிழமை 21ம் தேதிக்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

Music Composer ilayaraja and Prasad Studio court case updates

அவள் 2 அப்டேட்.. மீண்டும் படம் தயாரித்து நடிக்கும் சித்தார்த்

அவள் 2 அப்டேட்.. மீண்டும் படம் தயாரித்து நடிக்கும் சித்தார்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Siddharth plans to produce Aval 2நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்த படம் அவள். ஆண்ட்ரியா, அதுல் குல்கர்னி, சுரேஷ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்த திகில் படத்தை மிலிந்த் ராவ் இயக்கியிருந்தார்.

முதலில் தமிழில் வெளியான இப்படம் பின்னர் ஹிந்தி, தெலுங்கிலும் வெளியானது.

தற்போது இதன் 2ம் பாகத்தை உருவாக்கவுள்ளனர்.

கதை, திரைக்கதையை இயக்குனர் மிலிந்த் ராவ் எழுத மீண்டும் சித்தார்த்தே தயாரித்து, நடிக்கவுள்ளார். நாயகியாக ஆண்ட்ரியாவே தொடரவுள்ளார்.

தற்போது விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடிக்கும் நெற்றிக்கண் படத்தை இயக்கி வருகிறார் மிலிந்த் ராவ் என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாரா படத்தை முடித்துவிட்டு தான் சித்தார்த் படத்தை இயக்கவிருக்கிறாராம் மிலிந்த் ராவ்.

Actor Siddharth plans to produce Aval 2

டாஸ்மாக்கால் குடும்பமே காலி ஆகலையா? முதல்வருக்கு கமல் ரசிகர்கள் கேள்வி

டாஸ்மாக்கால் குடும்பமே காலி ஆகலையா? முதல்வருக்கு கமல் ரசிகர்கள் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kamal haasanதமிழகத்தில் உள்ள குடும்பங்களை நடிகர் கமல் சீரப்பழிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடினார்.

மேலும் அவர் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் குடும்பமே காலி எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து முதல்வரும் பிக்பாஸ் பார்ப்பது மகிழ்ச்சியளிக்கிறது என கமல்ஹாசன் பதில் கூறினார்.

விரைவில் தேர்தல் வரவிருக்கும் நிலையில் கமல்ஹாசனை முதல்வர் நேரடியாக விமர்சித்துள்ளது இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

தாங்கள் எழுப்பிய எந்த அரசியல் கேள்விகளுக்கும் பதில் சொல்லாதவர்கள், விமர்சனம் செய்ய மட்டுமே முன்வருவார்கள் எனவும் ம நீ ம இளைஞரணி செயலாளர் சினேகன் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில்… நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் வீட்டில் 170 கோடிகளை வருமானவரித் துறை கைப்பற்றியது நினைவிருக்கலாம். ஒப்பந்தக்காரர்களின் பிக்பாஸ் யார்? நான்_கேட்பேன் என கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

மேலும் கமல் ரசிகர்களும் அவரது கட்சி தொண்டர்களும் முதல்வரை கடுமையாக சாடி வருகின்றனர்.

கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியால் குடும்பம் சீரழிகிறது என சொல்லும் முதல்வரே நீங்கள் நடத்தும் டாஸ்மாக்கால் குடும்பங்கள் சீரழியவில்லையா? என கேட்டு ட்விட்டரில் ட்ரெண்ட்டிங் செய்து வருகின்றனர்.

 

Kamalhassan fans slams Tamilnadu CM Edappadi Palanisamy

Shreyaa Sumi Won Radiant Beauty Miss south Asia world 2020

Shreyaa Sumi Won Radiant Beauty Miss south Asia world 2020

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Shreyaa Sumi Won Radiant Beauty Miss south Asia world 2020Shreyaa Sumi wins the Title Radiant Beauty in Miss south Asia world 2020 under the Mrs Category.It was held on December 11th to 13th 2020 by New Jersey based myDream Entertainment & myDreamTv USA founder Reshmi Bedi & Janak Bedi. Due to covid-19 pandemic the organizers conducted the virtual pageant for Indian community across the globe.

The online competition was choreographed & hosted by bollywood actor Aric Diamani. Few bollywood chief guests were Aryan vaid, Richa sharma, Komal Dangi and Indranee Talukder. Former Miss Universe Sushmita Sen was the celebrity guest for the previous year.

The pageant witnessed contestants from the USA,Canada,New Zealand & India. There were several virtual rounds with themes like Ethnic Wear, Western Gown, followed by Debate on Women’s health topic, Introduction, Q&A and Talent. The vision of the event was to empower women of all ages.

Shreyaa Sumi says, I feel Honored to have Won the Title ‘Radiant Beauty’. I always believe true inner beauty with purpose outshines the physical beauty. It’s all about feeling confident in your own skin. I am thankful to the organizers for recognizing my real talent. I am currently living in Los Angeles, California. I decided to participate in this virtual pageant to be productive and adapt to the new normal. Being a professional model and having walked for several fashion shows, my love for the stage performance, spotlight & camera; this virtual pageant was one of a kind experience and a memory to cherish. I am always grateful to my husband and my mom who supports me.

It is to be noted that Shreyaa Sumi is a Fashion Model and an Artist based from Chennai. She is the Title Crown Winner of Beauty Pageant Madarase India 2020 held in India, March2020. She is an esteemed award winner of ‘South India Women Achievers Award’ and ‘Women Excellence Achievers Award’ for her inspiring work in the field of Fashion & Arts. She was also felicitated ‘Wonder Women of South India’ by syrafills media for her social work. She was exclusively featured as ‘Beauty with Brain’ in Twell -National magazine of India.

Apart from beauty pageant & fashion shows, she featured on various magazines cover page, brand shoots for e-commerce, print shoots & acted in short films and played a vital role in a kollywood movie are the milestones in her career. She is also an Ambassador for an NGO to spread awareness on breast cancer. She strongly supports gender equality and contributes to several causes. As she continues to create a positive impact through her work, Shreyaa Sumi is determined to be an International model and a Global influencer..

 

Shreyaa Sumi Won Radiant Beauty Miss south Asia world 2020

விஜய்யின் ‘மாஸ்டர்’க்கு யுஏ சர்ட்டிபிகேட் கொடுத்த சென்சார்..? இதன் காரணம்.?

விஜய்யின் ‘மாஸ்டர்’க்கு யுஏ சர்ட்டிபிகேட் கொடுத்த சென்சார்..? இதன் காரணம்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Masterலோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி, மாளவிகாக மோகனன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் மாஸ்டர்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

2021 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தியேட்டர்களில் இப்படம் ரீலீசாகவுள்ளது.

மாஸ்டர் படத்திற்கு சென்சாரில் யூ ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்த படத்துக்கு U சான்றிதழ் வாங்க தயாரிப்பு தரப்பு முயற்சித்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.

படத்தில் வன்முறையை தூண்டும் சண்டை காட்சிகள் இருப்பதால் யூ ஏ சான்றிதழ் அளித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

Reason behind Thalapathy Vijay’s Master censor

More Articles
Follows