‘விஸ்வாசம்’ படத்துல என்ன இருக்கு.. சொல்லி அடிச்ச வெற்றி ‘அண்ணாத்த’..; ரஜினி ஓபன் டாக்

‘விஸ்வாசம்’ படத்துல என்ன இருக்கு.. சொல்லி அடிச்ச வெற்றி ‘அண்ணாத்த’..; ரஜினி ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கிய அண்ணாத்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அன்றைய தினம் நவம்பர் 4ல் ரிலீசானது.

பெண்களையும் குழந்தைகளையும் ரஜினி ரசிகர்களை கவர்ந்த இந்த படம் பெரியளவில் உலகளவில் வசூல் வேட்டையாடி வருகிறது.

படம் ரிலீசாகி 10 நாட்கள் ஆன நிலையில் ரூ. 250 கோடி வசூலை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

மற்றொரு புறம் இந்த படத்திற்கு பல நெகட்டிவ் விமர்சனங்களும் வந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில் தன் மகள் சௌந்தர்யா அறிமுகம் செய்த HOOTE செயலி மூலம் அண்ணாத்த படத்தை ஒப்புக் கொண்டது எப்படி என ரஜினி தனக்கே உரிய பாணியில் பேசியுள்ளார்.

அவர் பேசியதாவது…

“காலா, கபாலி படங்களில் வயதான கெட்டப்பில் நடித்தேன். ஆனால் பேட்ட படத்தில் என்னை இளமையாக ஸ்டைலிஷ் ஆக காட்டியிருந்தார் டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ். படம் மிகப்பெரிய வெற்றி.

பேட்ட ரிலீசான அதே நாளில் அஜித் நடித்த விஸ்வாசம் படமும் ரீலீசானது. அந்த படமும் சூப்பர் ஹிட்டாச்சு.

உடனே எனக்கு விஸ்வாசம் படம் பார்க்க தோனுச்சி. அதன்படி பார்க்க ஆரம்பித்தேன். இடைவேளையும் வந்தது. விஸ்வாசம் படத்துல என்ன இருக்கு? எப்படி இது ஹிட்டாச்சுன்னு நினைச்சிட்டே இருந்தேன்.

படம் இடைவேளைக்கு பிறகு போக போக சூப்பரா இருந்துச்சி. க்ளைமாக்ஸ் சூப்பர். உடனே சிவாவை கூப்பிட்டு பாராட்ட தோனுச்சி.

என் வீட்டுக்கு அழைத்தேன். பாராட்டினேன். அவரு பார்க்கத்தான் பெரிய உருவம். சின்ன குழந்தை மாதிரிதான் பேசுவார்.

எனக்கும் கதை இருந்தா சொல்லுங்க என்றேன். பேட்ட மாதிரி ஹிட் கொடுக்கனும்னு சொன்னேன். சார் நீங்க இருந்தா ஹிட்தான்னு சொன்னாரு.

அண்ணாமலை, பாட்ஷா, தளபதி படங்கள்ல நல்ல கதை இருந்துச்சி. நீங்களும் இருந்தீங்க. படம் சூப்பர் ஹிட்.

ஒரு கிராமத்து பின்னணி.. நல்ல கதை.. இதுபோல இருந்தா.. ஹிட் கொடுக்கலாம்ன்னு சொன்னாரு.

அப்புறம் 2 வாரம் கழிச்சி நல்ல கதையோடு வந்தாரு. கதை சொன்னாரு. குடிக்க தண்ணி வேனும்னு கேட்டாரு. (தண்ணின்னா சாதாரண தண்ணிதாங்க.. நீங்க நினைக்கிற மாதிரி தண்ணி இல்ல…) தண்ணி குடிச்சிட்டே கதை சொன்னாரு. நான் கண் கலங்கிட்டேன்.

அவ்வளவு அருமையான கதை. சொல்லி அடிச்ச வெற்றி அண்ணாத்த படம். மாபெரும் வெற்றி கிடைச்சிருக்கு. அனைவருக்கும் நன்றி.”

என பேசியுள்ளார் ரஜினிகாந்த்.

Rajini talks about Annatthe success and Viswasam movie

#WeStandWithSuriya… சூடு பிடிக்கும் சூர்யா விவகாரம்..; ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை

#WeStandWithSuriya… சூடு பிடிக்கும் சூர்யா விவகாரம்..; ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடிக்க ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை கண்டால் அவரை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

மேலும் மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இவையில்லாமல் நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பாமக.வினரின் இந்த செயல்களை கண்டிக்கும் விதமாக ட்விட்டரில் #WeStandWithSuriya ஹாஷ்டேக்கை சூர்யா ரசிகர்கள் தெறிக்கவிட்டு வருகின்றனர்.

சூர்யாவுக்கு மிரட்டல் விடுபவர்களை கண்டித்து.. எங்களை தாண்டி தான் சூர்யா அண்ணனை தொடணும் எனவும் ரசிகர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் சூர்யா ரசிகர் மன்றம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
அதில்….

அன்பான உறவுகளுக்கு,
வணக்கம்.

சூர்யா அண்ணன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘ஜெய்பீம்’ படம் அதிகாரத்துக்கு எதிரான மக்களின் போர்க்குரலாக உலகமெங்கும் ஒலிக்கிறது.

படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அங்கீகாரமும்தான் இந்த மண்ணில் மாற்றம் நிகழும் என்பதற்கான நம்பிக்கை. அதேநேரம் படத்துக்கு எதிரான கருத்துகளை ஒருசிலர் திட்டமிட்டுப் பரப்பி வருவதையும் நாம் கவனிக்கிறோம்.

சூர்யா அண்ணனுக்கு எதிராகப் பேசப்படும் நியாயமற்ற விஷயங்களை அறம்சார்ந்த இந்த சமூகம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. அதனால் எப்போதும்போல் நாம் பொறுமையாக இருப்பதுதான் சிறப்பு.

சூர்யா அண்ணன் எந்த சாதி மத வேறுபாடுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை நாம் மட்டும் அல்ல, இந்த நாடும் நன்கறியும். அதனால் எவருக்கும் விளக்கமோ பதிலடியோ கொடுக்க வேண்டிய அவசியம் நமக்கு இல்லை.

கட்டுப்பாடும் பொறுமையும் கொண்ட நம் மன்றத்தினர் பேச்சாகவோ சமூக வலைத்தளப் பதிவுகளாகவோ எவ்வித எதிர்வினையும் ஆற்ற வேண்டாம் என அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

“தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம்.
உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள். சமூகம் பயன் பெற”

என்ற அண்ணன் நமக்கு கற்பித்த பாதையில் பயணிப்போம்.

இவ்வாறு அகில இந்திய சூர்யா ரசிகர் மன்ற அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Suriya fans club request fans to control their emotions

சூர்யாவை தாக்கினால் ரூ 1 லட்சம்..; கூடவே 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பாமக

சூர்யாவை தாக்கினால் ரூ 1 லட்சம்..; கூடவே 5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் பாமக

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடிக்க ஞானவேல் இயக்கத்தில் உருவான ’ஜெய்பீம்’ படம் அண்மையில் ஓடிடி தளத்தில் வெளியானது.

பலரின் பாராட்டை இந்த படம் பெற்றாலும் வன்னியர் சமுதாயத்தை அவமதிப்பு செய்துள்ளதாக சூர்யா மீதும் படக்குழுவினரும் மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன.

முன்னாள் மத்திய அமைச்சர் பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி இந்த படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து 9 கேள்விகளை கேட்டு இருந்தார்.

நடிகர் சூர்யாவும் இதற்கு பதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார் என்பதை நம் தளத்தில் விரிவாக பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகர் சூர்யாவை கண்டால் அவரை தாக்குபவர்களுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு வழங்கப்படும் என பாமக மாவட்ட செயலாளர் அறிவித்துள்ளார்.

மறைந்த பாமக பிரமுகர் காடுவெட்டி குருவின் பெயரை தவறாக பயன்படுத்தியதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி அவர்கள் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

’சூர்யா நடித்த ’ஜெய்பீம்’ படம் சர்ச்சைக்குரிய வகையில் திட்டமிட்டு எடுக்கப்பட்டுள்ளது. சில கதாபாத்திரங்களுக்கு உண்மை பெயரை சூட்டி விட்டு காடுவெட்டி குரு அவர்களை இழிவுபடுத்தும் வகையில் வில்லனுக்கு அவரது பெயரை வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார் பாமக மாவட்ட செயலாளர் பழனிச்சாமி.

பாமக மாவட்ட செயலாளரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இது ஒரு புறமிருக்க மறுபுறம் சூர்யாவிடம் நஷ்ட ஈடு கேட்டுள்ளனர்.

நடிகர் சூர்யாவிடம் ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாமக நிர்வாகி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர்களை தவறாக சித்தரித்ததற்காக ரூபாய் 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் என்று வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி என்பவர் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் நஷ்டஈடு தொகையை கொடுக்கவேண்டும் எனவும் அந்த நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.

Political party PMK announces Rs 1 lakh reward for attacking Surya

காவல்துறை புனிதமானது.. பயப்படாம வாங்க.; ‘இக்‌ஷு’ டீசரை வெளியிட்டு போலீஸ் ராஜேஸ்வரி பேச்சு

காவல்துறை புனிதமானது.. பயப்படாம வாங்க.; ‘இக்‌ஷு’ டீசரை வெளியிட்டு போலீஸ் ராஜேஸ்வரி பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அறிமுக நாயகன் ராம் நடிக்கும் படம் இக்ஷு. டாக்டர் அஸ்வினி நாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை வி.வி.ருஷிகா இயக்கியுள்ளார். விகாஸ் படிஷா இசையமைத்துள்ளார். நவீன் டுகிட்டி ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு உட்பட ஐந்து மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் விமர்சையாக நடைப்பெற்றது.

சமீபத்திய மழையின்போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரை துணிச்சலாக காப்பாற்றிய காவல் ஆய்வாளர் திருமதி ராஜேஸ்வரி அவர்கள் தமிழ் சினிமாவின் முன்னோடிகள் முன்னிலையில் டீசரை வெளியிட்டார்.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன், தயாரிப்பாளர் சங்கத்தின் செயற்குழு உறப்பினர் விஜயமுரளி, கில்டு தலைவர் ஜாக்குவர் தங்கம், நடிகர் நட்டி உட்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மக்கள் தொடர்பாளர் பிரியா வரவேற்றார். நிகழ்ச்சியை கவிதா தொகுத்து வழங்கினார்.

விழாவில் நாயகன் ராம் கூறியதாவது…

இந்த டீமுக்கு நான் மிகப் பெரிய நன்றி சொல்லவேண்டும். ஏனெனில், புதுமுகமாகிய என் மீது நம்பிக்கை வைத்து மிகப் பெரிய பொறுப்பை வழங்கியுள்ளார்கள். அந்த நம்பிக்கையை காப்பாற்றும் விதமாக கதைக்கும் கேரக்டருக்கும் என்ன நியாயம் செய்ய முடியுமோ அதை செய்திருக்கிறேன். இந்தப் படம் அனைத்து தரப்புக்கும் பிடிக்கும் விதமாக உருவாகியுள்ளது’’ என்றார்.

இயக்குநர் ருஷிகா பேசும்போது…

‘இது எனக்கு முதல் படம். இந்தப் படத்தை உண்மை சம்பவத்தை மையாக வைத்து இயக்கியுள்ளேன். இது பேமிலி கலந்த த்ரில்லர் ஜானர். எனது தாய்மொழி தெலுங்காக இருந்தாலும் தமிழ் மொழியில் படம் இயக்க வேண்டும் என்பது கனவாக இருந்தது. அந்த வகையில் ஒரே கல்லில் ஐந்து மாங்காய் அடித்த மாதிரி தமிழ், தெலுங்கு என்று ஐந்து மொழிகளில் இயக்கியது மகிழ்ச்சி’ என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் விஜய் முரளி கூறியதாவது…

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் ஐந்து மொழிகளில் வெளியான டீசர் படத்தின் தரத்தின் உறுதி செய்துள்ளது. பெண் இயக்குநர்கள் வரிசையில் ருஷிகா அறிமுகமாவது மகிழ்ச்சி. ‘இக்ஷு’ என்ற சமஸ்கிருத வார்த்தைக்கு ‘கண்’ என்றும் ‘சிவன்’ என்றும் அர்த்தப்படுத்தலாம் என்றார்கள்.

அந்த வகையில் டைட்டில் தனித்துவமாக உள்ளது. சினிமாவுக்கு ஜாதி, மதம் என்கிற பேதம் கிடையாது. எந்த மொழியில் எடுத்தாலும் அது சினிமாதான். இந்த நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி சிறப்பு விருந்தினராக வந்துள்ளார்.

சமூகத்துக்கு காவல் துறையின் பங்களிப்பு மிக முக்கியம். உதராணத்துக்கு ஒரு நாள் நேரம் காவல் துறை இயங்கவில்லை என்றால் நாட்டில் வன்முறை, கொலை, கொள்ளை என்று சமூக விரோத குற்றங்கள் பெருகிவிடும். அத்தகைய சூழலில் காவல் துறையினர் எப்போதும் முன் களப் பணியாளர்களாக தங்கள் கடமையை சரியாக செய்து வருகிறார்கள். அவர்களுக்கு வீர வணக்கம். இது சஸ்பென்ஸ் த்ரில்லர் படம் என்பதால் ரசிகர்களிடைய வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது’ என்றார்.

விழாவில் நட்டி பேசும்போது,,,

ஹீரோ ராம் முதல் படம் மாதிரி இல்லாமல் வெகு சிறப்பாக பண்ணியிருக்கிறார். இயக்குநர் ருஷிகாவும் திறமையாக இயக்கியுள்ளார். காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி அவர்கள் மழை சமயத்தில் ஒரு உயிரை காப்பாற்றியது எல்லோர் மனதையும் நெகிழ வைத்தது. அதற்கு தலை வணங்குகிறேன். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துகள்’’ என்றார்.

விழாவில் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது…

“காவல் அதிகாரியான என்னை இந்த விழாவுக்கு அழைத்ததில் மகிழ்ச்சி. காவல் துறையில் நான் மட்டும் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறேன். என்னைப்போன்று பல காவலர்கள், அதிகாரிகள் முன் களப் பணியாற்றி மக்கள் சேவை செய்து வருகிறார்கள். காவல் துறை எப்போதும் உங்கள் நண்பன் என்பதுதில் மாற்றமே இல்லை.

சினிமா சமூகத்தில் பல மாற்றங்களுக்கு வழிவகுத்துள்ளது. பல படங்களில் காவல் துறையை கண்ணியமாக காண்பித்துள்ளார்கள். சில படங்களில் காவல் துறையை தவறாகவும் சித்தரித்துள்ளனர். இங்கு பேசும்போது காவல் துறைக்கு ஒரு நாள் விடுமுறை அளித்தால் நாடு என்ன மாதிரி பிரச்சனையை சந்திக்கும் என்பதை சொன்னார்கள். அதையே நான் மீண்டும் ஞாபகப்படுத்துகிறேன்.

காவல் துறையின் சேவை இல்லையென்றால் மக்களின் நிம்மதி பறிபோய்விடும். குற்றங்கள் பெருகிவிடும். காக்கி என்றால் விரோதமாக பார்க்கும் மனநிலையை கைவிடவேண்டும். காக்கி உடைக்குள்ளும் ஈரம் இருக்கிறது.

நாங்கள் வெளியேதான் பலா மாதிரி தெரிவோம். உள்ளே இனிக்கும் சுளை. மக்கள் சேவைதான் எங்களுக்கு முக்கியம். எங்களை நேசியுங்கள். காவல் துறையினர் பொதுப் பணியில் இருப்பதால் நல்லது, கெட்டது என்று தங்கள் வீட்டு நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துக் கொள்ளாமல் மக்கள் சேவையில் இருப்பார்கள்.

காவல் துறை என்பது உங்கள் சேவைக்காக மட்டுமே. பயப்படாமல் நீங்கள் எங்களை அணுகுங்கள். போலீஸ் ஸ்டேசனுக்கு வரும்போது யாருடைய துணையும் வேண்டாம். உங்கள் பிரச்சனை எதுவோ நேரிடையாக வாருங்கள். நாங்கள் தீர்வுக்கு வழி வகுக்கிறோம். காவல் துறை புனிதமான துறை. உங்கள் குழந்தைகளுக்கு தைரியம் கொடுத்து வளர்த்தெடுங்கள்’ என்றார்.

விழாவில் ஜாக்குவார் தங்கம் பேசியதாவது…

‘காவல் துறை என்பது நமது தாய். இராணுவம் நமது தந்தை. அவர்கள் வெயில், மழை என்று பாராமல் கடமை செய்வதால்தான் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். காவல் துறையினருக்கு தற்காப்பு கலை கற்றுக்கொடுத்த பெருமை எனக்கு உண்டு.’ என்றார்.

விழாவில் தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியதாவது…

‘ தயாரிப்பாளர் அஸ்வினி அவர்கள் 5 மொழிகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளார். அவருடைய துணிச்சல் பாராட்டுக்குரியது. சினிமாவை பயன்படுத்தி பலர் சமூக வலைத் தளங்களில் சம்பாதிக்கிறார்கள். அதில் சிறு தொகையாவது சினிமாவில் உள்ள நலிந்தவர்களுக்கு உதவி செய்ய முன் வரவேண்டும்.

சமூக வலைத் தளங்களில் வீடியோ போடும் நண்பர்கள் நாகரீகமாக தலைப்பு கொடுங்கள். சினிமாவில் நாங்கள் எல்லோரும் நண்பர்களாக பழகி வருகிறோம்.

எங்களுக்குள் மோதல் உருவாக்குமளவுக்கு தலைப்பு கொடுக்காதீர்கள். சமூகத்தில் என்னளவில் பல ஆயிரம் குழந்தைகளுக்கு இலவச கல்விக்கு உதவி செய்துள்ளேன். காவல் துறையில் எனக்கு பல நண்பர்கள் இருக்கிறார்கள். உயர் போலீஸ் அதிகாரிகள் விஜயகுமார், சைலேந்திர பாபு ஆகியோரிடம் எனக்கு நல்ல நட்பு உண்டு.

அவர்கள் நேர்மைக்கு புகழ் பெற்றவர்கள். விஜயகுமார் சென்னை போலீஸ் கமிஷனராக பொறுப்பில் இருந்த போது திருட்டு வி.சி.டி. ஒழிப்புக்கு பல வகையில் எங்களுக்கு உறுதுணையாக இருந்தார்கள். காவல் துறையில் ஒரு சிலர் நேர்மை தவறலாம். மற்றபடி காவல் துறை சமூகத்தில் சிறப்பான சேவை வழங்கி வருகிறது.

சினிமாவில் போலீஸை தவறாக சித்தரிக்கிறவர்களை நான் நேரில் சந்திக்கும்போது கண்ணியமாக எடுக்கச் சொல்வதுண்டு. இப்போது அரசாங்கம் போலீஸ் துறைக்கு பல நல திட்டங்களை அறிவித்துள்ளது. வாரத்துக்கு ஒரு நாள் விடுமுறை, போலீஸ் பந்தோபஸ்து பணியில் பெண் காவலர்களை விடுவித்தது போன்ற பல நல்ல அறிவிப்புகளை இந்த அரசாங்கம் செய்து வருகிறது. அந்த வகையில் போலீஸ் துறையை சேர்ந்த ராஜேஸ்வரி ஆற்றிய சமூகப் பணி என்பது மகத்தானது.

அவருக்கு ராயல் சல்யூட். சினிமா போலீஸ் துறையின் பணிகளை சிறப்பாக நேர்மையாக பதிவு செய்கிறது. ‘ஜெய்பீம்’ படத்தில் போலீஸ் அராஜகத்தையும், ‘ருத்ரதாண்டவம்’ படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியையும் சுட்டிக்காட்டியுள்ளார்கள். அந்த வகையில் இந்தப் படக்குழு சமூகத்துக்கு பயனளிக்கும் ஒரு படைப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துகள்’ என்றார்.

விழாவுக்கு வந்த அனைவருக்கும் தயாரிப்பாளர் அஸ்வினி நாயுடு நன்றி தெரிவித்தார்.

Recent Popular Police Rajeshwari speech at Ikshu Teaser Launch

ராசாக்கண்ணு மனைவிக்கு 10 லட்சம்..; இருளர் மாணவர்களுக்கு உதவிடவும் சூர்யா முடிவு

ராசாக்கண்ணு மனைவிக்கு 10 லட்சம்..; இருளர் மாணவர்களுக்கு உதவிடவும் சூர்யா முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சூர்யா தயாரித்து நடித்த ’ஜெய்பீம்’ திரைப்படம் நவம்பர் 2ல் அமேசான் ஓடிடி தளத்தில் ரிலீசானது.

முதல்வர் முதல் கடைக்கோடி தமிழன் வரை இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.

1995ல் கடலுரில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருந்தார் டைரக்டர் ஞானவேல்.

ராசாக்கண்ணு மற்றும் பார்வதி அம்மாள் ஆகியவர்களின் கதையை தழுவி தான் இந்த படம் எடுக்கப்பட்டது. நாயகி பெயர் செங்கணியாக மாற்றப்பட்டது.

இந்த நிலையில் போலீசாரால் கொலை செய்யப்பட்ட ராசாக்கண்ணு மனைவி பார்வதி அம்மாள் அவர்கள் தற்போது சென்னை அருகே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

தற்போது பார்வதி அம்மாளுக்கு ரூபாய் 10 லட்சம் நிதி அளிப்பதற்காக அறிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

ஜெய்பீம் படம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் கே.பாலகிருஷ்ணன் வாழ்த்துக்கு கடிதத்திற்கு நன்றி தெரிவித்து இந்த தகவலை தெரிவித்துள்ளார் சூர்யா.

அந்த கடிதத்தில்… ‘பார்வதி அம்மாள் அவர்களின் பெயரில் 10 லட்ச ரூபாய் டெபாசிட் செய்து அதிலிருந்து வருகிற வட்டி தொகையை மாதந்தோறும் பார்வதி அம்மாள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்திருப்பதாகவும் அவருடைய காலத்திற்கு பிறகு அவருடைய வாரிசுகளுக்கு அந்த தொகையை சேரும்படி செய்யலாம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறவர் பழங்குடி சமூக மாணவர்களின் கல்விக்கு உதவுவது குறித்தும் ஆலோசித்து வருவதாகவும் கல்விதான் வருங்கால தலைமுறையின் முன்னேற்றத்திற்கு நிரந்தர தீர்வு என்றும் ஆகவே தான் ஜெய்பீம் திரைப்படத்தின் மூலம் இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்கு உதவி செய்ததாகவும் அவர் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார் சூர்யா.

Suriya deposits Rs 10 lakhs to Real Rasakannus wife Parvathy

கோவை ஆசிரியரின் கொடூர செயலால் மாணவி தற்கொலை.; வேதனையில் வெண்பா

கோவை ஆசிரியரின் கொடூர செயலால் மாணவி தற்கொலை.; வேதனையில் வெண்பா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி தன் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார்.

அவர் இறப்பதற்கு முன் ஒரு கடிதம் எழுதி வைத்துள்ளார். அதில்…

அந்தக் கடிதத்தில், “யாரையும் சும்மா விடக் கூடாது. ரீத்தாவோட தாத்தா. எலிசா சாருவோட அப்பா. இந்த சார் ***** (கெட்ட வார்த்தை). யாரையும் விடக் கூடாது” என தன் கைப்பட எழுதியுள்ளார்.

இந்த மாணவி தற்போது மாநகராட்சி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இதற்கு முன் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள சின்மயா வித்யாலயா பள்ளியில் பிளஸ் 1 படித்தார்.

அந்தப் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக இருந்த மிதுன் சக்கரவர்த்தி, (வயது 35) தான் இவரின் தற்கொலைக்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

மிதுன் – மாணவி வாட்ஸ்அப் உரையாடலும் வெளியானது. அதில் மாணவிக்கு மிதுன் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளது உறுதியானது.

இந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் போக்சோ பிரிவில் போலீசார் மிதுனை கைது செய்தனர்.
மேலும் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வரும் 26ம் தேதி வரை அவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து மிதுன் சக்கரவர்த்தி உடுமலை சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் சம்பந்தபட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காத, சின்மயா வித்யாலயா பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சன், (வயது 52) மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஆசிரியர்களின் பாலியல் தொல்லைகளை கண்டிக்கும் வகையில் இளம் நடிகை வெண்பா கூறியுள்ளதாவது…

எத்தனை முறை இது போன்ற சம்பவங்கள் தொடரும். இதற்கு முடிவே இல்லையா..? என மாணவி எழுதிய கடிதத்துடன் தன் ட்விட்டர் பக்கத்தில் வேதனையாக பதிவிட்டுள்ளார் வெண்பா.

அண்மைக்காலமாக மாணவ-மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களே எமனாக மாறி வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த சம்பவம் தொடர்பாக #JusticeforPontharani என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இரண்டு நாட்களாக டிரெண்டாகி வருகிறது.

Actress Venba condemns sexual harassment in schools

More Articles
Follows