தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
இந்தியாவில் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை தினம் தினம் அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டிலும் இதன் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகம் வாழும் தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாகவுள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து பலருக்கும் இந்த வைரஸ் பரவியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனால் அரசு மருத்துவமனைகளில் அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டுகள் நிரம்பிவிட்டது.
இதனையடுத்து சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் திருமண மண்டபங்களை கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தான் சில நெகட்டிவ் மீம்ஸ் கிரியேட்டர்கள் நடிகர் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரஜினி மண்டபதை தர மறுத்து விட்டதாக செய்திகளை பரப்பி விட்டனர்.
இந்த உண்மையறியாதவர்கள் ரஜினியை கடுமையாக விமர்சித்தனர்.
தேவையற்ற தகவல்கள் பரப்பும் ஒரு சிலரின் வேலை வெட்டியான செய்தி அது எனவும் அப்படி எதுவும் இல்லை என ரஜினி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
திருமண மண்டபம் எப்போதும் தயாராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில வாரங்களுக்கு முன்பே கொரோனா சிகிச்சைக்கு இடம் தேவைப்படும் பட்சத்தில் எப்பொழுது வேண்டுமானாலும் தன் திருமண மண்டபத்தை பயன்படுத்திக் கொள்வோம் என ரஜினியே தெரிவித்திருந்தார் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
Rajini ready to handover his Marriage hall for Corona treatment