ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..; மக்கள் மன்றத்தை கலைச்சிட்டு மேற்கு வங்கம் பறக்கும் ரஜினி

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்..; மக்கள் மன்றத்தை கலைச்சிட்டு மேற்கு வங்கம் பறக்கும் ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கி வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’.

இமான் இசையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.

இந்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, நயன்தாரா, சதீஷ், சூரி, ஜெகபதிபாபு, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

ரஜினி உடல்நிலை & கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதம் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

பின்னர் சிறப்பு அனுமதியுடன் ஐதராபாத்தில் பலத்த பாதுகாப்புடன் செட் போடப்பட்டு படப்பிடிப்பை நடத்தினர்.

தன் காட்சிகளை முடித்துவிட்டு மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார் ரஜினி.

அங்கு மருத்துவ பரிசோதனை முடித்து 2 வாரங்கள் ஓய்வில் இருந்தார்.

இதன் பின்னர் சென்னை வந்த ஓரிரு தினங்களில் இன்று ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார்.

“தனது அரசியல் பிரவேசத்திற்காக மாற்றம் செய்யப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாக அறிவித்தார்.

இதே நிர்வாகிகள் ரஜினி ரசிகர் நற்பணி மன்றங்களில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவார்கள்.

இனி எதிர்காலத்திலும் அரசியலுக்கு வரப்போவதில்லை.” என அறிக்கை வெளியிட்டார்

இந்த நிலையில் ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக நாளை மறுநாள் (ஜூலை 14) மேற்கு வங்கம் செல்கிறாராம் ரஜினி.

அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.

இத்துடன் தான் நடிக்கவேண்டிய காட்சிகளை நிறைவு செய்கிறார் ரஜினி.

‘அண்ணாத்த’ படம் நவம்பர் 4ல் தீபாவளிக்கு ரிலீசாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

*ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்
எனக்கொரு கவலையில்லே
நான்தான்டா என் மனசுக்கு ராஜா..*. இந்த பாடல் ஏனோ தற்போது நினைவுக்கு வருகிறதே…

Rajini is leaving for West Bengal on July 14 for the final shoot of Annaatthe

சிஸ்டத்தை சுத்தம் செய்ய வீரர்கள் தயார்.! தலைவர் யார்?.; வேலையை பாருங்க.. ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி..?

சிஸ்டத்தை சுத்தம் செய்ய வீரர்கள் தயார்.! தலைவர் யார்?.; வேலையை பாருங்க.. ரஜினியை கலாய்க்கும் கஸ்தூரி..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஓரிரு தினங்களுக்கு முன் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தவுள்ளார் ரஜினிகாந்த் என செய்திகள் வந்தன.

அதன்படி இன்று 12 ஜூலை தன் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்தார் ரஜினி.

ராகவேந்திரா மண்டபம் செல்வதற்கு முன் ‘அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? மக்கள் மன்றத்தை கலைக்கலாமா? என ஆலோசனை செய்யவுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார் ரஜினி.

ஒரு மணி நேரத்திற்கு பின்னர் ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை வெளியிட்டார் ரஜினி.

“எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. மக்கள் மன்றம் கலைக்கப்படும். பழையபடி ரஜினி ரசிகர் நற்பணி மன்றமாக செயல்படும்” என அறிவித்து அரசியலுக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைத்தார் ரஜினிகாந்த்.

இந்நிலையில், இது குறித்து நடிகை கஸ்தூரி தன் ட்விட்டரில்…

” இன்றைய அறிவிப்பில் யாருக்கும் புதிதாய் அதிர்ச்சியோ பெரிய ஏமாற்றமோ இருந்திருக்க வாய்ப்பில்லை.

அண்ணாத்தே வெளியீட்டிற்கு பின் இன்னொரு அறிவிப்பையையும் எதிர்பார்க்கலாம்.

ரஜினி காட்டிய வழியில் ரசிகர்களும் சொந்த வேலையை கவனிக்க போகலாம்” என கஸ்தூரி கூறியுள்ளார்.

தன்னுடைய அடுத்த ட்வீட்டில்…

கெட்டு போன சிஸ்டத்தை
சுத்தம் செய்ய
போர் வீரர்கள் தயார்.
படைக்கு தலைவர் யார்?

என பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.

Actress Kasthuri teases super star Rajinikanth

மாணவர்களுக்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க லியோனி திட்டம்

மாணவர்களுக்கு கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை பாடமாக்க லியோனி திட்டம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

leoniதமிழ்நாடு அரசு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவராக பட்டிமன்ற பேச்சாளர் ஐ. லியோனி இன்று பதவியேற்றுக் கொண்டார்.

கடந்த 2011ல் பேராசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றவர் இவர்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின்போது பெண்கள் குறித்து இவர் பேசிய கருத்துகள் சர்ச்சையானது.

இதனால் லியோனியின் நியமனத்துக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பதவியேற்ற பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்தார் லியோனி.

“பாடநூல்களை மாணவர்கள், விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வகையில் மாற்றுவதே என் நோக்கம்.

நான் பள்ளி மாணவராக இருந்த போது அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை மற்றும் அவரது பேச்சுகள் அப்போதைய பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டிருந்தது.

தற்போது 1ஆம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டத்தில் கருணாநிதியின் வாழ்க்கை வரலாற்றை சேர்ப்பது குறித்து முதல்வரிடம் பேசி முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார் லியோனி.

Leoni wants to include Kalaignar life history in school books

2வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்..; அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார் என நெகிழ்ச்சி

2வது குழந்தைக்கு தந்தையானார் சிவகார்த்திகேயன்..; அப்பாவே மகனாக பிறந்திருக்கிறார் என நெகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sivakarthikeyan-father-G.-Dossகோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு ஆராதனா என்ற 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.

கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத் தேர்தலில் மனைவியுடன் ஓட்டு போட வந்திருந்தார்.

அப்போது அவரது மனைவி 2வது முறையாக கர்ப்பமாக இருக்கிறார் என்பது தெரியவந்தது.

இந்நிலையில் இன்று ஜூலை 12 சிவகார்த்திகேயன் – ஆர்த்தி தம்பதியினருக்கு அழகிய மகன் பிறந்திருக்கிறார்.

இதனை சிவகார்த்திகேயன் தன் ட்விட்டரில் குறிப்பிட்டு சொல்லும்போது…

18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக… என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி. அம்மாவும் குழந்தையும் நலம் – என பதிவிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.

சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ட்விட்டரில் #KuttySK என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Actor Sivakarthikeyan blessed with a baby boy

விஜய்சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் இமயம்.; கனவு நிறைவேறுமா.?

விஜய்சேதுபதியை இயக்க விரும்பும் இயக்குனர் இமயம்.; கனவு நிறைவேறுமா.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

bharathiraja vijay sethupathi20 வருடங்களுக்கு முன்பே பிரபல கதாசிரியர் ரத்தினக்குமார் எழுதிய ‘குற்றப்பரம்பரை’ படத்தை இயக்கவிருந்தார் பாரதிராஜா.

இது இயக்குனர் இமயத்தின் கனவுப்படம் என்றே கூறப்படுகிறது.

அப்போது சிவாஜி கணேசனை அதில் நடிக்க வைக்க விரும்பினாராம்.

ஆனால் பல பிரச்னைகளால் அந்த படம் தொடங்கப்படவில்லை.

சில ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் பாலாவும் குற்றப்பரம்பரை கதையை கையில் எடுத்தார்.

இதனால் ஒரு கட்டத்தில் பாலாவுக்கும், பாரதிராஜாவுக்கும் இடையில் பிரச்னை உருவானது.

இதனால் பாலா இந்த கதையை கைவிட்டார்.

அதன்பின்னர் பாரதிராஜா நடிப்பதில் பிஸியாகிவிட்டார். பல படங்களில் முக்கியமான கேரக்டர்களில் நடித்து சிறந்த நடிகர் என்ற பாராட்டையும் பெற்றார்.

இந்த நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா மீண்டும் குற்றப்பரம்பரை கதையை திரைப்படமாக்க விரும்புகிறாராம்.

இதில் விஜய் சேதுபதியை கதையின் நாயகனாக நடிக்க வைக்க முயற்சிகள் நடைபெறுவதாக கூறப்படுகிறது.

Bharathirajas dream movie Kutra Parambarai is connected with Vijay Sethupathy

BIG NEWS மக்கள் மன்றம் கலைப்பு..; எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை – ரஜினி

BIG NEWS மக்கள் மன்றம் கலைப்பு..; எதிர்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணமில்லை – ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

எதிர்காலத்தில் அரசியலில் ஈடுபடும் எண்ணம் தனக்கு இல்லை என ரஜினி அறிவிப்பு..

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்..

அரசியலில் ஈடுபட வேண்டும் என்பதால் ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றியிருந்தேன்

கால சூழலால் அரசியலில் ஈடுபடும் எண்ணம் சாத்தியப்படவில்லை.

வருங்காலத்திலும் அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை.

மக்கள் மன்றத்தை கலைத்துவிட்டு சார்பு அணிகள் எதுவும் இன்றி ரசிகர் மன்றம் செயல்படும்.

மக்கள் நலப்பணிக்காக முன்பு போல ரஜினி ரசிகர் மன்றம் செயல்படும்”

இவ்வாறு ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Super Star Rajinikanth has disbanded Rajini Makkal Mandram

More Articles
Follows