தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
நடிகர் ரஜினிகாந்த் அவர்களின் கலைச் சேவையை கவுரவிக்கும் வகையில் பத்ம பூஷண், பத்ம விபூஷண் உள்ளிட்ட விருதுகளை வழங்கி மத்திய அரசு ஏற்கெனவே வழங்கி கௌரவித்துள்ளது.
தற்போது ‘தாதா சாகேப் பால்கே’ விருதுக்கு ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
வட இந்தியாவில் லதா மங்கேஷ்கர், சத்யஜித் ரே, ஷியாம் பெனகல், அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இந்த விருதை ஏற்கெனவே பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் இயக்குனர் கே.பாலச்சந்தர் அவர்களும் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் நாளை அக்டோபர் 25ஆம் தேதி தாதா சாகேப் பால்கே விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெறவுள்ளது. எனவே தற்போது சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார் ரஜினிகாந்த்.
இந்த நிலையில் தன் ட்விட்டர் பக்கத்தில் ரஜினி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில்…
நாளை எனக்கு 2 முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. ஒன்று தாதா சாகேப் பால்கே விருது பெற போகிறேன்.
அடுத்து என் 2வது மகள் சௌந்தர்யா HOOTE என்ற வாய்ஸ் சோஷியல் மீடியாவை தொடங்கவுள்ளார். அதில் என் குரலை பதிவு செய்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், புதிதாக சமூக வலைதளம் ஒன்றை வருகிற 25ஆம் தேதி தொடங்க உள்ளார்.
இந்தியாவின் முதல் குரல் அடிப்படையிலான சமூக ஊடக தளமான இதற்கு ‘HOOTE’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
Rajini daughter Soundarya launching Hoote VOICE based Social media
கூடுதல் தகவல்.. : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வன்முறையை தூண்டுவதாக அவரது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டன.
இதனால், டொனால்ட் ட்ரம்ப், தானே சொந்தமாக சமூக வலைதளம் ஒன்றை தொடங்குவதாக அறிவித்துள்ளார்.
ட்ரூத் சோஷியல் என்ற பெயரில் பிரத்யேக சமூக வலைதளத்தை டொனால்ட் ட்ரம்ப் சொந்தமாக தொடங்கியுள்ளார். இந்த வலைதளம் அடுத்த மாதம் செயல்பாட்டுக்கு வருகிறது.
தற்போது புதிய சமூக வலைத்தளம் (குரல்) ஒன்றை தொடங்குவதாக நடிகர் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா தொடங்கவுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.