ஒளிப்பரப்பை தொடங்கியது ரஜினி70 டிவி.; முழுக்க முழுக்க ரஜினியிசம் (வீடியோ)

Rajini 70 TV channel will be available on Astro CH100சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை பற்றி சொல்ல வேண்டுமென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். கேட்டுக் கொண்டே இருக்கலாம்.

திரைத்துறையில் என்றும் மங்காத சூப்பர் ஸ்டாராக திகழ்கிறார்.

கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாலிவுட் என அனைத்திலும் பல சூப்பர் ஸ்டார்கள் மாறிக் கொண்டே இருக்க ரஜினியோ எவரும் அசைக்க முடியாத உச்சத்தில் இருக்கிறார்.

கோலிவுட்டில் ஜெய்சங்கர், சிவகுமார் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்.

கமல், ராமராஜன், மோகன் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

கார்த்திக், விஜயகாந்த், சத்யராஜ், பிரபு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

விஜய், அஜித் காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

தனுஷ் சிம்பு காலத்திலும் ரஜினி தான் சூப்பர் ஸ்டார்

சிவகார்த்திகேயன் விஜய்சேதுபதி காலத்திலும் ரஜினியே சூப்பர் ஸ்டார்.

எனவே தான் அவரை பாலிவுட் கான்களே தலைவா என்று அழைக்கின்றனர்.

இந்த நிலையில் ரஜினி பாடல்கள், படங்கள், ரஜினி பற்றி செய்திகளுக்காகவே பிரத்யேகமாக ரஜினி 70 என்ற டிவி சேனல் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சேனல் மலேசியாவில் தன் ஒளிப்பரப்பை நேற்று ஜீன் 1 முதல் தொடங்கியுள்ளது.

இந்த சேனலின் நம்பர் 100 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் ரஜினியே தன் கட்சிக்காக ஒரு புதிய சேனலை தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதற்கு ரஜினி டிவி, தலைவர் டிவி, அல்லது சூப்பர் ஸ்டார் டிவி என்ற பெயர் வைக்கப்படலாம் எனவும் சொல்லப்படுகிறது.

அந்த சேனலின் ஓரிரு காட்சிகள் இதோ….

Rajini 70 TV channel will be available on Astro CH100

Overall Rating : Not available

Latest Post