தன் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை பற்றி புதுச்சேரியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

தன் தந்தை ராஜீவ் காந்தியை கொன்றவர்களை பற்றி புதுச்சேரியில் ராகுல் காந்தி உருக்கமான பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி-யுமான ராகுல்காந்தி அவர்கள் ஒரு நாள் பயணமாக இன்று புதுச்சேரிக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்து அதன்பின் அங்கிருந்து புதுச்சேரிக்கு புறப்பட்டு சென்றார்.

பாரதிதாசன் அரசு கல்லூரிக்கு சென்றால் ராகுல் காந்தி.

அப்போது மாணவிகளின் கேள்விக்கு பதிலளித்தார். அப்போது ஒரு மாணவி…

“உங்கள் தந்தை கொலை செய்யப்பட்டது குறித்து கேள்வியை கேட்டார்.

அதற்கு பதிலளித்த ராகுல் காந்தி…

“எனது தந்தையை இழந்தது என் இதயத்தை பிளந்தது போல் இருந்தது.

உங்களில் யாரேனும் தந்தையை இழந்தால் எனது வலி உங்களுக்கு தெரியும்.

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்துவிட்டேன், அவர்கள் மீது கோபமில்லை“ என தெரிவித்தார் ராகுல் காந்தி.

Rahul Gandhi talks about his father’s death

ராம் இயக்கத்தில் யுவன் இசையில் நடிகர் சிம்பு..?

ராம் இயக்கத்தில் யுவன் இசையில் நடிகர் சிம்பு..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மாநாடு’ படத்தில் நடித்து வருகிறார் சிம்பு.

இதனையடுத்து ‘பத்து தல’ படம் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார் சிம்பு.

இந்த நிலையில் இப்படங்களை முடித்துவிட்டு இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகவுள்ள ஒரு படத்தில் சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

அந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

STR’s next with Director Ram ?

STR Yuvan Ram

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்கியது லைகா நிறுவனம்

ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் படத்தை வாங்கியது லைகா நிறுவனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RRR movieபாகுபலி 1 & பாகுபலி 2 படத்துக்கு அடுத்ததாக, ஆர்ஆர்ஆர் (இரத்தம், ரணம், ரெளத்திரம்) என்ற படத்தை ராஜமெளலி இயக்கி வருகிறார்.

அல்லூரி சீதாராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை (1920) வாழ்க்கையை முன்வைத்து இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.

முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடித்து வருகின்றனர்.

ராஜமெளலி & ஜூனியர் என்டிஆர் இதற்கு முன்பு 3 படங்களில் இணைந்துள்ளனர்.

ராஜமெளலி & ராம் சரண் 2வது முறையாக இணைந்துள்ளனர்.

அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கின்றனர்.

கீரவாணி இசையமைக்க கே.கே. செந்தில் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரித்து வருகிறது.

தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் ஆகிய இந்திய மொழிகளில் இந்த படம் அக்டோபர் 13 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளதாக அறவித்துள்ளனர்.

Lyca acquired TN theatrical rights of RRR movie

தனுஷ் – மாளவிகா கூட்டணியில் அடுத்து ஒரு ‘மாஸ்டர்’ நடிகர்

தனுஷ் – மாளவிகா கூட்டணியில் அடுத்து ஒரு ‘மாஸ்டர்’ நடிகர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

master mahendranதுருவங்கள் பதினாறு, மாஃபியா படங்களை இயக்கிய கார்த்திக் நரேன் தனுஷின் 43-வது படத்தை இயக்கி வருகிறார்.

இயக்குனருடன் இணைந்து பிரபல பாடலாசிரியர் விவேக் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதி வருகிறார்.

இப்பட தலைப்பை விரைவில் வெளியிடுவோம் என அண்மையில் தனுஷ் தெரிவித்து இருந்தார்.

இப்படத்தை பிரபல சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்கு நடிகர் ஜிவி பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.

தனுஷுக்கு ஜோடியாக மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார்.

இவர்களுடன் ஸ்மிருதி வெங்கட், சமுத்திரக்கனி ஆகியோரும் நடிக்க உள்ளனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்திலிருந்து மற்றொரு நடிகரும் தனுஷுடன் இணைந்துள்ளார்.

விஜய் சேதுபதியின் சின்ன வயது கேரக்டர் குட்டி பவானியாக கலக்கிய மாஸ்டர் மகேந்திரனும் இதில் நடிக்கவுள்ளார் என அறிவித்துள்ளனர்.

Another master cast joins in Dhanush movie

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு..; அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் பள்ளிகள் திறப்பு..; அமைச்சர் செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா ஊரடங்கால் கடந்தாண்டு மார்ச் முதல் பள்ளிகள் & கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.

கிட்டத்தட்ட 8-10 மாதங்களுக்கு பிறகு மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெற்றன.

இதனிடையில் நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகள் கண்டிப்பாக நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

2021 ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.

பின்னர் பிப்ரவரி 8 தேதி முதல் முதல் 9, 11ம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கியது.

தற்போது அரசு தேர்வுத்துறை வெளியிட்டு உள்ள அறிவிப்பில், மே 3ம் தேதி முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முழு தேர்வு அட்டவணையும் வெளியாகி உள்ளது. இந்த செய்திகளை நம் தளத்தில் பார்த்து வருகிறோம்.

மேலும் 10, 11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்…

“பள்ளிகளில் 6 முதல் 8 வரை ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு நேரடி பள்ளி பாடங்களை தொடங்குவது குறித்து முடிவு செய்வோம்.

மருத்துவத் துறை, கல்வியாளர்கள் மற்றும் பெற்றோர்களிடம் ஆலோசனை நடத்திய பின்னர் இது குறித்து முடிவு செய்யப்படும்” என தெரிவித்தார்

Upddate on school reopening for 6th to 8th students

இது வாத்தி ரெய்டு இல்ல கலெக்டர் ரெய்டு..; முதல்வருக்கு ஏழை விஜய் ரசிகர் வைத்த கோரிக்கை.!

இது வாத்தி ரெய்டு இல்ல கலெக்டர் ரெய்டு..; முதல்வருக்கு ஏழை விஜய் ரசிகர் வைத்த கோரிக்கை.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி.

விஜய் ரசிகரான இவர் ‘வாத்தி ரெய்டு’ என்ற பெயரில் ட்விட்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில்… “ஐயா முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கை திருப்பூர்ல தனியார் பள்ளியில் 7 வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அரையாண்டுதேர்வு.

எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.

ஆனால் தங்கைக்கு பாடமும் நடத்தப்படவில்லை. தேர்வு லிங்கையும் பள்ளியில் இருந்து அனுப்பவில்லை..

இதனால் தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள்.

அரசு பள்ளியில் சேர்க்க நினைத்தால் கட்டணம் செலுத்தாமல் TC தர மாட்டிங்கராங்க… இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் ஐயா.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை பார்த்துள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயகார்த்தியேன்.. “உங்களை தகவலை கூறுங்கள் என்று கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கு ஹரியும் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Poor Vijay fan requests TN CM

vijay edappadipalanisamy

More Articles
Follows