ஆழ்கடலில் உருவான ‘ஜூவாலை’; ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்

ஆழ்கடலில் உருவான ‘ஜூவாலை’; ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rahman Jibrils Jwalai movie deals with deep ocean தமிழ்சினிமாவில் வெகு சில படங்களே கடலில் படமாக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் மொத்த படத்தில் 75 சதவீதம் இந்திய பெருங்கடலில் படமாக்கப்பட்டுள்ள படம் ‘ஜூவாலை’.

இந்தியப் பெருங்கடல் கொண்டுள்ள சிறு சிறு தீவுகளிலும் மீதமுள்ள படம் வளர்ந்து வருகிறது. ‘ஜூவாலை’ படத்தை மனுஷா தயாரிக்க ரஹ்மான் ஜிப்ரீல் நடித்து இயக்குகிறார்.

ரஹமான் ஜிப்ரீல் இயக்குநர் பாலுமகேந்திரா மற்றும் ஜோதி கிருஷ்ணா ஆகியோரிடம் உதவியாளராகப் பணியாற்றி உள்ளார்.

தன் முதல் படம் கடலைச் சார்ந்தும், சூழ்நிலைகளைச் சார்ந்தும் படமாக்க வேண்டி இருப்பதால், பெரிய ஹீரோக்களை வைத்து இயக்குவதில் உள்ள சிரமங்களை உணர்ந்தவர் அதற்காக, தானே நீண்ட முடி, தாடி சகிதம் தயாராகி உள்ளார்.

கடல் என்ற கதைக்களத்தை கையில் எடுத்து இருந்தாலும், ’ஜூவாலை’ என பெயர் வைத்து இருப்பதில் ஒரு ஆழமான கருத்தை அடக்கியுள்ளது இந்தப் படம் என்கிறார் இயக்குநர் ரஹமான் ஜிப்ரீல்.

காதல், காமம், கோபம், வெறுப்பு போன்றவை ஒரு ஜூவாலை மாதிரிதான்.. நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரிந்து கொண்டே இருக்கிறது..

அதில் பழிவாங்குதலும் ஒரு ஜூவாலை தான். நமக்கான வாழ்வாதாரமாகக் கொடுக்கப்பட்டுள்ள உடல், கடல் மாதிரி இருந்தாலும் அதன் உள்ளடக்கமாக இருக்கும் உணர்வுகள் நன்மை, தீமை அடங்கிய ஜூவாலையை வெளிப்படுத்திக் கொண்டே தான் இருக்கிறது.

நமது உடமை, உரிமை ஏதாவது ஒன்றிற்கு இழப்பு, பாதிப்பு வரும்போது அங்கு பழிவாங்கும் ஜூவாலை பற்றி எரிய வேண்டியது அவசியமாகிறது.

ஹீரோ தனது வாழ்விடத்தின் பழிவாங்குதலை ஜூவாலை ஆக்குகிறான்.. அது கடல் என்ற கதைக்களத்தில் வெளிப்படுகிறது என்கிறார் இயக்குநர் ரஹமான்.

படம் மிகப் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வருகிறது.

ஹாலிவுட் கேமராமேன் மைக்முஸ் சாம்ப் ஆழ்கடல் காட்சிகளைப் படம்பிடித்து வருகிறார்.. இவர் லண்டனைச் சேர்ந்தவர்.. பிரின்ஸ் ஆஃப் த சிட்டி, பைலட் கஃபே போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர். முதன் முறையாக ஒரு தமிழ் படத்திற்கு பணியாற்றுகிறார்..

இந்தியப் பெருங்கடலைச் சுற்றியுள்ள தீவுகளில் படம் வளர்ந்து வருகிறது.

Rahman Jibrils Jwalai movie deals with deep ocean

டில்லி திரும்ப வருவான்.; கைதி 2 படம் குறித்து கார்த்தி ட்வீட்

டில்லி திரும்ப வருவான்.; கைதி 2 படம் குறித்து கார்த்தி ட்வீட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Dilli will be back Karthi reveals about Kaithi Prequel தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கார்த்தி நடித்த கைதி படம் வெளியானது.

டில்லி என்ற கேரக்டரில் கைதியாக நடித்திருந்தார் கார்த்தி.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.

இந்த படத்தில் நாயகி மற்றும் பாடலே இல்லையென்றாலும் படம் மாபெரும் வெற்றியடைந்து வெற்றிகரமாக தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த வெற்றி குறித்து நடிகர் கார்த்தி நன்றி தெரிவித்துள்ளார்.

“பத்திரிகை நண்பர்களுக்கு… கைதி படத்திற்காக நீங்கள் காட்டிய அன்பு, கொடுத்த பாராட்டுக்களுக்கு வெறும் நன்றி மட்டும் சொல்வது போதாது.

என் வெற்றி தோல்விகளில் என்னுடன் நிற்கும் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. நீங்கள் பெருமை பட கூடிய வகையில் இன்னும் கடுமையாக உழைப்பேன். டில்லி திரும்ப வருவான்” என பதிவிட்டுள்ளார்.

Dilli will be back Karthi reveals about Kaithi Prequel

https://twitter.com/Karthi_Offl/status/1190894151937609728

‘சங்கத்தமிழன்’ பட டைட்டிலை தெலுங்கில் மாற்றிய படக்குழு

‘சங்கத்தமிழன்’ பட டைட்டிலை தெலுங்கில் மாற்றிய படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijay Sethupathis Sanga Thamizhan movie telugu title changedவாலு அண்ட் ஸ்கெட்ச் படங்களை இயக்கிய விஜய்சந்தர் 3வதாக இயக்கி வரும் படம் சங்கத்தமிழன்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் ராசி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ், நாசர், சூரி, ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

விவேக்-மெர்வின் இருவரும் இசையமைக்க வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விஜயா புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரித்துள்ளார்.

இந்த படம் அடுத்த வாரம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கில் மாற்றி உள்ளனர்.

தெலுங்கில் விஜய்சேதுபதி என்ற பெயரில் ரிலீஸ் செய்கின்றனர். தெலுங்கில் இவர் நடித்த ஒரு சைரா படம் வெளியாகிவிட்டது.

தற்போது மேலும் 2 தெலுங்கு படங்களில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து வருவது குறிப்பிடத்தக்ககது.

Vijay Sethupathis Sanga Thamizhan movie telugu title changed

ரமணா பாணியில் விஜய்யை மாஸாக காட்டும் லோகேஷ் கனகராஜ்

ரமணா பாணியில் விஜய்யை மாஸாக காட்டும் லோகேஷ் கனகராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Vijays role in Thalapathy 64 and Shooting updatesவிஜயகாந்தின் சினிமா கேரியரில் மிக மிக முக்கியமான படம் ரமணா. இப்படத்தை முருகதாஸ் இயக்கியிருந்தார்.

இதில் கல்லூரி பேராசிரியராக நடித்திருப்பார் விஜயகாந்த். கல்லூரி மாணவர்களின் படையை வைத்துக் கொண்டு இந்த சமூகத்தை ஊழலற்ற நாடாக மாற்றி காட்டுவார்.

தற்போது அதே பாணியில் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறாராம் விஜய்.

லோகேஷ் கனகராஜ் இயக்கிவரும் தளபதி 64 படத்தில் விஜய்க்கு இந்த வேடம் என கூறப்படுகிறது.

இதன் படப்படிப்புகள் கடந்த சில நாட்களாக டெல்லியில் நடைபெற்றது.

விஜய் இல்லாத காட்சிகளை படமாக்கிய டைரக்டர் தற்போது விஜய் காட்சிகளை படமாக்கி வருகிறார்.

40 நாள் வரை படக்குழு டெல்லியில் தங்கி சூட்டிங்கை முடிக்கவுள்ளனர். விரைவில் விஜய்சேதுபதியும் கலந்துக் கொள்வார் என கூறப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்யுடன் விஜய்சேதுபதி, ஆண்டனி வர்க்கீஸ், சாந்தனு, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஸ்ரீமன், கௌரி, பவித்ரா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைக்க சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார். அடுத்த 2020ல் ஏப்ரல் மாதம் படம் திரைக்கு வருகிறது.

Vijays role in Thalapathy 64 and Shooting updates

என் படம் ரிலீஸ் எப்போ சார்?; கவுதம்மேனனுக்கு கார்த்திக் நரேன் கேள்வி

என் படம் ரிலீஸ் எப்போ சார்?; கவுதம்மேனனுக்கு கார்த்திக் நரேன் கேள்வி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Karthik Narains question to Gautham Menon about Naragasooranஓரிரு தினங்களுக்கு முன்பு தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா, விக்ரமின் துருவ நட்சத்திரம், வருணின் ஜோஷ்வா’ ஆகிய படங்கள் ரிலீஸ் குறித்து பேசியிருந்தார் இயக்குனர் கௌதம் மேனன்.

இந்த 3 படங்களையும் இவர் இயக்கியிருந்தார். ஆனால் இவர் தயாரித்த நரகாசூரன் படம் ரிலீஸ் பற்றிய தகவல் எதையும் அதில் குறிப்பிடவில்லை.

இந்த நிலையில் நரகாசூரன் படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் அவர்கள் படம் குறித்து கௌதம் மேனனுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

“இந்தப் படம் (‘நரகாசூரன்’) எப்போது பகல் வெளிச்சத்தைப் பார்க்கும் என்பதைப் பற்றிய ஒரு தெளிவைச் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும். ஆம், இந்தப் படம் என் இதயத்திற்கு நெருக்கமான படம்” எனத் தெரிவித்துள்ளார்.

கௌதம் மேனன் என்ன சொல்வாரோ? பார்ப்போம்.

Karthik Narains question to Gautham Menon about Naragasooran

நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

நான்கு பரிணாம வெற்றியில் வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

enptதிரைப்படத் தொழில் என்பது செழிப்பாக இருக்க வேண்டுமெனில் ஒவ்வொரு தயாரிப்பாளரும் எடுக்கும் திரைப்படங்கள் வெற்றி அடைந்து, அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்த வேண்டும். தங்கப் புதையல் வேட்டையைப்போல், ஒவ்வொரு திரைப்படத் தயாரிப்பு நிறுவனமும் இந்த வெற்றியை நோக்கியே தங்கள் தயாரிப்பைத் தொடர்கின்றன.
தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தொடர்ந்து தரும் வெற்றிகள் மூலம் தனது வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தை கவனிக்க வைத்திருக்கிறார்.

திருட்டு விசிடி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் திரையரங்கில் படம் ஓடும் காலத்தை குறைக்க, வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்த ‘கோமாளி’ திரைப்படம், 80 நாட்களைக் கடந்து இன்னமும் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு முறை ஓளிபரப்பு மற்றும் செயற்கைக்கோள் தொலைக்காட்சி உரிமைகளைத் தாண்டி இந்த வெற்றியை கோமாளி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

வருண் மற்றும் சம்யுக்தா நடிப்பில் வெளியான இந்நிறுவனத் தயாரிப்பான ‘பப்பி’ என்ற படம் இளைஞர்கள் மட்டுமின்றி குடும்பத்தில் உள்ள அனைவரையும் கவரும் படமாக வெற்றி நடை போடுகிறது. ‘பப்பி’ வெளியாகி 25 நாட்கள் கடந்தும் இன்னும் கணிசமாக இருக்கைகள் நிரம்பிய அளவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கெளதம் வாசுவேவ் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவான ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’ திரைப்படம் மிக நீண்ட காத்திருப்புக்குப் பின் இப்போது இம்மாதம் 29ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பு வேல்ஸ் பிலிம் intetnational நிறுவனத்திடம் இருந்து அதிகாரபூர்வமாக வந்தது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இவை அனைத்துக்கும் மேலாக ரசிகர்களை பெரிதும் கவர்ந்திருப்பது, இமைபோல் காக்க என்ற டேக் லைனுடன் வரும் ‘ஜோஷ்வா’ திரைப்படம்.
வருண் நடிக்கும் இப்படம் கெளதம் வாசுதேவ் இயக்கத்தில் உருவாகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

திரைப்படங்கள் மீது தீவிர வேட்கை கொண்டிருப்பதால்தான் டாக்டர் ஐசரி .கே. கணேஷ் மற்றும் அவரது படநிறுவனத்தால் இப்படி தொடர் வெற்றிகளைக் குவிக்க முடியும் என்பது நிதர்சனம்.

More Articles
Follows