ரஜினி கொடுத்துட்டார்.. கமல் அஜித் விஜய் சூர்யாகிட்ட கேட்டுருக்கேன்.. – லாரன்ஸ்

ரஜினி கொடுத்துட்டார்.. கமல் அஜித் விஜய் சூர்யாகிட்ட கேட்டுருக்கேன்.. – லாரன்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Raghava Lawrence request to Kollywood top Actors கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

முதற்கட்டமாக நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து துறை மக்களும் தங்கள் வேலைகளை இழந்து தவித்து வருகின்றனர்.

சமூக சேவை மனப்பான்மை கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் 3 கோடி ரூபாயை முதற்கட்டமாக கரோனா நிவாரண நிதிக்காக கொடுத்தார்.

அதன்பின்னர் 25 லட்ச ரூபாயை தூய்மைப் பணியாளர்களுக்காக அளித்துள்ளார். பின்னர் விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கு 15 லட்ச ரூபாய் நிவாரண தொகையாக கொடுத்தார்.

இதன்பின்னர் நடிகங் சங்கம், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலருக்கும் நிதியை அளித்துக் கொண்டே இருக்கிறார்.

அவரின் உதவியை நாம் அவ்வளவு எளிதாக பட்டியலிட முடியாது.

இந்த நிலையில் அடுத்த வேளை உணவுக்கே கஷ்டப்படும் ஆதரவற்ற பெரியோர் மற்றும் உணவின்றி தவிக்கும் ஏழை குழந்தைகளுக்கு உணவளிக்க முடிவெடுத்துள்ளார்.

தொகை பற்றாக்குறை காரணமாக தன் தம்பி எல்வினிடம் தன் எண்ணத்தை பகிர்ந்துள்ளார்.

இது குறித்து லாரன்ஸ் கூறியதாவது..

என் தம்பி எல்வின் ஆலோசனைப்படி என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் உதவியை கேட்டேன்.
கேட்ட உடனே 100 மூட்டை அரிசிகளை சுதாகர் சார் மூலமாக அனுப்பினார். அவருக்கு நன்றி.

மேலும் எனது வேண்டுகோளை கமல், அஜித், விஜய், சூர்யா ஆகியோரிடமும் தெரிவித்துள்ளேன்.

இவையில்லாமல் நிறைய நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களிடம் தெரிவித்துள்ளேன்.

யாராக இருந்தாலும் பணமாக கொடுக்காமல் நிவாரண பொருட்களாக கொடுக்க வேண்டுகிறேன்.

இந்த முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

LARENCCE CHARIRABLE TRUST
2/4 1ST CROSS STREET. 3RD AVENUE, ASHOK NAGAR
CHENNAI 83. PHONE 877 8338209

என தெரிவித்துள்ளார் லாரன்ஸ்.

Raghava Lawrence request to Kollywood top Actors

செல்போனுக்கு தாலி கட்டிய வாலிபர்.; என்ன கொடுமை சார் இது..!!??

செல்போனுக்கு தாலி கட்டிய வாலிபர்.; என்ன கொடுமை சார் இது..!!??

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kerala Bride Groom ties Thaali to the Cell phone இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு தினம் தினம் அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் மட்டும் 33,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 1000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.

இந்த வைரஸை கட்டுப்படுத்த வருகிற மே 3 ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதனால் மக்கள் தங்கள் வேலைகளை இழந்து செய்வதறியாமல் உள்ளனர்.

திருமணம் உள்ளிட்ட எந்தவொரு நல்ல காரியங்களையும் செய்யாமல் தவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் புதுமைக்கு பெயர் போன கேரளால் ஒரு வித்தியாசமான திருமணம் அரங்கேறியுள்ளது.

கோட்டயம் பகுதியை அடுத்துள்ள கங்கனசேரியை சேர்ந்த வங்கி ஊழியரான ஸ்ரீஜித் நடேசன் என்பவருக்கும், ஐடி பணியாற்றி வரும் அஞ்சனா என்ற பெண்ணிற்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

அதன்படி இந்தாண்ட 2020 ஏப்ரல் 26 ஆம் தேதி அன்று திருமணம் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டது.

ஆனால் தற்போது ஊரடங்கு அமலில் உத்தரப் பிரதேசத்தில் பணிபுரியும் மணப்பெண்ணால் கேரளாவிற்கு வர முடியாமல் போய்விட்டது.

இதனையடுத்து திருமணத்தை வீடியோ கால் மூலம் நடத்தியுள்ளனர்.

மணமகன் செல்போனில் வீடியோ காலில் தெரிந்த மணமகள் அஞ்சனாவிற்கு தாலி கட்டினார். அதாவது செல்போனுக்கு தாலி கட்டியுள்ளார்.

அப்போது உ.பியில் இருந்து மணமகள் அஞ்சனா தானே தனது கழுத்தில் தாலி கட்டிக்கொண்டார்.

என்ன கொடுமை சார் இது என்றுதானே நினைக்கிறீர்கள்.. அதாவது கொரோனா கொடுமை இதுதானோ…

ஆனால் உலகத்தில் பல பேர் செல்போனுடன் தான் குடும்பம் நடத்தி வருகின்றனர் என்பது வேறு கதை..

Kerala Bride Groom ties Thaali to the Cell phone

சென்னை பள்ளிகள் அனைத்தையும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு

சென்னை பள்ளிகள் அனைத்தையும் கொரோனா வார்டாக மாற்ற முடிவு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Chennai Corporation decides to Change Chennai schools as Corona wardsகொரோனோ வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழக அளவில் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தாலும் சென்னையில் கொரோனா பாதிப்புகள் தினம் தினம் அதிகரித்து வருகிறது.

சென்னையில் மக்கள் தொகை அதிகளவில் இருப்பதால் கட்டுக்குள் கொண்டு வருவது சிரமமாக உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.

இன்று ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை கோயம்பேடு பூக்கடையில் வேலை செய்யும் 36, 71,19 வயதுடைய 3 ஆண்களுக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஏற்கனவே பூக்கடைக்காரர் மகனுக்கு தொற்று உறுதியாகியிருந்தது.

இதனால் பூக்கடைகளில் மட்டும் 5 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், அண்ணா பழக்கடையில் 36,42,29 வயதுடைய 3 ஆண்களுக்கும், பெரியார் பழக்கடையில் 30, 29 வயதுடைய 2 ஆண்களுக்கும் தொற்று உறுதியானது.

எனவே, கோயம்பேட்டில் கடைகளில் பணியிலிருந்த 9 பேருக்கு இன்று தொற்று உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளை கொரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

மே 2 முதல் கொரோனா தடுப்பு பணிகளுக்கு பள்ளிகளை பயன்படுத்த சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

Chennai Corporation decides to Change Chennai schools as Corona wards

கமல் & ஜோதிகா பற்றிய கேள்விகளுக்கு கடுப்பான கடம்பூர் ராஜு

கமல் & ஜோதிகா பற்றிய கேள்விகளுக்கு கடுப்பான கடம்பூர் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement தூத்துக்குடி மாவட்ட பகுதிகளில் தூய்மைபணியாளர்கள், மற்றும் ஏழைகள் உள்ளிட்ட 1300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா நிவாரண பொருட்களை தன் சொந்த செலவில் வழங்கினார் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது கமல் பற்றி செய்தியாளர்கள் கேட்டனர்.

“உலக நாடுகளே கண்டிராத பேரிடராக கொரோனா உள்ளது. 2-ம் உலக போரை விட பாதிப்பு அதிகம். ஆனால் எந்த நேரத்தில் எதைப் பேச வேண்டும் என்பது கமல்ஹாசனுக்கு தெரியவில்லை. சினிமாவில் பேசுவதைப் போன்று பேசி வருகிறார்.

அரசியல் மேதாவியாக பேசுவது சரியா என்பதை அவருடைய எண்ணத்திற்கே விட்டுவிடுகிறேன்.

கொரோனாவை சமாளிக்க முடியாமல் மற்ற நாடுகள் திணறி வரும் போது இந்தியா சிறப்பாக கையாண்டு வருகிறது.

தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் எடுத்து வருகிறார்.

நடிகர் கமல்ஹாசன் பால்கனியிலிருந்து பேசுகிறார். நாங்கள் மக்களிடமிருந்து பால்கனியை பார்க்கிறோம். எங்களுக்கும் அவருக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்றார்.

இதனையடுத்து நடிகை ஜோதிகா மற்றும் தஞ்சை பெரிய கோயில் பற்றிய கேள்விக்கு… “உலகளாவிய பிரச்னையாக கொரோனா இருக்கும் போது ஜோதிகாவின் கருத்து விளம்பரத்திற்கு தான் உதவும்.

இந்த நேரத்தில் இது விவாதிக்கப்பட வேண்டிய விஷயம் இல்லை என்பது எங்கள் கருத்து” என்றார் அமைச்சர்.

Kadambur Raju reaction for Kamal and Jyothikas recent statement

ரொம்ப எதிர்பார்க்காதீங்க..; அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கிய வலிமை தயாரிப்பாளர்

ரொம்ப எதிர்பார்க்காதீங்க..; அஜித் ரசிகர்களை அப்செட்டாக்கிய வலிமை தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ajith fans upset with Boney Kapoors statementநேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை.

இந்தப் படத்திலும் அஜித் – டைரக்டர் வினோத் – தயாரிப்பாளர் போனி கபூர் கூட்டணி தொடர்கிறது.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய யுவன் சங்கர்ராஜா இசையமைத்து வருகிறார்.

இதன் சூட்டிங் ஹைதராபாத் மற்றும் சென்னையில் நடைபெற்று வந்த நிலையில் கொரோனா ஊரடங்கு உத்தரவால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

படத்தின் தலைப்பு மட்டுமே வெளியான நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை அஜித் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்தனர்.

மே 1 நாளை அஜித்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் அப்டேட்ஸ் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் அதிரடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது,

“கோவிட் 19 என்னும் கொரோனா என்கிற கொடிய நோயின் தாக்கத்தில், அகில உலகமே போராடிக் கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் எந்த படத்துக்கும் எந்த விதமான விளம்பரமும் செய்ய வேண்டாம் என்று எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோரை கலந்து ஆலோசித்து, ஒருமித்தக் கருத்தோடு முடிவெடுத்து உள்ளோம் என்பதை தெரிவித்து கொள்கிறோம். அதுவரை தனித்து இருப்போம், நம் நலம் காப்போம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Ajith fans upset with Boney Kapoors statement

தல போல வருமா..? அஜித்தே சொன்னாலும் அடங்காத ரசிகர்கள்

தல போல வருமா..? அஜித்தே சொன்னாலும் அடங்காத ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Thala fans started Ajith Birth day celebrationநாளை மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் தனது 48வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

இதனையொட்டி அவரது ரசிகர்கள் பல கொண்டாட்டங்களுக்கு காத்திருந்தனர்.

ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.

இதனால் மக்கள் மிகுந்த வேதனையுடன் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

ஏழை மக்கள் வருமானமின்றி தவித்து வரும் நிலையில் ரசிகர்கள் தன் பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என அஜித் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது.

ஒரு பக்கம் தல சொல்லை தட்டக் கூடாது என்றாலும் அடங்காத அஜித் ரசிகர்கள் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களை இணையத்தில் அரங்கேற்றி வருகின்றனர்.

எங்கள் தல போல வருமா? என கொண்டாட்டங்களை ஆரம்பித்துவிட்டனர்.

விதவிதமான வீடியோக்களையும் படங்களையும் டிசைன் செய்து அஜித் பிறந்தநாளை கொண்டாட உள்ளனர்.

ஆக நாளை சமூக வலைத்தளங்களை நிச்சயம் அஜித் ரசிகர்கள் தெறிக்கவிடுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
நடிகர் அஜித்தை நாங்களும் ரசிகர்களுடன் இணைந்து வாழ்த்துகிறோம்.

ஹாப்பி பர்த்டே தல… தல போல வருமா..

Thala fans started Ajith Birth day celebration

More Articles
Follows