தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
வட இந்திய பிரபலங்கள் பலர் பாஜக.வில் இணைந்து வருகின்றனர். அதுபோல் தென்னிந்தியாவிலும் பாஜக.வில் சில திரை பிரபலங்கள் இணைவதை பார்க்க முடிகிறது.
ராதாரவி, மதுவந்தி, கெளதமி, விஜயகுமார், குட்டி பத்மினி, நமீதா, ஜெயலட்சுமி, கஸ்தூரி ராஜா, கங்கை அமரன், காயத்ரி ரகுராம் ஆகியோர் பாஜக.வில் உள்ளனர்.
சில தினங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தார் நடிகரும் தயாரிப்பாளருமான பிரமிட் நடராஜன்.
அவரின் அண்மை பேட்டியில் ரஜினியை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
‘பாஜக மீதும், பிரதமர் மோடி மீதும் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவர் ரஜினிகாந்த்.
அவர் தமிழ்நாட்டு பாஜகவுக்கு தலைமையேற்க வேண்டும் என்று ரொம்ப வருடங்களாக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
அவர் பாஜகவுக்கு வந்துவிட்டால், தமிழ்நாட்டில் பாஜக பலம் அதிகரிக்கும்.
ரஜினி தனிக்கட்சி ஆரம்பிக்காத பட்சத்தில், அவரை பாஜகவுடன் இணைக்க நிச்சயமாகப் பாடுபடுவேன்.
நான் பாஜகவில் இணைந்ததிற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணம்”
இவ்வாறு தயாரிப்பாளர் பிரமிட் நடராஜன் தெரிவித்துள்ளார்.