தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பஹத்பாசில் உள்ளிட்டோர் நடித்த படம் ’புஷ்பா’.
2021ல் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் ரிலீசாகி அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது.
இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட்டானது. முக்கியமாக தமிழில் ஆண்ட்ரியா பாடி சமந்தா ஆடிய ஊ. சொல்றீயா மாமா என்ற பாடல் வேற லெவல் ஹிட்டானது.
இவையில்லாமல் ராஜலட்சுமி செந்தில் பாடிய சாமி.. சாமி… பாடல் வெறித்தனமாக ஹிட்டடித்தன.
தற்போது ரிலீஸாகி 3 வாரங்கள் ஆன நிலையில் அமேசான் ஓடிடி தளத்தில் ’புஷ்பா’ திரைப்படம் ஜனவரி 7ஆம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘புஷ்பா’ திரைப்படம் அமேசானில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இதனால் ரசிகர்கள் இந்த படத்தை ஓடிடியிலும் பார்த்து மகிழ ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Pushpa The rise OTT release date announced





