புதுச்சேரியில் அக். 5 & 12 தேதிகளில் பள்ளிகள் திறக்க அரசு அனுமதி.; எந்தெந்த வகுப்புகள் முழு தகவல்கள்…

pondicherry governmentபுதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் பள்ளிகளை மீண்டும் திறப்பது தொடர்பாக ஆன்லைன் கலந்தாய்வு இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வியமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச்செயலர் அஸ்வினி குமார், கல்வித்துறை செயலர் அன்பரசு மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

அதில்… புதுச்சேரி, காரைக்காலில் 10, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களில் சந்தேகங்கள் ஏற்பட்டால் வரும் அக்டோபர் 5ம் தேதி முதல் பள்ளிகளுக்கு வந்து தங்களது சந்தேகங்களை தீர்த்து கொள்ளலாம்.

மேலும், 9, 11 ம் வகுப்பு மாணவர்கள் வரும் அக்டோபர் 12 முதல் பள்ளி செல்லலாம்.

மாணவர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதியையும், மதிய உணவையும் கல்வித்துறை ஏற்பாடு செய்யலாம்.

ஆனால் கொரோனா கட்டுப்படுத்தபட்ட பகுதிகளில் பள்ளிகள் திறக்க அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

கிருமிநாசினி பயன்படுத்த வேண்டும். சமூக இடைவெளியையும் பள்ளிகளில் உறுதிப்படுத்த வேண்டும்.

தினமும் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்து பதிவிட வேண்டும்.

ஏதேனும், அறிகுறிகள் தென்பட்டால் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும்.

சுகாதாரத்துறை கண்காணிப்பு அதிகாரிகள் தனியார் பள்ளிகளில் வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்வது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pudhuchery govt allows schools to reopen

Overall Rating : Not available

Latest Post