எங்களால் முடிந்த வரை மக்கள் பணி.; தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை.. – நாராயணசாமி

narayana samyபுதுச்சேரி… கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்தார் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி.

அவர் பேசுகையில்…

`தனியார் மருத்துவக் கல்லூரிகள் தலா 300 படுக்கைகளை கொரோனா தொற்றாளர்களுக்கு கொடுக்க வேண்டும்.

தற்போது ஒவ்வொரு தனியார் மருத்துவக் கல்லூரிகள் படுக்கைகளைக் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி மட்டும் படுக்கைகளைக் கொடுக்கவில்லை எனப் புகார் வந்தது.

எனவே அந்த நிறுவனத்தை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கொண்டு வந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் அளிப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசுடன் ஒத்துழைக்க வேண்டும். இல்லையென்றால், மாநில அரசு தானாக முன்வந்து அந்த மருத்துவக் கல்லூரிகளைக் கையகப்படுத்தி அங்குள்ள படுக்கைகள் முழுவதையும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மாற்றுவோம்.

முதல்வரின் கோவிட் நிவாரண நிதி மற்றும் மருத்துவத்துறை நிதியிலிருந்து தேவையான உபகரணங்களை வாங்கி வருகிறோம்.

தற்போது `ட்ரூநாட்’ (Truenat) இயந்திரங்களைக் காரைக்கால், மாஹே மற்றும் ஏனாமுக்கு அனுப்ப உள்ளோம்.

அதற்குத் தேவையான 10,000 சிப்புகள் வாங்குவதற்காக ரூ.1.30 கோடிக்கு ஒப்புதல் அளித்திருக்கிறேன்.

அந்த இயந்திரம் மூலம் நாம் ஆய்வுக்கூடத்துக்குச் செல்லாமல் 2 மணி நேரத்தில் கொரோனா முடிவைத் தெரிந்துகொள்ளலாம்.

அதேபோல `ஆண்டிஜென்’ (Antigen) கிட்டுகளும் வாங்கப்பட்டது.

அதன் மூலம் கொரோனா உள்ளதா என்பதை 30 நிமிடத்தில் கண்டுபிடிக்கலாம்.

மருத்துவத்துறை அதிகாரிகள், செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள் இரவு பகலாக பாடுபடுகிறார்கள்.

மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களை நியமிக்கவும், ஆம்புலன்ஸ்கள் வாங்குவதற்கும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

எங்களால் முடிந்த வரை நானும் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் மக்களுக்கு பணியை இரவு பகலாக செய்து வருகிறோம்”

இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

Overall Rating : Not available

Latest Post