என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்

என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் நாடக காதல்.: 60 கிலோ தாங்கிய திவ்யா.. என்னை புரிந்து கொள்ளவே ‘வாழை’.. – மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் அவரது மனைவி திவ்யா தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வாழை’.

ஓடிடி தளத்திற்காகவே உருவாக்கப்பட்ட இந்த படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் தயாரித்தது.. ஆனால் தற்போது திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்த படத்தை ஆகஸ்ட் 23ஆம் தேதி திரையரங்கில் வெளியிட உள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் கலையரசன் நாயகனாக நாயகிகளாக திவ்ய துரைசாமி மற்றும் நிகிலா விமல் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள தென்கிழக்கு என்ற பாடலை பாடகி தீ பாடியிருக்கிறார். இந்த பாடல் வெளியீட்டை தொடர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர் படக்குழுவினர்.

அப்போது நாயகி திவ்யா துரைசாமி பேசியதாவது..

பத்திரிக்கையாளர்கள் உங்களுடன் நான் அமர்ந்து இந்த மேடையை பார்த்திருக்கிறேன். அதுபோல இந்த மேடையில் இருந்தும் உங்களை நான் பார்த்து இருக்கிறேன்.. பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறேன்.

ஆனால் இந்த முறை நான் ஒரு நடிகையாக இங்கே நிற்கிறேன்.. கொஞ்சம் நடுக்கம் இருக்கிறது..

வாழை படத்திற்காக என்னை மாறி செல்வராஜை தொடர்பு கொண்ட போது ‘வாழை’ என்னுடைய லட்சியப் படம்..கனவு படம் என்றார். அதற்கு நீங்கள் தயார் என்றால் நீங்கள் நடிக்கலாம் என்றார்.. அதன்படியே நான் என்னை முழுவதுமாக இந்தப் படத்திற்காக சரண்டர் செய்து விட்டேன்.. படமும் சிறப்பாக வந்திருக்கிறது.” என்று பேசினார் திவ்யா.

இந்த படத்திற்காக வாழை இலை கலரில் அழகான பச்சை கலர் உடை அணிந்து வந்திருந்தார் திவ்யா

பின்னர் மாரி செல்வராஜ் பேசியதாவது…

என்னை பாதித்த சம்பவங்களை தான் நான் படமாக்கிக் கொண்டு இருக்கிறேன்.. என்னுடைய முதல் படைப்பாக வாழை என்ற இந்த படத்தை இயக்கத் தயாராக இருந்தேன்.. ரூ. 50 லட்சத்தில் இந்த படத்தை முடித்து விடலாம் என காத்திருந்தேன்.

ஆனால் அதற்குள் பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் அறிமுகமானேன். அதன் பின்னர் கர்ணன் & மாமன்னன் என்ற அடுத்த அடுத்த படங்களை இயக்கி விட்டேன்.

மாமன்னன் படத்தை இயக்கும்போதே ‘வாழை’ படத்தை இயக்க வேண்டும் என்று எண்ணம் அதிகமாகவே இருந்தது.. எனவே உடனே தொடங்கி விட்டேன்.

இதன் பின்னர் துருவ் நடிக்கும் பைசன் என்ற படத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிறேன்.. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சிறுவன் இப்போது பெரிய பையனாகி விட்டான்.. அவன் என் உறவினர் தான்..

அவன் என்னை பார்த்து ஏதோ ஒன்று கேட்பது போலவே இருந்தது.. நீங்கள் அடுத்தடுத்து படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.. எங்கள் படத்தை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்பது போலவே கேள்வி இருந்தது?

இதில் இடம்பெற்ற ‘பாதகத்தி’ பாடல் என்னை தொந்தரவு செய்து கொண்டேயிருக்கிறது.

நான் பட்ட கஷ்டங்களை நீங்கள்பட வேண்டும் என்று கூறிதான் நடிகர்களிடம் வேலை வாங்கினேன்.

நிகிலா விமலுக்கு சிரமமான காட்சிகள் இல்லை.. ஆனால் கலையரசன் 100 கிலோ வெயிட்டை தலையில் சுமந்திருந்தார். திவ்யா துரைசாமி 60 கிலோ எடையை தூக்கினார். நிறைய முறை ரீடெக் வேறு எடுத்தேன்.. அவ்வளவு பாரத்தை சுமந்தால் கழுத்து வலி அதிகமாகவே இருக்கும்.. ஆனாலும் எனக்காக கடுமையாக உழைத்தார்கள்.. பார்க்கவே பாவமாக இருக்கும்.

என் வாழ்வில் நடந்த ஆகப்பெரும் துயரத்தை மனைவி திவ்யா தயாரிப்பார் என நான் நினைத்துப் பார்த்து கிடையாது.

நானும் என் மனைவியும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டோம்.. என்னுடைய காதல் நாடக காதல்.. என்னைப் பற்றியும் சினிமா பற்றியும் நிறைய தெரிந்து வைத்திருப்பவர் திவ்யா.. எனவே என் வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொண்டேன்.. என் வாழ்க்கையில் மீளமுடியாத துயரம் ‘வாழை’.

என்னைப்பற்றி நிறைய கேள்விகள் உங்களிடம் இருக்கும். என்னை நீங்கள் புரிந்துகொள்ள எடுக்கப்பட்ட படம் தான் இந்த வாழை.. இந்தப் படத்தை பற்றி பேச இன்னும் நிறைய இருக்கிறது.. அடுத்தடுத்த மீட்டிங்கில் சந்திக்கும்போது பேசலாம்..” என்றார்.

Public will understand me from Vaazhai says Mari Selvaraj

ரத்ததானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்து பாராட்டி சூர்யா செய்த ரத்ததானம்

ரத்ததானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்து பாராட்டி சூர்யா செய்த ரத்ததானம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரத்ததானம் செய்த ரசிகர்களுக்கு விருந்தளித்து பாராட்டி சூர்யா செய்த ரத்ததானம்

*பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!!*

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா தானும் இரத்த தானம் செய்துள்ளார்.

வருகிற ஜூலை 23ஆம் தேதி நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வடசென்னை தெற்கு மாவட்டம் சூர்யா நற்பணி மன்றம் சார்பில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில், 400 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர்.

இன்னும் பல மாவட்டங்களில் ரசிகர் மன்றம் சார்பில் இரத்த தானம் செய்யவும் ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் சூர்யாவின் பிறந்த நாள் மட்டுமின்றி, எப்போது எங்கு தேவைப்பட்டாலும், இரத்த தானம் அளிக்கும் ஒரு அமைப்பையும் ரசிகர்கள் மேற்கொண்டுள்ளனர்.

ரசிகர்களின் இந்த சேவையை பாராட்டிய நடிகர் சூர்யா, வீடியோ கால் மூலமாக ரசிகர்களை வெகுவாக பாராட்டினார்.

கடந்த ஆண்டு 2000-க்கும் மேற்பட்டோர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் வழங்கினர். அவர்களை நேரில் அழைத்து விருந்தளித்து பாராட்டிய நடிகர் சூர்யா, இனி ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்த தானம் செய்ய உள்ளதாக தெரிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் நேற்று ரசிகர்கள் ரத்த தானம் செய்த நிலையில், இன்று அவர் ரத்த தானம் செய்து, ரசிகர்களுக்கும் நடிகர்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்துள்ளார்.

ஒரு சில தினங்களுக்கு முன் நடிகர் சூர்யாவின் தம்பியும் நடிகருமான கார்த்தியும் சில தினங்களுக்கு முன் ரத்த தானம் செய்து தன் ரசிகர்கள் அழைத்து பாராட்டி கௌரவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது..

Suriya appreciated his fans and donated blood

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101-வது படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101-வது படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 101-வது படம் ‘மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்’

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் வழங்கும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ அசத்தலான ஃபர்ஸ்ட்லுக் !!

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ பட ஃபர்ஸ்ட் லுக் !!

தனித்துவமான படைப்புகள் மற்றும் குடும்பத்துடன் கொண்டாடும் படங்களை வழங்கியதன் மூலம், மக்களிடம் பெரும் மதிப்பைப் பெற்றிருக்கும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், தனது 101 வது படைப்பாக இந்த புதிய படத்தினை பெரும் பொருட்செலவில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படைப்பாக உருவாக்கி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

யூடியூப்பில் பொழுதுபோக்குடன் கூடிய சிந்திக்கவைக்கும் படைப்புகளை வழங்கி மக்களிடம் பாராட்டுக்களைப் பெற்ற ஹரி பாஸ்கர், இப்படம் மூலம் நாயகனாக ஒரு புதிய அவதாரத்தை எடுக்கிறார். இளைஞர்களின் உள்ளம் கவர்ந்த லாஸ்லியா இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார்.

முழுக்க முழுக்க ரசிகர்களைச் சிரிக்க வைக்கும்படியான கதைக்களத்தில், கலக்கலான கம்ர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் அருண் ரவிச்சந்திரன் இப்படத்தை உருவாக்குகிறார்.

இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் படம் பற்றிய மற்ற தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்

Thenandal films 101 movie titled Mr House Keeping

சிவகார்த்திகேயன் சினிமாவை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் கமல் & உதயநிதி

சிவகார்த்திகேயன் சினிமாவை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் கமல் & உதயநிதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சிவகார்த்திகேயன் சினிமாவை தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரும் கமல் & உதயநிதி

தீபாவளி முதல் ‘அமரன்’ – அக்டோபர் 31, 2024

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் திரு. ஆர். மகேந்திரன் இணைந்து தயாரிக்க சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்கும் அமரன் திரைப்படம் தீபாவளி அன்று (31 அக்டோபர் 2024) உலகமெங்கும் வெளியாகிறது. திரைப்படத்தை ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்திய ராணுவ வீரர்களின் தீரம் மிக்க வீரச்செயல்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திரைப்படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கி இருக்கிறார். காஷ்மீரின் சவால் மிக்க நிலப்பகுதிகளில் இந்தப் படத்தின் காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்திய இராணுவ மேஜர் வரதராஜனாக நடிக்கும் கதாநாயகன் சிவகார்த்திகேயன் உணர்ச்சிகரமான நடிப்பையும், அதிரடி ஆக்சனையும் வெளிப்படுத்தியிருப்பதால் அமரன் திரைப்படத்திற்குப் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

கதாநாயகி சாய் பல்லவி தனது ஆழமான நடிப்பினால் படத்துக்குச் சிறப்பானப் பங்களிப்பை அளித்துள்ளார்.

கதாநாயகன் சிவகார்த்திகேயன் படத்துக்கு முதன்முறையாக இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ். சண்டைக்காட்சிகளை அன்பறிவு மாஸ்டர்கள் மற்றும் ஸ்டெஃபான் ரிக்டர் இணைந்து வடிவமைத்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார் சி.எச். சாய்.

புரொடக்‌ஷன் டிசைனர் ராஜீவன், கலை இயக்குனர் சேகர், எடிட்டர் ஆர். கலைவாணன் மற்றும் துணைத் தயாரிப்பாளர் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் ஆகியோர் படத்துக்குப் பலம் சேர்த்துள்ளனர்.

தன்னலமற்ற நமது இந்திய இராணுவ வீரர்களின் வீரத்தைக் கண்டு வியக்கவும், தியாகத்தைப் போற்றவும் தயாராகுங்கள்.

ஜெய் ஹிந்த்!

Amaran movie will be released on 31st Oct 2024

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழகம் & புதுவையில் விஷ்ணு விஷால் பிறந்த நாளை அன்னதானம் & ரத்ததானம் செய்து கொண்டாடிய ரசிகர்கள்

*விஷ்ணு விஷால் பிறந்த நாளை நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்கள் !!*

தமிழ்த் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களுள் ஒருவர் விஷ்ணு விஷால். ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதைக் களங்களில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

ஜூலை-17 விஷ்ணு விஷால் அவர்களின் பிறந்த நாளாகும்! அதைக் கொண்டாடும் வகையில், தமிழகம் முழுக்க அவரது ரசிகர்கள், ‘இரத்த தானம், அன்னதானம்’ போன்ற நலத்திட்ட உதவிகளைச் செய்து அசத்தியுள்ளனர்.

தமிழகம் மட்டுமல்லாமல், பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் விஷ்ணு விஷால் ரசிகர்கள் இரத்த தானம் செய்துள்ளனர். மேலும் மனநலம் குன்றியோருக்கான ‘ஜாவல் ஆதரவற்றோர் இல்லத்திற்கு’ உணவும் வழங்கியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் அமைந்துள்ள ‘அரசு மறுவாழ்வு இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். சேலத்தில் அமைந்துள்ள ‘தாய்மை அன்புக் கரங்கள்’ குழந்தைகள் இல்லத்திற்கு ‘அன்னதானம்’ வழங்கியுள்ளனர்

தேனி மாவட்டம் கம்பத்தில் அமைந்துள்ள ‘நேதாஜி இல்லத்திற்கு’ உணவு வழங்கியுள்ளனர். மேலும் சென்னையில் அமைந்துள்ள ‘அன்னை அன்பாலயா’ இல்லத்திற்கும் உணவு வழங்கியுள்ளனர்.

இவ்வாறு விஷ்ணு விஷால் பிறந்த நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் கொண்டாடிய ரசிகர்களின் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதனை அறிந்த விஷ்ணு விஷால் தனது ரசிகர்களை நேரில் அழைத்து வாழ்த்தி தனது அன்பை பகிர்ந்துகொண்டார்.!

Vishnu Vishal fans celebration at TN and Pondy by Blood donation

‘கருடன் & மகாராஜா’ ஹிட்டு.. ‘விடுதலை 2’ போஸ்டரை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சி

‘கருடன் & மகாராஜா’ ஹிட்டு.. ‘விடுதலை 2’ போஸ்டரை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘கருடன் & மகாராஜா’ சூப்பர்.. ‘விடுதலை 2’ போஸ்டரை வெளியிட்டு படக்குழு மகிழ்ச்சி

ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வழங்கும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி – சூரி நடித்திருக்கும் ‘விடுதலை பார்ட் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது..

இயக்குநர் வெற்றிமாறனின் ‘விடுதலை பார்ட் 1’ திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றதில் இருந்தே இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்தது. ‘விடுதலை’ படத்தின் இரண்டாம் பாகத்தை வெளியிட ரசிகர்கள் மற்றும் வர்த்தக வட்டாரங்கள் ஆர்வமாக உள்ளன.

இந்த நேரத்தில், விஜய் சேதுபதி மற்றும் சூரி நடித்துள்ள இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தமிழ் மற்றும் தெலுங்கில் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறார்.

தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது…

“ரசிகர்கள் மற்றும் திரையுலக ஆர்வலர்களிடம் இருந்து இவ்வளவு அன்பையும் வரவேற்பையும் ‘விடுதலை’ படக்குழு பெறுவது நெகிழ்ச்சியாக உள்ளது. ‘விடுதலை1’ எங்கள் எதிர்பார்ப்புகளை விடவும் அதிக வரவேற்பு பெற்றது.

இந்தப் படம் வணிகம் மற்றும் பேரலல் சினிமாவிற்கு இடையேயான இடைவெளியைக் குறைத்துள்ளது. இதன் மூலம் எதிர்கால இயக்குநர்களுக்கு ஒரு ப்ளூப்ரிண்ட்டாக இந்தப் படம் மாறியுள்ளது.

‘விடுதலை 1’ மற்றும் ‘கருடன்’ படங்களின் பிளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூரியின் கேரியர் கிராஃப் மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது.

நம் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படமும் வெற்றியடைந்திருக்கிறது. இதுபோன்ற பல பாசிட்டிவான விஷயங்களோடு ‘விடுதலை2’ படத்தை ரசிகர்களுக்கு சிறந்த முறையில் வழங்குவதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

இந்த இரண்டாம் பாகத்தினை வெற்றிமாறன் இன்னும் செழுமைப்படுத்தி வருகிறார். இசைஞானி இளையராஜா சாரின் மேஜிக்கல் இசை இந்தக் கதைக்கு மேலும் வலுசேர்த்துள்ளது. படத்தின் படப்பிடிப்பை முடித்து, இந்த ஆண்டு இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

பவானி ஸ்ரீ, ராஜீவ் மேனன், கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன் மற்றும் பலர் படத்தின் மதிப்பை தங்கள் நடிப்பின் மூலம் உயர்த்தி இருக்கிறார்கள். இவர்களுடன், ‘விடுதலை’ இரண்டாம் பாகத்தில் நடிகர்கள் மஞ்சு வாரியர், அனுராக் காஷ்யப் மற்றும் பல நம்பிக்கைக்குரியவர்கள் நடித்திருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.

குறிப்பாக, மஞ்சு வாரியரின் நடிப்பு இந்த படத்தில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பாராட்டப்படும். நடிகர் கிஷோரின் கதாபாத்திரம் இந்தப் படத்தில் தீவிரமானதாக இருக்கும்” என்றார்.

ரெட் ஜெயண்ட் தமிழ்நாடு முழுவதும் படத்தை விநியோகிக்கவுள்ளது. படத்தின் டிரெய்லர், ஆடியோ மற்றும் உலகளவில் திரையரங்கு வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கப்படுகிறது.

*தொழில்நுட்ப குழு:*

இயக்குநர்: வெற்றிமாறன்,
இசை: இளையராஜா,
ஒளிப்பதிவு: ஆர். வேல்ராஜ்,
கலை இயக்குநர்: ஜாக்கி,
படத்தொகுப்பு: ராமர்,
ஆடை வடிவமைப்பாளர்: உத்ரா மேனன்,
ஸ்டண்ட்: பீட்டர் ஹெய்ன் & ஸ்டண்ட் சிவா,
ஒலி வடிவமைப்பு: டி. உதய குமார்,
விஎஃப்எக்ஸ்: ஆர். ஹரிஹரசுதன்,
நிர்வாகத் தயாரிப்பாளர்: ஜி. மகேஷ்,
இணைத்தயாரிப்பாளர்: வி. மணிகண்டன்,
தயாரிப்பாளர்: எல்ரெட் குமார்.

Viduthalai part 2 poster with Manju warrier

More Articles
Follows