ரஜினி-விஜய்-தனுஷ் வர்றாங்க.. அசோக் செல்வன் வர மாட்டாரா.? ETR பட விழாவில் (தீயாய்) திருமலை

ரஜினி-விஜய்-தனுஷ் வர்றாங்க.. அசோக் செல்வன் வர மாட்டாரா.? ETR பட விழாவில் (தீயாய்) திருமலை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஜினி-விஜய்-தனுஷ் வர்றாங்க.. அசோக் செல்வனால் வர முடியாதா? ETR பட விழாவில் தீயாய் திருமலை

போர் தொழில் & ப்ளூ ஸ்டார் ஆகிய படங்களைத் தொடர்ந்து அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’.

அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் எழுதி இயக்கி இருக்கிறார்.

‘எமக்குத் தொழில் கவிதை’ என்ற பாரதியாரின் கவிதை வரிகளை சற்று மாற்றி டைட்டிலாக்கியிருக்கிறார்கள்.

ரொமான்டிக் நாயகன் மற்றும் அவனது நண்பர்கள் குடும்பத்தை பற்றிய கதையை மையப்படுத்தி இந்த படத்தை உருவாக்கி இருக்கின்றனர்.

அசோக் செல்வன் நாயகனாக நடிக்க அவந்திகா நாயகியாக நடித்துள்ளார். இப்படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து உள்ளார்.

எம்.எஸ்.பாஸ்கர், அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகை ஊர்வசி முக்கிய கேரக்டர் நடித்துள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் திருமலை தயாரித்துள்ளார்.

இந்தப் படம் திரைக்கு வர தயாராகி கிட்டத்தட்ட சில மாதங்கள் ஆன நிலையில் தற்போது இந்த படத்தின் பிரஸ்மீட் இன்று ஜூலை 27 சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலக பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.. பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி, தயாரிப்பாளர்கள் டி சிவா, கே ராஜன் இயக்குனர் எழில் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.. ஆனால் படத்தின் நாயகன் அசோக் செல்வன் இந்த விழாவை புறக்கணித்து இருந்தார்.

இந்த நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திருமலை பேசும்போது…

அசோக் செல்வனால் இந்த படத்தில் ஏகப்பட்ட பிரச்சனை.. அவர் இந்த விழாவுக்கு வரவில்லை. அவருக்கு என்ன பிரச்சனை என்று கூட சொல்லவில்லை. யாரிடம் சென்று பேசுவது என்பது கூட தெரியவில்லை.

தற்போது அசோக் செல்வன் சம்பளமாக 2 கோடி வரை கேட்கிறார்.. ஆனால் இந்த படத்தில் அவர் நடிக்கும் போது 35 லட்சம் வரை சம்பளம் வாங்கினார்.. இன்று அவர் கோடி கணக்கில் சம்பளம் பெற தொடங்கி விட்டார்.. ஆனால் அவர் பழசை மறந்து விட்டார்.

ரஜினிகாந்த் மிகப்பெரிய சூப்பர் ஸ்டார்.. அவர் நினைத்திருந்தால் எந்த ஒரு ப்ரொமோஷனுக்கும் வராமல் கூட இருந்திருக்கலாம்.. அவர் வராமலே படம் ஹிட்டு அடிக்கும். ஆனாலும் படத்தின் இசை நிகழ்ச்சி முதல் எல்லா நிகழ்ச்சிகளும் அவர் கலந்து கொள்கிறார்.

அதுபோல நடிகர் விஜய்யும் பங்கு பெறுகிறார்.. அவர் விழாக்களில் கலந்து கொண்டு கதைகள் பேசுகிறார்.. அதுபோல் தனுஷும் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் வருகிறார்.. ஆனால் அசோக் செல்வனால் வர முடியாதா.?..

நடிகர்கள் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர வேண்டும் என தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு கட்டாயத் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்று பேசினாலர் தயாரிப்பாளர் திருமலை.

பெப்சி தலைவர் ஆர் கே செல்வமணி பேசும் போது…

ஒரு போலீஸ்காரன் நாட்டில் திருட்டு நடக்கிறது என்று தெருவில் வந்து கத்திக் கொண்டிருந்தால் ஆகாது.. அது போல தான் இங்கே வந்து திருமலை தயாரிப்பாளர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட அவரே ஒரு பொறுப்பில் உள்ள நிலையில் தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டு இருக்கலாம்..

மேலும் அசோக் செல்வனுக்கும் அவருக்கும் என்ன பிரச்சனை நடந்தது எனக்கு தெரியாது.. ஆனால் நான் பார்த்தவரை ஒரு நல்ல பண்பாளராக அசோக் செல்வன் நடந்து கொண்டார்.

மேலும் படத்தில் நடிக்கும் நடிகர்கள் நிச்சயம் பிரஸ்மீட் மற்றும் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும்.

ஒரு படம் வெற்றி பெற்றால் அதில் 80% லாபம் நடிகர் நடிகைகளுக்கு செல்கிறது. அதாவது நான் பணத்தை சொல்லவில்லை. ஒரு படம் வெற்றி பெற்றால் அவர்கள் அடுத்தடுத்த படங்களில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் நிறைய வாய்ப்புகள் லாபம் வருகிறது.

அவர்கள அடுத்து 25% டெக்னீசியன்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் தயாரிப்பாளர் அதே நிலையில் தான் இருக்கிறார்.

எனவே படத்தில் நடிக்கும் ஹீரோக்கள் அவர்கள் அதிக லாபம் பெறும் நிலையில் படத்தின் ப்ரமோசோர்களுக்கு வந்து துணை புரிய வேண்டும்” என்று பேசினார் ஆர்கே செல்வமணி..

Producer Thirumalai condemns Actor Ashok Selvan

REAL LION in MAMBO வனிதா விஜயகுமாரின் மகனுக்காக கதை கேட்ட ரஜினி

REAL LION in MAMBO வனிதா விஜயகுமாரின் மகனுக்காக கதை கேட்ட ரஜினி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

REAL LION in MAMBO வனிதா விஜயகுமாரின் மகனுக்காக கதை கேட்ட ரஜினி

தமிழ் சினிமாவின் மெலோடி கூட்டணி என்று அழைக்கப்படுபவர்கள் இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன் இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர்.

இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக ‘மாம்போ’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசியப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது.

படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதிகளின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக நடிக்கிறார்.

யோகிபாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

’பெண்ணின் மனதை தொட்டு’, ’தேவதையை கண்டேன்’, ’பேரரசு’ போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் எம்.காஜா மைதீனின் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்பட தயாரிப்பை தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தின் டைட்டில் லாஞ்ச் சென்னையில் உள்ள பிரபல மாலில் நடைபெற்றது.. இதில் தன் பேரனை அறிமுகப்படுத்தி படக்குழுவினரை வாழ்த்தி பேசினார் நடிகர் விஜயகுமார்.

விஜயகுமார் பேசுகையில், “இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்த முடியும் என்று இயக்குனர் பிரபு சாலமன் நிரூபித்துள்ளார். நிகழ்ச்சி வருகை தந்திருக்கும் ஊடக மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் ஶ்ரீஹரி வாழ்க்கையில் தன்னைத்தானே ஒவ்வொரு கட்டமாக மெருகேற்றினார். பின்னர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்களை சந்தித்து, அவரது ஆலோசனையுடன் அவரது அப்பா நடிகர் ஆகாஷ் அவர்களது ஆசைக்கிணங்க பிரபு சாலமன் இயக்கத்தில், அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்தலாம் என்று முடிவு எடுத்தோம். தயாரிப்பாளர் காஜா மைதீன் அவர்களது ஒத்துழைப்புடன் இந்த படம் மிகப்பெரிய படமாக வந்துள்ளது. அனைவரது ஆசியிலும் இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

இறுதியாக நன்றி தெரிவித்து இயக்குனர் பிரபு சாலமன் பேசுகையில்..

“நான் குழந்தைகளுக்கான உலகத் தரத்திலான படம் எடுக்க வேண்டும் என்று விரும்புவேன். அப்படி ஒரு படம் தான் இது. தலைசிறந்த கதைக்கரு மீது நம்பிக்கை இருந்தது, மேலும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் அவர்களிடம் கதையைக் கூறினேன். பிறகு படத்தின் தலைப்பு மற்றும் அறிமுக விழா இந்த அளவிற்கு சிறப்பாக நடைபெற்றது. எங்களது படக்குழுவும் தங்களது கடின உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். விரைவில் சிறப்பான இசை வெளியீட்டு விழாவில் சந்திப்போம். ஊடகத் துறையினரின் ஒத்துழைப்புக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

முன்னதாக மேடையில் இசை அமைப்பாளர் இமானின் லைவ் டைட்டில் மியூசிக் இசைக்கப்பட்டது..

Real Lion starring Mambo movie Title launch

———

யோகிபாபு & வாணி இணைந்த ‘சட்னி சாம்பார்’.; ராதாமோகன் இயக்கிய காமெடி வெப் சீரிஸ்

யோகிபாபு & வாணி இணைந்த ‘சட்னி சாம்பார்’.; ராதாமோகன் இயக்கிய காமெடி வெப் சீரிஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

யோகிபாபு & வாணி இணைந்த ‘சட்னி சாம்பார்’.; ராதாமோகன் இயக்கிய காமெடி வெப் சீரிஸ்

யோகி பாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” சீரிஸிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தனித்துவமான விளம்பரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது.

இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது.

நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது.

இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல், உணவைத் தயாரிக்கும் சமையல்காரர்களுக்கிடையேயான போரையும், உணவுகளுக்கு இடையிலான நிலைப்பாட்டையும் காட்டுகிறது.

இந்த ராப் பாடல் வரிகளை ராகுல் ஸ்ரீதர் (ஹிப்பி எழுத்தாளர்) எழுதியுள்ளார்.

‘சட்னி – சாம்பார்’ சீரிஸை அறிமுகப்படுத்தும் விதத்தில் படக்குழுவினர் காமிக் வடிவில் இதன் களத்தை விவரிக்கும் ஒரு சிறுகதையையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த காமிக் வடிவ கதையில் இயக்குநர் ராதாமோகனுக்கும் யோகி பாபுவின் கதாபாத்திரத்திற்கும் இடையிலான கற்பனை உரையாடல் இடம்பெற்றுள்ளது. ராப் மியூசிக்கும் மற்றும் காமிக் வடிவ தொடரும் இந்த சீரிஸ் மீதான ஆர்வத்தைக் கூட்டுகிறது.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் இந்த சீரிஸைத் தயாரித்துள்ளது. யோகிபாபு வாணி போஜன் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு கதை நாயகனாக ஒரு சீரிஸில் நடிப்பது இதுவே முதன் முறையாகும்.

இந்த வெப் சீரிஸ், ஒரு ஜாலியான ஃபேமிலி எண்டர்டெயினராக இருக்கும். யோகி பாபு மற்றும் வாணி போஜன் தவிர, இந்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸில் ‘கயல்’ சந்திரமௌலி, நிதின் சத்யா, சார்லி மற்றும் குமரவேல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.

‘சட்னி – சாம்பார்’ முழுக்க முழுக்க குடும்பங்கள் சிரித்து ரசிக்கும், யூத்ஃபுல் எண்டர்டெய்னர் சீரிஸாக இருக்கும்.

இந்தத் சீரிஸில் காயத்ரி ஷான், தீபா, நிழல்கள் ரவி, மைனா நந்தினி, சம்யுக்தா விஸ்வநாத் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரபல தயாரிப்பாளரும் இயக்குநருமான R.சுந்தர்ராஜன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்.

மேலும் குழந்தை நட்சத்திரங்களான இளன், அகிலன் மற்றும் கேசவ் ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

‘சட்னி-சாம்பார்’ சீரிஸிற்கு பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரபல சூப்பர் சிங்கர் போட்டியில் வெற்றி பெற்று, விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் மற்றும் இயக்குனர் சசியின் சிவப்பு மஞ்சள் பச்சை போன்ற படங்களில் பணியாற்றிய அஜேஷ் அசோக் இந்த சீரிஸிற்கு இசையமைத்துள்ளார்.

இரும்புத்திரை, சர்தார், கைதி மற்றும் மாஸ்டர் போன்ற படைப்புகள் மூலம் புகழ் பெற்ற எழுத்தாளர் பொன் பார்த்திபன் இந்த ஒரிஜினல் சீரிஸிற்கு வசனங்களை எழுதியுள்ளார். கலை இயக்கம் K கதிர் மற்றும் எடிட்டிங் பணிகளை ஜிஜேந்திரன் செய்துள்ளனர்.

Radhamohans Chutney Sambar web series streaming from July

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி-யில் இணைந்த பிரதீப் – விக்கி – கீர்த்திஷெட்டி

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி-யில் இணைந்த பிரதீப் – விக்கி – கீர்த்திஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி-யில் இணைந்த பிரதீப் -:விக்கி – கீர்த்தி ஷெட்டி

*விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் இணையும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!*

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை (ஜூலை 25) முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார்.‌

இன்றைய இளம் இணைய தலைமுறையினரின் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கிறது.

இந்த திரைப்படத்தில் L . K. விஷ்ணு குமார் இணை தயாரிப்பாளராகியிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால்… இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

‘நானும் ரவுடிதான்’, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் – ‘லவ் டுடே’ படத்தின் மூலம் பிரமாண்ட வெற்றியை பெற்று, தமிழ் திரையுலகத்தின் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகராக உயர்ந்திருக்கும் பிரதீப் ரங்கநாதன் – ‘மாஸ்டர்’, ‘ லியோ’ போன்ற பிரம்மாண்டமான படைப்புகளை தயாரித்த 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம்- ஆகியோரின் கூட்டணியில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ தயாராகி இருப்பதால் இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்திருக்கிறது.

இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்க நாதனின் பிறந்த நாளில் அவர் நடிக்கும் ‘எல் ஐ கே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருப்பதால்… அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள்.

———

*தமிழ் திரையுலகின் ஜொலிக்கும் நட்சத்திரம்  பிரதீப் ரங்கநாதன் !!*

சினிமா கனவுகளோடு திரிந்த மிக எளிய இளைஞனான பிரதீப் ரங்கநாதன், இன்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குநராக, நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார்.

இன்று ஜூலை 25 பிறந்த நாள் கொண்டாடும், தமிழ் திரையுலகின் அடுத்த நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரதீப் ரங்கநாதனுக்கு பல பக்கங்களிலிருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

நடுத்தர வர்க்க குடும்பத்து இளைஞனாக சினிமா கனவுகளோடு வாழ்வைத் தொடங்கிய பிரதீப் ரங்கநாதனுக்கு, இயல்பிலேயே கதை சொல்லும் திறமை பளிச்சிட்டது. தான் பார்க்கும் இன்றைய இளைய சமூகத்தின் இயல்பை, கதையாக்கி அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படம் திரைத்துறையில் பெரும் கவனம் ஈர்த்தது. இந்த குறும்படம் மூலம் அவருக்கு கோமாளி பட வாய்ப்பு கிடைத்தது. வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில்,  ஜெயம் ரவி நடிப்பில் அவர் இயக்கிய “கோமாளி” திரைப்படம் பெரு வெற்றி பெற்று, 100 நாட்களை கடந்தது. பின்னர் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில்,  அவர் இயக்கிய அப்பா லாக் குறும்படத்தை திரைக்கதையாக்கி, தானே நடித்து இயக்கிய “லவ் டுடே” படம், தமிழ் திரையுலகில் புயலைக் கிளப்பி, பல  புதிய சாதனைகள் படைத்தது. தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பேசுபொருளான “லவ் டுடே” படம், தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் நடிப்பில் 100 கோடியை தாண்டிய படமாக சாதனை படைத்தது. பிரதீப் ரங்கநாதன் மக்களின் மனம் கவர்ந்த நாயகனாக மாறினார்.

தற்போது ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில், ஓ மை கடவுளே இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதற்கான ஆரம்ப கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது.

மேலும் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் தயாரிப்பில்,  முன்னணி  இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் புதிய திரைப்படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.

அவரது பிறந்த நாளையொட்டி ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில்,  ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில்,  புதுமையான முறையில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனின் தோற்றம் வடிவமைக்கப்பட்டிருப்பதால், இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Love Insurance Kompany poster revealed on Pradeep birthday

திருமணமான ஆண்களின் பிரச்சினையை சொல்ல மீண்டும் இணைந்த ரியோ – மாளவிகா ஜோடி

திருமணமான ஆண்களின் பிரச்சினையை சொல்ல மீண்டும் இணைந்த ரியோ – மாளவிகா ஜோடி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

திருமணமான ஆண்களின் பிரச்சினையை சொல்ல மீண்டும் இணைந்த ரியோ – மாளவிகா ஜோடி

*““ஜோ” திரைப்பட ஜோடி, ரியோ- மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்த புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !!*

ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்‌ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது.

திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது.

ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு , என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. S2 மீடியா சதீஷ்குமார் இப்படத்தின் மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கிறார்.

இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கிய படப்பிடிப்பை திட்டமிட்டபடி முடித்து, அசத்தியுள்ளது படக்குழு.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துவக்கியுள்ளது படக்குழு. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது.

Joe movie pair Rioraj and Malavika teamsup again

சின்ன படங்கள் நல்லா இருந்தாலும் ட்ரெண்டாவதில்லை..; ‘மெட்ராஸ்காரன்’ விழாவில் சாம் CS பேச்சு

சின்ன படங்கள் நல்லா இருந்தாலும் ட்ரெண்டாவதில்லை..; ‘மெட்ராஸ்காரன்’ விழாவில் சாம் CS பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சின்ன படங்கள் நல்லா இருந்தாலும் ட்ரெண்டாவதில்லை..; ‘மெட்ராஸ்காரன்’ விழாவில் சாம் CS பேச்சு

*SR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்”  படத்தின் டீசர் வெளியீட்டு விழா*

நடிகர்கள் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில்,  இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கும் புதுமையான திரில்லர் டிராமா “மெட்ராஸ்காரன்”  திரைப்பட டீசர் வெளியீட்டு விழா  !!

SR PRODUCTIONS சார்பில் B.ஜெகதீஸ்  தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர்  வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”.

விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

தயாரிப்பாளர் B.ஜெகதீஸ்  பேசியதாவது…

நம் மெட்ராஸின் அடையாளம் எல்லா ஊர்க்காரரும் இங்கு இருப்போம், எல்லா ஊர்க்காரரும் வேலை பார்ப்போம், அதே போல் இந்த மெட்ராஸ்காரனில் எல்லாமே இருக்கிறது. எந்த ஒரு தயாரிப்பாளரும் முழு கதை கேட்டுத் தான் ஒகே செய்வார்கள், ஆனால் நான் பாதி கதை கேட்ட போதே, படத்தை ஆரம்பிக்க சொல்லிவிட்டேன். இயக்குநர் மீது இருந்த நம்பிக்கை தான் காரணம். படம் பார்த்து விட்டேன் திருப்தியாக இருக்கிறது.

ஷேன் அவ்வளவு அர்ப்பணிப்பாக உழைத்துள்ளார். ஷேன் நிகாம் படப்பிடிப்பிற்கு எப்போதும் சீக்கிரம் வந்து விடுவார், இப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார், அவருக்குத் தமிழில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. கலை பிரதர் மிக உரிமையாகப் பழகுவார். மெட்ராஸ் அன்பு பாத்திரத்திற்குப் பிறகு, இந்தப்படத்தில்  துரை சிங்கமாகக் கலக்குவார். 

நிஹாரிகா மிக அழகாக, அற்புதமாக நடித்துள்ளார். நான் தயாரிப்பாளராக இருக்க ஐஸ்வர்யாவும் ஒரு காரணம், அவர் கதாபாத்திரம் நன்றாக வந்துள்ளது. சாம் சிஎஸ் ஒரு மியூசிக் டாக்டர், படத்தை எப்படி கொடுத்தாலும் சரியாக்கி விடுவார். கேமராமேனும் நானும் எப்போதும் சாப்பாடு பற்றித் தான் பேசுவோம் அவ்வளவு நெருக்கம். எடிட்டர் சின்னப் பையன் தான் ஆனால் கலக்கிவிட்டார். படம் மிக அருமையாக வந்துள்ளது. படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி.

இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது…

என் புரோடியூசர் முதலாளி ஜெகதீஸ், இந்தப்படம் ஆரம்பமாக, காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தா  இருவருக்கும் நன்றி. என் மீது நம்பிக்கை வைத்து கதையை முழுதாகக் கூட  கேட்காமல்  தயாரித்தார். இந்தப்படம் பற்றி அனைவரும் சொல்லிவிட்டனர்.  படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும் நன்றி.

நடிகர் ஷேன் நிகம் பேசியதாவது…

அன்புள்ள மனிதர்களுக்கு வணக்கம், என்ன சொல்வதென்றே தெரியவில்லை, மனது நிறைவாக இருக்கிறது. வாலி ப்ரோ, ஜெகதீஸ் ப்ரோ இருவருக்கும் நன்றி. என் மீதே, எனக்கே சந்தேகம் இருந்தபோது, வாலியும், ஜெகதீஸும் என் மீது நம்பிக்கை வைத்து, இப்படத்தை உருவாக்கியுள்ளனர்.

என் பட டீசரை வெளியிட்ட  நடிகர் எஸ் டி ஆருக்கு நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத்  தாருங்கள் நன்றி.

நடிகை நிஹாரிகா பேசியதாவது…

எனக்கு ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி. டீசர் அனைவருக்கும் பிடித்திருக்கும் என நம்புகிறேன். மிக நல்ல திறமையாளர்கள் ஒன்றாக இணைந்து, ஒரு நல்ல படைப்பைத் தந்துள்ளனர், ஷேன் உடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை தந்த  வாலிக்கு, என் நன்றிகள்.

நடிகர் கலையரசன் பேசியதாவது…

மெட்ராஸ்காரன், என் ஊர் மெட்ராஸ்.. ஆனால் இந்தப்படத்தில் புதுக்கோட்டை ஆளாக நடித்துள்ளேன்.  ஷேன் நிகாம் மிக அருமையான நடிகன், அவருடன் நடித்தது மிக மகிழ்ச்சி. வாலி அவர் முன்பு செய்த படத்தின் டீசர் காட்டினார், மேக்கிங் பிடித்திருந்தது, படத்தின் கதையும் பிடித்தது, உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். படம் அருமையாக வந்துள்ளது.

சின்னப்படம் பெரிய படம் என்பதெல்லாம் முக்கியமில்லை, நல்ல படத்தில் இருக்கிறோம் என்பது தான் முக்கியம். இப்படத்தின் தயாரிப்பாளர் ஜெகதீஸ் மிக ஆதரவாக இருந்தார். கதையை நம்பி நல்ல படத்தை எடுத்துள்ளார். எல்லோருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் சாம் சி எஸ் பேசியதாவது…

பணம் கொடுத்துப் பார்க்கும் ஆடியன்ஸுக்கு தரமான படைப்பைத் தர வேண்டும். நல்ல கதை வைத்து படம் செய்யும் இயக்குநருக்குக் கதை எழுதும்போது,  இந்த மாதிரி நடிகர்கள் தான் நினைவுக்கு வருவார்கள், பெரிய ஹீரோ படம் என்றால் அவருக்கு எனக் கதை மாற்றி, சீன் மாற்றி, இறுதியாக நினைத்தது வராது. இந்த மாதிரி சின்ன படத்தில் அது நிகழாது. பெரிய ஹீரோ படம் நல்லாயில்லை என்றாலும், அது வைரலாகிறது. ஆனால்

சின்ன படத்திற்கு நல்லா இருந்தாலும் அது நிகழ்வதில்லை, ரசிகர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஷேன் உடன் மலையாளத்தில் வேலை பார்த்தாலும், தமிழில் வேலை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக  இருந்தது. ஒரு படம் நன்றாக எடுக்கும் போது,  எல்லோருடைய பங்களிப்பும் மிக நன்றாக வந்து விடும். இப்படம் மிகத் தரமான படைப்பாக வந்துள்ளது. படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். இளன் பாடல் மிக நன்றாக எழுதியுள்ளார். கல்யாணம் பற்றி மிக அருமையான பாடலாக வந்துள்ளது. இப்படத்தில் வேலை பார்த்தது மிக மகிழ்ச்சி, வாலி உடன் பணியாற்றியது மகிழ்ச்சி  நன்றி.

இயக்குநர் இளன் பேசியதாவது…

இந்தப்படத்தில் பணியாற்றிய அனைவரும் என் ஃப்ரண்ட்ஸ். இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். ஒரு பாடல் எழுதியுள்ளேன் உங்கள் ஆதரவைத் தாருங்கள்,  இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் பாண்டியன் பேசியதாவது…

மெட்ராஸ்காரன் படத்தில் நான் ஒரு அப்பா கேரக்டர் செய்துள்ளேன். இயக்குநர் தான் என் ஃபெர்பார்மன்ஸ் பற்றிச் சொல்ல வேண்டும். என் மகன்  இளன் இப்படத்தில் பாடல் எழுதியிருப்பது இப்போது தான் தெரியும். பாடல் அருமையாக உள்ளது. பாடல் தனியே, இசை தனியே, எனக் கேட்க இனிமையாக உள்ளது.  படக்குழுவினருக்கு என் வாழ்த்துக்கள்.

நடிகை ஐஸ்வர்யா தத்தா பேசியதாவது…

தமிழ் சினிமாவில் இது எனக்கு 11 வது வருடம், பல தடைகளைத் தாண்டி எனக்கு இந்தப்படம் கிடைத்துள்ளது. பல படங்கள் நடித்துள்ளேன் ஆனால் சில படங்கள் வெளியாகவே இல்லை. வாலி மோகன் தாஸ் ஒரு முறை என்னிடம் கதை சொன்னார் , மிக அருமையாக இருந்தது, அந்தப்படம் 5 நாளில் நின்று விட்டது. மிக அருமையான படம், தயாரிப்பாளர் ஜெகதீஸ் என்னோட ஃபிரண்ட், ஃபெண்டாஸ்டிக் ஹியூமன் பீயிங், அவரிடம் எல்லாமும் சொல்வேன், வாலி பற்றிச் சொன்னேன்.

அப்படித்தான் இந்தப்படம் ஆரம்பித்தது. எனக்கும் இந்த வாய்ப்பு கிடைத்தது. பிடிச்ச டைரக்டர், பிடிச்ச புரோடியூசர். ஒரு நல்ல படம். தமிழில் இந்தப்படம் மூலம் நான் மீண்டும் வருவேன். இந்தப்படம் கண்டிப்பாக அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகர் சரண் பேசியதாவது…

இந்தப்படத்தின் ஒருங்கிணைப்பாகவும் நடிகராகவும் பணியாற்றியிருக்கிறேன். இப்படத்தில் எல்லோருமே மிக அருமையாக நடித்துள்ளார்கள். நான் வாலி ப்ரோ, இருவரும் ரங்கோலி படம் முடித்த பிறகு, நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், அவருக்குக் கல்யாணம் நடந்தது. அப்போது தான் இந்தக்கதையை எழுதினார்.

அப்போது இரண்டாவது பாகத்தை எப்படி முடிப்பது என விவாதித்துக் கொண்டிருந்தோம்,  ஆனால் தயாரிப்பாளர் இரண்டாம் பாகம் கேட்காமலே படத்தைத் தயாரிக்க ஒத்துக்கொண்டு செக் கொடுத்துவிட்டார். ஷேன் நிகம் ரங்கோலி படம் பார்த்து விட்டு இந்தப்படத்தை ஒத்துக்கொண்டார். இந்தப்படத்திற்காக அவர் கொடுத்த உழைப்பு பிரமிப்பானது. கலை பிரதர் பல வருடம் பழகியவர் போலவே, அன்பைப் பொழிவார்.

ஐஸ்வர்யா இந்தப்படம் ஆரம்பிக்க ஒரு காரணமாக இருந்தார். நிஹாரிகா அருமையாக நடித்துள்ளார். சாம் சிஎஸ் அவர் கையில் இந்தப்படத்தின் மூச்சு உள்ளது. படம் மிக அருமையாக வந்துள்ளது,  அனைவருக்கும் நன்றி.

மலையாளத்தில் புகழ்பெற்ற கும்பளங்கி நைட்ஸ், ஆர் டி எக்ஸ், இஷ்க் படப்புகழ் நடிகர் ஷேன் நிகம், இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.  இவருக்கு ஜோடியாக தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரும் நட்சத்திரக்குடும்பமான சிரஞ்சீவி குடும்பத்திலிருந்து முன்னணி நடிகை நிஹாரிகா நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் கலையரசன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இணைந்து நடித்துள்ளனர்.

‘ரங்கோலி’ படம் மூலம், பள்ளிச் சிறுவர்களின் வாழ்வியலை வண்ணங்களாகத் தீட்டிய, இயக்குநர் வாலி மோகன் தாஸ், இப்படத்தில் ஒரு சிறு சம்பவம் பெரும் பிரச்சனையாக, இருவர் வாழ்க்கையைப் புரட்டி எடுப்பதை, பரபரப்பான திரைப்படமாக உருவாக்கியுள்ளார்.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார்.

பெரும் பொருட்செலவில்,  உயர்தர தொழில் நுட்ப கலைஞர்களுடன் தரமானதொரு படைப்பாக SR PRODUCTIONS சார்பில் B. ஜெகதீஸ் இப்படத்தைத் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பைச் சென்னை, மதுரை, கொச்சி ஆகிய இடங்களில் ஒரே கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இறுதிக்கட்ட பணிகள் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் திரையரங்கு வெளியீடு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

Music composer Sam compares small and Big movies

——

More Articles
Follows