சினிமா பி.ஆர்.ஓ. சங்கத் தேர்தலில் தலைவரானார் விஜயமுரளி

PRO Vijaya Muralee selected as President in PRO Union electionசினிமா துறைக்கும், பத்திரிகையாளர்களுக்கும் பாலமாக இருந்து செயல்படுபவர்கள் பி.ஆர்.ஓ.க்கள்.

தமிழில் இவர்களை மக்கள் தொடர்பாளர்கள் என்போம்.

இவர்களது சங்கத் தேர்தல் இரண்டு வருடத்திற்கு ஒரு முறை நடக்கும்

இந்நிலையில் தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் சங்கத்தின் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் செயலாளராக போட்டியின்றி பெருதுளசி பழனிவேல் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தலைவர் பதவிக்கு தற்போது தலைவராக இருக்கும் டைமண்ட் பாபுவும், பொருளாளராக இருக்கும் விஜய முரளியும் போட்டியிட்டனர்.

இதில் விஜய முரளிக்கு விட்டுக்கொடுத்து டைமண்ட் பாபு வாபஸ் பெற்றார். அதனை தொடர்ந்து விஜய முரளி ஒருமனதாக தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

மேலும், தேர்தலில் வெற்றி பெற்றவர்களின் விவரங்கள்:

துணை தலைவர்: இராமானுஜம் மற்றும் கோவிந்தராஜ்

இணை செயலாளர் : குமரேசன் மற்றும் ஆனந்த்

பொருளாளர்: யுவராஜ்

செயற்குழு உறுப்பினர்களாக வி. பி. மணி, கிளாமர் சத்யா, மதுரை செல்வம், நிகில்முருகன், சரவணன், சாவித்திரி, ஆறுமுகம், சங்கர், செல்வகுமார் ஆகியோர் வெற்றி பெற்றனர்.
யூனியன் தேர்தலை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். கிரிதரன் நடத்தி கொடுத்தார்.

வெற்றிப் பெற்ற அனைவருக்கும் பிலிமி ஸ்ட்ரீட் சார்பாக வாழ்த்துக்கள்.

PRO Vijaya Muralee selected as President in PRO Union election

Overall Rating : Not available

Latest Post