VIOLENCE LIKES ME… பன்ச் டயலாக்கில் யஷ்… மிரட்டும் ‘KGF 2’ டிரைலர்

VIOLENCE LIKES ME… பன்ச் டயலாக்கில் யஷ்… மிரட்டும் ‘KGF 2’ டிரைலர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prashanth Neelகடந்த 2018ல் சூப்பர் ஹிட்டான படம் கே.ஜி.எஃப்.

பிரசாந்த் நீல் இயக்கிய இந்த படத்தில் யஷ் நடித்திருந்தார்.

தற்போது இதே கூட்டணியில் இப்படத்தின் இரண்டாம் பாகம் பிரம்மாண்டமாக தயாராகி உள்ளது.

இதில் ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், ரவீனா டாண்டன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
கொடூரமான வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்துள்ளார்.

இந்நிலையில் இன்று பெரும் எதிர்பார்ப்புக்கு இடையில் இப்பட டிரைலர் வெளியாகியுள்ளது. மிரட்டலாக இந்த டிரைலரை உருவாக்கியுள்ளனர்.

பெங்களுரில் இப்பட டிரைலரை கன்னட நடிகர் சிவராஜ்குமார் வெளியிட்டார்.

இப்பட முதல்பாகத்தில் வில்லன் கருடன் இறந்ததும், அந்த இடத்திற்கு யஷ் செல்வது க்ளைமாக்ஸ் முடிந்தது.

தற்போது கருடன் இறந்த பிறகு என்ன நடக்கிறது என்பதை நடிகர் பிரகாஷ்ராஜ் சொல்வது போல டிரைலர் தொடங்குகிறது,

கேஜிஎப்பை கைப்பற்ற அரசு ஒரு பக்கம், சஞ்சய் தத் ஒரு பக்கம் என யஷ் உடன் மோதுவதாக காட்சிகள் நகர்கிறது.

இதில்…. ‘இரத்தத்தில் எழுதுன கதை இது… மையல தொடர முடியாது’, ‘கத்தி வீசி இரத்தம் வழிய யுத்தம் செய்வது நாசம் ஆக்குறதுக்கு இல்ல உருவாக்குறதுக்கு’ … I don’t like violence I avoid it.. But Violence likes me.. I Cant avoid it… போன்ற வசனங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இன்று பிப்ரவரி 27 மாலை 6.45 மணிக்கு வெளியான கேஜிஎஃப் 2 டிரைலர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டு அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

Prashanth Neel Yash combo KGF Chapter 2 Trailer goes viral

ரஜினி-விஜய்க்கு மட்டும்தான் எதிர்ப்பா.? அடங்கவே மாட்டாரா தனுஷ்.?

ரஜினி-விஜய்க்கு மட்டும்தான் எதிர்ப்பா.? அடங்கவே மாட்டாரா தனுஷ்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ் சினிமாக்களிலும் அதன் போஸ்டர்களிலும் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம் பெற்றால் சமூக ஆர்வலர்கள் தங்கள் கண்டனங்களை பதிவிடுவார்கள்.

ரஜினியின் படங்களுக்கு அதிகளவில் எதிர்ப்புகள் கிளம்பின.

எனவே ரஜினியும் புகை பிடிக்கும் காட்சிகளை தவிர்த்தார். மேலும் தன் தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிகரெட்டை தவிர்த்துவிட்டார்.

விஜய்யின் சர்கார் பட போஸ்டர்களில் சிகரெட் பிடிக்கும் காட்சி டிசைனாக வைக்கப்பட்ட போது எதிர்ப்பு உருவானது.

இந்த நிலையில் தனுஷின் பட போஸ்டர்களில் தொடர்ந்து சிகரெட் பிடிக்கும் டிசைன்கள் இடம் பெற்று வருகிறது.

தனுஷ் நடிப்பில் வெளியான “மரியான், வேலையில்லா பட்டதாரி, மாரி” ஆகிய பட போஸ்டர்களில் சிகரெட் பிடிக்கும் டிசைன்கள் இருந்தன.

தற்போது செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘நானே வருவேன்” பட போஸ்டரிலும் இந்த சிகரெட் இடம் பெற்றுள்ளது.

ரஜினி விஜய்யை மட்டும்தான் கண்டிப்பார்களா..? தனுஷை கண்டுக்க மாட்டார்களா..?

Dhanush in Naane Varuven new poster creates controversy

தலை வணங்குகிறேன் மகாராஜா-மௌலி.; RRR படத்திற்கு ஷங்கர் பாராட்டு

தலை வணங்குகிறேன் மகாராஜா-மௌலி.; RRR படத்திற்கு ஷங்கர் பாராட்டு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட படங்களின் இயக்குனர் என்றால் அது டைரக்டர் ஷங்கர்தான்.

ஜென்டில்மேன் படம் தொடங்கி காதலன், இந்தியன், அந்நியன், முதல்வன், சிவாஜி என பல பிரம்மாண்ட படங்களை இயக்கினார்.

இதன்பின்னர் எந்திரன் படத்தை இயக்கி இந்தியாவையும் 2.0 படத்தை இயக்கி உலக சினிமா பிரபலங்களையும் திரும்பி பார்க்க வைத்தார்.

ஆனால் இவரையே மிஞ்சும் அளவுக்கு இயக்குனர் ராஜமௌலியின் படங்கள் உருவாகி வருகிறது.

பாகுபலி, பாகுபலி 2 படங்களை தொடர்ந்து ராஜமௌலி படங்களுக்கு உலகளவில் எதிர்பார்ப்பு கிடைத்துள்ளது.

நேற்று வெளியான ஆர்ஆர்ஆர் படமும் பிரம்மாண்டத்தின் உச்சமாக கருதப்படுகிறது.

இந்த நிலையில் RRR படத்தைப் பார்த்த ஷங்கர் இயக்குனர் ராஜமவுலியை ‘மகாராஜா’மவுலி எனப் பாராட்டியுள்ளார்.

‛‛பரவசப்படுத்துகிற வலுவான படம். காலம் முழுவதும் இதன் கர்ஜனை எதிரொலிக்கும்.

ஈடு இணையற்ற அனுபவத்தைத் தந்த குழுவினருக்கும் நன்றி. திரையில் ராம் சரணின் பொங்கி எழும் நடிப்பு, உங்கள் இதயத்தைக் கவர்ந்து தாக்குதல் நடத்தும் பீம் ஆக என்டிஆர். உங்கள் கற்பனை தோல்வியடையாமல் இருக்கும், தலை வணங்குகிறேன் மகாராஜா மவுலி” எனப் பெரிதும் பாராட்டியுள்ளார்.

ராம் சரண் நடிக்கும் அடுத்த படத்தை ஷங்கர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Director Shankar praises Rajamouli’s RRR movie

‘ரன் 2’ ஓட்டத்தை தொடங்கும் லிங்குசாமி.; ஹீரோ-ஹீரோயின் யார்?

‘ரன் 2’ ஓட்டத்தை தொடங்கும் லிங்குசாமி.; ஹீரோ-ஹீரோயின் யார்?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஆனந்தம்’ என்ற அழகான தமிழ் படத்தை இயக்கி அனைத்து குடும்பங்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லிங்குசாமி.

இதனையடுத்து ‘ரன்’, ‘சண்டக்கோழி’ ஆகிய படங்களை இயக்கி தமிழில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

‘அஞ்சான்’, ‘சண்டக்கோழி 2’ உள்ளிட்ட படங்கள் இவரது இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியானது.

அண்மைக்காலமாக இவர் இயக்கிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் என்ற படத்தை தெலுங்கில இயக்கி வருகிறார் லிங்குசாமி.

இந்த படம் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் தற்போது லிங்குசாமியின் சகோதரரும் திருப்பதி பிக்சர்ஸ் உரிமையாளருமான சுபாஷ் சந்திரபோஸ் ‘ரன் பார்ட்- 2’ விரைவில் என பதிவிட்டுள்ளார்.

எனவே ‘தி வாரியர்’ படத்தை முடித்துவிட்டு ரன் பட இரண்டாம் பாகம் உருவாகும் என எதிர்பார்க்கலாம்.

2002ல் வெளியானது ‘ரன்’ திரைப்படம். லிங்குசாமி இயக்கிய இந்த படத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின், விவேக், ரகுவரன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வித்யாசாகர் இசையமைத்திருந்தார். பாடல்கள் செம ஹிட்டானது.

விவேக்கின் காமெடி இந்த படத்தில் பெரியளவில் பேசப்பட்டது. ஆனால் தற்போது நடிகர் விவேக், ரகுவரன் ஆகியோர் உயிருடன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sequel to R Madhavan and Meera Jasmine-starrer Run ?

பான் இந்தியா படமாக மாறியது.; இப்பதான் ‘பீஸ்ட்’ டீமுக்கு தமிழ் நினைப்பு வந்துச்சா..?

பான் இந்தியா படமாக மாறியது.; இப்பதான் ‘பீஸ்ட்’ டீமுக்கு தமிழ் நினைப்பு வந்துச்சா..?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டே, ஷான் டாம் சாக்கோ, யோகிபாபு, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்துள்ளார்.

இப்பட முதல் சிங்கிளாக அரபிக் குத்து பாடல் வெளியாகி பட்டைய கிளப்பி வருகிறது.

இந்த குத்துப்பாடலை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியுள்ளார்.

இரண்டாம் சிங்க்கிளாக ஜாலியோ ஜிம்கானா பாடல் வெளியானது. நடிகர் விஜய் இந்த பாடலை பாடியிருந்தார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம் ஏப்ரல் மாதம் 13-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

விரைவில் பீஸ்ட் பட ட்ரைலர் வெளியாகவுள்ள நிலையில் சென்சாரில் யூ/ஏ சான்றிதழ் பெற்றுள்ளது.

இந்த நிலையில் பான் இந்திய படமாக பீஸ்ட் வெளியாவது உறுதியாகியுள்ளது.

இதனையடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் இந்த படம் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இதுநாள் வரை BEAST பட போஸ்டர்கள் ஆங்கில மொழியிலே வெளியானது. நாம் கூட ஒருமுறை தமிழில் தலைப்பு வெளியாகாதா? என கேட்டு இருந்தோம்.

இந்த நிலையில் இன்று தான் முதன்முறையாக மார்ச் 26ல் பீஸ்ட் என தமிழ் போஸ்டரை வெளியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தளபதி மற்றும் படக்குழுவினருக்கு இப்போதுதான் தமிழ் நினைவு வந்துச்சோ என்னவோ.?

தமிழ் வாழ்க…

Beast movie team released brand new tamil poster

ரகசிய நிச்சயதார்த்தம் செய்த காதல் ஜோடி ஆதி – நிக்கி கல்ராணி

ரகசிய நிச்சயதார்த்தம் செய்த காதல் ஜோடி ஆதி – நிக்கி கல்ராணி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகர் ஆதி.

இதனைத் தொடர்ந்து ஈரம், அய்யனார், ஆடு புலி, அரவாண், மரகத நாணயம், கோச்சடையான், யூ டர்ன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில அண்மையில் ‘க்ளாப்’ படம் ஓடிடி தளத்தில் வெளியானது

தமிழில் டார்லிங் படத்தின் மூலம் அறிமுகமானார் நிக்கி கல்ராணி.

இதன் பின்னர் யாகாவராயினும் நாகாக்க, கோ 2, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், கடவுள் இருக்கான் குமாரு, ஹரஹர மகாதேவகி, கலகலப்பு 2, பக்க, தேவ், கீ, ராஜவம்சம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நிக்கி.

நிக்கி கல்ராணியுடம் ஆதியும் யாகாவராயினும் நாகாக்க மற்றும் மரகத நாணயம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் இணைந்து நடித்தனர்.

அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கம் பின்னர் காதலாக மாறியதாம்.

கடந்த 2020ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆதியின் அப்பா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நிக்கி கலந்துக் கொண்ட போதே இருவரும் காதலில் இருப்பதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில் நண்பர்கள் என தெலுங்கு சினிமா பிரபலங்கள் சிலர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.

Actor Aadhi Pinishetty engaged to Actress Nikki Galrani

More Articles
Follows