தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ANDHAGAN வயநாடு நிவாரணம்.. ஹெல்மெட் ஃபைன்.. விஜய் அரசியல்.; பிரசாந்த் ரியாக்ஷன்
நடிகர் பிரசாந்த் & நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்துள்ள ‘அந்தகன்’ படம் வருகிற ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகிறது.
இதுகுறித்து திருச்சியில் பிரசாந்த் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசும் போது:-
நானும் (பிரசாந்த்) நடிகை பிரியா ஆனந்த் ஜோடியாக நடித்த அந்தகன் படத்தில் நான் கண் தெரியாதவனாக நடித்துள்ளேன்.
இது சவால் நிறைந்த கேரக்டர் என்று என்பதை இந்தப் படத்தில் நடிக்கும் போது தெரிந்து கொண்டேன்.
சிறந்த கதை மற்றும் திரைக்கதை உள்ள படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு இந்தப் படத்தில் காதல்,சண்டை திரில்லர்,பாடல் என அனைத்தும் உள்ளது.
இந்தப் படத்தில் சிம்ரன் ஊர்வசி, கார்த்திக், வனிதா, மோகன் வைத்தியா ஆகியோர் நடிப்பு உங்களை பெரிதும் கவரும்.படம் வெளியாவதற்கு முன்பு திருட்டுத்தனமாக படத்தை இணைய தளத்தில் வெளியிடுவதால் சினிமா தொழில் நசிந்து போய்விடும். சினிமாவைப் பார்த்து ரசிகர்கள் ரீல்ஸ் வெளியிடுவது ஆபத்தானது.
நடிகர்கள் அரசியலுக்கு வருவது அவர்கள் விருப்பம் மக்களுக்கு நல்லது செய்பவர்களை நான் ஆதரிப்பேன்.
தமிழகம் முழுவதும் அந்தகன் பட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகிறேன் ” என்றார்..
அதன் பின்னர்…
நடிகர் பிரசாந்த் மற்றும் நடிகைகள் சிம்ரன், பிரியா ஆனந்த் உள்ளிட்ட படக் குழுவினர் கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய நடிகர் பிரசாந்த்……
அந்தகன் திரைப்படம் பார்வையற்ற பியானோ கலைஞர் பற்றிய இசை சார்ந்த படம் என்றும் அதேசமயம் மர்மம் நிறைந்த சுவாரஸ்ய அம்சங்கள் பொருந்திய படம் என்றும் கூறினார்.
விநியோகஸ்தர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில் வரும் ஆகஸ்ட் 9ஆம் தேதி படம் வெளியாக உள்ளது.
இந்த திரைப்படம் remake படம் இல்லை remade படம் 100 % தமிழ் படம் பார்க்கும் அனுபவத்தை கொடுக்கும்.
தற்போது அந்தகன் திரைப்படம் 400 திரையரங்குகள் வரை வெளியாக உள்ளது.
திரையரங்குகளில் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார்.
ஹெல்மெட் அணியாததால் அபராதம் விதிக்கப்பட்டது
குறித்த கேள்விக்கு….
கடந்த ஓராண்டு காலமாக ஹெல்மெட் அணிவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகிறேன்.
தனக்கு அபராதம் விதிக்கப்பட்டதன் மூலம் ஹெல்மெட் அணிவது குறித்த முக்கியத்துவம் தற்போது வைரலாகி வருகிறது.
கேரளா – வயநாட்டில் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்ய அனைவரும் முன்வர வேண்டும் என வேண்டி விரும்பி கேட்டுகொள்கிறேன்” என தெரிவித்தார்.
Prashanth and Andhagan team is busy with promotion