ரஜினிகாந்தை அடுத்து டிஸ்கவரி சேனலில் நடிகர் பிரகாஷ் ராஜ்

ரஜினிகாந்தை அடுத்து டிஸ்கவரி சேனலில் நடிகர் பிரகாஷ் ராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Prakash Raj lends voice for television documentary Wild Karnataka சில மாதங்களுக்கு முன் டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிப்பரப்பான இன் டு த வைல்ட் நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.

தற்போது அதே டிவி நடத்தும் மற்றொரு நிகழ்ச்சியில் ஒரு வர்ணனையாளராக பங்கேற்றுள்ளார் நடிகர் பிரகாஷ்ராஜ்.

டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் வைல்ட் கர்நாடகா எனும் நிகழ்ச்சிக்கு வாய்ஸ் கொடுக்கவிருக்கிறாராம்.

இது குறித்து அவர் கூறியதாவது.. “ஓர் அர்த்தமுள்ள பயணம். இயற்கையின் குரலாக மாறப்போகிறேன். இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு மிகுவும் சிரமப்பட்டு உருவாக்கப்பட்ட இந்திய வன வாழ்க்கையின் ஆவணப்படம். தமிழ் & தெலுங்கில் தொகுத்து வழங்கியதை பெருமையாக உணர்கிறேன்”

இவ்வாறு பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

Prakash Raj lends voice for television documentary Wild Karnataka

பள்ளிகள் திறப்பது எப்போது..?: காலை & மாலை எந்தெந்த வகுப்புகள்.? விரிவான தகவல்..

பள்ளிகள் திறப்பது எப்போது..?: காலை & மாலை எந்தெந்த வகுப்புகள்.? விரிவான தகவல்..

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Tamilnadu Schools re open date and details here இந்த வருடம் கோடை விடுமுறை என்பதை விட கொரோனா விடுமுறை என்றே சொல்லலாம்.

கொரோனா பொது முடக்கத்தால் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ஜூன் 15ஆம் தேதி தொடங்குகிறது.

இதன் முடிவுகள் ஜூலை மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது.

அதுபோல் ஏற்கெனவே நடத்தி முடிக்கப்பட்ட 11, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.

நாளை முதல் 11, 12 ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கவுள்ளது.

இதற்காக திருத்தும் மையங்கள் 203 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன.

சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் மற்ற மாவட்டங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ளது.

மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காக மையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் பள்ளிகள் திறப்பது எப்போது குறித்து தகவல்கள் தெரிய வந்துள்ளது.

ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை வகுப்புகள் துவங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

அதாவது 6 முதல் 8ம் வகுப்பு வரை காலையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடக்கும் என கூறப்படுகிறது.

மேலும் 1 முதல் 5ம் வகுப்பு வரை செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என தெரிய வந்துள்ளது.

Tamilnadu Schools re open date and details here

கொரோனா பொது முடக்கம் படு தோல்வி.; மோடியை சாடும் ராகுல் காந்தி

கொரோனா பொது முடக்கம் படு தோல்வி.; மோடியை சாடும் ராகுல் காந்தி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

India facing Corona lock down failure Rahul Gandhi slams Modiகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் கடந்த 2 மாதங்களாக பொது முடக்கம் அமலில் உள்ளது.

இதனால் மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து வீட்டிலேயே முடங்கியுள்ளனர். வருமானம் இன்றி பலர் தவித்து வருகின்றனர்.

மக்கள் வீட்டிலேயே முடங்கிகிடந்தாலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா நடவடிக்கைகள் குறித்து காணொலி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்தார் ராகுல்காந்தி.

அவர் பேசும்போது.. இந்தியாவில் ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக தெரிவித்தார். மேலும் அதிவேகமாக கொரோனா உயரும் நாடாக இந்தியா உள்ளது. நாம் இப்போதுதான் ஊரடங்கை நீக்குகிறோம்.

ஊரடங்கின் நோக்கமும், தேவையும் படு தோல்வியடைந்துள்ளது. அதன் விளைவை நம் இந்தியா சந்தித்து வருகிறது” என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

India facing Corona lock down failure Rahul Gandhi slams Modi

நமக்கெதுக்கு கொரோனா ஊரடங்கு.. தேவையே இல்ல – மன்சூரலிகான்

நமக்கெதுக்கு கொரோனா ஊரடங்கு.. தேவையே இல்ல – மன்சூரலிகான்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

We dont want Corona lock down says Mansoor Ali khanகொரோனா வைரஸ் குணப்படுத்தக் கூடிய ஒன்று தான். அதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரத்தை அழித்தது தேவையில்லாது, என்று நடிகரும் தயாரிப்பாளருமான மன்சூரலிகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மன்சூரலிகான் விடுத்துள்ள அறிக்கையில், “தட்டம்மை, தடுப்பம்மை போன்றவற்றை குழந்தை பருவத்திலேயே
எதிர்கொண்டு நம் உடல் வலிமை பெற்று இருக்கிறது.

மேலும், நமது உணவு பழக்கங்களால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி என்பது இயற்கையிலேயே அதிகமாக உள்ளது.

கொரோனாவை பார்த்து நாம் பயப்படவேண்டிய அவசியம் இல்லை. ஏன், தமிழகத்தில் கொரோனா ஒன்றுமே இல்லை, என்பது தான் என் கணிப்பு.

நம் மூதாதையரின் வைத்தியமே கொரோனாவை 100 சதவீதம் குணப்படுத்திவிடும். சளி, இருமல் போன்றவைகள் வந்தால், சுக்கு, மிளகு, இஞ்சி போன்றவற்றை கொதிக்க வைத்து குடித்தால், இரண்டு நாட்களிலேயே சலி
காணாமல் போய்விடுகிறது.

மேலும், தூதுவலை உள்ளிட்ட ஏகப்பட்ட இயற்கை மருத்துவம் நம் கையில் இருக்கிறது. இப்படி சளி மற்றும் காய்ச்சலை வைத்து வரும் கொரோனாவையும், நம் உணவு பழக்கம் மூலம் நாம் எளிதாக எதிர்கொள்ள
முடியும்.

ஆனால், நம் நாட்டு அரசு, மேலை நாட்டினரை பார்த்து பயந்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. ஊரடங்கே இங்கே போட்டிருக்க கூடாது என்பது தான் என் கருத்து.

இதனால், ஏழை எளியவர்களின் வாழ்வாதாரமும், வாழ்வும் கேள்விக் குறியாகியிருப்பதோடு, நாடே மிகப்பெரிய பொருளாதார சிக்கலில் இருக்கிறது.

சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருக்கும் அரசு 20 நபர்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும், என்று கட்டுப்பாடு விதித்திருக்கிறது.

அப்படியானால் மற்றவர்கள் என்ன செய்வார்கள். எனவே, இது குறித்து மூத்த கலைஞர்கள் ஒன்றிணைந்து பேசி நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

திரைத்துறை மட்டும் இன்றி மேலும் பல துறைகள் மீண்டும் பழையபடி செயல்பட உத்தரவு விட வேண்டும், என்று மத்திய மற்றும் மாநில அரசுகளை தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள் மற்றும் கோவில்களையும் திறக்க வேண்டும், என்றும் கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

We dont want Corona lock down says Mansoor Ali khan

‘கே.ஜி.எப் 2’ சண்டைக் காட்சிகளுக்காக காத்திருக்கும் படக்குழு

‘கே.ஜி.எப் 2’ சண்டைக் காட்சிகளுக்காக காத்திருக்கும் படக்குழு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

KGF 2கடந்த 2018ல் எத்தனையோ படங்கள் ரிலீஸ் ஆனாலும் தமிழக ரசிகர்களின் கவனம் பெற்ற கன்னட படம் ‘கே.ஜி.எப்’ .

பிரஷாந்த் நீல் என்பவர் இயக்க கன்னட நடிகர் யஷ் நாயகனாக நடித்திருந்தார்.

இப்படத்தை தமிழில் நடிகர் விஷால் வெளியிட்டார்.

பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் இந்தியா முழுவதும் அனைவரின் கவனத்தையும் பெற்றது.

தற்போது இதன் 2ஆம் பாகம் தயாரிப்பில் உள்ளது.

இதில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ரவீனா டண்டன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

விரைவில் சூட்டிங் தொடங்கப்பட உள்ளதால் இரண்டு சண்டை காட்சிகளை படமாக்கவிருக்கிறார்ளாம்.

அதில் நடிகர் சஞ்சய் தத் காட்சியிம் இடம்பெறவுள்ளது.

வருகிற அக்டோபர் 23-ம் தேதி படத்தை வெளியிட படக்குழு தீவிர முயற்சியில் உள்ளது.

‘ஐய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் இணையும் சசிகுமார் ஆர்யா

‘ஐய்யப்பனும் கோஷியும்’ ரீமேக்கில் இணையும் சசிகுமார் ஆர்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arya sasi kumarமலையாளத்தில் சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் ‘அய்யப்பனும் கோஷியும்’.

இதில் பிருத்விராஜ், பிஜுமேனன் ஆகிய இருவரும் நாயகர்களாக நடித்திருந்தனர்.

இப்படத்தை தமிழில் தயாரிக்கும் உரிமையை 5 ஸ்டார் கதிரேசன் வாங்கியிருந்தார் என்பதை நாம் பார்த்தோம்.

இப்படத்தில் நடிக்க பல முன்னணி நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம்.

இந்த பிருத்விராஜ் வேடத்தில் ஆர்யாவும், பிஜூமேனன் வேடத்தில் சசிகுமாரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்படுகிறது.

More Articles
Follows