சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

சன்னி லியோன் & வேதிகாவுடன் ‘பேட்ட ராப்’ ஆட்டம் போடும் பிரபுதேவா

*மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட பிரபுதேவாவின் ‘பேட்ட ராப்’ பட டீசர்!*

நடன இயக்குநரும், முன்னணி நட்சத்திர நடிகருமான பிரபுதேவா கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை ‘ விஜய் சேதுபதி சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் எஸ் ஜே சினு இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேட்ட ராப்’ எனும் திரைப்படத்தில் பிரபுதேவா, வேதிகா, சன்னி லியோன், ரியாஸ் கான், மைம் கோபி, ரமேஷ் திலக், பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

பி கே தினில் கதை எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்ய, டி. இமான் இசையமைத்திருக்கிறார். A.R மோகன் கலை இயக்கத்தை கவனிக்க பட தொகுப்பு பணிகளை நிஷாத் யூசுப் மேற்கொண்டிருக்கிறார்.

இன்னிசையுடன் கூடிய ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை புளூ ஹில் ஃபிலிம்ஸ் மற்றும் புளூ ஹில் நைல் கம்யூனிகேஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது படப்பிடிப்புக்கு பிந்தைய இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த டீசரில் நடனப்புயல் பிரபுதேவாவின் அசத்தலான நடனமும் , ஆக்சன் காட்சிகளும், வேதிகாவின் வித்தியாசமான தோற்றமும்.. ரசிகர்களை வெகுவாக ஈர்த்திருக்கிறது.

Prabu Deva and Sunny Leone starring Petta Rap

——-

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இனிமே எனக்கு பேனர் வச்சா கூட்டம் வருமா-ன்னு கேட்டாங்க.. – விஜய்சேதுபதி

*’மகாராஜா’ படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா

பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் ‘தி ரூட்’ கைக்கோத்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘மகாராஜா’. நடிகர் விஜய்சேதுபதியின் ஐம்பதாவது படமாக வெளியாகி இருக்கும் இந்தப் படத்தை ‘குரங்கு பொம்மை’ புகழ் நித்திலன் சாமிநாதன் எழுதி இயக்கியுள்ளார்.

இப்படம் கடந்த ஜூன் 14, 2024 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதற்காக, நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது.

பேஷன் ஸ்டுடியோஸ் இணைத் தயாரிப்பாளர் கமல் நயன் பேசியதாவது..

“எங்கள் நாயகனை இந்த ஐம்பதாவது படம் மூலம் அரியணை ஏற்றி மகாராஜாவாக அமர வைத்த அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி”.

எஸ் பிக்சர்ஸ் ஸ்ரீனிவாசன்…

“எங்களுக்கும் பேஷன் ஸ்டுடியோஸூக்கும் நல்ல உறவு உள்ளது. கொரோனா சமயத்தில் பல படங்களை எடுத்து வைத்து நாங்கள் காத்திருந்தோம். கொரோனாவுக்குப் பிறகு ரசிகர்கள் திரையரங்குகளுக்கு வருவார்களா என்ற சந்தேகத்தில் பல படங்களை ஓடிடிக்கு கொடுத்து வந்தோம். ஆனால், பேஷன் ஸ்டுடியோஸூக்கு ‘மகாராஜா’ பெரிய வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளது. ஒத்துழைப்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி”.

நடிகர் மணிகண்டன்…

“இந்தப் படத்தில் என்னுடைய ரோல் பற்றி மட்டுமே எனக்குத் தெரியும். ஆனால், இப்போது படம் பார்த்தப் பிறகுதான் கதையே எனக்குத் தெரிகிறது. நிறைய பாராட்டுகள் எனக்கு வந்து கொண்டு இருக்கிறது. ‘மகாராஜா’ படத்தில் நானும் இருப்பது மகிழ்ச்சி”

நடிகர் அருள்தாஸ்…

“தயாரிப்பு நிறுவனத்திற்கு ‘மகாராஜா’ படம் பெரிய வெற்றியைக் கொடுத்துள்ளது. நித்திலன் சின்சியரான இயக்குநர். படப்பிடிப்புத் தளத்தில் எங்களிடம் சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். குறுகிய காலத்தில் விஜய்சேதுபதிக்கு ஐம்பதாவது படம் வெற்றியாக அமைந்துள்ளது சாதாரண விஷயம் கிடையாது. எங்கள் எல்லோருக்கும் இது சந்தோஷமான விஷயம். படத்தில் நடித்த நடிகர்கள் எல்லோருக்குமே இது பெரிய பெயர் வாங்கித் தந்துள்ளது. படத்தின் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்”

நடிகர் வினோத்…

“இந்தப் படம் தமிழில் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்தப் படத்தில் உழைத்த அனைவருக்கும் நன்றி. சேது சாருடைய நடிப்பு மலையாள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. படத்தை இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக மாற்றிய அனைவருக்கும் நன்றி”.

நடிகர் கல்கி…

“தமிழ் சினிமாவில் கடந்த ஆறு மாதங்களாக நல்ல படம் இல்லை என்ற பேச்சு எழுந்தபோது, ‘என்னடா அங்க சத்தம்?’ என்று வந்த படம்தான் ‘மகாராஜா’. உங்களுடைய அனைவரது வாழ்த்துக்கும் நன்றி. பழகுவதற்கும் சரி, நடிப்பிலும் சரி எங்கள் அண்ணன் சேது ‘மகாராஜா’தான்!”.

நடிகர் துரை…

“’மகாராஜா’ படத்தில் எனக்கு கிடைத்த வாய்ப்பு வரம்தான். நேற்று இரவு காசி டாக்கீஸில் போய் படம் பார்த்தோம். இங்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டின் எல்லா ஊர்களிலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. சேது அண்ணன் நடிப்பு பற்றி சொல்லவே வேண்டாம்”.

நடிகை மம்தா மோகன்தாஸ்..

“நன்றி சொல்வதைத் தவிர வேறு எதுவும் எனக்கு இப்போது பேசத் தோன்றவில்லை. இந்தக் கதைக்காக என்னைக் கூப்பிட்ட நித்திலன் சாருக்கு நன்றி. என் கதாபாத்திரம் சிறிது பெரிது என்றில்லாமல் இந்த நல்ல கதையில் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

விஜய்சேதுபதியின் 50வது படமான இதில் நானும் ஒரு அங்கம் என்பதில் மகிழ்ச்சி. மலையாளத்தில் நல்ல வரவேற்புக் கிடைத்து வருகிறது. என் நடிப்பில் வெளியான சமீபத்திய எந்தப் படங்களுக்கும் இப்படியான வரவேற்பு கிடைக்கவில்லை. எனக்கும் படத்திற்கும் நல்ல வரவேற்புக் கொடுத்த அனைவருக்கும் நன்றி!”.

இயக்குநர் நித்திலன்…

“என்னையும் படத்தையும் பாராட்டி கடந்த சில நாட்களாக ஆயிரம் கால் வந்திருக்கும். அத்தனை பேருக்கும் நன்றி. படத்தில் சிலருக்கு சில மாற்றுக் கருத்து இருக்கிறது. அதை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

சேது அண்ணன், சிங்கம்புலி அண்ணன், மணிகண்டன், சாக்‌ஷனா என நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் நன்றி. சேது அண்ணா சிறப்பான நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிங்கம்புலி அண்ணாவை இந்த கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்ந்தெடுத்தேன் எனப் பலரும் கேட்கிறார்கள்.

ஒரு பிரஸ்மீட்டில் தான் இயக்கியுள்ள படம் பற்றி தொகுப்பாளருக்கு கோவமாக எடுத்து சொன்னார் சிங்கம்புலி. அதில் அவரின் ஆட்டிடியூட் வைத்துதான் இந்த கதைக்கு அவர் வில்லன் எனத் தேர்ந்தெடுத்தேன். படத்தின் கதை கேட்டு ஓகே செய்த தயாரிப்பாளருக்கும் நன்றி” என்றார்.

நடிகர் விஜய்சேதுபதி பேசியதாவது…

“இந்தக் கதை கேட்கும்போது பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால், எப்படி சாத்தியமாகும் என்ற கேள்வி இருந்தது. தயாரிப்பாளருக்கு போட்ட பணத்தை எடுத்துக் கொடுத்துவிட வேண்டும் என்று நினைத்தோம்.

இதற்கு முன்பு என்னுடைய சில படங்கள் சரியாக போகாததால், இந்தப் படத்திற்கு பேனர் கட்டும்போது கூட சிலர், ’விஜய்சேதுபதிக்கு இனிமேல் பேனர் ஏத்தினால் கூட்டமா வரப்போகிறது’ என்று சொல்லி இருக்கிறார்கள். இதைப் போன்ற பல கேள்விகள் என்னைச் சுற்றி இருந்தது. அந்தக் கேள்விகளுக்காக நான் இந்தப் படம் செய்யவில்லை. ஆனால், ‘மகாராஜா’ அதற்கான பதிலாக அமைந்துவிட்டது. அனைவருக்கும் நன்றி” என்றார்.

Vijaysethupathi emotional speech at Maharaja success meet

——

‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய்ஆண்டனி… ரசிகர்களைக் கவர்ந்த ‘தீரா மழை’ இசை

‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய்ஆண்டனி… ரசிகர்களைக் கவர்ந்த ‘தீரா மழை’ இசை

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘மழை பிடிக்காத மனிதன்’ விஜய்ஆண்டனி… ரசிகர்களைக் கவர்ந்த ‘தீரா மழை’ இசை

*நடிகர் விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் முதல் சிங்கிள் ’தீரா மழை’ வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது..

விஜய் ஆண்டனியின் படங்கள் எப்போதுமே அழகான பாடல்களுக்காக ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அவரது வரவிருக்கும் படமான ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் சிங்கிள் டிராக் ‘தீரா மழை’யும் ரசிகர்களைக் கவர்ந்த ஒன்றாக உள்ளது.

இந்தப் பாடல் வெளியான குறுகிய காலத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பெப்பி, ஃபாஸ்ட்-பீட், பவர் பேக்ட் பாடல்கள் இந்த காலத்தில் டிரெண்டிங் என்ற நிலையில், மெலோடியாக வெளிவந்திருக்கும் இந்தப் பாடல் இசை ஆர்வலகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

‘தீரா மழை’ பாடலை இந்தி படங்களில் பிரபல இசையமைப்பாளர் ராய் இசையமைத்து பாடியுள்ளார்.

வந்தனா மசான் பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடலின் தெலுங்கு பதிப்பான ‘தூஃபன் லா’ ஏற்கனவே 200K+ பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தை விஜய் மில்டன் எழுதி, ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸின் கமல் போஹ்ரா, டி லலிதா, பி. பிரதீப் மற்றும் பங்கஜ் போஹ்ரா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

படத்தில் விஜய் ஆண்டனி, சத்யராஜ், மேகா ஆகாஷ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, சரண்யா பொன்வண்ணா, ப்ருத்வி அம்பர், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்தின் மற்ற இசையமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, வாகு மசான் மற்றும் ஹரி டஃபுசியா. படத்தொகுப்பு பிரவீன் கே.எல். செய்துள்ளார்.

Theera Mazhai song from MPM movie goes viral

———–

என் வாழ்க்கையில் இதுவே சிறந்த தந்தையர் தினம்.; மகன் சூர்யாவை வாழ்த்திய விஜய்சேதுபதி

என் வாழ்க்கையில் இதுவே சிறந்த தந்தையர் தினம்.; மகன் சூர்யாவை வாழ்த்திய விஜய்சேதுபதி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

என் வாழ்க்கையில் இதுவே சிறந்த தந்தையர் தினம்.; மகன் சூர்யாவை வாழ்த்திய விஜய்சேதுபதி

விஜய்சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் உள்ளிட்ட படங்களிலேயே அவருடன் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா.

தற்போது சூர்யா ஹீரோவாக அறிமுகமாகி விட்டார்.

சூர்யா நடிக்கும் ‘பீனிக்ஸ்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. விழாவில் விஜய் சேதுபதி தனது குடும்பத்துடன் கலந்து கொண்டார்.

விஜய் சேதுபதியின் மகன் சூர்யா ஹீரோவாக அறிமுகமாகும் படம் பீனிக்ஸ் வீழான். ஸ்டன்ட் மாஸ்டர் அனல் அரசு இயக்கும் இந்த படத்தில் சூர்யாவுடன், வரலட்சுமி, சம்பத், தேவதர்ஷினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார்.

அதிரடியான ஆக்ஷன் கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது.

இந்த டீஸரில் பாக்ஸர் ஆன சூர்யா சிறை செல்கிறார். அங்கு அடியாட்களை அனுப்பி சிறையில் இருக்கும் சூர்யாவை கொலை செய்ய முயற்சி நடக்கிறது.. அவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சூர்யா செய்யும் ஆக்சன் தான் இந்த ‘பீனிக்ஸ்’ படம்..

இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த டீசர் விழாவில் கலந்து கொண்ட விஜய் சேதுபதி பேசும்போது.. சினிமாவில் நான் பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் சொல்லிவிட்டேன்.. ஆனாலும் பிடிவாதமாக சினிமா தான் வேண்டும் என சூர்யா சொல்லிவிட்டால் எனவே அவனது விருப்பத்திற்கு அனுமதி கொடுத்துவிட்டேன்.

அவனைப் பெற்ற இந்த 19 வருடத்தில் இந்த தந்தையர் தினம் தான் மிக ஸ்பெஷல் என்று பேசினார் விஜய் சேதுபதி.

இதனையடுத்து பத்திரிகையாளர்களை சந்தித்தார் நடிகர் சூர்யா. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட கேள்வியில்.. அப்பா பெயரை பயன்படுத்த மாட்டேன் என்று பேசிய நீங்கள் தற்போது ‘பீனிக்ஸ்’ படத்தின் புரொமோசன் பணிக்காக அப்பாவை அழைத்தது ஏன் என்று கேள்வி எழுப்பினர்..

தந்தையர் தினத்தன்று அப்பாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விரும்பினேன். அதனால் அப்பாவை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தேன். அப்பா மட்டும் வரவில்லை, என்னோட அம்மா சகோதரி என அனைவரும் வந்துள்ளனர்” என்றார்.

Vijay Sethupathi speech about his son Surya

ஐஸ்வர்யாவின் காதலை முன்பே கணித்தாலும் ஷாக்கான அப்பா அர்ஜுன்

ஐஸ்வர்யாவின் காதலை முன்பே கணித்தாலும் ஷாக்கான அப்பா அர்ஜுன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஐஸ்வர்யாவின் காதலை முன்பே கணித்தாலும் ஷாக்கான அப்பா அர்ஜுன்

நடிகர் அர்ஜுனின் மகளும் நடிகையுமான ஐஸ்வர்யாவும் நடிகர் தம்பிராமையாவின் மகனும் நடிகருமான உமாபதியும் கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் திருமணத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் முதல் திரை பிரபலங்களும் கலந்துக் கொண்டனர்.

இந்த வாரிசு திருமண நிகழ்வை முன்னிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தனர் பிரபலங்கள்.

அப்போது மகளின் திருமணம் குறித்து அர்ஜுன் பேசியதாவது.. “தம்பி ராமையாவின் குடும்பம் மிகவும் பண்பாடு உள்ள குடும்பம். நானும் தம்பி ராமையாவும் நிறைய படங்களில் நடித்திருக்கிறோம். அப்போது தெரியாது அவர் எனக்கு சம்பந்தி ஆவார் என்று..

தென்னாப்பிரிக்கா சென்று ஒரு டிவி நிகழ்ச்சி ஒன்றைத் தொகுத்து வழங்கினேன். அந்த நிகழ்ச்சியில் உமாபதி போட்டியாளராக பங்கேற்றார். மிகவும் திறமைசாலி, அமைதியானவர் மற்றும் நகைச்சுவை உணர்வு கொண்டவர். அப்போதும் உமாபதி எனக்கு மருமகனாக வருவார் என்று தெரியாது.

ஒருநாள் என் 2வது மகள்.. ஐஸ்வர்யா உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று கூறினார். எத்தனை படம் பார்த்திருக்கிறோம் திரைக்கதை எழுதி இருக்கிறோம்.. அப்போதே எனக்கு தெரியும்.

இது காதல் விஷயமாக இருக்கும் என்று… அதேபோல தான் காதலிப்பதாக கூறினார். அதற்கு நான் பையன் யாரென்று கேட்டேன், உமாபதி என்று கூறினார். நான் ஷாக் ஆகிவிட்டேன்.

ஏனென்றால் உமாபதியை எனக்கு முன்பே தெரியும். பிறகு நான் ஓகே சொல்லி விட்டேன். உமாபதி ஒரு திறமைசாலி.. அவர் ஒரு படம் இயக்கிக் கொண்டிருக்கிறார் விரைவில் வெளியாகும்.. நான் என்னுடைய மருமகன் என்று கூறவில்லை. உங்களுடைய ஆசிர்வாதம் என்றும் இவர்கள் இருவருக்கும் வேண்டும் ” என்றார் அர்ஜுன்..

Arjun open talk about his daughter Aishwarya love with Umapathy

வரலாற்றில் இடம் வேண்டும்.. ஒவ்வொரு வாரமும் ‘கண்ணப்பா’ அப்டேட்.. – விஷ்ணு மஞ்சு

வரலாற்றில் இடம் வேண்டும்.. ஒவ்வொரு வாரமும் ‘கண்ணப்பா’ அப்டேட்.. – விஷ்ணு மஞ்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வரலாற்றில் இடம் வேண்டும்.. ஒவ்வொரு வாரமும் ‘கண்ணப்பா’ அப்டேட்.. – விஷ்ணு மஞ்சு

”சிவபெருமானின் உத்தரவினால் தான் ‘கண்ணப்பா’ திரைப்படத்தை எடுத்தோம்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர் மோகன் பாபு பேச்சு

”‘கண்ணப்பா’ காவியம் உருவாவதற்கு காரணம் சிவபெருமான் தான்” – டீசர் வெளியீட்டு விழாவில் டாக்டர்.மோகன் பாபு நெகிழ்ச்சி

விஷ்ணு மஞ்சுவின் கனவுத் திட்டமான ‘கண்ணப்பா’ படத்தை ஏவிஏ என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் 24 பிரேம்ஸ் பேக்டரி நிறுவனங்கள் இணைந்து பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்த படத்தை பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான டாக்டர்.மோகன் பாபு தயாரிக்க, முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார்.

தெலுங்கு திரையுலகின் முன்னணி இளம் நாயகனான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடிக்க, மோகன் லால், பிரபாஷ், அக்‌ஷய் குமார், சரத்குமார் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா (ஜூன் 14) பிரம்மாண்டமாக நடைபெற்றது..

நிகழ்ச்சியில் டாக்டர்.மோகன் பாபு பேசுகையில்…

“’கண்ணப்பா’ எந்த தலைமுறையினருக்கும் புதியவர். மகா கவி துர்ஜதி இதை எப்படி பக்தி சிரத்தையுடன் எழுதினார்?, ஸ்ரீகாளஹஸ்தியின் முக்கியத்துவம் என்ன? என்பதை இந்த படத்தில் காட்டியுள்ளோம். மிகுந்த முயற்சியில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்திய சினிமாவின் மிகப்பெரிய காவியமாக உருவாகியுள்ள இப்படத்தில் இந்தியாவின் நான்கு மூலைகளிலிருந்தும் பெரிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.

பரமேஸ்வராவின் கட்டளையின் பேரில், கண்ணப்பாவிற்காக நாங்கள் கடுமையாக உழைத்திருக்கிறோம். மேலும் பிரபாஸுக்காக எழுதப்பட்ட கதையாகவும் இதை கிருஷ்ணம் ராஜு கொடுத்திருக்கிறார். இந்த மாபெரும் காவிய படைப்பின் தயாரிப்பாளராக நான் இருந்தாலும், இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் ‘கண்ணப்பா’-வின் காவியத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள், அவர்கள் அனைவருக்கும் உங்களுடைய ஆசீர்வாதம் வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

நாயகன் விஷ்ணு மஞ்சு பேசுகையில்…

“’கண்ணப்பா’ படம் முதல் நாளிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ரசிகர்களின் தோளிலும் படமாகி வருகிறது. சமூக வலைதளங்களில் ரசிகர்களின் ஆதரவைப் பார்த்தேன். அதனால் தான் அவர்களில் சிலரை இங்கு அழைத்தேன்.

2014 ஆம் ஆண்டு கண்ணப்பாவின் பயணம் தொடங்கியது. 2015-ல் நான் கண்ணப்பாவை தொடங்கும் போது, ​​என் கடவுள், என் அப்பா மோகன்பாபு, வின்னி, அண்ணன் வினய் ஆகியோர் கொடுத்த ஊக்கத்தால் தான் என்னை முழுவதுமாக நம்பி கண்ணப்பாவை திரைக்குக் கொண்டு வர முடிந்தது.

படம் தொடங்க நினைத்த போது அதற்கான சரியான குழு எனக்கு அமையவில்லை என்றாலும், சிவபெருமான் அனுமதி அளித்ததால் படத்தை தொடங்குவதற்கான அனைத்தையும் நான் தயார் செய்தேன், அதற்கு காரணம் கண்ணப்பாவின் ஆசீர்வாதமும் கூட. இதை ஒரு புராணக்கதை என்று மட்டுமே பார்க்க கூடாது. 14 ஆம் நூற்றாண்டில் நாயனார்களைப் பற்றி கவிஞர் துர்ஜதி எழுதினார். கண்ணப்பா ஒன்பாதவது நாயனார். இது 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளது.

அந்த புத்தகத்தை பிகானர் பல்கலைக்கழகத்தில் கண்டோம். அந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டு, அதை மிகவும் கவனமாகப் பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டு பயணிக்கிறேன். கண்ணப்பா என் குழந்தை மாதிரி. ஏன் இத்தனை கலைஞர்களை இந்தப் படத்துக்குத் தேர்வு செய்தார்கள் என்பது படத்தை பார்த்த பிறகுதான் அனைவருக்கும் புரியும். இனிமேல்,

ஜூலை முதல் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கண்ணப்பாவிடம் இருந்து அப்டேட்கள் வரும். இது என் பார்வையில் எழுதப்பட்ட ‘கண்ணப்பா’, அதனால் தான் கண்ணப்ப உலகத்துக்கு எல்லாரையும் அழைத்தோம்.

நான் இரண்டாம் நூற்றாண்டின் கதையைச் சொல்கிறேன், அந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு படத்தை நியூசிலாந்தில் படமாக்கினோம். பட்ஜெட் பற்றி நாங்கள் சிந்திக்கவில்லை, வரலாற்றில் இடம்பிடிக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குகிறோம் என்ற நம்பிக்கையுடன் படத்தை தயாரித்து வருகிறோம். ப்ரீத்தி முகுந்தன் நெமாலியாக நடிக்கிறார். கண்ணப்பாவை உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். ஹர ஹர மகாதேவ்.” என்றார்.

இயக்குநர் முகேஷ் குமார் சிங் பேசுகையில்,…

”கண்ணப்பா படத்தில் எனது பலம் எனது கலைஞர்களிடம் உள்ளது. விஷ்ணுவின் நடிப்பு மற்றும் அவர் பட்ட கஷ்டங்கள் பற்றி அதிகம் சொல்ல முடியாது. கடும் குளிரிலும் ஒட்டுமொத்த குழுவும் கடுமையாக உழைத்தோம். விஷ்ணு சார், சரத்குமார். அய்யா மோகன்பாபு சார் மிகவும் பிரமாதமாக செயல்பட்டார்கள். நான் எதிர்பார்த்ததை விட படம் மிகச்சிறப்பாக வந்திருப்பதற்கு காரணம் கடவுளிடம் நான் பிரார்த்தனை செய்ததாக இருந்தாலும், கண்ணப்பா எதையும் கேட்காமல் கடவுளுக்காக தன்னை எப்படி அர்ப்பணித்தார் என்பதை இந்த படத்தில் மிக பிரமாண்டமான முறையில் சொல்லியிருக்கிறோம்.” என்றார்.

நடிகர் சரத்குமார் பேசுகையில்…

“’கண்ணப்பா’ வெறும் திரைப்படம் அல்ல, இது நமது வரலாறு. ஒவ்வொருவரும் அவரவர் வேடங்களில் வாழ்ந்தனர். இப்போதும் அந்த வேடங்களில் நாங்கள் இருக்கிறோம். அனைவரும் வரலாற்றை மறந்து விடுகிறார்கள். நம் வரலாற்றை நாம் சொல்ல வேண்டும். அனைவரும் கண்ணப்பாவைப் பார்க்க வேண்டும்.” என்றார்.

நடிகை மதுபாலா பேசுகையில்…

“கண்ணப்பா போன்ற படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எனக்கு இதுபோன்ற நல்ல வாய்ப்பை வழங்கிய மோகன் பாபுவுக்கும், விஷ்ணுவுக்கும் நன்றி. விஷ்ணு மஞ்சுவுக்கு படத் தயாரிப்பில் அறிவு அதிகம். விஷ்ணு போன்ற ஒருவரால் மட்டுமே இப்படி ஒரு பிரமாண்டமான காவியத் திரைப்படத்தை எடுக்க முடியும். ஒரு பெரிய யாகத்தில் பங்கேற்பது போல் உணர்ந்தேன்.” என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசுகையில், “’கண்ணப்பா’ படத்தில் வாய்ப்பு கொடுத்த மோகன் பாபு, விஷ்ணு, முகேஷ் சிங் ஆகியோருக்கு நன்றி. இந்தப் படத்திற்காக அனைவரும் தங்களால் இயன்றதை கொடுத்துள்ளனர். படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.” என்றார்.

Kannappa update every Monday Movie will be milestone says Vishnu Manju

—********

More Articles
Follows