தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
‘முன்தினம்’ படம் மூலம் மீண்டும் நாயகனாக நடிக்கும் ஸ்ரீனிவாசன்
பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் ‘முன்தினம்’ பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட்டனர்
பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் நாயகனாக நடிக்கும் படம் ‘முன்தினம்’.. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் & நமோ நாராயணா வெளியிட பவர் ஸ்டார் அதை பெற்றுக்கொண்டார்.
இப்படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல். வி. கிரேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார்.
இந்த படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமின்றி இப்படத்தில் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசை அமைத்தது இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி ஆவார். இந்த படத்தை 2S என்டேர்டைன்மெண்ட் சார்பில் திரு எஸ்.வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார்.
Powerstar Srinivasan starring Mundhinam
————–