50 வயதில் 2வது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு

50 வயதில் 2வது திருமணம் செய்த தயாரிப்பாளர் தில் ராஜு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Popular Telugu producer Dil Rajus second marriage with Tejaswini தெலுங்கு சினிமா உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் தில் ராஜு. இவருக்கு தற்போது 50 வயதாகிறது.

இவரது முதல் மனைவி அனிதா கடந்த 2017ஆம் ஆண்டு மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

இதனையடுத்து இவரது மகள் தன் தந்தையை 2வது திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தி வந்துள்ளார்.

இதனையடுத்து ஆந்திரா, நிஜாமாபாத் பகுதியில் உள்ள கோயில் ஒன்றில் நடுத்தர வயது தேஜஸ்வினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தில் ராஜு .

கொரோனா ஊரடங்கு நேரத்தில் இத்திருமணம் நடைபெற்றதால் மிக எளிமையாக நடந்துள்ளது.

Popular Telugu producer Dil Rajus second marriage with Tejaswini

உங்கள் புன்னகை மக்கள் முகத்திலும் பரவ செய்யுங்கள்; முதல்வருக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

உங்கள் புன்னகை மக்கள் முகத்திலும் பரவ செய்யுங்கள்; முதல்வருக்கு கமல் பிறந்தநாள் வாழ்த்து

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamals Birth day wishes to Edappadi K Palanisamyஇன்று மே 12ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

பல்வேறு மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் முதல்வருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழக முதல்வருக்கு ட்விட்டரில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன்.

அதில்…

“தமிழகத்தின் முதல்வர் எடப்பாடியாருக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். உங்கள் முகத்தில் இருக்கும் புன்னகை, மக்கள் அனைவரின் முகத்திலும் பரவிடச் செய்யுங்கள். மக்களின் வாழ்த்தே ஆயுளைக் கூட்டும்”. எனப் பதிவிட்டுள்ளார்.

Kamals Birth day wishes to Edappadi K Palanisamy

BREAKING மே 18க்கு பிறகும் லாக்டவுன் 4வது முறையாக நீடிக்கும் என மோடி அறிவிப்பு

BREAKING மே 18க்கு பிறகும் லாக்டவுன் 4வது முறையாக நீடிக்கும் என மோடி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Corona Lock down 4 will be in new form and with new rules says Modiகொரோனா ஊரடங்கு குறித்து தற்போது மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

அதன் தொகுப்பு இது…

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3 லட்சம் பேர் உயிரிழந்திருப்பது வேதனை அளிக்கிறது.

இந்த ஒரு வைரஸ் ஒட்டுமொத்த உலகத்தையே சின்னா பின்னமாக்கியிருப்பது வேதனையாக உள்ளது.

நாம் நம்மை தற்காத்துக் கொண்டு முன்னேறி செல்ல வேண்டும்.

21ம் நூற்றாண்டு இந்தியாவுக்கான காலம். உலகுக்கே இந்தியா நம்பிக்கை ஒளியை கொடுத்து வருகிறது.

இந்தியாவின் வளர்ச்சி, ஒட்டுமொத்த உலகத்தின் வளர்ச்சிக்கு வித்திடும்.

ஒரு நாளைக்கு 2 லட்சம் மருத்துவ பாதுகாப்பு கவசம் மற்றும் N95 கவசம் தயாரிக்கும் நாடாக இருக்கிறோம்.

Y2k பிரச்னையை எப்படி கடந்து வந்தோமோ, அதே போல் இந்தியாவால் இதையும் வெல்ல முடியும்.

இந்த சிக்கலை தனக்கான வாய்ப்பாக இந்தியா மாறிக் கொண்டிருக்கிறது.

உள்ளூர் உற்பத்தி, உள்ளூர் விற்பனை, உள்ளூர் விநியோகம் – இவைகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

நான்காம் கட்ட ஊரடங்கு பற்றி மே 18-க்குள் உங்களுக்கு தெரிவிக்கப்படும். அதில் சில நிபந்தனைகள் மற்றும் வழிமுறைகள் இருக்கும். மாநில முதல்வர்களுடன் கலந்து ஆலோசிக்கப்பட்டு தெரிவிக்கப்படும்.

என பேசினார் பிரதமர் மோடி.

மேலும் ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார திட்டங்களை அறிவித்துள்ளார்.

இத்திட்டம் குறித்த விரிவான விவரங்களை நிதியமைச்சர் அறிவிப்பார்.

சிறு, குறு நிறுவனங்களுக்கு இந்த திட்டம் உதவும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

Corona Lock down 4 will be in new form and with new rules says Modi

Corona Poem “Thoonilum Thurumbilum” written by Kaviperarasu ‘Vauramuthu

Corona Poem “Thoonilum Thurumbilum” written by Kaviperarasu ‘Vauramuthu

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

vairamuthuஅன்புள்ள ஊடக
நண்பர்களுக்கு,
வணக்கம்

இத்துடன் கவிப்பேரரசு வைரமுத்துவின்
“தூணிலுமிருக்கும்
துரும்பிலுமிருக்கும்”
– கொரோனா கவிதையினை இத்துடன் இணைத்துள்ளேன்

https://www.dropbox.com/sh/4tnql3l418knhr0/AADzQAXYlqdORakBDI1BBogja?dl=0

Duration 3:25 Minutes

நன்றி
வணக்கம்
நிகில் முருகன்

தூணிலுமிருக்கும்
துரும்பிலுமிருக்கும்
– கவிப்பேரரசு வைரமுத்து

ஞாலமளந்த ஞானிகளும்
சொல்பழுத்த கவிகளும்
சொல்லிக் கேட்கவில்லை நீங்கள்

கொரோனா சொன்னதும்
குத்தவைத்துக் கேட்கிறீர்கள்.

உலகச் சுவாசத்தைக் கெளவிப்பிடிக்கும்
இந்தத் தொண்டைக்குழி நண்டுக்கு
நுரையீரல்தான் நொறுக்குத் தீனி

அகிலத்தை வியாபித்திருக்கும் இந்தத்
தட்டுக்கெட்ட கிருமியின்
ஒட்டுமொத்த எடையே
ஒன்றரை கிராம்தான்
இந்த ஒன்றரை கிராம்
உச்சந்தலையில் வந்து உட்கார்ந்ததில்
உலக உருண்டையே தட்டையாகிவிட்டது!
சாலைகள் போயின வெறிச்சோடி
போக்குவரத்து நெரிசல்
மூச்சுக் குழாய்களில்.

தூணிலுமிருப்பது
துரும்பிலுமிருப்பது
கடவுளா? கரோனாவா?
இந்த சர்வதேச சர்வாதிகாரியை
வைவதா? வாழ்த்துவதா?

தார்ச்சாலையில் கொட்டிக் கிடந்த
நெல்லிக்காய் மனிதர்கள் இன்று
நேர்கோட்டு வரிசையில்
சட்டத்துக்குள் அடங்காத ஜனத்தொகை
இன்று வட்டத்துக்குள்
உண்ட பிறகும் கைகழுவாத பலர் இன்று
உண்ணு முன்னே
புகைக்குள் புதைக்கப்பட்ட இமயமலை
இன்றுதான்
முகக்கவசம் களைந்து முகம் காட்டுகிறது
மாதமெல்லாம் சூதகமான
கங்கை மங்கை
அழுக்குத் தீரக் குளித்து
அலைக் கூந்தல் உலர்த்தி
நுரைப்பூக்கள் சூடிக்
கண்சிமிட்டுகின்றாள்
கண்ணாடி ஆடைகட்டி.

குஜராத்திக் கிழவனின்
அகிம்சைக்கு மூடாத மதுக்கதவு
கொரோனாவின் வன்முறைக்கு மூடிவிட்டதே!

ஆனாலும்
அடித்தட்டு மக்களின்
அடிவயிற்றிலடிப்பதால்
இது முதலாளித்துவக் கிருமி.

மலையின்
தலையிலெரிந்த நெருப்பைத்
திரியில் அமர்த்திய
திறமுடையோன் மாந்தன்
இதையும் நேர்மறை செய்வான்.
நோயென்பது
பயிலாத ஒன்றைப்
பயிற்றும் கலை.
குருதிகொட்டும் போர்
குடல் உண்ணும் பசி
நொய்யச் செய்யும் நோய்
உய்யச் செய்யும் மரணம்
என்ற நான்கும்தான்
காலத்தை முன்னெடுத்தோடும்
சரித்திரச் சக்கரங்கள்
பிடிபடாதென்று தெரிந்தும்
யுகம் யுகமாய்
இரவைப் பகல் துரத்துகிறது
பகலை இரவு துரத்துகிறது
ஆனால்
விஞ்ஞானத் துரத்தல்
வெற்றி தொடாமல் விடாது
மனித மூளையின்
திறக்காத பக்கத்திலிருந்து
கொரோனாவைக் கொல்லும் அமுதம்
கொட்டப் போகிறது
கொரோனா மறைந்துபோகும்
பூமிக்கு வந்துபோனதொரு சம்பவமாகும்
ஆனால்,
அது
கன்னமறைந்து சொன்ன
கற்பிதங்கள் மறவாது
இயற்கை சொடுக்கிய
எச்சரிக்கை மறவாது
ஏ சர்வதேச சமூகமே!
ஆண்டுக்கு ஒருதிங்கள்
ஊரடங்கு அனுசரி
கதவடைப்பைக் கட்டாயமாக்கு
துவைத்துக் காயட்டும் ஆகாயம்
கழியட்டும் காற்றின் கருங்கறை
குளித்து முடிக்கட்டும் மானுடம்
முதுகழுக்கு மட்டுமல்ல
மூளையழுக்குத் தீரவும்.

லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது..!

லாக்டவுனுக்கு பிறகு நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

JM Basheerகொரோனா லாக்டவுனுக்கு பிறகு முதல்வர் உத்தரவின்படி நேற்று முதல் படமாக நடிகர் ஜெ.எம்.பஷீரின் குற்றாலம் பட டப்பிங் பணிகள் தொடங்கியது.

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் J.M.பஷீர் அவர்கள் குற்றாலம் என்ற படத்தை அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக தனது டிரென்ட்ஸ் சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். இதில் ஜெ.எம்.பஷீர் கதாநாயகனாகவும் மீனுகார்திகா, சௌந்திகா கதாநாயகிகளாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடத்தில் ராதாரவி, பவர்ஸ்டார், தாடிபாலாஜி, ஆனந்த்நபாபு, ஸ்டண்ட் மாஸ்டர் தவசிராஜ், AM.சௌத்ரி மற்றும் பலர் நடித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் அந்த படத்தின் படபிடிப்புகள் முடிவடைந்த நிலையில் டப்பிங் வேலைகளுக்கு தயாரானது.

இந்நிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக 22.3.2020 முதல் தற்போது வரை லாக்டவுன் தொடர்ந்து அமுலில் உள்ளது. தற்போது தமிழக முதல்வர் சில பணிகள் செய்து கொள்ள 11.5.2020 முதல் தளர்வுகள் அறிவித்தார். அதில் சினிமா சம்பந்தப்பட்ட அறிவிப்பாக போஸ்ட் புரோடக்ஷன் எனும் திரைப்படம் படப்பிடிப்புக்கு பின்னால் உள்ள ஸ்டுடியோ பணிகளை 5 பேர் கொண்ட டெக்னீஷியனுடன் சமூக
இடைவெளி விட்டு பணி புரிய அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

சினிமா வட்டாரத்தில் இந்த அறிவிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதில் நேற்று முதல் படமாக ஜெ.எம்.பஷீர் நடிக்கும் குற்றாலம் படத்தின் டப்பிங் பணி அதன் இசையமைப்பாளர் ஸ்டீபன் ராயல் ஸ்டுடீயோவில் தொடங்கியது.

படத்தின் நாயகனான பஷீர் படத்தில் தனது காட்சிகளுக்கு டப்பிங் பேசினார். சமூக இடைவெளி பின்பற்றபட்டு நாயகன் மற்றும் 4 நபர்களுடன் நேற்று டப்பிங் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது!

’கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

kabadathaariநடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தாண்டி, தயாரிப்பாளர்களுக்காக ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கும்
அளவுக்கு தரமான படங்களை தயாரிப்பவர்களில் ஜி.தனஞ்செயன் முக்கியமானவர். திரை விமர்சகராக தேசிய விருது
பெற்றதோடு, சினிமாவின் விளம்பர நுணுக்கங்களையும் நன்கு அறிந்த தயாரிப்பாளராக திகழும் தனஞ்செயன்,
‘கொலைகாரன்’ வெற்றியை தொடர்ந்து ‘கபடதாரி’ என்ற படத்தை தயாரித்து வருகிறார்.

சிபிராஜ், நந்திதா ஸ்வேதா ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் இப்படத்தில் நாசர், ஜெயபிரகாஷ், தீனா, ஜே.சதீஷ்குமார் உள்ளிட்ட
பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்க, பிரபல கன்னட நடிகை சுமன் ரங்கநாதன் மிக முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில்
நடிக்கிறார்.

வித்தியாசமான சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா
பிரச்சினையால் பின்னணி வேலைகள் தொடங்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தமிழக அரசு சினிமா போஸ்ட் புரொடக்‌ஷன்ஸ் பணிகளுக்கு அனுமதி வழங்கியதை தொடர்ந்து இன்று (மே
11) ‘கபடதாரி’ படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியது. அதன்படி, ’கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள்
பாதுகாப்பு அம்சங்களுடன், இன்று தொடங்கியது. விரைவில் படத்தின் அனைத்து பின்னணி வேலைகளும் நிறைவுப்பெற்று
படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஹேமந்த் ராவ் இப்படத்தின் கதை எழுத, ஜான் மகேந்திரன் மற்றும் ஜி.தனஞ்செயன் இருவரும் இணைந்து
திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்கள். பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இப்படத்தை கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ்
மற்றும் விநியோகஸ்தர்கள் சார்பில் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

ராசாமதி ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தில் விதேஷ் கலை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். சைமன் கே.கிங்
இசையமைக்கும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல்.படத்தொகுப்பு செய்கிறார்.

வணிகத் தலைமையை எஸ்.சரவணன் ஏற்க, நிர்வாக தயாரிப்பை என்.சுப்ரமணியன் கவனிக்கிறார். தயாரிப்பு உருவாக்கத்தை
ஜி.தனஞ்செயன் கவனிக்கிறார்.

More Articles
Follows