இது வாத்தி ரெய்டு இல்ல கலெக்டர் ரெய்டு..; முதல்வருக்கு ஏழை விஜய் ரசிகர் வைத்த கோரிக்கை.!

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஹரி.

விஜய் ரசிகரான இவர் ‘வாத்தி ரெய்டு’ என்ற பெயரில் ட்விட்டரில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில்… “ஐயா முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கை திருப்பூர்ல தனியார் பள்ளியில் 7 வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு அரையாண்டுதேர்வு.

எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.

ஆனால் தங்கைக்கு பாடமும் நடத்தப்படவில்லை. தேர்வு லிங்கையும் பள்ளியில் இருந்து அனுப்பவில்லை..

இதனால் தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள்.

அரசு பள்ளியில் சேர்க்க நினைத்தால் கட்டணம் செலுத்தாமல் TC தர மாட்டிங்கராங்க… இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் ஐயா.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.

இதனை பார்த்துள்ள திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயகார்த்தியேன்.. “உங்களை தகவலை கூறுங்கள் என்று கேட்டு நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதற்கு ஹரியும் உடனடி நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Poor Vijay fan requests TN CM

Overall Rating : Not available

Latest Post