ஜோதிகா & கீர்த்தி சுரேஷ் படங்களின் ஆன்லைன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஜோதிகா & கீர்த்தி சுரேஷ் படங்களின் ஆன்லைன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Ponmagal Vandhal and Penguin OTT release dates hereகொரோனா ஊரடங்கால் தியேட்டர்கள் மூடப்பட்டு 2 மாதங்களாகிறது. இதனால் பல தயாரிப்பாளர்கள் தங்கள் படத்தை ஆன்லைன் (OTT) ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் தற்போது ஆன்லைன் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். அதில்…

சூர்யா தயாரித்துள்ள படம் பொன்மகள் வந்தாள்.

இந்த படத்தில் ஜோதிகாவுடன் பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், தியாகராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஃப்ரெட்ரிக் என்பவர் இயக்க ராம்ஜி ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். 96 படப்புகழ் கோவிந்த வசந்தா இசையமைக்க ரூபன் எடிட்டிங் செய்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த பெண்குயின் திரைப்படத்தை அமேசான் பிரைமில் வெளியிடவுள்ளனர்.

ஈஸ்வர் கார்த்திக் இயக்கியுள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் கர்ப்பிணி பெண்ணாக நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

Ponmagal Vandhal and Penguin OTT release dates here

மேலே சொல்லப்பட்ட இரு தமிழ் படங்களும் மற்ற மொழி படங்களின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
#PonMagalVandhal – May 29
#GulaboSitabo – June 12
#Penguin – June 19
#Law – June 26
#FrenchBriyani – July 24
#ShakuntalaDevi – DTBA
#SufiyumSujatavum – DTBA

Ponmagal Vandhal and Penguin OTT release dates here

பாகுபலி பட ஸ்டைலில் 2 பாகங்களாக பிரிக்கப்பட்ட இந்தியன் 2

பாகுபலி பட ஸ்டைலில் 2 பாகங்களாக பிரிக்கப்பட்ட இந்தியன் 2

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Will Kamals Indian 2 to be released in two partsலைகா தயாரிப்பில் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2.

ஷங்கர் இயக்கி வரும் இந்த படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், டெல்லி கணேஷ், பாபிசிம்ஹா, ரகுல் பிரீத் சிங், வித்யூத் ஜமால், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்த படத்தின் மூலம் நடிகர் விவேக்கும் இசையமைப்பாளர் அனிருத்தும் முதன்முறையாக கமலுடன் இணைகின்றனர்.

அதுபோல் ஷங்கர் அண்ட் கமல் படத்திற்கு அனிருத் இசையமைப்பது இதுதான் முதன்முறையாகும்.

இப்பட படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட கிரேன் அறுந்து விழுந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

இதன்பின்னர் கொரோனா ஊரடங்கால் தற்போது சூட்டிங் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகளுக்கு மட்டும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளதால் அந்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளே 4 மணி நேரத்தை கடந்துள்ளதால் இந்தியன் 2 படத்தை இரண்டு பாகமாக ரிலீஸ் செய்யவுள்ளதாம் படக்குழு.

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படமும் இரண்டு பாகங்களாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Will Kamals Indian 2 to be released in two parts

ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு

ஜூன் 30 வரை அனைத்து பயணிகள் ரெயில் சேவை ரத்து என அறிவிப்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Indian Railways Cancels all Passenger Train Services till June 30கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது.

மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17-ந்தேதியுடன் நிறைவடைகிறது.

மேலும் 18ஆம் தேதிக்கு பிறகும் புதிய வழிமுறைகளுடன் ஊரடங்கு நீடிக்கப்படும் என கூறப்படுகிறது. இதன் அறிவிப்பை பிரதமர் மோடி சில தினங்களில் அறிவிப்பார்.

இதனிடையில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலம் திரும்பும் வகையில் சிறப்பு ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

அதுபோல் வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை விமானங்கள் மூலமாகவும், கப்பல்கள் மூலமாகவும் மீட்டு வர பணிகளை இந்திய அரசு செய்து வருகிறது.

இந்த நிலையில் ரெயில் போக்குவரத்தை துவங்க முடிவு செய்திருந்தது ரெயில் அமைச்சகம்.

வருகிற ஜூன் 12 முதல் படிப்படியாக ரெயில் சேவை துவக்கப்படும் என அறிவித்து, அதன்படி முதற்கட்டமாக 15 ஜோடி ரெயில்கள் டெல்லியில் இருந்து நாடு முழுவதும் உள்ள 15 முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படுகின்றன.

ஆனால் நிறைய ரயில்களில் ஏசி வசதி உள்ளதால் இது கொரோனா வைரஸ் பரவலுக்கு வழிவகுக்கும் என தெரிவித்தனர்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் ரெயில் மற்றும் விமான சேவையை தற்போது தொடங்க வேண்டாம் என கேட்டுக் கொண்டார்.

அதனை ஏற்று தமிழகத்தில் தமிழக வருகிற 31-ந்தேதி வரை ரெயில் போக்குவரத்து சேவை கிடையாது அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே முன்பதிவு செய்யப்பட்ட 2 ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.

இந்த நிலையில், ஜூன் 30ம் தேதி வரையில் இயங்கும் ரெயில்களில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துள்ள அனைத்து ரெயில் டிக்கெட்டுகளையும் ரத்து செய்து, கட்டணத்தை திருப்பி கொடுக்க உள்ளது ரயில்வே அமைச்சகம்.

அதில், ‘அடுத்த அறிவிப்பு வரும் வரை எக்ஸ்பிரஸ் ரெயில், பயணிகள் ரெயில், புறநகர் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

முன்பதிவு செய்தோருக்கு முழு தொகையும் திரும்ப வழங்கப்படும் என்றும் ரெயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Indian Railways Cancels all Passenger Train Services till June 30

BREAKING காசுக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக்; பின்னடைவில் முதல் இடத்திற்கு நகரும் தமிழகம் – கமல்

BREAKING காசுக்கு ஆசைப்பட்டு டாஸ்மாக்; பின்னடைவில் முதல் இடத்திற்கு நகரும் தமிழகம் – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal slams TN Govt appeal in Supreme Court in Tasmac issueகொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட நிலையில் மே 7ஆம் தேதி சில விதிமுறைகளுடன் டாஸ்மாக் மதுக்கடைகள் திறந்தது தமிழக அரசு.

இந்த செயலுக்கு பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. கோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டது.

எனவே டாஸ்மாக் கடைகளை மூட ஐகோர்ட் உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறை செய்துள்ளது தமிழக அரசு.

தற்போதும் கொரோனாவின் பாதிப்பு சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தன் ட்விட்டரில் சற்றுமுன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அதில்….

முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது.

கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது.

காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம்

என பதிவிட்டுள்ளார்.

Kamal slams TN Govt appeal in Supreme Court in Tasmac issue

வெளிநாடுகளில் சிக்கிய 1000 மலையாளிகளின் விமான டிக்கெட் செலவை ஏற்ற மம்மூட்டி

வெளிநாடுகளில் சிக்கிய 1000 மலையாளிகளின் விமான டிக்கெட் செலவை ஏற்ற மம்மூட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Actor Mammootty Sponsor 1000 Air Tickets For Kerala Expatriateகொரோனா வைரஸ் பாதிப்பால் உலகில் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் எல்லா துறை மக்களும் வேலை இழந்து தவிக்கின்றனர்.

இந்த நிலையில் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மலையாளிகளுக்கு உதவ முன் வந்துள்ளார் நடிகர் மம்மூட்டி.

பிரபலமான மலையாள டிவி சேனலான கைரளியின் சார்பாக இலவச விமான டிக்கெட்டுகள் வழங்கப்பட இருப்பதாக அதன் நிர்வாக இயக்குனர் ஜான் பிரிட்டஸ் தெரிவித்துள்ளார்.

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான கேரளாவின் ஆளும் இடது ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நடத்தும் தென்னிந்திய சேனலான கைரளி டிவியின் தலைவராக மெகாஸ்டார் மம்மூட்டி இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வந்தே பாரத் எனும் திட்டத்தின் அடிப்படையில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இதுவரையிலும் 64 விமானங்கள் மூலம் இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கையை முதல் கட்டமாக 12 நாடுகளில் மேற்கொண்டு வருகிறது என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.

Actor Mammootty Sponsor 1000 Air Tickets For Kerala Expatriate

கொரோனா முக கவசத்தில் ரஜினி கமல் விஜய் அஜித் முகங்கள்

கொரோனா முக கவசத்தில் ரஜினி கமல் விஜய் அஜித் முகங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Rajini Kamal Vijay Ajith photos in face Maskகொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் மக்கள் தங்கள் அவசிய தேவைக்காக வெளியில் செல்லும்போது முக கவசம் கட்டாயமாக அணிய வேண்டும் அரசு அறிவித்துள்ளது.

இதனையடுத்து ரூ. 20 முதல் 100 வரை விலையுள்ள முக கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

முக கவசம் அணியாமல் சென்றால் காவல்துறை அபராதம் விதித்து வருகிறது.

தற்போது முக கவசத்திலும் பல டிசைன்களும் வந்துள்ளன.

இந்த நிலையில் திருப்பூரில் நடிகர்களின் படங்கள் போட்ட முக கவசங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரது முகங்கள் வரையப்பட்ட முக கவசங்கள் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Rajini Kamal Vijay Ajith photos in face Mask

More Articles
Follows