தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஜீ ஸ்டூடியோஸ் & ட்ரம் ஸ்டிக்ஸ் புரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் ஆர்யா நடிப்பில் கிராமத்துப் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்சன் கமர்ஷியல் திரைப்படம் ‘காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம்’.
இப்படம் உலகமெங்கும் 2023 ஜூன் 2 ஆம் தேதி வெளியாகிறது. இப்பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.
ஜீ ஸ்டூடியோஸ் சார்பில் கிருபாகரன் பேசியதாவது…
இந்த படத்தின் டிரெய்லரை முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, பார்த்ததும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மட்டுமில்லை எங்களின் சென்னை குழு அனைவருக்கும் பிடித்திருந்தது.
அதுமட்டுமில்லை மும்பையில் எங்கள் தலைமை நிறுவனத்திற்கும் இதனை அனுப்பினோம் எங்களுக்கு ஏற்பட்ட அதே உற்சாகம் அவர்களுக்கும் இருந்தது அன்றே இந்த படத்தை ஜூன் மாதம் 2 ஆம் தேதி அன்று வெளியிடலாம் என்று நாங்கள் முடிவு செய்தோம்.
இப்படிப்பட்ட படைப்பை அளித்த இயக்குநர் முத்தையாவிற்கு மிகவும் நன்றி, நிச்சயமாகப் படம் உங்களுக்குப் பிடிக்கும் உங்கள் ஆதரவை எங்களுக்கு அளியுங்கள் நன்றி.
நடிகர் மது சூதனன் ராவ் பேசியதாவது…
நான் அதிகமாகப் பேச விரும்பவில்லை , படம் நன்றாக வந்துள்ளது, இந்த படத்தில் அதிக வில்லன்கள் நடித்துள்ளோம் எப்போதும் கதாநாயகர்களை பற்றிதான் எழுதுவீர்கள். இந்த படத்தில் வில்லன்களைப் பற்றியும் கொஞ்சம் எழுதுங்கள் நன்றி.” என்றார்.
Please mention about Villains too says Madhu