அபிஹாசன் நடிப்பில் ‘வேட்டையன்’ பட உதவி இயக்குனர் இயக்கும் ‘பீட்சா 4’

அபிஹாசன் நடிப்பில் ‘வேட்டையன்’ பட உதவி இயக்குனர் இயக்கும் ‘பீட்சா 4’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அபிஹாசன் நடிப்பில் ‘வேட்டையன்’ பட உதவி இயக்குனர் இயக்கும் ‘பீட்சா 4’

எஸ் தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் K A ஆண்ட்ரூஸ் இயக்கத்தில் அபி ஹாசன், தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா முதன்மை வேடங்களில் நடிக்கும் ‘பீட்சா 4’*

தமிழ் திரையுலகில் திகில் திரைப்படங்களுக்கான புதிய டிரெண்டை ஏற்படுத்தி தக்க வைத்துள்ள ‘பீட்சா’ வரிசையின் முதல் 3 பாகங்களின் ஹாட்ரிக் வெற்றியை தொடர்ந்து அதன் நான்காம் பாகமான ‘பீட்சா 4’ -ஐ K A ஆண்ட்ரூஸ் இயக்குகிறார்.

எஸ். தங்கராஜின் தங்கம் சினிமாஸ் மற்றும் சி.வி. குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்தில் பிரபல நடிகர் நாசரின் மகனும் ‘கடாரம் கொண்டான்’ மற்றும் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ உள்ளிட்ட படங்களில் நடித்தவருமான அபிஹாசன் முதன்மை வேடத்தில் நடிக்கிறார். தெலுங்கு பிக் பாஸ் புகழ் ரத்திகா நாயகி ஆவார்.

‘எல் கே ஜி’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘கொரில்லா’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘அயலி’, ‘சூது கவ்வும் 2’, ‘யங் மங் சங்’, ‘ஃபிளாஷ்பேக்’, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ உள்ளிட்ட படங்களில் இணை மற்றும் துணை இயக்குநராக பணியாற்றியுள்ள K A ஆண்ட்ரூஸ், ‘பீட்சா 4’ திரைப்படத்தை இயக்குவது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

“எத்தனையோ திறமையான இயக்குநர்களையும் இதர கலைஞர்களையும் உலகுக்கு அடையாளம் காட்டியுள்ள தயாரிப்பாளர் சி வி குமார் அவர்களின் திருக்குமரன் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் மற்றும் தங்கம் சினிமாஸ் தயாரிப்பில், ‘பீட்சா’ வெற்றி வரிசையின் நான்காம் பாகத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது.

முதல் பாகத்திற்கும் நான்காம் பாகத்திற்கும் நேரடி தொடர்பு இருக்கும். அது என்ன என்பது சஸ்பென்ஸ்,” என்று இயக்குநர் ஆண்ட்ரூஸ் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர்…

“‘ராட்சசன்’, ‘மார்க் ஆண்டனி’ உள்ளிட்ட படங்களின் திரைக்கதையில் பணியாற்றிய எஸ் ஜே அர்ஜுன் ‘பீட்சா 4’ திரைப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதியுள்ளார். வலுவான குழு இப்படத்திற்காக இணைந்துள்ளது. திரில் மற்றும் திகில் கலந்து ரசிகர்களை பரபரப்பின் உச்சிக்கே கொண்டு செல்லும் வகையில் ‘பீட்சா 4’ அமையும்,” என்று தெரிவித்தார்.

‘பீட்சா 4’ குழுவினரின் விவரம் வருமாறு..

ஒளிப்பதிவாளர்: ஸ்ரீராம், சண்டை பயிற்சி: ராம்குமார், மேலாளர்: விஜயன் சி வி, கம்ப்யூட்டர் கிராபிக்ஸ்: வெங்கி, உடைகள் வடிவமைப்பு: ஸ்வேதா தங்கராஜ், இசை: ஹரி, கலை இயக்குநர்: சிவா, காஸ்டியூமர்: செல்வம், ஒப்பபனை: வினோத், படத்தொகுப்பு: ராதாகிருஷ்ணன்.

Pizza 4 will be an adrenaline pumping horror thriller ride informs the team

வினோத் சீடர் ஸ்ரீவெற்றியின் ‘நாற்கரப்போர்’.; கிராண்ட் மாஸ்டராக மாறிய தூய்மை பணியாளர்

வினோத் சீடர் ஸ்ரீவெற்றியின் ‘நாற்கரப்போர்’.; கிராண்ட் மாஸ்டராக மாறிய தூய்மை பணியாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

வினோத் சீடர் ஸ்ரீவெற்றியின் ‘நாற்கரப்போர்’.; கிராண்ட் மாஸ்டராக மாறிய தூய்மைபணியாளர்

சதுரங்க விளையாட்டு பின்னணியில் சமூகப்பிரச்சனையை பேச வரும் ‘நாற்கரப்போர்’

V6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் S.வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘நாற்கரப்போர்’.

இயக்குநர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்குகிறார். ஹெச்.வினோத், ராஜபாண்டி உள்ளிட்ட இயக்குநர்களிடம் இவர் உதவி இயக்குநராக பணியாற்றியவர்.

‘இறுகப்பற்று’ படம் மூலம் கவனம் பெற்ற நடிகை அபர்ணதி நாயகியாக நடிக்க, நாயகனாக சேத்துமான் படத்தில் நடித்த அஸ்வின் நடிக்கிறார்.

முக்கிய வேடத்தில் கபாலி, பரியேறும் பெருமாள் புகழ் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடிக்கின்றனர்.

பிரபல மலையாள இயக்குநர் மேஜர் ரவியின் மகன் அர்ஜுன் ரவி, மற்றும் ஞானசேகரன் ஆகியோர் இப்படத்தின் மூலம் தமிழில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்கள்.

சந்தோஷ் நாராயணனிடம் பல படங்களில் இணைந்து பணியாற்றிய தினேஷ் ஆண்டனி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

ரஞ்சித் சிகே என்பவர் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். கலை ஶ்ரீமன்ராகவன். பாடல்கள் குகை மா புகழேந்தி.

ஆக்சன் – பிரபு

எக்ஸிகியூட்டிவ் புரடக்‌ஷன் : அருண்மொழித்தேவன்

மக்கள் தொடர்பு – A.ஜான்

தற்போது இப்படத்தின் டைட்டில் லுக், பர்ஸ்ட் லுக வெளியாகி உள்ளது.

‘நாற்கரப்போர்’ குறித்து இயக்குநர் ஸ்ரீவெற்றி கூறும்போது…

“சதுரங்க விளையாட்டை மையப்படுத்தி இந்த படம் உருவாகி உள்ளது. ஏழை-பணக்காரன், உயர் ஜாதி-தாழ்ந்த ஜாதி, அரசியல்வாதி-மக்கள் என இவர்களுக்கு இடையே காலங்காலமாக இருக்கும் பிரச்சினைகளையும், அனைத்தும் அனைத்து மக்களுக்கும் சம அளவில் கிடைக்கும் படியான தொலைநோக்கு பார்வை இல்லாத வரை இங்கு இவர்களுக்குள்ளான போர் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும் என்ற அரசியலை பேசுகிறது.

அதிகாரம் என்பது செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்துவதற்க்கே அன்றி தனிமனித தாக்குதலாக மாறக்கூடாது என்பதையும் சதுரங்க விளையாட்டின் பின்னணியில் இந்த படம் பேசுகிறது.

தூய்மைப்பணி செய்யும் சமுதாயத்தில் இருந்து வந்த ஒருவன் எப்படி ‘கிராண்ட் மாஸ்டர்’ ஆகிறான்? அதற்காக அவன் சந்திக்கும் அரசியல் ரீதியான, ஜாதி ரீதியான, பிரச்சனைகள் என்ன என்பதை சொல்லும் அழகான ஒரு ஸ்போர்ட்ஸ் டிராமாவாக இந்த ‘நாற்கரப்போர்’ உருவாகி உள்ளது” என்கிறார்.

சென்னை மற்றும் திண்டுக்கல் ஆகிய இடங்களில் இதன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 40 நாட்கள் நடைபெற்றுள்ளது. அந்த பகுதியைச் சேர்ந்த கிராமத்து மனிதர்கள் பலரையும் இந்த படத்தில் நடிக்க வைத்துள்ளார்கள்.

பட ரிலீஸுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதன் ட்ரெய்லர் வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாக உள்ளது.

NO VICTORY WITHOUT BATTLE NARKARAPOR

Here s the First Look of #Narkarappor . Excitement over loaded. Good Luck to the whole Team

@V6Velayutham
@shreevetri @abarnathi21
@LingeshActor #SureshMenon @Arunmozhitheva
@music_Dinesh_DA
@sriman_ragavan
@johnmediamanagr
@srikalasastudios @Raghuraman_di_colorist
@narreshkumarbabu
#V6FilmPvtLtd

DeAr Event வாரா வாரம் படம் வருதே..- ஜிவி.பிரகாஷ்..; ஃப்ரைடே ஹீரோயின். – ஐஸ்வர்யா ராஜேஷ்

DeAr Event வாரா வாரம் படம் வருதே..- ஜிவி.பிரகாஷ்..; ஃப்ரைடே ஹீரோயின். – ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு !!*

Nutmeg Productions சார்பில் தயாரிப்பாளர்கள் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் தயாரிப்பில், இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் “டியர்”. ஏப்ரல் 11 ஆம் தேதி இப்படம் திரைக்குவரவுள்ள இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்வு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வினில்…

நடிகை நந்தினி பேசியதாவது….
இது என் முதல் மேடை, இப்படத்தில் வாய்ப்பு தந்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப்படத்தில் எனக்கு ஒத்துழைப்பு தந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி. இப்படம் சம்மருக்கு நல்ல ஒரு விருந்தாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.

நடிகர் அப்துல் லீ பேசியதாவது….
ஒரு ரகசியம் சொல்றேன் ஜீவிக்கு 4 குளோன் இருக்கு, ஒண்ணு மியூசிக் போடுது, ஒண்ணு நடிக்கப்போகுது. இதை ஐஸ்வர்யா ராஜேஷிடம் சொன்னால் அவர் நானே குளோன் தான், ஒரிஜனல் ஐஸ்வர்யா சுழல் நடிக்கப் போயிருக்கிறார் என்றார். அவ்வளவு பிஸியான நடிகர்கள் என்றாலும் இப்படத்தில் இருவரும் நல்ல ஒத்துழைப்பு தந்தார்கள். என்னை இப்படத்தில் நல்ல முறையில் பயன்படுத்திய இயக்குநருக்கு நன்றி. கேப்டன் மில்லர் படத்திற்காக என்னைப் பாராட்டிய அனைத்து பத்திரிக்கை நண்பர்களுக்கும் நன்றி. இப்படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை ரோகிணி பேசியதாவது…
விருமாண்டி படத்திற்குப் பிறகு லைவ் சவுண்டில் இந்தப்படம் செய்துள்ளேன். மிகப்பெரிய மெனக்கெடல் இருந்தால் தான் இதைச் செய்ய முடியும். அதில் பிடிவாதமாக இருந்த இயக்குநருக்கு வாழ்த்துக்கள். லைவ் சவுண்ட் எப்படி வந்திருக்கிறது என்பதைப் பார்க்கும் போது தான் அதன் அருமை தெரிகிறது. ஜீவி அருமையான நடிகர். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அவர் இசையமைத்த படங்களும் வருவதால், வெள்ளிக்கிழமை நாயகன் என்கிறார்கள், அவரிடம் எப்படி இவ்வளவு வேலைகளைப் பார்க்கிறீர்கள் என்று கேட்டேன், என்னுடைய எல்லா வேலைகளையும் உடனுக்குடன் செய்துவிடுவேன் என்றார். அவருக்கு என் வாழ்த்துக்கள். ஐஸ்வர்யா ராஜேஷ் மிகச் சிறந்த நடிகை, நல்ல நடிப்பைத் தந்துள்ளார். இளவரசு நன்றாக நடித்துள்ளார். ஒரு அருமையான படைப்பு உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

நடிகை கீதா கைலாசம் பேசியதாவது…
எனக்கு நல்ல பாத்திரத்தில் வாய்ப்புத் தந்த இயக்குநருக்கு நன்றி. ரோகிணி மேடமுடன் நடித்தது மகிழ்ச்சியாக இருந்தது. ஜீவி, ஐஸ்வர்யா ராஜேஷுடன் நடித்தது இனிமையான அனுபவம். படம் நன்றாக வந்துள்ளது படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.

பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது….
தற்காலத்திய ஆண் பெண் உறவில் ஒரு பிளவு ஏன் ஏற்படுகிறது என்பதை அழுத்தமாக இந்தப்படம் பேசுகிறது. இயக்குநர் அதனை அழகாகப் படம் பிடித்துள்ளார். சில பாடல்களை மெட்டுக்களே தந்து விடும், ஜீவியின் இசையை, மெட்டைக் கேட்டவுடன் வார்த்தைகள் வந்து விழும். அப்படி ஒரு நல்ல பாடலை இப்படத்தில் எழுதியது மகிழ்ச்சி. படத்தில் உழைத்த கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள். இப்படம் எல்லோருக்குமான படமாக இருக்கும் நன்றி.

கலை இயக்குநர் பிரகதீஸ்வரன் பேசியதாவது…
வாய்ப்பு தந்த நரேன் சார் மற்றும் தயாரிப்பாளர் இருவருக்கும் நன்றி. நான் இன்னும் நிறையக் கற்றுக்கொள்ள வேண்டும். இப்படம் நல்ல அனுபவமாக இருந்தது. இப்படம் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் நன்றி.

ஒளிப்பதிவாளர் ஜெகதீஷ் பேசியதாவது…
ஆனந்த்துடன் இணைந்த பயணம் குறும்பட காலத்தில் ஆரம்பித்தது. இன்னும் நிறையப் பயணப்பட வேண்டும் என ஆசைப்படுகிறேன் நன்றி. ஜீவி பிரகாஷுக்கு ஒளிப்பதிவு தெரியும் என்ன லென்ஸ் போடுகிறோம் என்பது முதல் அவருக்குத் தெரிகிறது, எங்குப் படிக்கிறார் என்று தெரியவில்லை, ஜீவி, ஐஸ்வர்யா இருவரையும் அழகாகக் காட்டியுள்ளேன் என நம்புகிறேன். நம் வீடுகளில் உள்ள பிரச்சனைகளை எளிமையாகக் கையாண்டிருக்கிற படம் ஆனந்த்தின் கதை வித்தியாசமாக இருக்கும். குறட்டை ஆண் பெண் இருவருக்கும் பொதுவானது.

நடிகர் இளவரசு பேசியதாவது.,,
பொதுவாக இயக்குநருக்குள் ஒரு நீதிபதி பார்வை தான் இருக்கும் ஆனால் ஆனந்த் வித்தியாசமானவர். எதற்கு அப்பா எனத் தெரியாமல் நிறைய அப்பா கேரக்டர் பணத்திற்காகச் செய்துள்ளேன் ஆனால் இந்தக்கதாபாத்திரம் வித்தியாசமாக இருந்தது. ஆண் பெண் இருவருக்கும் இடையில் சின்ன சின்ன பிஹேவரியில் ஏற்படும் பிரச்சனை, எங்குக் கொண்டு செல்லும் என்பதை முதிர்ச்சியாகக் கையாண்டுள்ளார் இயக்குநர். இப்படிப்பட்ட அருமையான படத்தைத் தயாரிக்க முன்வந்த தயாரிப்பாளருக்கு என் வாழ்த்துக்கள். மிக முக்கியமான விசயத்தை இப்படம் பேசியுள்ளது. பத்திரிக்கையாளர்கள் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள். ஜீவியுடன் முறைத்துக் கொள்வது போல் ஒரு பாத்திரம், நன்றாக வந்துள்ளது. கலைஞர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி.

தயாரிப்பாளர் வருண் திரிபுரனேனி பேசியதாவது…
நரேனுக்கு நன்றி. அவரால் தான் திரைத்துறைக்குள் வந்தேன். ஆனந்த் கதை சொன்ன போதே மிகவும் பிடித்திருந்தது. அவர் சிறந்த படத்தைத் தந்துள்ளார் அவருடன் படம் செய்தது பெருமையாக உள்ளது. ஜீவி, ஐஸ்வர்யா, ரோகிணி, இளவரசு உட்பட அனைவருக்கும் நன்றி. இரண்டு பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன். உழைத்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் பேசியதாவது…
2020 ஏப்ரலில் என் முதல் படம் ஓடிடியில் வெளியானது. இங்கிருக்கும் பத்திரிக்கையாளர்கள் தந்த ஆதரவால் தான் நான் வெளியே கொஞ்சம் தெரிந்தேன். அதற்காக அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தின் ஐடியா வந்த போது நரேனிடம் சொன்னேன் அவர் மூலமாகத் தான் வருணிடம் கதை சொன்னேன். அவர் படங்களே பார்த்ததே இல்லை எப்படிப் புரிந்து கொள்வார் எனத் தயக்கம் இருந்தது, ஆனால் அவருக்குப் பிடித்தது உடனே தயாரிக்கலாம் என்றார். அவருக்குப் பிடித்தால் அதைப் பற்றி முழுதாக தெரிந்து கொண்டு ஆர்வமுடன் செய்வார். பல ஐடியாக்கள் தந்தார். கோபி பிரசன்னா அழகாக டிசைன் செய்து தந்தார். கார்த்திக் நேத்தா அருமையான வரிகள் தந்தார். ஜெகதீஷ் என் குறும்படத்தில் வேலை பார்த்த காலத்தில் கிம்பல் வைத்து ஒரே ஷாட்டில் ஒரு படம் எடுத்தோம் அப்போது ஆரம்பித்த பயணம், என் முதல் படத்திற்கே அவரைத்தான் கேட்டேன். இந்தப்படத்தில் அவர் விஷுவல் தான் ஞாபகம் வரும். ஐஸ்வர்யாவை அழகாகக் காட்டியுள்ளார். எனக்கு பர்ஸனலாக டப்பிங் பிடிக்காது அதனால் தான் லைவ் சவுண்ட். சின்ன சின்ன சவுண்ட் கூட ஷீட்டிங்கில் சிக்கலாகி விடும். திரும்பத் திரும்ப எடுக்க வேண்டி வரும் ஆனாலும் லைவ் சவுண்ட் பேசப்படும். நல்ல பெர்ஃபார்ம் பண்ணுகிற ஆர்டிஸ்டால் தான் முடியும் அதனால் தேடித் தேடி நடிகர்களைத் தேர்வு செய்தேன். ரோகிணி மேடம் ஏற்கனவே லைவ் சவுண்டில் வேலை பார்த்திருக்கிறார். அவர் ஒரு இயக்குநர், இப்படத்திலும் பல காட்சிகளில் அசத்தியிருக்கிறார். தலைவாசல் விஜய் சார் நல்ல ரோல் செய்துள்ளார். காளி அண்ணா நல்ல மெத்தட் ஆக்டர், அருமையாக நடித்துள்ளார். ஐஸ்வர்யாவிடம் தான் முதலில் கதை சொன்னேன் அவர் வீட்டுக்குப் போன போது 60 அவார்ட் இருந்தது. அதைப்பார்த்தால் நல்ல கதை இருந்தால் மட்டும் வா என்பது போல் இருக்கும். மிக எளிமையாகப் பழகுவார். திரைக்கதையிலும் அவர் பங்களிப்பு அதிகம். படத்தின் கிளைமாக்ஸில் ஒரு சீன் வரும் அது அவர் ஐடியா தான். தயாரிப்பாளருக்குப் பிடித்த நடிகை. ஜீவியிடம் ஐஸ்வர்யா தான் ஃபிளைட்டில் பார்த்து கால்ஷீட் வாங்கித் தந்தார். ஜீவி நோ தான் சொல்வார் என நினைத்தேன் ஆனால் அவர் கதை நல்லாருக்கு நடிக்கிறேன் எனச் சொல்லிவிட்டார். அவர் இசை எனக்கு ரொம்பப் பிடிக்கும். நடிக்கும் போது கதைகள் கேட்பார், மியூசிக் போடுவார், இந்திப்படம் நடிக்கிறார், தயாரிக்கிறார் அவரைப்பார்த்தாலே பிரமிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு ஷாட்டிலும் பெட்டராக நடிக்க முயற்சிப்பார். இப்படம் அவரோட பெஸ்ட்டாக இருக்கும். இது ஒரு ரிலேஷன்ஷிப் டிராமா உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். ஏப்ரல் 11 திரையரங்குகளில் வருகிறது ஆதரவு தாருங்கள் நன்றி.

நடிகர் ஜீவி பிரகாஷ் பேசியதாவது…
வாராவாராம் படம் வருதே எனக் கேட்கிறார்கள் ஆனால் இது 4 வருடமாக உழைத்து உருவான படங்கள் ஆனால் அது அனைத்து வேலைகளும் முடித்து, இப்போது வருகிறது. டியர் திரைப்படம் ஐஸு ஃபிளைட்டில் என்னைப்பார்த்து இந்தக்கதை கேளுங்கள் என்றார். இவர் படத்தில் நமக்கு என்ன ரோல் இருக்கும் எனத் தயங்கினேன், ஆனால் கதை கேட்டவுடன் அழுது விட்டேன், மிகவும் பிடித்திருந்தது. உடனே நடிக்க ஒத்துக்கொண்டேன். லைவ் சவுண்ட் என்பதால் எல்லோரும் போட்டிப் போட்டு நடித்துள்ளோம். எல்லோரும் அருமையாக நடித்துள்ளனர். வருணுக்கு என் வாழ்த்துக்கள். படம் கண்டிப்பாக உங்களுக்குப் பிடிக்கும். பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் நன்றி.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் பேசியதாவது…
இந்த வருடம் ஜீவிக்கு நடந்தது, கடந்த வருடம் எனக்கும் நடந்தது, என்னையும் வெள்ளிக்கிழமை நாயகி எனக் கூப்பிட்டுள்ளார்கள். அதன் காரணங்கள் எனக்குத் தெரியும். கள்வன் படத்திற்காக ஜீவிக்கு வாழ்த்துக்கள். டியர் படம் எனக்கு மிகவும் நெருக்கமான படம். எல்லோருமே மிகவும் பிடித்து, விரும்பி நடித்த படம். ஜெகதீஷ் மாதிரி கேமராமேன் எனக்கு எல்லாப்படத்திலும் கிடைத்தால் நன்றாக இருக்கும். என்னை அவ்வளவு அழகாகக் காட்டியுள்ளார். இந்தப்படம் ஷீட்டிங்கே ஒரு கொண்டாட்டமாக இருந்தது. ரோகிணி மேடம் பகிர்ந்துகொள்வதைக் கேட்பதே வரம் தான். எல்லோருடன் பழகியது மிகச்சிறந்த அனுபவம். இந்தப்படம் மூலம் ஆனந்த் நண்பராகக் கிடைத்துள்ளார். இந்தப்படம் எனக்கு மூன்று வருடப் பயணம். ஆனந்த் தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம். வருண்! தமிழ் சினிமாவிற்கு நல்ல தயாரிப்பாளர் கிடைத்துள்ளார். அவருடன் இன்னொரு படமும் செய்துள்ளேன் விரைவில் திரைக்கு வரும். எங்கள் படத்தின் நாயகன் தூண் ஜீவி தான். நல்ல நண்பர், அவரைப்பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. எனக்காகக் கதை கேட்டு நடித்ததற்கு நன்றி. இந்தப்படம் கண்டிப்பாக ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.

Nutmeg Productions சார்பில் வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிசெட்டி மற்றும் G. பிருத்திவிராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட ‘செத்தும் ஆயிரம் பொன்’ படத்தின் இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோருடன், காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், அப்துல் லீ, ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு ஜெகதீஸ் சுந்தரமூர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார், ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ருகேஷ் படத்தொகுப்பையும், பிரகதீஸ்வரன் கலை இயக்கப் பணிகளையும், அனுஷா மீனாட்சி ஆடை வடிவமைப்பையும் கவனித்து வருகின்றனர். ‘ராப்’ ஐகான் அறிவு, ஏகாதசி, ஜிகேபி, விண்ணுலக கவி ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ரோமியோ பிக்சர்ஸ் டியர் படத்தினை தமிழகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறது.

Gv Prakash and Aishwarya Rajesh starrer DeAr movie news

விவசாய வாழ்வியலை சொல்லும் ‘பரமன்’..; சூப்பர்குட் சுப்ரமணி Vs பழ கருப்பையா

விவசாய வாழ்வியலை சொல்லும் ‘பரமன்’..; சூப்பர்குட் சுப்ரமணி Vs பழ கருப்பையா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விவசாய வாழ்வியலை சொல்லும் ‘பரமன்’..; சூப்பர்குட் சுப்ரமணி Vs பழ கருப்பையா

விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்ல வரும் ‘பரமன்’… சூப்பர்குட் சுப்ரமணி கதையின் நாயகனாக நடிக்கும் ‘பரமன்’*

இன்ஃபினிட் பிக்சர்ஸ் சார்பில் J சபரிஸ் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘பரமன்’ விவசாயிகளின் வாழ்வியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ‘ஜெய்பீம்’, ‘பரியேறும் பெருமாள்’ உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்துள்ள சூப்பர் குட் சுப்ரமணி கதையின் நாயகன் ‘பரமன்’ ஆக நடித்திருக்கிறார்.

பழ கருப்பையா வில்லனாக நடிக்க, இதுவரை பார்த்திராத ஒரு சீரியஸான கதாபாத்திரத்தில் வையாபுரி நடித்துள்ளார். மேலும் ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

தமீம் அன்சாரி இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு சிபி சதாசிவம் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை இயக்குநர் சபரிஸே மேற்கொண்டுள்ளார். படத்தின் கதையை இதய நிலவன் எழுதியுள்ளார். பாடல்களை வேல்முருகன், முகேஷ் ஆகியோர் பாடியுள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இதனை தமிழ் சினிமாவின் ஜாம்பவான் இயக்குநர்களான பாரதிராஜா, பாக்யராஜ், எஸ்.ஏ சந்திரசேகர், பி வாசு உள்ளிட்ட பலரும் இணைந்து வெளியிட்டு உள்ளனர்.

மறைந்த நடிகை விஜே சித்ரா நடிப்பில் இயக்குநர் சபரிஸ் இயக்கத்தில் அவரது முதல் படமான ‘கால்ஸ்’ (calls) கடந்த கோவிட் காலகட்டத்தில் திரையரங்குகளில் வெளியானது.

அதே சமயம் இப்போது வரை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் 35 முறைக்கும் மேலாக இந்த படம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு டிஆர்பி ரேட்டிங்கில் மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. அதுமட்டுமல்ல அமேசான் பிரைமில் இதுவரை பல கோடி பேருக்கு மேல் இந்த படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.

தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஸ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார். தேனி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட 35 நாட்களுக்கு மேல் நடைபெற்றுள்ளது.

‘பரமன்’ பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ள இயக்குநர்கள் பலரும், குறிப்பாக இயக்குநர் சீமான் இப்படத்தின் டிரைலரையும் பார்த்துவிட்டு, இப்படம் சமூகத்திற்கு தேவையான ஒரு முக்கிய கருத்தை சொல்ல வருகிறது எனக் கூறி தங்களது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து விரைவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.

*நடிகர்கள்*

சூப்பர்குட் சுப்பிரமணி, பழ. கருப்பையா, வையாபுரி, ஹலோ கந்தசாமி, விஜே அர்ச்சனா, மீசை ராஜேந்திரன், அசோக் தமிழ், சத்யா, ஜெயச்சந்திரன், கார்த்திக் பிரபு, சஞ்சய், மது மற்றும் பலர்

*தொழில்நுட்பக் கலைஞர்கள் விவரம்*

தயாரிப்பு ; இன்ஃபினிட் பிக்சர்ஸ்

இயக்கம் ; J சபரிஸ்

கதை ; இதயநிலவன்

இசை ; தமீம் அன்சாரி

ஒளிப்பதிவு ; சிபி சதாசிவம்

படத்தொகுப்பு ; J சபரிஸ்

பாடகர்கள் ; வேல்முருகன், முகேஷ்

மக்கள் தொடர்பு ; A.ஜான்

Supergood Subramani Vs Pala Karuppaiya starring Paraman

அட்வென்ச்சர் – ஆக்சன் – எமோஷன் கலந்து உள்ளங்களை களவாடும் ‘கள்வன்’

அட்வென்ச்சர் – ஆக்சன் – எமோஷன் கலந்து உள்ளங்களை களவாடும் ‘கள்வன்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அட்வென்ச்சர் – ஆக்சன் – எமோஷன் கலந்து உள்ளங்களை களவாடும் ‘கள்வன்’

இசையமைப்பாளர்- நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் குமார், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அவரின் ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிரும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் பி.வி. ஷங்கரை இதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகவும் பார்த்திருக்கிறார்.

‘கள்வன்’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் சொன்னபோது, ​​ஜிவி பிரகாஷால் காடுகளின் சூழலை தெளிவாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஷங்கர், ஒளிப்பதிவாளராக இருப்பதால், திரைக்கதையுடன் காட்சி நேர்த்தியை திறமையாகக் கலந்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளார்.

படத்தைப் பார்த்த ஜிவி பிரகாஷ், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது…

“‘கள்வன்’ படம் அட்வென்ச்சர், ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய படமாக இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்,” என்றார்.

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக இணைந்துள்ள படம் இதுவாகும். பல ஆண்டுகளாக பாரதிராஜாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதான ஆர்வம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார்.

மேலும், படக்குழுவினர் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தனர் என்கிறார். கோடை விடுமுறைக்கு ‘கள்வன்’ படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான ட்ரீட் என்று அவர் உறுதியாக நம்புகிறார்.

தமிழ் திரையுலகிற்கு தனித்துவமான திரைக்கதைகளை ஆதரித்து கொண்டு வருவதற்காக ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபுவுக்கு ஜிவி பிரகாஷ் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். அவருடைய கரியரில் ‘கள்வன்’ படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

*நடிகர்கள்:* ஜிவி பிரகாஷ் குமார், பாரதிராஜா, இவானா, தீனா, ஜி.ஞானசம்பந்தம், வினோத் முன்னா

*தொழில்நுட்ப குழு:*

தயாரிப்பு – ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி,
தயாரிப்பாளர் – ஜி. டில்லி பாபு,
ஒளிப்பதிவு & இயக்கம் – பி.வி. சங்கர்,
பாடல்கள் இசை – ஜிவி பிரகாஷ் குமார்,
பின்னணி இசை – ரேவா,
எடிட்டிங் – சான் லோகேஷ்,
கலை – என்.கே. ராகுல்,
ஸ்டண்ட் – திலிப் சுப்பராயன்.

Kalvan will be treat for fans says GV Prakash

விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ ஹீரோயின்

விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ ஹீரோயின்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விக்ரம் – எஸ்.ஜே.சூர்யா கூட்டணியில் இணைந்த ‘சார்பட்டா பரம்பரை’ ஹீரோயின்

சீயான் விக்ரமுடன் இணையும் நடிகை துஷாரா விஜயன்,

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் மாரியம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பிரபலமானவர் நடிகை துஷாரா விஜயன்.

தனித்துவமான நடிப்பில் மிளிரும் இவர் ‘ராயன்’ , ‘வேட்டையன்’ ஆகிய திரைப்படங்களில் முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

இவர் தற்போது ‘சீயான்’ விக்ரம் நடிப்பில் தயாராகும் ‘சீயான் 62’ படத்தில் கதையின் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இயக்குநர் எஸ். யு. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சீயான் 62’ எனும் திரைப்படத்தில் ‘சீயான்’ விக்ரம், எஸ். ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு உள்ளிட்ட முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள்.

இவர்களுடன் லேட்டஸ்டாக நடிகை துஷாரா விஜயன் கதையின் நாயகியாக நடிக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் எண்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச். ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.

இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

Dushara Vijayan joins with Vikram in Chiyaan 62

More Articles
Follows