தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
ஒரு படம் எடுக்க ஒரு நாள் கூட ஆகல.; ‘மங்காத்தா – சூது கவ்வும்’ பாணியில் உருவான ‘பிதா’
23 மணி 23 நிமிடங்களில் எடுக்கப்பட்ட சாதனைப் படம் “பிதா
ஒரு திரைப்படத்தை நான்கு வருடங்கள் எடுத்தோம்.. 20 மாதங்கள் எடுத்தோம்.. ஐந்து மாதங்கள் எடுத்தோம்.. மூன்று மாதங்கள் எடுத்தோம் என பலரும் சொல்லிக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கூட நிறைவு பெறாத நிலையில் 23 மணி நேரம் 23 நிமிடங்களில் ஒரு படத்தை எடுத்து முடித்து இருக்கிறார் இயக்குனர் எஸ்.சுகன். அந்த படத்தின் பெயர் தான் ‘பிதா’.
(இதற்கு முன்பே 23 மணி நேரத்தில் கலைஞர் நகர் என்ற ஒரு படத்தையும் இவர் சுகனே எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.)
எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ் தயாரிப்பில், எஸ்.சுகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை, தரமான சிறு முதலீட்டு திரைப்படங்களை தொடர்ந்து வெளியிடும் ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ சார்பில், உலகெங்கும் வெளியிடுகிறார் ஜெனீஷ்.
காது கேளாத, வாய் பேச முடியாத பத்து வயது சிறுவன், கடத்தப்பட்ட தொழில் அதிபரையும், தனது அக்காவையும் திருவிழா பெருங்கூட்டத்தில் எப்படி காப்பாற்றுகிறான் என்பது தான் கதை.
ஆயிரக்கணக்கானோர் கூடியிருக்கும் திருவிழா கூட்டத்தில் திட்டமிட்ட குறித்த நேரத்தில் படப்பிப்பை நடத்தி, பலரின் பாராட்டை பெற்றுள்ளார் இயக்குனர் எஸ்.சுகன்.
ஒரே இரவில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட சிறுவனின் அம்மா, காதலிக்கும் அக்கா, தொழில் அதிபர் கடத்தல் என, குறுகிய நேரத்தில் சிறப்பாக காட்சிகளை இயக்கியுள்ளார் எஸ்.சுகன்.
ஆதேஷ் பாலா, சாம்ஸ், மாஸ்டர் தர்ஷித், ஸ்ரீராம் சந்திரசேகர், அனு கிருஷ்ணா, ரெஹனா, மாரீஸ் ராஜா, அருள்மணி ஆகியோர் நடித்துள்ளனர்.
எஸ்.சுகன் விறுவிறுப்பாக மங்காத்தா, சூது கவ்வும் பாணியில் இயக்கியுள்ளார். வசனம் பாபா கென்னடி, ஒளிப்பதிவு இளையராஜா, இசை நரேஷ், எடிட்டர் ஸ்ரீவர்சன், கலை கே.பி.நந்து, மக்கள் தொடர்பு கோவிந்தராஜ்,
தயாரிப்பு எஸ்.ஆர்.பிலிம் பேக்டரி ஜி.சிவராஜ், ‘ஆக்ஷன் ரியாக்ஷன்’ ஜெனீஷ், பிதா படத்தை ஜூலை 26’ம் தேதி உலகெங்கும் வெளியிடுகிறார்..
Pitha movie shoot completed within 23 hours 23 mins