சாரே கொல மாஸ்… திருமணத்தை எளிதாக நடத்தும் பேட்ட நடிகர்

Petta actor Manikandan changes his marriage plans due to corona pandemic‘பேட்ட’ படத்தில் ரஜினியுடன் நடித்தவர் மணிகண்டன் ஆச்சாரி.

அந்த படத்தில் ஒரு காட்சியில் ரஜினி ஸ்டைலாக துப்பாக்கியை வைத்துக் கொண்டு சூட் செய்வார். அப்போது சாரே கொல மாஸ் என ரஜினியை பாராட்டியிருப்பார்.

இவர் மலையாள சினிமாவில் மிகப்பிரபலமானவர்.

’கம்மாட்டிபாடம்’ என்ற மலையாள படத்தில் நடித்து அந்த மாநில விருதை வென்றவர் இவர்.

இந்த நிலையில் மணிகண்டன் ஆச்சாரிக்கும் அஞ்சலி என்ற பெண்ணுக்கும் அடுத்த மாதம் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

தன் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்திருந்தாராம்.

ஆனால் தற்போது இந்தியாவையே முக்கியமாக கேரளாவை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் தன் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்திருக்கிறாராம்.

Petta actor Manikandan changes his marriage plans due to corona pandemic

Overall Rating : Not available

Latest Post