8 வாரத்திற்கு பிறகே ஓடிடி.; சினிமா டிக்கெட் விலையை தீர்மானிக்க அனுமதி – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

8 வாரத்திற்கு பிறகே ஓடிடி.; சினிமா டிக்கெட் விலையை தீர்மானிக்க அனுமதி – தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து.

இதில் சங்க தலைவர் ரமேஷ் பாபு, பொதுச் செயலாளர் ரோகினி பன்னீர் செல்வம், பொருளாளர் கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆலோசனை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

புதிய ஆபரேட்டர்களை நியமனம் செய்ய வசதியாக ஆபரேட்டர் நியமன விதிகளில் மாற்றம் செய்ய வேண்டும்.

மற்ற மாநிலங்களில் உள்ளது போன்று டிக்கெட் கட்டணத்தை தியேட்டர் உரிமையாளர்களே நிர்ணயித்துக் கொள்ள அரசு அனுமதி அளிக்க வேண்டும்.

சமீபத்தில் உயர்த்தப்பட்ட சொத்து வரி உயர்வில் இருந்து குறிப்பிட்ட தியேட்டர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். முன்பு இருந்தது போன்று தியேட்டர்களுக்கு தனி அட்டவணையின் கீழ் மின்கட்டணம் நிர்ணயிக்க வேண்டும்.

பெரிய திரையரங்குகளை மாற்றி 2 அல்லது 4க்கும் மேற்பட்ட சிறிய திரையரங்குகளாக மாற்றம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

படம் வெளியான 8 வாரங்களுக்கு பின்பே ஓடிடியில் வெளியிட வேண்டும்.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Permission to fix  cinema ticket prices – Theater Owners Association

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்.; முறுக்கு மீசை உடன் கமல் தந்த அப்டேட்

ஷங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்.; முறுக்கு மீசை உடன் கமல் தந்த அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் படம் ‘இந்தியன் 2’.

அனிருத் இசையமைத்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் மிகப் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தில் கமலுடன் சித்தார்த் காஜல் அகர்வால் பிரியா பவானிசாகர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

கொரோனா முதல் அலைக்கு முன்பே இந்த படத்தின் சூட்டிங் தொடங்கப்பட்டாலும் பல காரணங்களால் இதன் சூட்டிங் நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மூன்று வருடங்களுக்கு பிறகு இதன் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளது.

(இதில் நடித்து வந்த விவேக் கொரோனா காலகட்டத்தில் இறந்துவிட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.)

இந்த நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்று செப்டம்பர் 22 முதல் ஆந்திராவில் தொடங்கியுள்ளது.

இது தொடர்பான தகவலை கமல் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதில் முறுக்கு மீசையுடன் கமல்ஹாசன் இருக்கிறார். அவர் இயக்குனர் சங்கருடன் பேசிக்கொண்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

தார் மார் தக்கரு மார்.; சிரஞ்சீவி – சல்மான்கான் இணைந்த ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள்

தார் மார் தக்கரு மார்.; சிரஞ்சீவி – சல்மான்கான் இணைந்த ‘காட்ஃபாதர்’ பட சிங்கிள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மெகா ஸ்டார் சிரஞ்சீவியும், பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான் கானும் இணைந்து நடித்திருக்கும் ‘காட்ஃபாதர்’ படத்தில் இடம்பெற்ற ”தார் மார் தக்கரு மார்…’ என தொடங்கும் சிங்கிள் ட்ராக் வெளியானது. தெலுங்கு மற்றும் இந்தியில் இந்த பாடல் வெளியாகி இருக்கிறது.

டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, பாலிவுட் மெகா ஸ்டார் சல்மான்கான் இருவரும் இடம் பெறும் ‘தார் மார் தக்கரு மார்..’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தெலுங்கு மற்றும் இந்தி மொழியில் வெளியிடப்பட்டிருக்கிறது.

பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்த பாடலில் சிரஞ்சீவி, சல்மான் கான், பிரபுதேவா ஆகியோர் இணைந்து, நடன கலைஞர்களுடன் நடனமாடுவது பிரமிப்பாகவும், ரசிக்கும் வகையிலும் அமைந்திருக்கிறது.

மெகா ஸ்டார்கள், ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருவரும் தனித்துவமாகவும், ஒப்பற்ற வகையிலும் நடனமாடியிருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.

பங்கி பீட்ஸ் எனும் ஒலிக்குறிப்புடன் இசையமைப்பாளர் எஸ். தமன் இந்தப் பாடலுக்கு இசையமைத்திருப்பது, ரசிகர்களுக்கு இன்னிசை விருந்தாக அமைந்திருக்கிறது.

இந்தப் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவில் நடன காட்சிகளை உருவாக்கும் போது நடைபெற்ற சுவாரசியமான அம்சங்களை காட்சிப்படுத்தி இருப்பதும் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது.

குறிப்பாக இரண்டு முன்னணி நட்சத்திர நடிகர்களும் ஒரே வண்ணத்திலான ஆடையை அணிந்து நடனமாடியது ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

நட்சத்திர பின்னணி பாடகியான ஸ்ரேயா கோஷல் தன்னுடைய இனிய குரலால் இந்த பாடலை பாடி அசத்தியிருக்கிறார். இந்தப் பாடலை பாடலாசிரியர் ஆனந்த ஸ்ரீராம் எழுதியிருக்கிறார்.

பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னர் ஜானரில் உருவாகி இருக்கும் காட்ஃபாதர் திரைப்படத்தை தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரான மோகன் ராஜா இயக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் சிரஞ்சீவி, சல்மான் கான் ஆகிய இரண்டு மெகாஸ்டார்களுடன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சத்யதேவ், சுனில், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குநராக பணியாற்றி இருக்கிறார்.

‘காட்ஃபாதர்’ திரைப்படத்தை கொனிடேலா புரொடக்ஷன்ஸ் மற்றும் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆகிய முன்னணி பட நிறுவனங்களின் சார்பில் பிரபல தயாரிப்பாளர்கள் ஆர். பி. சவுத்ரி மற்றும் என். வி. பிரசாத் ஆகியோர் பிரம்மாண்டமான பட்ஜெட்டில் தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தை கொனிடேலா சுரேகா வழங்குகிறார்.

பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் அக்டோபர் ஐந்தாம் தேதி தசரா திருவிழாவின்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

எழுத்து & இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர்கள் : ஆர். பி. சௌத்ரி & என். வி. பிரசாத்
வழங்குபவர் : கொனிடேலா சுரேகா
தயாரிப்பு நிறுவனங்கள் : கொனிடேலா புரொடக்ஷன்ஸ் & சூப்பர் குட் பிலிம்ஸ்
இசை : எஸ். எஸ். தமன்
ஒளிப்பதிவு : நீரவ்ஷா
கலை இயக்குநர் : சுரேஷ் செல்வராஜன்
தயாரிப்பு ஒருங்கிணைப்பு : வக்காதா அப்பாராவ்
மக்கள் தொடர்பு : யுவராஜ்

Telugu – youtu.be/hrKlzAgQQ-Q
Hindi – youtu.be/Z7cvANFjgrA

வைரமுத்துவை விட திறமையானவர்கள்.; மணிரத்னம் பேச்சுக்கு சீனு ராமசாமி கண்டனம்

வைரமுத்துவை விட திறமையானவர்கள்.; மணிரத்னம் பேச்சுக்கு சீனு ராமசாமி கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஏஆர். ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 1992-ஆம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ படத்திலிருந்து, மணிரத்னத்தின் அனைத்து படங்களிலும் கவிஞர் வைரமுத்து தான் பாடல்கள் எழுதி வந்தார்.

இருவரும் சினிமாவில் 30 ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்களாக இருந்து வந்தனர்.

தற்போது முதன்முறையாக மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து பாடல் எழுதவில்லை.

இந்த திரைப்படத்தில் இளங்கோ கிருஷ்ணன், வெண்பா, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுதியுள்ளனர்.

இதுகுறித்து மணிரத்னத்திடம் கேள்வி கேட்டபோது…

வைரமுத்துவை விட தமிழ் சினிமாவில் திறமையான புதிய பாடலாசிரியர்கள் நிறைய பேர் வருகிறார்கள் என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்து இருந்தார்.

இது திரையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து இயக்குனர் சீனுராமசாமி தன் டிவிட்டரில் தெரிவித்துள்ளதாவது…

புதியவர்கள் வருவர் போவர் ஆனால்
நீங்க பீஷ்மர் #ManiRatnam sir
நீங்கள்
நட்டது விதை விருச்சமாகும்,
புதிய கவிஞருக்கு
வாழ்த்துகள்

ஆனால்
“வைரமுத்துவை
விட என
நீங்கள் திறமை சிறுமை செய்தது கோவலன் கொலை தடுமாற்ற சொற்கள்.

உங்கள் ‘இருவர்’ காலம் கண் மை அல்ல
தடம்..

@Vairamuthu @arrahman

என பதிவிட்டுள்ளார்.

Seenu Ramasamy condemn Maniratnam speech about Vairamuthu

உலகளவில் 380 விருதுகளை குவித்த ‘சிதை’ குறும்படம் திரைப்படமானது

உலகளவில் 380 விருதுகளை குவித்த ‘சிதை’ குறும்படம் திரைப்படமானது

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கார்த்தி ராம் இயக்கத்தில் பிஜு தயாரிப்பில் உருவான குறும்படம் தான் ‘சிதை’.

பெண்களின் உறுப்பு சிதைத்தலை மையமாகக் கொண்டு உருவான இந்தக் குறும்படம் பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.

நேர்த்தியான வசனங்கள், ஒளிப்பதிவு, நடிப்பு என அனைத்திலும் அனைவரையும் கவர்ந்திழுத்திருந்தது சிதை.

கடந்த மே 25ல்.. ‘சிதை’ படத்தின் முதல் பாகத்தின் பூஜை நடைபெற்றது.

‘சிதை’ குறும்படம் மூலம் இதுவரை உலகளவில் 380 விருதுகளை குவித்தவர் இயக்குனர் கார்த்தி ராம்.

தற்போது ‘சிதை’ முதல் பாகம் உருவாகியுள்ளது.

பிரபலங்கள் வாழ்த்திய ‘சிதை’ என்ற குறும்படம் தற்போது திரைப்படமாகி வருகிறது.

இயக்குனர் கார்த்திக்ராம் இயக்கத்தில் உருவாகும் ‘சிதை’ படத்தை
Anki production சார்பாக தன்ராஜ் தயாரிக்கிறார்.

படத்தின் நாயகனாக அறிமுகமாகிறார் நரேன் பாலாஜி. கதாநாயகியாக ஐஸ்வர்யா, வில்லனாக பிஜு, முக்கிய கதாபாத்திரத்தில் கிஷோர், மைதிலி, குழந்தை நட்சத்திரமாக
மிராக்கிளின் , லத்திகா ஆகியோர் நடித்துள்ளனர்.

இவர்களுடன் ராஜா, சக்தி, ஜெகன், மனோஜ், வல்லரசு, ரவி
பூவரசன் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கொடைக்கானல் – பெருங்காடு என்ற கிராமத்தில் குறுகிய நாட்களில் படப்பிடிப்பை முடித்துள்ளனர்.

அந்த ஊர் மக்கள் அனைவரும் மிகவும் ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர்.

இயக்குனர் – கார்த்திக் ராம்
நிர்வாக தயாரிப்பாளர் – கிஷோர் மற்ற விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

விரைவில் டைட்டிலும்
இசை வெளியீட்டு விழாவும் நடைபெறும்.

சிதை

Karthi Rams Sithai short film became feature film

கவின் – அபர்ணா நடிக்கும் ‘டாடா’ பட சூட்டிங் அப்டேட்

கவின் – அபர்ணா நடிக்கும் ‘டாடா’ பட சூட்டிங் அப்டேட்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஒலிம்பியா மூவீஸ் S. அம்பேத்குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் கே பாபு இயக்கத்தில், கவின்- அபர்ணா நடிக்கும் படம் ‘டாடா’.

இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான முதல் சிங்கிள் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

அழகான ரொமாண்டிக் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் பார்வையாளர்களை எண்டர்டெயின் செய்யும் நோக்கத்தில் பல விஷயங்களையும் உள்ளடக்கியுள்ளது.

டாடா

மொத்த படப்பிடிப்பும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது.

தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா, ட்ரைய்லர் மற்றும் உலகம் முழுவதும் திரையரங்குகளில் படம் வெளியாக இருக்கும் தேதி என அடுத்தடுத்த அறிவிப்புகளை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது.

கே. பாக்யராஜ், ஐஷ்வர்யா, ‘முதல் நீ முடிவும் நீ’ படப் புகழ் ஹரீஷ், ‘வாழ்’ படப் புகழ் ப்ரதீப் ஆண்டனி மற்றும் பலர் இதில் நடித்திருக்கின்றனர்.

*படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:*

ஒளிப்பதிவு : எழில் அரசு,
இசை : ஜென் மார்ட்டின்,
எடிட்டிங் : கதிரேஷ் அழகேசன்,
கலை: சண்முகராஜ்,
ஆடை வடிவமைப்பு: சுகிர்தா பாலன்,
எக்ஸ்ஸிக்யூட்டிவ் புரொட்யூசர்: APV மாறன்,
ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்.

டாடா

Kavin Abarna Starrer Dada movie shooting update

Its a wrap for #Dada post production work in full swing

@ambethkumarmla @OlympiaMovies @ganeshkbabu @Kavin_m_0431 @aparnaDasss @ungalKBhagyaraj @FouzilOfficial @ActorHachu @TheDhaadiBoy @nalan_premkumar
@Ezhil_DOP @JenMartinmusic @editorkathir @arnchlam @sugirthabbalan

More Articles
Follows