மலையேறிய 90 வயது பாட்டி… மாரிக்கு மக்கள் ஆதரவு.. ஊரெங்கும் ‘பேச்சி’ தான் பேச்சு

மலையேறிய 90 வயது பாட்டி… மாரிக்கு மக்கள் ஆதரவு.. ஊரெங்கும் ‘பேச்சி’ தான் பேச்சு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மலையேறிய 90 வயது பாட்டி… மாரிக்கு மக்கள் ஆதரவு.. ஊரெங்கும் ‘பேச்சி’ தான் பேச்சு

’பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! – தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட்

”நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது” – ‘பேச்சி’ வெற்றி விழாவில் நடிகர் பாலசரவணன் பேச்சு

வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியான இப்படம் விமர்சன ரீதியாக பாராட்டு பெற்று, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது 10 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக படக்குழுவினர் இன்று (ஆக.9) சென்னை பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில்…

“பேச்சி வெற்றி விழா மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. சினிமா வர்த்தகமே இன்று நிலையற்ற சூழலில் இருக்கும் போது பேச்சி என்ற சிறு படம் 10 வது நாளை தாண்டி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

முதல் நாளில் எங்களுக்கு 18 காட்சிகள் ஒதுக்கப்பட்டது, இரண்டாவது நாளில் சென்னையில் மட்டும் 75 ஸ்கிரீன்ஸ் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. இன்று 10 நாட்களை கடந்து 75 சதவீத தியேட்டர்களை நாங்கள் தக்க வைத்துக்கொண்டிருக்கிறோம். பேச்சி படம் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் பிடித்திருக்கிறது. இதற்கு காரணம், பத்திரிகை மற்றும் ஊடகத்தினர் தான். நீங்கள் கொடுத்த ஆதரவு காரணமாக இந்த படம் மக்களை சென்றடைந்திருக்கிறது, அதற்கு உங்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் திரைப்பட கல்லூரியில் படித்துவிட்டு, ரத்னவேலு அவர்களிடம் உதவியாளராக சேர்ந்தேன். அப்போது எளிதில் படம் பண்ணிவிடலாம் என்று நினைத்தேன், ஆனால் எனக்கு வாய்ப்பு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை, பல போராட்டங்களுக்குப் பிறகே இந்த இடத்தில் நின்றிருக்கிறேன்.

இந்த இடத்தில் நிற்பதற்கான வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் கோகுல், என் குருநாதர் ரத்னவேலு ஆகியோருக்கு நன்றி. எனக்கு உறுதுணையாக இருந்த கலரிஸ்ட் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி. இன்று என்னுடைய ஒளிப்பதிவை குறிப்பிட்டு மக்கள் பாராட்டி வருகிறார்கள், அதற்கு காரணம் இவர்கள் தான், இந்த தருணத்தில் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில்…

“பேச்சி படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த பத்திரிகை மற்றும் ஊடகத்தினருக்கு நன்றி. பேச்சி படம் தொழில்நுட்ப ரீதியாக சிறந்த படம் என்று விமர்சனமும், பாராட்டும் கிடைத்தது. இதற்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. இந்த படத்தை மக்களிடம் சரியான முறையில் கொண்டு சேர்த்த வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் முஜிப் சார் மற்றும் சஞ்சய் சார் ஆகியோருக்கு நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர் கோகுல் மற்றும் இயக்குநர் ராமச்சந்திரன் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.

நடிகர் நாட்டு (ராஜா) ராஜதுரை பேசுகையில்…

“முதலில் அப்பா, அம்மாவுக்கு நன்றி, பிரபஞ்சத்திற்கு நன்றி. பார்த்திபன், ராம் அண்ணா, கோகுல், விஜய் ஆகியோருக்கு நன்றி. நான் இதில் நடிக்கும் போது முக்கியமான கதாபாத்திரம் என்று தெரியாது, படம் முடிந்த பிறகு தான் அது தெரிந்தது.

இந்த வாய்ப்பு கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி. தரமான படங்களை மக்களும், பத்திரிகையாளர்களும் பாராட்டி அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பதற்கு இந்த படமும் சான்றாக அமைந்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி.” என்றார்.

வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த சஞ்சய் ஜெய்சங்கர் பேசுகையில்…

“பேச்சி படத்தை பொருத்தவரை ரியல் ஹீரோ பிரஸ் தான். படம் எடுத்தது ஒரு பக்கம் இருந்தாலும், பத்திரிகையாளர்களின் எழுத்து தான் மக்களை திரையரங்கிற்கு கொண்டு வந்தது, பத்திரிகையாளர்களுக்கு வெயிலோன் மற்றும் வெரூஸ் சார்பில் மிகப்பெரிய நன்றி. என்னுடைய அப்பா அடிக்கடி சொல்வார், நம்ம என்னதான் நடித்தாலும், அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பது பத்திரிகையாளர்கள் தான்,.

அவர்கள் எழுதினால் தான் மக்கள் தியேட்டருக்கு வருவார்கள், என்று. அவர் சொன்னது போல் இன்று பேச்சி படம் வெற்றி பெற்றதற்கு பத்திரிகைகள் தான் முதல் காரணம். என் அப்பா மேலே இருந்து பாத்துக்கிட்டு இருக்காரு, நிச்சயம் அவர் மகிழ்ச்சியடைவார். எங்களுடைய முதல் படமே இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது.

இந்த படத்தை எங்களிடம் கொண்டு வந்த சூரி மற்றும் அலிஸுக்கு நன்றி. இந்த படத்தை பார்த்துவிட்டு எங்களிடம் சொன்ன முஜிப், ராஜராஜன் உள்ளிட்ட எங்கள் குழுவினருக்கும் நன்றி. இந்த படத்தை மிக நேர்த்தியாக இயக்கிய இயக்குநர் ராமச்சந்திரன், சிரமமான இடங்களில் படப்பிடிப்பு நடந்தாலும் அதை சிறப்பாக செய்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு நன்றி. படத்தை சரியான முறையில் விநியோகம் செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகனுக்கும் பெரிய நன்றி.” என்றார்.

வெரூஸ் நிறுவனத்தை சேர்ந்த முஜிப் பேசுகையில்..

“இந்த நிகழ்ச்சிக்கு வந்ததற்கு நன்றி. பத்து நாட்களுக்கு முன்பு பேச்சி படத்தின் சிறப்பு காட்சியில் உங்களை சந்தித்தோம். உங்களுடைய எழுத்தால் தான் மக்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். நான் இந்த குறுகிய காலத்தில் பத்திரிகை மற்றும் ஊடகங்கள் குறித்து என்ன புரிந்துக்கொண்டேன் என்றால், படம் பெரியது,

சிறியது என்று பார்க்காமல், கண்டெண்ட் நன்றாக இருந்தால், அதற்கான அங்கீகாரத்தை கொடுத்து மக்களிடம் கொண்டு சேர்க்கும் வேலையை பத்திரிகையாளர்கள் சிறப்பாக செய்கிறார்கள், அதற்காக மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். வெயிலோன் மற்றும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்வதோடு, கடினமாக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் விநியோக தலைமையாளர் குகன் பேசுகையில்….

“ஆடி அமாவாசை, பிரண்ட்ஸிப் டே இந்த தருணத்தில் தான் பேச்சி படம் வெளியானது. பேச்சி அவளோட இடத்தை எடுத்துட்டானு உறுதியாக சொல்லலாம். பிரண்ட்ஸ் அனைவரும் சேர்ந்து திறமையை மட்டுமே நம்பி ஒரு படம் எடுக்குறாங்க. படம் முடிந்து வெளியீட்டுக்கு வரும் போது அங்கும் நண்பர்கள் சேர்ந்து படத்தை வெளியிடுகிறார்கள், அவர்கள் தான் வெரூஸ். கோகுல் பினாய் உள்ளிட்ட வெயிலோன் டீம் மற்றும் வெரூஸ் நிறுவனத்தின் முஜிப், சஞ்சய், ராஜராஜன் உள்ளிட்டவர்களுக்கு நன்றி.

தமிழ் சினிமாவின் உயிர் நாடியே சிறிய படங்களின் வெற்றி தான். பேச்சி போன்ற படங்கள் அதை நிரூபிக்கும் போது சினிமாவுக்கு உயிரோட்டமாக இருக்கும். படம் முடிந்த பிறகு வியாபார சம்மந்தமானவங்க ஈடுபடுபவார்கள். அந்த வகையில், வியாபார ரீதியாக பேச்சி படம் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தை கடந்து கர்நாடகாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவுக்கான வியாபாரம் பேசி முடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தி உரிமை உள்ளிட்ட அனைத்து வியாபாரமும் நல்லபடியாக நடந்திருக்கிறது. முஜிப் சார் சொன்னது போல் சிறிய படம், பெரிய படம் என்பது தாண்டி ரசிகர்கள் மனதில் எந்த அளவுக்கு பதிந்திருக்கிறது என்பது தான் முக்கியம். அந்த வகையில், ரசிகர்கள் மனதில் பெரிய படமாக பதிந்ததற்கு பத்திரிகை நண்பர்கள் தான் காரணம், அவர்களுக்கு நன்றி. அதேபோல் படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் சார், ஒளிப்பதிவாளர் பார்த்திபன், படத்தொகுப்பாளர் அஸ்வின் அனைவருக்கும் நன்றி. பாலசரவணன், காயத்ரி, தேவ் உள்ளிட்ட நடிகர், நடிகைகள் படத்தின் விளம்பர பணிகளுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார்கள், அவர்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பேச்சியின் இந்த வெற்றி இன்னும் தொடரும் என்று நம்புகிறேன். பேச்சி முதல் பாகத்தை தொடர்ந்து இரண்டாம் பாகத்தின் மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நாங்களும் இந்த குழுவினருடன் இணைந்து பேச்சி இரண்டாம் பாகத்தை எதிர்பார்க்கிறோம், என்று தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

இயக்குநர் B.ராமச்சந்திரன் பேசுகையில்…

“இரண்டு வாரங்களுக்கு முன்பு உங்களை சந்தித்தோம், இப்போது மீண்டும் சந்திப்பது மகிழ்ச்சி. பேச்சி படத்தின் வெற்றி மற்றும் நன்றி தெரிவிக்கும் விழா என்பது முதல் பட இயக்குநராக எனக்கு மிக முக்கியமானது. பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விசயங்களும் படத்திற்கான விளம்பரத்திற்காக தான் என்றாலும், என்னை பொறுத்தவரை பத்திரிகையாளர்களுக்கு போடப்பட்ட காட்சி தான் எனக்கான முக்கியமான தருணம். படம் போட்ட பிறகு நான் பதற்றத்துடன் நின்றுக் கொண்டிருந்தேன், காரணம் நீங்கள் தான் முதல் நீதிபதி, அனைத்து படங்களையும் பார்த்துவிட்டு நீங்கள் தான் எப்படி இருக்கிறது என்று சொல்லப் போறீங்க.

அந்த வகையில், என் படத்தை பார்த்துவிட்டு, “தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க” என்று தட்டிக்கொடுத்த பிறகு தான் எனக்கு நம்பிக்கை வந்தது. உங்களால் தான் படம் இவ்வளவு பெரிய வெற்றி பெற்றிருக்கிறது, அதனால் முதல் நன்றி உங்களுக்கு தான்.

அறிமுக இயக்குநராக நான் எவ்வளவு பெரிய ஐடியாவை வைத்து கதை எழுதினாலும், அதை திரைப்படமாக தயாரிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய விசயம். பல படங்கள் தயாரித்து, சினிமா வியாபாரம் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இந்த படம் நல்லா வரும், என்று முடிவு செய்து தயாரிக்கலாம்.

ஆனால், என்னுடன் நண்பனாக பழகிவிட்டு, என் மீது நம்பிக்கை வைத்து, என்னுடன் தயாரிப்பாளராக பயணித்த கோகுல் பினாயின் தைரியத்தை நிச்சயம் பாராட்டியாக வேண்டும், அவருக்கு எனது இரண்டாவது நன்றி. பிறகு எனது தொழில்நுட்ப கலைஞர்கள், நான் என்ன சொல்வேன், என் சிந்தனை எப்படி இருக்கும் என்பதை புரிந்துக்கொண்டு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றி. படத்தில் நடிகர், நடிகைகளும் எனக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். கடினமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தினாலும் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நான் என்ன சொன்னாலும் அதை செய்த பாலசரவணன், காயத்ரி ஆகியோருக்கு நன்றி.

பேச்சியாக நடித்த சீனிபாட்டி இந்த வயதிலும் மலைமீது பயணித்து நடித்துக் கொடுத்தார், அவருக்கு பெரிய நன்றி. இன்று ரசிகர்கள் பேச்சி பாட்டி எங்கே என்று கேட்கிறார்கள்.

பல வருடங்களுக்கு முன்பு பேச்சி என்ற தலைப்பில் ஒரு குறும்படம் எடுத்தேன், அந்த படத்தை பார்த்துவிட்டு பாலுமகேந்திரா சார் என்னை பாராட்டியதோடு, அவருடன் என்னை சேர்த்துக்கொண்டு எனக்கு சினிமா சொல்லிக்கொடுத்தார்.

அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அதேபோல், வங்கி வேலையை விட்டுவிட்டு சினிமாவுக்கு நான் வந்தபோது எனக்கு உறுதுணையாக இருந்த என் குடும்பத்தாருக்கும், என்னுடன் எப்போதும் துணை நின்ற என் நண்பர்கள் என அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்றார்.

படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த ஜென பேசுகையில்…

“பேச்சி என்ற சிறிய படத்தை மிகப்பெரிய இடத்திற்கு கொண்டு சென்ற மீடியாக்களுக்கு மிகப்பெரிய நன்றி. எனக்கு இந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரன் சாருக்கும், கோகுல் பினாய்க்கும் நன்றி. எனக்கு இது தான் முதல் ஸ்கீரின் பிரசன்ஸ். இந்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, இப்படி ஒரு வாய்ப்பை அமைத்துக்கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

நடிகர் தேவ் பேசுகையில்…

“இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே இடத்தில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. அதற்கு காரணம் கோகுல், ராமச்சந்திரன் சார், வெரூஸ் நிறுவனத்தார். ஆனால், இன்றைய நிகழ்ச்சி நடப்பதற்கு பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் மக்கள் தான் காரணம். வெற்றி விழா சந்திப்பு என்று சொன்னார்கள், ஆனால் இது வெற்றி விழா என்பதை விட நன்றி தெரிவிக்கும் விழா என்றால் தான் சரியாக இருக்கும், அதனால் உங்களுக்கு மிகப்பெரிய நன்றிகள். ராமச்சந்திரன் சார் சொன்னது போல், நிறைய சிறப்பு காட்சிகள் போட்டோம். ஆனால், அவர்கள் சொன்னதில் எங்களுக்கு எந்த நம்பிக்கையும் வரவில்லை. ஆனால், படம் வெளியாவதற்கு ஒரு நாளுக்கு முன்பு பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு காட்சி திரையிட்டோம்.

அந்த காட்சியில் உங்களிடம் கிடைத்த பாராட்டுக்குப் பிறகு தான் எங்களுக்கு நம்பிக்கை வந்தது. படம் பத்து நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த வெற்றி தொடர உங்கள் ஒத்துழைப்பு வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். படத்தின் விளம்பர பணிகளை மிக சிறப்பாக செய்து வரும் தர்மா உள்ளிட்ட பி.ஆர்.ஓ குழுவுக்கு நன்றி, எங்களுடன் சேர்ந்து புது புது ஐடியா கொடுத்து சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். ட்ரீம் வாரியர்ஸ் குகன் என அனைவரும் இந்த சிறிய குழுவுக்கு மிகப்பெரிய ஆதரவு கொடுத்திருக்கிறார்கள், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பேச்சி கதாபாத்திரத்தில் நடித்த சீனிபாட்டி பேசுகையில்…

“அனைவருக்கும் வணக்கம், எனக்கு 90 வயதாகிறது. நான் ஏற்காடு மலையில் சிரமப்பட்டு ஏறி நடித்தேன். என்னுடன் அனைவரும் கஷ்ட்டப்பட்டு நடித்தார்கள். இரண்டாம் பாகம் எடுத்தால் அதிலும் நடிப்பேன். உங்களுடைய வாழ்த்துகள் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டும், அனைவருக்கும் நன்றி.” என்றார்.

பாலசரவணன் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த பானு பிரியா பேசுகையில், “பேச்சி படத்தில் என்னை நடிக்க வைத்த வெயிலோன் டீம் மற்றும் இயக்குநருக்கு நன்றி. இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நான் இருக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன், நன்றி.” என்றார்.

வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ராஜராஜன் பேசுகையில்…

“பத்திரிகையாளர்களுக்கு நன்றி, என் நண்பர்கள் சொன்னது போல் சிறிய கண்டெண்டாக இருந்தாலும் அதை பெரிய அளவில் மக்களிடம் கொண்டு சேர்த்தது பத்திரிகையாளர்கள் தான், அவர்களால் தான் இந்த வெற்றி கிடைத்தது. எங்களுடைய முதல் படம் இது, எங்களுடன் இணைந்து விநியோக பணிகளை சிறப்பாக செய்த ட்ரீம் வாரியர்ஸ் குகன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எங்கள் பி.ஆர்.ஓ தர்மா சுரேஷ் சிறப்பாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து கொடுத்து வருகிறார், தொடர்ந்து இதை அவர் செய்ய வேண்டும், நன்றி.” என்றார்.

நடிகர் பாலசரவணன் பேசுகையில்…

“பேச்சி படத்தின் வெளியீட்டுக்காக காத்திருந்த போது நாங்கள் எதிர்பார்த்தது, படம் டீசண்டாக இருக்கிறது, என்று சொன்னால் போதும் என்பது தான். ஆனால், இன்று நாங்கள் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றி கிடைத்திருக்கிறது,

இதற்கு காரணம் பத்திரிகைகள் தான். உங்கள் எழுத்துக்கள் மூலமாகவும், உங்கள் விமர்சனங்கள் மூலமாகவும் படத்தை மக்களிடம் மிகப்பெரிய அளவில் கொண்டு சேத்து உங்களுக்கும், உங்கள் விமர்சனங்கள் மூலம் தியேட்டருக்கு சென்று படம் பார்த்த மக்களுக்கும் நன்றி. நாங்கள் பல தியேட்டர்களுக்கு சென்று பார்த்தோம், அப்போது அனைத்து இடங்களிலும் ஹவுஸ் புல்லாக இருந்தது நாங்கள் எதிர்பார்க்காதது.

இரவுக் காட்சிகள் கூட அரங்கம் நிறைந்த காட்சிகளாக இருந்தது. குடும்பம் குடும்பமாக படத்தை பார்த்தார்கள், சிறியவர்கள், பெரியவர்கள் வரை என அனைத்து தரப்பினரும் படத்தை பார்த்தார்கள், இதற்கு காரணம் உங்களது தெளிவான விமர்சனம் தான், அதற்கு மிகப்பெரிய நன்றி.

அதேபோல் தனிப்பட்ட முறையில் நான் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும், இந்த படத்தில் நான் நடித்த மாரி கதபாத்திரத்தை குறிப்பிட்டு அதில் எனது நடிப்பை அனைவரும் பாராட்டி எழுதியிருக்கிறார்கள். இந்த படம் மட்டும் அல்ல, நான் நடிக்கும் அனைத்து படங்களிலும் என்னை குறிப்பிட்டு பாராட்டி எழுதி வருகிறார்கள், அதற்காகவும் இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனக்கு மாரி கதாபாத்திரத்தை கொடுத்த இயக்குநர் ராமச்சந்திரனுக்கு நன்றி. கோகுல், விஜய் என அனைவரும் நண்பர்கள். இவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைத்தது பெரிய பாக்கியம். இவர்கள் எனக்கு நண்பர்களாக கிடைப்பதற்கு இயக்குநர் அருண்குமார் தான் காரணம், அவருக்கும் நன்றி. படம் பத்தாவது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இதற்கு ஒத்துழைத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சி இன்று மிகப்பெரிய வெற்றி படமானதற்கு ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் ஒரு காரணம், எஸ்.ஆர்.பிரபு சார் மற்றும் குகன் ஆகியோருக்கும் நன்றி.” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் கோகுல் பினாய் பேசுகையில், “இந்த நிகழ்ச்சி பேச்சி படத்தின் வெற்றி விழாவாகவும், நன்றி தெரிவிக்கும் விழாவாகவும் நடக்கிறது. ஆகஸ்ட் 1 ஆம் தேதி திரையிடப்பட்ட பேச்சி சிறப்பு காட்சியின் போதே படத்தின் வெற்றி நிச்சயிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் புரோமோஷனுக்காக ஒரு சிறிய பட்ஜெட் ஒதுக்கினோம். ஆனால், அதை தாண்டி மாஸாக படம் ரீச் ஆனால் மட்டும் தான் வெற்றி கிடைக்கும் என்ற போதில் அதை எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி செய்த பத்திரிகையாளர்களுக்கு நன்றி. படப்பிடிப்பு முடிந்த பிறகு, பின்னணி வேலைகள் தொடங்கிய போது எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்த வெரூஸ் நிறுவனத்தாருக்கு நன்றி. பேச்சியாக நடித்த சீனிபாட்டிக்கு நன்றி, அவரை நான் இப்போது தான் பார்க்கிறேன். படம் வெளியாகும் போது நிறைய தியேட்டர்களில் வெளியாக வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால், ட்ரீம் வாரியர்ஸ் குகன் சார், இந்த படத்திற்கு இப்படி தான் போக வேண்டும் என்று மதிப்பீடு வைத்திருக்கிறார்கள், அந்த மதிப்பீடு மிக சரியாக இருந்தது. தயாரிப்பாளருக்கு எந்த வகையிலும் இழப்பு வரக்கூடாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டமாக எங்களை அழைத்துச் சென்றார்கள், அவர்களுக்கு நன்றி. படத்திற்கு பி.ஆர்.ஓவாக பணியாற்றிய சுரேஷ் மற்றும் தர்மா ஆகியோருக்கு நன்றி. பேச்சி படத்தின் இரண்டாம் பாகம் கேட்கிறார்கள், வெரூஸ் நிறுவனத்துடன் மீண்டும் ஒரு படம் பண்ண போகிறோம், இதற்கு அனைத்துக்கும் நீங்கள் தான் காரணம், உங்கள் அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Pechi part 2 will commence soon says movie team

‘ஹாட் ஸ்பாட்’ பார்த்து ஹாட்டாகிட்டேன் ஆனா இப்போ இணைஞ்சுட்டேன்.. – விஷ்ணு விஷால்

‘ஹாட் ஸ்பாட்’ பார்த்து ஹாட்டாகிட்டேன் ஆனா இப்போ இணைஞ்சுட்டேன்.. – விஷ்ணு விஷால்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘ஹாட் ஸ்பாட்’ பார்த்து ஹாட்டாகிட்டேன் ஆனா இப்போ இணைஞ்சுட்டேன்.. – விஷ்ணு விஷால்

*விஷ்ணு விஷால்  வழங்கும், கே.ஜெ.பி டாக்கீஸ் & செவென் வாரியர்ஸ் பிலிம்ஸ்  தயாரிப்பில், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்தின்  அறிவிப்பு விழா !!*

மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற “ஹாட் ஸ்பாட்” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பில் நடிகர் விஷ்ணு விஷால் வழங்க, Kjb Talkies & Seven Warriors  நிறுவனங்கள் தயாரிப்பில், K V துரை Creative Production மேற்பார்வையில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், ஹாட்ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. 

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக், , KJB  Talkies சார்பில் பாலமணிமார்பன், Seven Warriors சுரேஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

பத்திரிக்கை ஊடக நண்பர்கள் கலந்துகொண்ட  இவ்விழாவினில் “ஹாட் ஸ்பாட் 2 ” படத்தின் பிரத்தியேக புரோமோ திரையிடப்பட்டது. 

இந்நிகழ்வினில் 

*Seven Warriors சார்பில் சுரேஷ் குமார்   பேசியதாவது…*

மீடியா நண்பர்கள் தந்த ஆதரவு தான் இந்த இரண்டாம் பாகம் உருவாகக் காரணம். விஷ்ணு விஷால் ஸ்டூடியோவிற்கு நன்றி. வி என்றாலே வெற்றி தான் விக்னேஷ் கார்க்திக் உடன் இப்போது விஷ்ணு விஷாலும் எங்களுடன் இணைந்துள்ளார்.  உங்கள் ஆதரவைத் தாருங்கள். 

*KJB டாக்கீஸ் சார்பில் பாலமணிமார்பன் பேசியதாவது..*

ஹாட் ஸ்பாட் வெற்றிக்கு நீங்கள் தான் காரணம், இப்போது இரண்டாம் பாக அறிவிப்பை விழாவாகக் கொண்டாடுகிறோம்.  முதல் பாகத்தை இவ்வளவு விமரிசையாக வெளியிடவில்லை. இப்படத்தின் வெற்றிக்கு நீங்கள் தந்த ஆதரவே காரணம் நீங்கள் தான் இப்படத்திற்கு நல்ல மார்க்கெட்டிங் செய்து தந்தீர்கள்.

ஹாட் ஸ்பாட் படத்தின் வெற்றி விழாவில் நண்பர் சுரேஷ் குமார் இரண்டாம் பாகத்தை அறிவித்து விட்டார். இயக்குநரிடம் பேசும்போது உடனே ஆரம்பிக்கலாம் என்றார். துரை அவர்கள் மிகப்பெரிய ஆதரவாக இருந்தார். அவர் தான் விஷ்ணு விஷால் சார் படத்தை வழங்க ஆவலாக இருப்பதாகச் சொன்னார். அது எங்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக இருந்தது. ஹாட் ஸ்பாட் படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி. 

*இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பேசியதாவது…*

ஹாட் ஸ்பாட் படத்தின் விமர்சனங்களைத் தாண்டி,  நீங்கள் தந்த ஆதரவு தான் வெற்றிக்குக் காரணமாக இருந்தது. ஓடிடியிலும்  நன்றாகப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது இரண்டாம் பாகத்தை, விஷ்ணு விஷால் சார் வழங்குவது மகிழ்ச்சி. இப்படி ஒரு கதையை வழங்க நிறையத் தைரியம் வேண்டும். அவர் மிகப்பெரிய மனதுடன் எங்களை ஊக்குவிக்கிறார்.

இந்த புரோமோ ஷீட்டில் கூட மிக எளிமையாக இருந்தார்.  ஹாட் ஸ்பாட் 2 முதல் பாகத்தைப் போலவே, இந்த இரண்டாம் பாகமும் உங்களை மகிழ்விக்கும்,

இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள், மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடுவோம். உங்கள் ஆதரவைத் தொடர்ந்து வழங்க கேட்டுக்கொள்கிறேன் நன்றி. 

*நடிகர் விஷ்ணு விஷால் பேசியதாவது*

ஹாட் ஸ்பாட் 2 நான் இல்லாமல் சாத்தியமில்லை என்று எனக்கு முன்னாடி பேசியவர்கள் கூறுகிறார்கள்… ஆனால் அப்படியில்லை, நல்ல படம் கண்டிப்பாக எப்படியாவது  வந்தே தீரும். நல்ல படைப்புகள் கண்டிப்பாக வெற்றி பெறும். ஹாட் ஸ்பாட் டிரெய்லர் பார்த்துவிட்டு எனக்குப் பயங்கர கோபம், கலைக்கு போன் செய்து திட்டினேன்.

சினிமா எப்போதும் சமூகத்தில் பாதிப்பைத் தரும் என நம்புபவன் நான், அதனால் எனக்குக் கோபம் வந்தது. எல்லோரும் போல் நானும் இருந்தேன், ஆனால் படம் வந்த பிறகு வந்த பாசிடிவ் விமர்சனங்கள் ஆச்சரியமாக இருந்தது.

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் தான் பார்த்தேன் ஒவ்வொரு கதையும் எனக்கு அவ்வளவு பிடித்தது. எனக்கே என் மகனை எப்படி வளர்க்க வேண்டும் எனப் புரிய வைத்தது. அப்போதே விக்னேஷை அழைத்து  பாராட்டினேன். இரண்டாம் பாகத்தின் கதையை என்னிடம் சொன்னார். எனக்கு மிகவும் பிடித்தது. எனக்குக் கடைசி கதை ரொம்ப பிடித்துள்ளது. பார்க்கும் போது உங்களுக்கும் பிடிக்கும். இந்த 15 வருட அனுபவத்தில் நல்ல கதைகள் தேர்ந்தெடுக்கும் திறமை வந்துள்ளது.

ஒரு தயாரிப்பாளராக மாறியுள்ளேன். அதன் முதல் படி ஹாட் ஸ்பாட் 2. இன்னும் பல நல்ல படங்கள் தயாரித்து வருகிறோம். விஷ்ணு விஷால்  ஸ்டூடியோ மூலம் நல்ல படங்களைத் தயாரித்து வழங்குவேன்.

விஷ்ணு விஷால் தயாரிப்பு நிறுவனம் மற்றும் K V துரையின்
D Company நிறுவனம் உடன்  இணைந்து பல படங்கள் தயாரித்து வழங்கவுள்ளேன். விரைவில் அறிவிப்பு வெளியாகும்… உங்கள் ஆதரவைத்  தாருங்கள் நன்றி.

இப்படத்தினை Seven Warriors சார்பில்  சுரேஷ் மற்றும் KJB  Talkies சார்பில் பாலமணிமார்பன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். KV துரை கிரியேடிவ் புரடியூசராக பணியாற்றுகிறார். விஷ்ணு  விஷால்  ஸ்டூடியோஸ் சார்பாக முன்னணி நட்சத்திர நடிகர் விஷ்ணு விஷால் வெளியிடுகிறார்…

இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் துவங்கியுள்ளது, விரைவில் படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்..

Hotspot 2 much presented by Vishnu Vishal

ரஞ்சித் போன்ற இயக்குனர்களால் நான் நடிகன்.. எனக்கு கிடைத்த பரிசு ரசிகர்கள்.. – விக்ரம்

ரஞ்சித் போன்ற இயக்குனர்களால் நான் நடிகன்.. எனக்கு கிடைத்த பரிசு ரசிகர்கள்.. – விக்ரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ரஞ்சித் போன்ற இயக்குனர்களால் நான் நடிகன்.. எனக்கு கிடைத்த பரிசு ரசிகர்கள்.. – விக்ரம்

சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு

சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘தங்கலான்’ படத்தின் இசை வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ எனும் திரைப்படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஏ. கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.

எதிர்வரும் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

நடன கலைஞர்களின் பிரம்மாண்டமான நடனம் – நாட்டுப்புற கலைஞர்களின் கிராமிய இசை- என பல்வேறு நிகழ்வுகளால் இந்த விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

இசையமைப்பாளர் ஜீ.‌ வி பிரகாஷ் பேசுகையில்…

” இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள். அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன்.‌

பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாக பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன். என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன். ரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா- இயக்குநர் பா. ரஞ்சித் -நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாக பயன்படுத்தி முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களை தொடர்ந்து, ‘தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன்.

இயக்குநர் பா. ரஞ்சித்தின் மிகப்பெரிய கனவு படைப்பு இது. இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானவேல் ராஜா- அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன். இந்த படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ” என்றார்.

நடிகர் பசுபதி பேசுகையில்…

”இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு பல சிறப்பு காரணங்கள் இருக்கிறது. முதலாவது காரணம் பா. ரஞ்சித். இந்த கதைக்களம் புதிது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத களம் இது. புது அணுகுமுறை. ரஞ்சித்தின் படங்களில் ஒரு புது தேடல் இருக்கும். இது என்னை மிகவும் கவர்ந்தது.‌ அவருடைய தேடல் எங்களுக்கானதாகவும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் எங்கள் அனைவருக்கும் சிறப்பானது.‌” என்றார்.‌

நடிகர் டேனியல் கால்டாகிரோன் பேசுகையில்…

” இந்தப் படத்தின் மூலம் ‘நன்றி- வணக்கம் -சென்னை’ ஆகிய தமிழ் வார்த்தைகளை கற்றுக் கொண்டேன். விக்ரம் எனக்கு சகோதரரை போன்றவர்.‌ அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர். என்னுடைய வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கம். என்னுடைய சென்னை சகோதரர் விக்ரம்.

இங்கு வருகை தந்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் ஓராண்டு பழகி இருக்கிறேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது. இயக்குநர் பா. ரஞ்சித்தும் என்னை கவர்ந்தவர். அவருடைய கற்பனையை நாங்கள் நனவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம். ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா இந்திய சினிமாவில் சிறந்த நடிகை. அற்புதமாக நடிக்க கூடிய திறன் படைத்தவர். இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

நடிகை பார்வதி பேசுகையில்…

” நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை.

ஜீ. வி. பிரகாஷ் இந்த படத்திற்காக வழங்கிய இசை – ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது. இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றி படங்களை வழங்கிய நிறுவனம். இவர்களுடன் இந்த படத்தை தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது. இயக்குநர் பா. ரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. அந்தக் கனவு இந்த படத்தில் நனவானது.

அவருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தும் என்னால் பல்வேறு காரணங்களால் ஏற்க இயலாதிருந்தது. ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. நான் கங்கம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.‌

ஆனால் படப்பிடிப்பு தளத்தில் அவருக்கு நிறைய நெருக்கடி கொடுத்தேன். கேள்விகளை கேட்டு தொல்லை கொடுத்தேன். ஆனால் அவர் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார்.‌

அவர் உருவாக்கிய கங்கம்மா என்ற கதாபாத்திரம் மட்டுமல்ல அவர் உருவாக்கிய உலகம், அரசியல் இதற்கெல்லாம் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ அவருடைய இயக்கத்தில் கங்கம்மாவாக வாழ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.‌ உடன் நடிக்கும் சக கலைஞர் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும். இதனைத் தான் நான் ஒரு கலைஞருக்கான குறைந்தபட்ச தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ஆனால் உடன் நடிக்கும் சக கலைஞர்கள்- நடிகைகள்- நடிகர்கள் – மீது பேரன்பு கொண்டவர் சீயான் விக்ரம். நான் கங்கம்மாவாக வாழ வேண்டும் என்றால் அவர் தங்கலானாக வாழ்ந்தால் தான் முடியும். இதற்காக விக்ரமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர் ஏற்று நடித்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை. அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படப்பிடிப்பு தளத்தில் மாளவிகா, பசுபதி போன்றவர்கள் நடிக்கும் போது நான் தூரத்தில் இருந்து தான் பார்த்து ரசித்திருக்கிறேன்.‌ படத்தில் என்னுடைய வாரிசுகளாக நடித்த நடிகர்களுடன் ஒரு குழுவாகத் தான் இருப்போம்.‌

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். வெற்றியைப் பெறலாம். நம் வாழ்க்கை எப்போதும் அரசியலுடன் தான் இருக்கிறது. நாம் எதை செய்தாலும் அது அரசியல். அந்த வகையில் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல. சுதந்திரம், விடுதலை பற்றி நிறைய பேசுகிறோம்.

இதனை தொடர்ந்து பேச வேண்டும்.‌ பாகுபாடு என்பது இன்றும் ஏன் இருக்கிறது என்று குறித்தும் பேச வேண்டும். இதைப்பற்றி நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் இதில் எவ்வளவு அசௌகரியம் இருந்தாலும்.. ஏனெனில் சினிமா என்பது அரசியல். கலை என்பதும் அரசியல்.

இதற்காக ரஞ்சித் ஒரு ஆர்மியையே வைத்திருக்கிறார். அவருடைய படை வீரர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி” என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில்…

” இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.‌ தங்கலான் என் இதயத்தின் ஒரு பகுதி. என்னுடைய கலை உலக பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை.‌ இந்த ஒன்றரை ஆண்டு கால பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது. இந்த திரைப்படத்தில் பணியாற்றிய போது மனிதநேயமிக்க கலைஞர்களை சந்தித்தேன்.

ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் ரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என் மீது நம்பிக்கை வைத்து இந்த வேடத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதற்கு முன் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்க வில்லை என நினைக்கிறேன்.

விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.‌ சக நடிகையை சௌகரியமாக …அக்கறையுடன் .. அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை.‌

தங்கலான்- ஒரு கூட்டு முயற்சி. இந்த படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.

தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா பேசுகையில்…

” ஒரே தருணத்தில் ‘தங்கலான்’, ‘கங்குவா’, ‘வா வாத்தியார்’ போன்ற படங்களை தயாரிப்பதற்கு காரணம் எனகாகு பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான். இவரைத் தொடர்ந்து தனஞ்செயன், ராஜா, தினேஷ் ,சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம்.‌ இதனை கடந்து வருவதற்கு மிக கடினமாக இருந்தது. இந்த தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்த் பண்டாரி. அவருக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவருடன் அபினேஷ் இளங்கோவன், தங்கராஜ், ஜீ. வி. பிரகாஷ், ஏ. எல். விஜய் ஆகியோரும் உதவினர்.

ஜீ. வி. பிரகாசுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன். அவரிடம் ஒரு பணியை கொடுத்து விட்டால்.. தன் சொந்த பணியாக நினைத்து, தயாரிப்பாளரின் எண்ணத்தை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவது அவருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார். படத்திற்கு அற்புதமான பாடல்கள் வழங்கி இருக்கிறார்.‌ படத்தின் பின்னணி இசையை நான் இதுவரை கேட்கவில்லை. அத்துடன் படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்திருக்கிறது.‌ இதற்கு இயக்குநர் பா. ரஞ்சித் தான் காரணம்.

இந்த படத்தில் பார்வதி- மாளவிகா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இருவரும் இரு வேறு எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை நான் பார்த்தபோது எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. இந்தப் படத்துடன் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆகஸ்ட் 15 எங்களுக்கு மறக்க முடியாத நாள். ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன் ‘அட்டக்கத்தி’ எனும் திரைப்படம் இந்த நாளில் தான் வெளியானது.

பா. ரஞ்சித் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ஏராளமானவர்களுக்கு அடையாளத்தை உருவாக்கித் தருகிறார். இசைக் கலைஞர்களுக்கும் அவர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அவருடைய சமுதாய சிந்தனையும், சினிமா மீது இருக்கும் அவருடைய காதலும்.. இன்னும் மிக வீரியமான படைப்பினை அவர் வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

விக்ரம் – அவருடைய பயணமானது மிகவும் கடினமானது. ஆனால் எந்த இடத்திலும் அவர் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டதில்லை. சினிமா- ஒரு கடினமான விடயம் என்று எப்போதும் வெளிப்படுத்துவதில்லை.

இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும். ‘இந்த வேலையை செய்வதற்கு வேற ஆள் கிடையாது’ என்று. அது விக்ரமுக்கு பொருத்தமானது.‌ உண்மையை சொல்லப்போனால் இந்த படத்தில் விக்ரம் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை. இந்த படத்தில் அவருடைய கடின உழைப்பிற்கு அவர் இன்னும் கூடுதலான உயரத்தை தொடுவார். இதைவிட சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.‌ அவருடைய நடிப்பில் உலக சினிமாவை ஒரு ரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார் என நம்புகிறேன்.‌ ரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும். ” என்றார்.

இவ்விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில்…

” மகிழ்ச்சியான தருணம் இது. ‘அட்டகத்தி’ படத்தில் ஞானவேல் ராஜாவுடன் தொடங்கிய இந்தப் பயணம். எனக்கு ஆதரவு கொடுத்து இந்த படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பளித்து, என் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஞானவேல் ராஜா.‌ அவரை மறக்க கூடாது என்பதற்காக உருவாக்கியது தான் ‘தங்கலான்’ என நான் நினைக்கிறேன்.

சர்பட்டா பரம்பரை படத்திற்கு பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.‌ அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன். அப்போது என்னிடத்தில் ‘அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்?’ என கேள்வி கேட்டனர். அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்.

அவருடன் இணைந்து நின்றதற்காக அவர் செய்த விசயம் சாதாரணமானதல்ல. தங்கலான் என்ற ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற போது அதன் பட்ஜெட் மீது பெரும் தயக்கம் இருந்தது. ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் நிறைவடையும் வரை எந்த ஒரு சிறிய தடையை கூட வரவிடாமல் படத்தை நிறைவு செய்தார்.

நான் நினைத்த ஒரு படத்தை.. எந்தவித சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு பெரிய ஆதரவை அவர் வழங்கினார். இதற்காக அவருக்கு இந்த தருணத்தில் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நன்றியை ஒரு வெற்றியாக வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு தயாரிப்பாளராக அவர் என் மீது வைத்த நம்பிக்கையை.. ஒரு சகோதரராக அவரின் மீது வைத்த நம்பிக்கையை.. ஒரு வெற்றியை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த திரைப்படம் நீங்கள் நினைப்பது போல் பிரம்மாண்டமான வெற்றியை வழங்கும் என நம்புகிறேன். அத்தகைய வெற்றியை இந்த படைப்பு கொடுக்கும் .

சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த சினிமாவை எப்படி பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?..

நான் கலைக் கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாக புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன். நான் கலை கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள். அதன் பிறகு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன். நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது. அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன். ‘சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்’, ‘லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ , ‘சினிமா பாரடைஸ்’ இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது. இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்கு செல்லக்கூடாது என நினைத்துதான் இதில் நுழைந்தேன்.

நாம் சினிமாவை இயக்கினால் நம்முடைய பிரச்சினைகளை சொல்லலாம் என நினைத்தேன். சொல்லப்படாத கதைகளை சினிமாவில் சொல்லலாம் என நினைத்தேன். இன்றும் சினிமா ஒரு ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கிறது. இந்த ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகத்தின் மூலமாக சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் எளிதாக கடத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ள தீர்மானித்தேன்.‌ இதனால்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

சினிமா என்னை தேர்ந்தெடுக்கவில்லை நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன். ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கிறது. வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கிறது. வரலாற்றை படிக்கும் போது நான் யார்? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் எழுகிறது. வரலாற்றில் நான் ஏன் இப்படி இருந்தேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது. என்னுடைய மக்களுக்கும் இப்படி ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஏன்? இவ்வளவு பாகுபாடு இருக்கிறது. ஏன் பிரிவினை இன்றும் இருக்கிறது.. என பல கேள்விகள் இருக்கிறது. இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால்… வரலாறு ஒரு பக்க சார்புடையதாக இருக்கிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை. அவர்களுடைய மொழி இல்லை.‌ அவர்களைப் பற்றிய குறிப்புகள் கூட இல்லை. தேடித்தேடி பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இதுபோல்தான் சினிமாவிலும்… எது மாதிரியான படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் என பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து எந்த படங்களும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான தேடலுடன் தான் நான் சினிமாவில் வந்தேன்.‌ குறிப்பாக பாபா சாகிப் அம்பேத்கரின் தீண்டப்படாதவர்கள் யார்? என்ற ஒரு புத்தகம் இருக்கிறது. அந்த புத்தகத்தை வாசிக்கும் போது தான் மறைக்கப்பட்ட வரலாறை உருவாக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது.

கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட எழுத்துகள் தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது..? ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய உணர்வை கற்பனையான உத்தி மூலம் மீள் உருவாக்கம் செய்வது தான் இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே அந்த வரலாற்றின் தேவையை உணர்ந்து அதனை திரைப்படங்களின் மூலமாக நான் தேடுகிறேன். ஒரு மாணவனாக… ஒரு வரலாற்று ஆய்வாளனாக… நான் இருப்பதை பெருமிதமாக கருதுகிறேன். இந்த சினிமா வரலாற்றை தேடுவதுடன் மட்டுமே நிறைவடைந்து விடுகிறதா..! அது இல்லை. சினிமா என்பது இங்கு ஒரு வலிமையான ஊடகமாக இருக்கிறது. மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது. மக்கள் அதனுடன் மிகவும் உணர்வுபூர்வமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வரலாற்று ஆய்வுகளோ அல்லது நம்பிக்கைகளோ மட்டும் சினிமா அல்ல. அது வெற்றிகாரமானதாக மாற்றம் அடையுமா ? என எனக்கு கணிக்க தெரியவில்லை.‌

சினிமாவிற்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்து தான் சினிமாவிற்குள் வந்தேன்.‌ ஆனால் சினிமா வித்தியாசமாக இருந்தது. அதிலும் தமிழ் சினிமா மிக வேறுபாடாக இருந்தது. தமிழ் சினிமாவில் நான் நினைக்கும் கருத்துக்களை சொல்ல முடியுமா..? என்ற பயமும் எழுந்தது. இந்த பயத்தை நீக்கியது எங்கள் இயக்குநர் வெங்கட் பிரபு தான்.

அவருடன் உதவியாளராக நான் பணியாற்றிய போது, ‘சென்னை 28’ படத்தில் அவர் சென்னையின் அடையாளத்தை கிரிக்கெட் மூலமாக பதிவு செய்திருந்தார்.‌ அது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த திரைப்படத்தை இளைய சமுதாயத்தினர் கொண்டாடினார்கள். சென்னை 28 படத்தின் வாழ்வியலும்.. என்னுடைய வாழ்வியலும் வேறு வேறு அல்ல. இரண்டுக்கும் அதிக நெருக்கம் உண்டு.‌ அப்போது ஒரு கொண்டாட்டத்தை.. ஒரு மகிழ்ச்சியை.. சொல்லப்படாத கதைகள் மூலம் நாம் செல்லும்போது.. எளிதாக ரசிகர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற ஒரு விசயத்தை வெங்கட் பிரபுவிடம் கற்றுக் கொண்டேன்.

அதன் பிறகு ஏற்கனவே நான் எழுதிய பல கதைகளை ஒதுக்கிவிட்டு, ‘அட்டகத்தி’ படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். என்னுடைய வாழ்வில் இருந்து நிறைய சம்பவங்களை எடுத்து அதனை சினிமாவாக உருவாக்கினேன். அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நீண்ட ஒரு கடிதத்தை எழுதி வழங்கினோம். அதில் எங்களுடைய நம்பிக்கையை சொல்லி இருந்தேன்.

அட்டகத்தி படத்தை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள். அந்த வாழ்வியலை ரசிகர்கள் ஏற்றுக் கொண்டவுடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவானது. இந்த நம்பிக்கையின் காரணமாக அடுத்ததாக ‘மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கினேன். அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போதும் எனக்கு பயம் இருந்தது. இந்தப் படத்தை உருவாக்கும் போது தயாரிப்பாளர்களிடம் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படம். அவர்களுடைய கோணத்தில் இருந்தால் இந்த படம் உருவாகி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருந்தேன்.‌ தயாரிப்பாளர்களும், கார்த்தியும் இதனை புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள். இந்தப் படம் மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியை அளித்தது. மெட்ராஸ் படம் வெற்றி பெற்றதாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்த படம் பிடித்ததாலும் எனக்கு ‘கபாலி’ படத்தின் வாய்ப்பினை வழங்கினார். எனக்கு அவருடன் பணியாற்றும்போது உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது. அவருக்கு என்னுடைய அரசியல் மிகவும் பிடிக்கும். அந்தப் படம் வெற்றி பெற்றதால் தான் மீண்டும் எனக்கு ‘காலா’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

அதன் பிறகு ‘சர்பட்டா பரம்பரை’ ‘நட்சத்திரம் நகர்கிறது’.. இவையெல்லாம் என்னுடைய தேடல்கள் தான். வரலாற்றில் நான் யார்? என்பதனை தேடும் படைப்புகளாகத்தான் இவை இருந்தன.

இந்தத் தருணத்தில் தான் விக்ரம் என்னை அழைத்தார். சேர்ந்து பணியாற்றலாம் என விருப்பம் தெரிவித்தார். விக்ரமை பல வடிவங்களில் எனக்கு பிடிக்கும். அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்கு பிடிக்கும். ஏனைய வணிக ரீதியான நட்சத்திரங்களை போல் நான் விக்ரமை பார்த்ததில்லை. ஏனெனில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்பவர். ‘ஐ’ படத்தில் ஒரு சிறிய பகுதிக்காக தன்னை மாற்றிக்கொண்ட விதம் எனக்கு பிடித்திருந்தது. அதில் அவருடைய கலை மீதான தீவிர நேசிப்பு எனக்குத் தெரிந்தது. இதுபோன்றது ஒரு மகா கலைஞருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டேன்.‌

முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும்போது எனக்குள் பயம் இருந்தது. இயக்குநராக ஒரு கதையை எழுதி விட்டேன். இந்த கதையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால் விக்ரமுக்கு என சில தேவைகள் உண்டு. இதையெல்லாம் அவரை சந்திக்கும் போதே விவரித்தேன்.
அவரும் முழுமையாக புரிந்து கொண்டு அற்புதமான ஒத்துழைப்பை வழங்கினார்.

அவரிடம் கதையை கூட என்னால் ஒழுங்காக சொல்ல முடியவில்லை, ஆனால் நான் சொல்ல நினைத்ததை அவர் முழுவதாக புரிந்து கொண்டார். அவர் என் ஆத்மாவிற்குள் நுழைந்து அதனை புரிந்து கொண்டார் என நான் நினைக்கிறேன். நான் நினைத்ததை சொல்வதற்கு சரியான வார்த்தைகளை பயன்படுத்தத் தெரியாது. அதில் நான் பலவீனமானவன் தான். ஏனெனில் நான் என்னுடைய உலகத்திலிருந்து இயங்குபவன்.

அவர் ஒப்புக்கொண்டவுடன் அந்தத் தருணத்தில் இருந்து தான் எனக்குள் மிகப்பெரிய சவால் உருவானது. கலைக்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் ஒரு கலைஞன்.‌ அவரை கையாள்வது மிகவும் கடினமானது என எனக்குத் தெரியும். அவரை அந்த கதாபாத்திரமாக உருமாற வைப்பதில் சவால் இருந்தது.‌ அதே தருணத்தில் மக்களிடத்தில் எளிதாக சென்று சேரும் வகையில் ஜனரஞ்சகமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தக் கதை எழுதி முடித்த பிறகு.. பல இடங்களில் என்னை பயணிக்க வைத்தது. பல விசயங்களை தெரிந்து கொண்டேன். எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் ஆகியோரிடத்தில் பெரும் விவாதமே எழுந்தது. இந்த கதைக்குள் பல சிக்கலான விசயங்கள் இருக்கிறது.

இந்தப் படத்தில் புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம். ஃபேண்டஸி மேஜிக் வேர்ல்ட் எனக்கு மிகவும் பிடிக்கும். புதிய ஜானரில் நான் இயக்கும் திரைப்படம் இது. இந்த புதிய உலகத்திற்குள் நான் நுழையும் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் நடிகர்களும் தொழில் நுட்ப கலைஞர்களும் தான். இது எனக்கு புது நம்பிக்கையை அளித்தது.‌

விக்ரம் அந்த உலகத்திற்குள் என்னை எளிதாக பணியாற்ற வைத்தார். படப்பிடிப்பின் முதல் நாள் முதல் காட்சியின் போது நான் நினைத்த மாதிரி தங்கலானாக விக்ரம் வந்து நின்றார். அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அதிலும் அவர் காடையன் கதாபாத்திரத்தில் தோன்றும் போது என்னை ஆச்சரியப்படுத்தினார் இதற்காக நடைபெற்ற ஒத்திகையின் போதும் அவர் கலந்து கொண்டார். அவரிடமிருந்து நான் கலையை எப்படி நேசிப்பது என்ற விசயத்தை கற்றுக் கொண்டேன். ஒரு மாணவரை பரிசோதிக்கலாம் ஆனால் ஒரு ஆசிரியரை எப்படி பரிசோதிப்பது..? ஒரு ஆசிரியரை பரிசோதிப்பது போல் இருந்தது.

படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீசூட் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன், உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது. அந்தக் காட்சி நிறைவடைந்ததும் உடனடியாக என்னுடைய உதவியாளரை அழைத்து அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா? என்று கேள் என சொல்வேன். அவர்கள் விக்ரமிடம் கேட்டுவிட்டு வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன் என பதில் அளிப்பார். அதனால் மீண்டும் அதே காட்சியை படமாக்கினேன் இந்த விசயத்தில் அவரிடம் நான் சற்று கடினமாக நடந்து கொண்டேன். அதற்காக இந்த தருணத்தில் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் நோக்கம் என்னவென்றால் அவரை எப்படியாவது திரையில் தங்கலானாக கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதனை விக்ரமும் புரிந்து கொண்டு இன்றுவரை எனக்கு சகல விதங்களிலும் ஆதரவாக இருக்கிறார். இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார். என் மீதும் இந்தப் படத்தின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வெற்றி பெற வேண்டும். என்னுடைய விருப்பமும் அதுதான். இது சாத்தியமாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

விக்ரமை தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கு இணையாக ஒருவரை தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தபோது என் மனதில் தோன்றியவர் பசுபதி தான். அவரும் ஒரு திறமையான கலைஞர். இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.‌

பார்வதி – மாளவிகா இருவரும் முக்கியமான கதாபாத்திரங்கள். இந்த திரைப்படத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறது.‌ பார்வதியை ‘பூ’ படத்திலிருந்து அவரை பின் தொடர்கிறேன். அவருடைய திறமைக்கேற்ப கதை இருந்தால் தான் அவரை அழைக்க வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன். இந்த படத்தில் அது சாத்தியமானது.‌

இந்த திரைப்படத்தை கருணையற்ற மனிதனாக இருந்தால் மட்டும் தான் உருவாக்க முடியும் என நான் நினைத்தேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் திறமையாக அர்ப்பணிப்புடன் நடித்தார்கள். நான் ஏனைய படங்களை இயக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் மகிழ்ச்சியாக தான் பணியாற்றுவேன். ஆனால் இந்த படத்தில் என்னை நானே வருத்திக் கொண்டு பணியாற்றினேன்.‌ இப்போது வரை மன உளைச்சலுடன்… ஒருவித தவிப்புடன் தான் இருக்கிறேன். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்ற பிறகு தான் மகிழ்ச்சி அடைவேன்.

மாளவிகா- இந்த கதாபாத்திரத்தை எழுதி விட்டேனே தவிர.. இதனை திரையில் கொண்டு வருவதற்கு நிறைய சிரமப்பட்டேன். இதனை உணர்ந்த மாளவிகாவும் கடுமையாக முயற்சி செய்து நடித்திருக்கிறார்.

டேனியல்- அவருக்கும் எனக்கும் மொழி பிரச்சனை. அதன் பிறகு கலாச்சார பிரச்சனை. ஆனால் எல்லாவற்றையும் கடந்து டேனியல் அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.

ஜீ வியுடன் இணைந்து பணியாற்றும் போது.. நட்புடன் பணியாற்றுவது போல் இருந்தது. எல்லாவற்றையும் விட என்னுடைய உணர்வை புரிந்து கொண்டு.. என்னுடைய தேடலை புரிந்து கொண்டு.. பொருத்தமான இசையை வழங்கி பெரும் பக்க பலமாக இருந்தார். அவருக்கும் இந்த தருணத்தில் சிறப்பான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் அனைவரும் ரசிக்கும் படமாக இருக்கும். நான் எப்போதும் படத்தை பொழுதுபோக்காக மட்டும் உருவாக்குவதில்லை. அதனுடன் சமூகத்திற்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்றும் நினைப்பேன்.‌ பொழுதுபோக்கு அம்சங்களை கடந்து இந்த சமூகத்திற்கு ஏதாவது ஒரு விசயத்தை வழங்கிட முடியும் என்பது தான் என்னுடைய பார்வை.‌

இந்த சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது. இந்த சமூகத்தில் இருந்து நான் நிறைய பெற்றிருக்கிறேன். அதில் இன்பங்களும் உண்டு. துன்பங்களும் உண்டு. நிறைய படிப்பினையும் இருக்கிறது. இதில் நான் பல விசயங்களை உட்கிரகித்திருக்கிறேன். அதனை நான் கலை வடிவமாக மாற்றி சினிமாவாக உங்கள் முன் படைத்திருக்கிறேன். இந்த சினிமா உங்களுக்குள் இருக்கும் அந்த உணர்வை தொடும் என நம்புகிறேன். இதன் மூலம் இந்த சினிமா சில விவாதங்களை ஏற்படுத்தும். சில கேள்விகளை எழுப்பும். அந்த கேள்விகளுக்கான பதிலை தேடுவதன் மூலமாக வரலாற்றில் நாம் மறந்த.. மறைத்த.. பல விசயங்களுக்கான பதிலை பெற முடியும் என நம்புகிறேன். இதுதான் என்னுடைய வலிமை என நம்புகிறேன். இதுதான் என்னுடைய அரசியல். இந்த அரசியல் இல்லையென்றால் நான் இல்லை. இதற்காக அண்ணன் பாபா சாகிப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியை சொல்கிறேன். அவர்தான் ‘நீ உன் சமூகத்திற்காக.. உன் மக்களுக்காக.. பேசியாக வேண்டும்’ என்ற உத்வேகத்தை வழங்கியவர். அவருடைய குரலாக.. அவருடைய மாணவராக.. அவருடைய சீடராக. தொடர்ந்து நான் இயங்குவேன்.‌ ” என்றார்.

இவ்விழாவில் சீயான் விக்ரம் பேசுகையில், ” இந்த படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான். இது போன்றதொரு படைப்பை உருவாக்குவதற்கு தனித்துவமான துணிச்சல் தேவை. அதனை செய்து சாதித்ததற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் ஒரு ‘ஓ’ போட்டு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றி கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்.

படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்து அற்புதமாக பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாருக்கும் நன்றி. படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் முக்கியமானது. இந்த படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள். இன்றைய விழாவின் நாயகன் அவர்தான். படத்தில் நாங்கள் உணர்ந்து நடித்த விசயத்தை .. நீங்கள் திரையில் அற்புதமான இசை மூலம் மேம்படுத்தி இருக்கிறீர்கள். நீங்கள் உருவாக்கிய ஒலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தது. இதற்காக உங்களுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்காக ஆர்வத்துடன் காத்திருந்து வருகை தந்த என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய என்னுடைய குழுவினருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததில்லை. ஏனெனில் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதிலும் குறிப்பாக முப்பையிலிருந்து வருகை தந்த டாம் எனும் கலைஞர்.

இந்த கதாபாத்திரத்தை இயக்குநர் ரஞ்சித் கற்பனை செய்து உருவாக்கியிருந்தாலும், இதனை திரையில்‌ காணும் தோற்றத்தை உருவாக்கியவர் ஒப்பனை கலைஞர் டாம் தான்.

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் தோன்றும் தொப்பையை நிஜமாகவே சாப்பிட்டு சாப்பிட்டு ஏற்படுத்திக் கொண்டதுதான்.

என்னுடைய குழுவை சேர்ந்த ஷ்ரவண் டாட்டூவை வரைவார். மேலும் என்னுடைய குழுவை சேர்ந்த கலை , பிரின்ஸ் இவர்களெல்லாம் என்னுடைய ஒப்பனையை சீராக்கியவர்கள். செதுக்கியவர்கள்.

‘தூள்’ படத்தில் தொடங்கி இதுவரை ஆறு படங்களில் பசுபதி உடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவரை நான் யாருடனும் இவ்வளவு படங்களில் நடித்ததில்லை.‌ இந்தத் திரைப்படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் பேசும் ஸ்லாங்கை அனைவரும் மேடையில் மிமிக்கிரி செய்வார்கள். அந்த அளவிற்கு அவருடைய பேச்சு பிரபலமாகும். அவர் இப்போது துருவ்‌ உடனும் பைசன் படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன் – ஆரத்தி எனும் கதாபாத்திரத்தை மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். படத்தில் அவர்கள் பேசும் டயலாக் கஷ்டமாக இருக்கும். இயக்குநர் ரஞ்சித் அவரிடம் இருந்து நேர்த்தியாக வேலையை வாங்கினார்.

பார்வதி- இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பி இருக்கிறேன்.‌ அவருடைய ஸ்டைல் ஆப் ஆக்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.

பா ரஞ்சித் சொன்னது போல் அந்த காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வார்கள். போருக்கு செல்வார்கள். சண்டையிடுவார்கள். அவர்களுடைய கைகளும் ஆண்களின் கைகளே போல் கடினமாகத்தான் இருக்கும். அது போன்றதொரு சமத்துவம் இருந்த காலகட்டம் அது.‌ ரஞ்சித்தின் படங்களில் பெண்கள் எப்போதும் உறுதியானவர்களாக இருப்பார்கள். இந்தப் படத்தில் நாயகனுக்கு நிகராக நாயகிகள் இருக்கிறார்கள் . இதனால் பார்வதி , மாளவிகாவுடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

டேனி – படப்பிடிப்பு தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். படத்தில் அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவரிடம் படத்தின் விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்களோ கலந்து கொள்ள மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியை காண திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும். அங்கு நாங்கள் இந்த படைப்பை எப்படி கொண்டாடுகிறோம் என்பதனை நேரில் காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்காக இன்று இந்த இசை வெளியீட்டு விழாவில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் அரிகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார். அவரை நான் ‘மெட்ராஸ்’ படத்திலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவன் சிறந்த நடிகர். அனைத்து இயக்குநர்களும் அவன் மீது ஒரு கண் வைத்து, வாய்ப்பினை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் காட்சியை படமாக்கும் தருணத்தில் அவனது முயற்சிகள் அனைத்தும் ‘சேது’ படத்திற்கு முன் நான் எதனை முயற்சி செய்தேனோ..‌ அதனை அவரிடத்தில் பார்த்தேன். அதனால் உறுதியாக சொல்கிறேன் எதிர்காலத்தில் அரிகிருஷ்ணன் சிறந்த நடிகராக வலம் வருவார்.

படத்தில் நான் மட்டுமல்ல ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள். பா ரஞ்சித் ஒவ்வொரு காட்சியை ஓவியம் போல் செதுக்கியிருக்கிறார். ஒரு காட்சியில் நான் மட்டும் கோவணம் கட்டிக்கொண்டு தோன்றுகிறேன் என நினைத்தேன். அந்தக் காட்சி இரண்டு நாள் நீடிக்கும் என நினைத்தேன். ஆனால் பத்து நிமிடத்தில் அந்த காட்சியை இயக்குநர் ரஞ்சித் படமாக்கினார். அந்தக் காட்சியில் உடன் நடித்த அனைவரும் அர்ப்பணிப்புடன் முழு ஈடுபாட்டுடன் நடித்து அந்த காட்சியை நிறைவு செய்தனர். இது எனக்கு பிரமிப்பை தந்தது.

சில காட்சிகளில் நான் நிற்பது கூட தெரியாமல் என்னை தள்ளிவிட்டு நடிகர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கினார்கள் . இதற்காக இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.

‘சேது’, ‘பிதாமகன்’, ‘அந்நியன்’, ‘ஐ ‘ ‘ராவணன்’ ஆகிய படங்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என அனைவருக்கும் தெரியும். அனைத்து கதாபாத்திரங்களையும் நான் கஷ்டப்பட்டு, முழு ஈடுபாட்டுடன் தான் தான் நடித்திருக்கிறேன். இது அனைவருக்கும் தெரியும். ஆனால் இந்த படங்கள் எல்லாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது. ஆனால் தங்கலானுடன் ஒப்பிடும்போது இவை மிகக் குறைவு.

அனைவரும் இதுபோன்ற படங்களை தேர்வு செய்து நடிப்பது ஏன்? என கேள்வி கேட்கிறார்கள். இதற்கு எப்படி பதில் அளிப்பது? என யோசித்துக் கொண்டிருந்தேன். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமானால் தங்கலான் எனக்குள் இருக்கிறான். எனக்கும் அவருக்கும் ஒரு ஆன்மீகத் தொடர்பு இருக்கிறது. அது என்னால் உணர முடிந்தது.

யார் தங்கலான்..? அவர் ஒரு தலைவர்… அவர் ஒரு வீரர் . அதை எல்லாம் கடந்து.. அவனுக்கு ஒரு இலக்கு. அதை சென்றடைய வேண்டும். அவன் குடும்பத்தை அளவு கடந்து நேசிக்கிறான். அவன் தன் மக்களை அளவு கடந்து நேசிக்கிறான். அவனுடைய மக்களுக்கு தங்கத்தையோ அல்லது விடுதலையோ வழங்க வேண்டும் என விரும்புகிறான். அது என்ன? என்பது நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.‌ அவன் யோசித்து கூட பார்க்க முடியாத விசயம்.. அவனுக்கு கிடைக்க வேண்டும்.‌ பல தலைமுறைகளாக கிடைக்காத ஒரு விசயம் தனக்கு கிடைக்க வேண்டும் என நினைக்கிறான். அவருடன் இருப்பவர்களே ‘நீ நினைப்பது நடக்காது. ஏன் நேரத்தை வீணடிக்கிறாய். விட்டு விடு’ என தொடர்ந்து ஆலோசனை சொல்கிறார்கள். எத்தனையோ தடைகள் வருகிறது. அத்தனையும் அவன் கடக்கிறான்.

இது ஏன்? என்னுடன் சம்பந்தப்பட்டது என்றால் நான் சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படிக்கவே மாட்டேன். நடிப்பின் மீது தான் விருப்பம் கொண்டிருந்தேன். எட்டாவது படிக்கும் வரை மதிப்பெண் விசயத்தில் வகுப்பில் முதல் மூன்று மாணவர்களின் ஒருவராக இருந்தேன். நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட பிறகு மதிப்பெண் விசயத்தில் கடைசி மூன்று மாணவர்களில் ஒருவராக இருந்தேன்.‌

நாடகம் பார்க்கும்போது இந்த கதாபாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டும். இப்படி நடித்திருக்க வேண்டும்.. என நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன். மேடை நாடகங்களில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன். மேடையில் தனியாக நடித்துக் கொண்டிருப்பேன். இது கல்லூரியிலும் தொடர்ந்தது. கல்லூரியில் படிக்கும் போது நடிப்பின் மீதான ஆசை உச்சத்தை தொட்டது. அதிர்ஷ்டமோ … துரதிஷ்டமோ எனக்கு தெரியவில்லை. சென்னை ஐஐடியில் ‘பிளாக் காமெடி’ எனும் நாடகத்தில் நான் நடித்தேன். அந்த நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்று விருது கிடைத்தது. அதில் நடித்த பிறகுதான் என் கால் உடைந்தது. காலை வெட்டி அகற்ற வேண்டும் என சொன்னார்கள். அதன் பிறகு ஆஸ்பத்திரி படுக்கையில் மூன்று வருடங்களை கழித்தேன். 23 அறுவை சிகிச்சைகள் நடந்தது. அதன் பிறகு ஒரு வருடம் ஊன்றுகோலுடன் தான் நடப்பேன். அப்போது என் அம்மா மருத்துவரிடம் பையன் எப்போது எழுந்து நடப்பான்? என கேட்டார்கள். அதற்கு மருத்துவர், ‘இனி எழுந்து நடக்கவே மாட்டான் ‘என சொன்னார். அதற்கு என் அம்மா அழுது கொண்டே, ஏன் இப்படி சொல்கிறீர்கள்? எனக்கேட்டார். ‘வெட்டி அகற்ற வேண்டும் என்று சொன்ன காலை நான் காப்பாற்றி விட்டேன். கால் இருக்கிறது தானே..!’ என பதில் அளித்தார்.

அப்போது அழுது கொண்டிருந்த என் அம்மாவை பார்த்து, ஏன் அழுகிறாய்? நான் நிச்சயம் எழுந்து நடப்பேன்.‌ ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும் . ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது.‌

அதன் பிறகு மெதுவாக பட வாய்ப்புகள் வந்தது.‌ தொடர்ந்து 10 ஆண்டுகள் போராடினேன். அந்தத் தருணத்தில் நான் வேலைக்கு எல்லாம் சென்றிருக்கிறேன்.‌ என்னுடைய இரண்டு ஊன்றுகோல்களில் முதலில் ஒன்றை தொலைத்தேன். அதன் பிறகு மற்றொன்றையும் தொலைத்தேன். ஏனென்றால் நடிக்க வேண்டும் என்று தீரா ஆசை மட்டும் இருந்தது.‌

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊன்றுகோல் உடன் பணியாற்றினேன். அப்போது நான் வாங்கிய சம்பளம் 750 ரூபாய்.

சினிமா வாய்ப்பு கிடைத்த பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டார்கள். ஆனால் படம் ஓடவில்லை. பத்தாண்டுகள் கடந்து சென்றது. மீண்டும் உனக்கு நடிப்பு வராது விட்டுவிடு வேறு ஏதாவது கவனம் செலுத்து என்றனர். அந்தத் தருணத்திலும் என்னால் முடியும் நிச்சயம் வெல்வேன் என்று அவர்களிடம் சொன்னேன். அன்று என்னுடைய நண்பர்களின் பேச்சை கேட்டிருந்தால் நான் இன்று இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன்.‌ உங்களிடத்தில் நான் இப்போது பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.‌

ஒரு கனவை இலக்காக வைத்து நம்பிக்கையுடன் பயணித்தால் அதனை ஒரு நாள் வெல்ல முடியும்.

நான் சில சமயங்களில் இப்படி கூட நினைத்ததுண்டு. ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால்… என்ன செய்வது என்று. தற்போதும் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பேன். இதுதான் எனக்கு பதிலாக கிடைத்தது.

இதுதான் எனக்கு சினிமா மீதான காதல். எனவே சினிமாவை நான் இப்போதும் அளவு கடந்து நேசித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவை நேசித்ததால் கிடைத்த அன்பளிப்பு தான் ரசிகர்களாகிய நீங்கள்.

ராவணன் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது.‌ ‘எய்யா சாமி இந்தப் பிசாசு அப்பன் ஆத்தா ஆச காசு காதல் கத்திரிக்கா இது எல்லாத்தையும் விட பெருசு..’ என்ன பேசி இருப்பேன் இதுதான் ரசிகர்களாகிய நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு. நீங்கள் கொடுத்த அங்கீகாரம்.

நாளை ஆந்திராவிற்கு செல்கிறோம் . அதன் பிறகு பெங்களூருக்கு செல்கிறோம். அனைவரும் எதை நம்பி இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் என கேட்கிறார்கள்? இப்படி அனைவரையும் இயக்குநர் பா . ரஞ்சித் கேள்வி கேட்க வைத்து விட்டார்.‌ அதுதான் முக்கியமானது. இது போன்றதொரு படத்திற்கு வாய்ப்பளித்ததற்காக ரஞ்சித்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து அவர் மீது எனக்கு ஒரு மரியாதை. அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன். அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ. அதற்கு அடுத்த படத்தின் ஆர்யா ஹீரோ. அதற்கடுத்து நாம் இருவரும் மீண்டும் சேரலாமா? எனக் கேட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அவர் எனக்கு ஒரு சவாலை கொடுத்தார். இந்த கதாபாத்திரத்தில் தனித்துவமாக நடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அந்த சவாலை கொடுத்ததற்காக அவரை நான் என்றென்றும் மறக்க மாட்டேன். நான் இந்த படத்தில் சிறப்பாக நடித்திருந்தால் அதற்கான அங்கீகாரம் அனைத்தும் இயக்குநர் பா ரஞ்சித் -விஜய் -மணிரத்னம் -ஷங்கர் -ஹரி போன்ற இயக்குநர்களுக்கு தான் சேரும்.

ஏனெனில் இவர்கள் கொடுத்த ஊக்கம். வடிவமைத்த கதாபாத்திரம். கொடுத்த உத்வேகம் தான் காரணம்.‌ இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவாக முடிகிறது.

ரஞ்சித்திற்கு என தனித்துவமான ஆற்றல் வாய்ந்த குரல் இருக்கிறது. அதனை பின்பற்றுவதற்கு ஒரு கூட்டமும் இருக்கிறது.

அதனை பொறுப்புணர்வுடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார். இதில் என்னுடைய ஆரோக்கியமான ஆதரவு உண்டு. அவருக்குள் ஒரு மென்மையான இதயம் இருக்கிறது. அதனையும் நான் கண்டிருக்கிறேன். அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன். ” என்றார்.

I got huge fans as my gift in cinema says Vikram

நான் ரொம்ப லக்கி… என் டாடிதான் என் ப்ரெண்ட்.; ஆனந்தத்தில் ‘அந்தகன்’ பிரஷாந்த்

நான் ரொம்ப லக்கி… என் டாடிதான் என் ப்ரெண்ட்.; ஆனந்தத்தில் ‘அந்தகன்’ பிரஷாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

நான் ரொம்ப லக்கி… என் டாடிதான் என் ப்ரெண்ட்.; ஆனந்தத்தில் ‘அந்தகன்’ பிரஷாந்த்

பிரசாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியீடு*

‘டாப் ஸ்டார்’ பிரசாந்த் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது.

தியாகராஜன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘அந்தகன்- தி பியானிஸ்ட்’ திரைப்படத்தில் பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், கார்த்திக், சமுத்திரக்கனி, ஊர்வசி, யோகி பாபு, கே. எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், மறைந்த நடிகர் மனோபாலா, லீலா சாம்சன், பூவையார், செம்மலர் அன்னம், மோகன் வைத்யா, பெசன்ட் ரவி, லஷ்மி பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ரவி யாதவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனிக்க, சதீஷ் சூர்யா படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

கிரைம் திரில்லர் ஜானரிலான இப்படத்தை ஸ்டார் மூவிஸ் நிறுவனம் சார்பில் திருமதி சாந்தி தியாகராஜன் தயாரித்திருக்கிறார், பிரீத்தி தியாகராஜன் வழங்குகிறார்.

ஆகஸ்ட் 9ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இத்திரைப்படத்தின் சிறப்பு முன்னோட்டம் வெளியிடப்பட்டது. இதற்காக சென்னையில் ஞாயிறு அன்று நடைபெற்ற விழாவில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இயக்குநரும், நடிகருமான கே. எஸ். ரவிக்குமார் பேசுகையில்..

, “நீண்ட நாள் கழித்து நண்பர்கள் தினத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.‌ சிம்ரனை ‘நட்புக்காக’ படத்தில் பார்த்திருக்கிறேன். இந்த திரைப்படத்தில் நடித்ததில் சந்தோஷம். ஜாலியான படப்பிடிப்பு அனுபவம். கண்டிப்பான இயக்குநர். படப்பிடிப்பு தளத்திற்கு இயக்குநர் தியாகராஜன் வந்துவிட்டால், மகனாக இருந்தாலும் பிரசாந்த் அமைதி ஆகிவிடுவார். அவருடைய மனதில் பயபக்தி வந்துவிடும். இப்போதெல்லாம் யாரும் இயக்குநரைப் பார்த்து பயப்படுவதில்லை.

இயக்குநர்கள் தான் பயப்படுகிறார்கள்.‌ இந்தத் திரைப்படத்தில் யோகி பாபு-ஊர்வசி ஆகியோருடன் இணைந்து நடித்த காட்சிகள் சிறப்பாக இருந்தன. ஆனால் ‘அந்தகன்’ சிறப்பு முன்னோட்டத்தில் இயக்குநர் தியாகராஜனின் தோற்றம் அனைவரையும் மிரட்டி விட்டது.

சந்தோஷமாக தொடரும் இந்த அனுபவம் படத்தின் வெளியீட்டிற்கு பிறகும் தொடர வேண்டும் என விரும்புகிறேன். படத்தின் வெற்றி விழாவில் அனைவரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.‌ படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் ரசிகர்களின் ஆதரவுடன் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடன இயக்குநர் கலா பேசுகையில்..

, ”நண்பர்கள் தின வாழ்த்து. தியாகராஜனுடன் ஏற்பட்ட நட்பு கிட்டத்தட்ட 30 ஆண்டுகாலமாக நீடிக்கிறது. இந்த திரைப்படத்தில் பாடல்கள் மிக நன்றாக இருக்கின்றன.‌ கலை இயக்குநர் மிக நேர்த்தியாக அரங்கங்களை வடிவமைத்திருந்தார்.

பாடலுக்கான நடன காட்சிகளை எட்டு மணி நேரத்தில் நிறைவு செய்தோம். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பாடல்களை சுடச்சுட வழங்கினார். அதாவது நான்கு மணிக்கு படப்பிடிப்பு என்றால்.. இரண்டு மணிக்கு பாடல்கள் எங்களை வந்தடையும். எல்லா பாடல்களும் நன்றாக இருக்கின்றன, படமும் சிறப்பாக இருக்கிறது.

டாப் ஸ்டார் பிரசாத்தை பற்றி சொல்ல வேண்டும்… அவர் பியானோ வாசிக்க தெரிந்ததால் படப்பிடிப்பு தளத்தில் பாடல்களை பாடுவதுடன் அந்தப் பாடலை பியானோவிலும் வாசித்துக் கொண்டே பாடினார். அது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.

ஒளிப்பதிவாளர் ரவி யாதவ்… நான் நடன உதவியாளராக பணியாற்றும் போதே அறிமுகம் ஆகி, அவருடன் பணியாற்று இருக்கிறேன். அவரும் திறமையான கலைஞர்.

தியாகராஜன் மிகத் திறமையான இயக்குநர். இந்த திரைப்படம் அதனை உறுதிப்படுத்தும். அழகான கதை.

சிம்ரன் – பேரழகி. பிரசாந்த் – எப்போதும் டாப் ஸ்டார் தான். அனைவரும் இணைந்து உருவாக்கி இருக்கும் இந்த திரைப்படம் வெற்றி பெறும்,” என்றார்.

நடிகை வனிதா விஜயகுமார் பேசுகையில்…

”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள். ‘அந்தகன்’ படத்தைப் பற்றி நிறைய பேசியிருக்கிறேன். படத்தினை பற்றிய எனது எண்ணங்களை வெளிப்படுத்தி இருக்கிறேன். இருந்தாலும் அது போதாது. ஏனெனில் இந்த படத்திலும், படப்பிடிப்பு தளத்திலும் ஏராளமான அன்பினை உணர்ந்தேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவரிடத்திலும் தியாகராஜன், பிரசாந்த் இருவரும் மிகுந்த அன்பை காட்டினர்.

அண்மையில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற ஆங்கில தொடரில் இடம் பெறும் வாசகத்தை போல் ‘எவ்ரிபடி லவ்ஸ் பிரசாந்த்…’ பிரசாந்த் மீது அன்பு செலுத்தாதவர்கள் யாரும் இல்லை.

சிம்ரனை பல ஆண்டுகளாக பார்த்து வருகிறேன். இப்போதும் அழகாகவும், இளமையாகவும், துடிப்பாகவும் இருக்கிறார்கள்.

‘அந்தகன்’ திரைப்படம் இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஹிட் ஆகும். நானும் இந்த திரைப்படத்தை ரசிகர்களுடன் திரையரங்கத்தில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். இத்திரைப்படம் ஆகஸ்டு ஒன்பதாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை பிரியா ஆனந்த் பேசுகையில்…

”இங்கு வருகை தந்திருக்கும் அனைவரும் இயக்குநர் தியாகராஜனை பற்றி மட்டுமே பேசுகிறோம். ஆனால் அவர்களது வீட்டில் இருவர் இருக்கிறார்கள். பிரீத்தி மற்றும் பிரசாந்தின் அம்மா. இவர்கள் இருவரும் இப்படி இருப்பதற்கு அவர்கள் தான் காரணம்.

படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக திருச்சி, மதுரை, சேலம், கோயம்புத்தூர் என மூன்று நாட்கள் பயணித்தோம். மிகவும் சந்தோஷமாக இருந்தது.

இந்தப் படம் நிச்சயமாக வெற்றி பெறும் வெற்றி விழாவில் சந்திப்போம்.‌ இப்படம் விஷுவலாக பிரம்மாண்டமாக இருக்கிறது. இதற்காக ஒளிப்பதிவாளர் ரவி மற்றும் இயக்குநர் தியாகராஜன் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகை சிம்ரன் பேசுகையில்…

”அந்தகன் படத்தின் கதை, திரைக்கதை நன்றாக இருக்கிறது. தியாகராஜனின் இயக்கத்தில் இந்த படம் சிறப்பாக வந்திருக்கிறது. இந்த வாய்ப்பை வழங்கியதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரசாத்துடன் நான் நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது. மற்றொரு பிளாக்பஸ்டர் வெற்றிக்காக காத்திருக்கிறேன்.‌

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று அனைவரும் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையரங்கத்திற்கு சென்று பார்க்க வேண்டும்,” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், ”இறைவனுக்கு நன்றி. உலகம் முழுவதும் இருக்கும் தமிழ் சொந்தங்கள் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மிகவும் சந்தோஷமான நிகழ்வு இது.

நண்பன் சசியை பல இடங்களில் நண்பன் பிரசாந்த் நினைவு படுத்தினார். ஒரு முறை சசிக்குமார் கையில் வாட்ச் ஒன்றை அணிந்திருந்தார். அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன். மாலையில் படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன், ‘வா’ என்று அழைத்துக் கொண்டு ஒரு கடிகார கடைக்கு அழைத்துச் சென்றான். அங்கு என்னிடம், ‘நீ என் வாட்ச்சை பார்த்தாய் அல்லவா..! அதனால் உனக்கு பிடித்த வாட்சை வாங்கிக்கொள்’ என்றார்.

அவரிடம் உரிமையாக, ‘எனக்கு அந்த வாட்ச் தான் பிடித்திருக்கிறது.‌ அதனால் தான் அதனை உற்று நோக்கிக் கொண்டே இருந்தேன்’ என்றேன். உடனே அவர், ‘சரி அதை நீ கட்டிக் கொள். எனக்கு ஏதாவது ஒன்றை புதிதாக தேர்ந்தெடுத்து கொடு” என்றார்.

அதேபோல் நண்பர் பிரசாந்த் ஒரு கண்ணாடியை அணிந்திருந்தார். அந்த கண்ணாடியை எடுத்து நன்றாக இருக்கிறதே..! என சொன்னேன்.‌ அன்று மாலையில் என்னை தேடி மூன்று கண்ணாடிகள் வந்தன. உங்களுக்கு எது பிடிக்குமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.‌

அப்போது பிரசாந்திடம் இது போன்ற விசயங்களை நண்பர் சசிதான் எனக்கு செய்திருக்கிறார். அதற்குப் பிறகு இப்படி ஒரு நண்பராக நீ எனக்கு கிடைத்திருக்கிறாய் என்றேன். உன் பேரன்பிற்கு நான் என்ன செய்யப் போகிறேன்?.

எப்போதும் பிரசாந்த்தை நினைத்துக் கொண்டே இருப்பேன். அப்போது திடீரென்று காரணமே இல்லாமல் அவர் எனக்கு போன் செய்து பேசுவார்.‌ அப்போது நாங்கள் இருவரும் ஐயா ஐயா என்று தான் பேசிக் கொள்வோம். இதில் ஆழ்ந்த அன்பு உள்ளது. அந்தப் பேச்சில் காரணமே இருக்காது. அன்பு மட்டுமே இருக்கும்.‌ இப்போதெல்லாம் யாராவது போன் செய்தால், எதோ ஒரு விஷயத்திற்காகவே போன் செய்து பேசுவது என பழகி விட்டோம்.

ஆனால் காரணமே இல்லாமல் போன் செய்து நல்லா இருக்கீங்களா? சாப்டீங்களா? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று அன்புடன் பேசுவது குறைந்துவிட்டது. ஆனால் இது போன்ற போன் பிரசாந்திடமிருந்து எனக்கு வரும். இதை நான் உணர்ந்திருக்கிறேன்.

நான் எங்கேயோ ஏதோ ஒரு விஷயத்தை செய்திருப்பேன். அதை பார்த்துவிட்டு எனக்கு போன் செய்து பாராட்டுவார்.‌ அதுதான் எனக்கு அவர் மீது ஒரு பற்றை உருவாக்கியது.‌

எனக்கு இந்தத் திரைப்படம் மிகவும் சிறப்பானது.‌ இதன் தொடக்கப்புள்ளி எப்படி என்றால்.. இந்தத் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் இதே கேரக்டருக்காக என்னிடம் நடிக்க கேட்டனர், மறுத்துவிட்டேன். இதை தமிழில் ரீமேக் செய்யும் போது தம்பி கிஷோர் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர்.

எனக்கு தியாகராஜனை பார்த்தாலே பயம். எப்படி என்றால் நான் திரையரங்கத்தில் ஆப்பரேட்டராக பணியாற்றிய போது ‘மலையூர் மம்பட்டியான்’ படத்தை ஓட்டி இருக்கிறேன். ‘கொம்பேறி மூக்கன்’ படத்தை திரையில் பார்க்கும்போதே எனக்குள் பதட்டம் வந்துவிடும்.

அவர் போனில் வணக்கம் என்று சொன்னவுடன், நான் படப்பிடிப்புக்கு வந்து விடுகிறேன் என்று பதில் அளித்து விட்டேன். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் நேரில் அவருடன் பழகும் போது தான் அவரின் பேரன்பினை உணர்ந்தேன்.‌

அவருடைய தோற்றம், ஆளுமை… அதை பார்த்துவிட்டு நாமும் இந்த வயதில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை என்னுள் ஏற்படுத்தியது.‌ அவருடைய அன்பிற்கு இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.‌

படப்பிடிப்பு தளத்தில் வனிதா விஜயகுமார் வந்தார்.‌ படப்பிடிப்பின் போது இதுவரை யாரும் என்னை திட்டிராத வகையில் கெட்ட வார்த்தையால் திட்டினார். அந்தக் காட்சியில் அவர் என்னை திட்டிக் கொண்டே இருந்தார். நான் இயக்குநரை பார்க்கிறேன். அவர் என்னிடம் வந்து நான் சொல்லியதை கடந்தும் அவர் திட்டிக் கொண்டிருக்கிறார் என விளக்கம் அளித்தார்.‌

அதன் பிறகு வனிதா விஜயகுமாரை பார்த்தபோது… இயக்குநர் தான் உங்களை இப்படி எல்லாம் திட்ட சொன்னார் என தியாகராஜனை கை காட்டினார்.

உதவி இயக்குநராக பணியாற்றிய போது சிம்ரனை பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்த போது உண்மையில் மறக்க இயலாது அனுபவமாக இருந்தது.

இந்த படத்தில் நடித்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரசாந்த் இந்த படத்திற்குப் பிறகு இன்னும் மும்மடங்கு வளர வேண்டும் என வாழ்த்துகிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் தியாகராஜன் பேசுகையில்…

”இன்றைய தினம் அனைவரையும் சந்திப்பதற்கு முக்கியமான காரணம் இன்று நண்பர்கள் தினம்.‌ உலகம் முழுவதும் இருக்கும் அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் நண்பர்களாகத்தான் பழகினார்கள். படப்பிடிப்பு ஒன்பது மணி என்றால் அனைவரும் ஒன்பது மணிக்கு படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்கள். படப்பிடிப்பு அனுபவம் மகிழ்ச்சியாக இருக்கும். திட்டமிட்டதை விட படப்பிடிப்பை சீக்கிரமாக நிறைவு செய்து விடுவோம்.

சமுத்திரக்கனி… அந்த காலகட்டத்திய என்னை நினைவுபடுத்துபவர். தோற்றம் ஆகட்டும், உடல் மொழியாகட்டும், உடற்கட்டு ஆகட்டும், ஸ்டைல் ஆகட்டும், நடை ஆகட்டும்… ஆக்ஷன் என்று சொல்லிவிட்டால், நடிப்பில் சிங்கம் தான். இந்த படத்தில் அவர் மிரட்டி இருக்கிறார் அதிலும் சிம்ரனை மிரட்டி இருக்கிறார். வனிதா விஜயகுமாரை மிரட்டி இருக்கிறார்.

அந்த குறிப்பிட்ட காட்சியில் எமோஷன் வேண்டும் என்பதற்காகத்தான் வனிதாவை அழைத்து, ‘உனக்கு தெரிந்த கெட்ட வார்த்தைகளால் திட்டு’ என சொன்னேன்.

அந்தத் தருணத்தில் சொல்லத் தகாத வார்த்தைகளை எல்லாம் பேசினார்.‌ இந்தப் படத்தில் வனிதா விஜயகுமாருக்கு குறிப்பிடத்தக்க அளவிலான அங்கீகாரம் கிடைக்கும். மேலும் அற்புதமான நடிகை என்ற அங்கீகாரமும் கிடைக்கும்.

பிரியா ஆனந்த் – அழகான தமிழ் பெண். தமிழ்த் திரையுலகில் பயன்படுத்தவில்லை என்று என்னிடம் சொன்னார்.

ஆனால் அவர் இங்கு பேசியதெல்லாம் ஆங்கிலத்தில் தான். அதனால் தான் சொல்கிறேன். இனி எந்த நிகழ்வில் கலந்து கொண்டாலும் ஆங்கிலத்தில் பேசு. அப்போதுதான் தமிழ் பெண் என தெரியும்.

இந்தப் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்வது என்பது குழப்பமாக இருந்தது.‌ அப்போது என்னுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்த பிரியா ஆனந்த் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று தேர்வு செய்தேன்.

முன்னோட்டத்திலும் அவர் அழகாக இருக்கிறார். நடனமாடி இருக்கிறார். தேர்ந்த நடிப்பையும் வழங்கி இருக்கிறார். இந்த படத்தின் மூலம் அவருக்கும் பெரிய அங்கீகாரம் கிடைக்கும். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைக்கும்.

சிம்ரன், பிரசாந்துடன் இதற்கு முன் ஆறு படங்கள் நடித்திருக்கிறார். இந்த படத்தின் உரிமையை வாங்கிய பிறகு ஏன் இந்த படத்தில் சிம்ரனை நடிக்க வைக்க கூடாது என யோசித்தேன். இது தொடர்பாக நான் அவரிடம் போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, நான் இந்தி படத்தை பார்த்து விட்டேன். அதனால் நான் நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார். இந்தப் படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியிலும் அனுபவமிக்க நடிப்பை வழங்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் அவர் சற்று உணர்ச்சி மிகுந்த தொனியில் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏன் இப்படி நடிக்க வேண்டும் என கேட்டார். அப்போது இந்த கதாபாத்திரம் எப்படி நடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று நான் சொன்னேன்.

அதை ஏற்றுக் கொண்டு அவர் ஆக்ரோஷமாக நடித்தார். அவருடைய பேச்சு, வன்முறை எல்லாம் ஒரு ஆணை போல் இருக்கும்.‌ படம் வெளியான பிறகு சிம்ரனுக்கு விருது கிடைக்கும். இந்தப் படத்தில் நடித்திருக்கும் அனைவரையும் விட சிம்ரனுக்கு சிறப்பான பெயரும், புகழும் கிடைக்கும்.

பிரசாந்த் – பியானோ வாசிக்கும் கலைஞர். இந்தத் திரைப்படத்தை வாங்குவதற்கு முக்கிய காரணமே கதையின் நாயகன் பியானோ இசைக்கலைஞர் என்பதால் தான். நான் இந்த திரைப்படத்தின் உரிமையை வாங்கி ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்கள் யார் என்பதனை நிதானமாக யோசித்து தேர்வு செய்ய தொடங்கினேன். அதன் பிறகு படத்தின் பணிகளை தொடங்கினோம். இடையில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் இரண்டு ஆண்டுகள் சென்றன. அதன் பிறகு எதிர்பாராத சில சிக்கல்கள் ஏற்பட்டது. அதன் பிறகு படத்தை நிறைவு செய்தோம். அதனைத் தொடர்ந்து பிரபுதேவாவை வைத்து ஒரு பாடலை உருவாக்க திட்டமிட்டோம். பிரபுதேவா அதற்கான காட்சிகளை உருவாக்க சாண்டி மாஸ்டர் நடனத்தை அமைத்தார்.

அந்தப் பாடலை அனிருத்-விஜய் சேதுபதி பாடினர், விஜய் வெளியிட்டார். இப்பாடல் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.‌ இந்தப் பாடலில் பிரசாந்தின் நடனத்தை பலரும் நடனமாடி இணையத்தில் பதிவேற்றி வருகிறார்கள்.

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக பயணித்த போது பிரசாந்தின் ரசிகர் ஒருவர் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கி இறந்துவிட்டார். இதனால் பிரசாந்த் மனவருத்தம் அடைந்தார். உடனே இது தொடர்பாக தமிழகம் முழுவதும் வாகனத்தில் பயணிக்கும் போது தலைகவசம் அணிந்து பயணிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏன் ஏற்படுத்தக் கூடாது என சிந்தித்தார்.

அத்துடன் நில்லாமல் பிரசாந்தின் பிறந்த நாளின் போது தமிழகம் முழுவதும் 5000 தலை கவசத்தினை அவரது ரசிகர்களுக்கு வழங்கினார்.

கே. எஸ். ரவிக்குமார் ஒரு சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தில் அவர் சட்டிலான வில்லனிக் கேரக்டரில் நடித்திருப்பார்.

இந்தப் படத்தில் ஒவ்வொரு போர்ஷனுக்கும் ஒரு சஸ்பென்ஸ் இருக்கும். பிறகு மற்றொரு சஸ்பென்ஸ் வரும். இதையெல்லாம் கடந்து என்ன நடக்கிறது? என்ன ஆச்சு? இது உண்மையா? பொய்யா? என பல கேள்விகள் ரசிகர்களிடத்தில் எழும்.

நானே அந்த இந்தி படத்தை மூன்று முறை பார்த்திருக்கிறேன். அதே போன்றதொரு உணர்வு தமிழ் திரைப்படத்தை பார்க்கும் போதும் ரசிகர்களுக்கு வரும். அதனால் இந்த திரைப்படத்திற்கு ரிப்பீட்டட் ஆடியன்ஸ் தியேட்டருக்கு வருவார்கள்.

பெசன்ட் ரவி- பிரசாந்த் நடிக்கும் படத்தில் அவர் இருக்க வேண்டும் என விரும்புவேன். இந்த திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஊர்வசி- என்னுடன் ‘கொம்பேறி மூக்கன்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார். நான் தயாரித்து பிரசாந்த் நடித்த ‘மன்னவா’ படத்திலும் நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் இந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னேன். சொன்னவுடன் வந்து நடித்துக் கொடுத்தார். அவரும், யோகி பாபுவும், கே.எஸ். ரவிகுமாரும், பிரசாந்த்தும் இணைந்து தோன்றும் காட்சிகள் அனைத்தும் சிறப்பானதாக இருக்கும். சுவாரசியமானதாகவும் இருக்கும்.

மறைந்த நடிகர் மனோபாலா, ஜெயம் கோபி, விஜேந்தர், பூவையார், லீலா சாம்சன் என பலரும் நடித்திருக்கிறார்கள்.

‘அந்தகன்’ திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இதுவே எனக்கு உற்சாகத்தை அளிக்கிறது. இந்த திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் ஆர்வமுடன் இருக்கிறார்கள். இது தொடர்பாக அவர்களிடையே ஆரோக்கியமான பேச்சு வார்த்தை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரை நானூறு திரையரங்குகளில் ‘அந்தகன்’ திரைப்படத்தை திரையிட முடிவு செய்துள்ளோம். இதற்கும் கூடுதலாக வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் விருப்பமுடன் இருக்கிறார்கள்.‌ ‌இது ஒரு ஆரோக்கியமான அணுகுமுறை என கருதுகிறேன்.

இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் பிரசாந்த் பேசுகையில்…

”அனைவருக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துகள். மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

‘அந்தகன்’ அருமையான படைப்பு.‌ இந்த திரைப்படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.‌ திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அனைவருடனும் மறக்க இயலாத அனுபவம் இருக்கிறது.

இதில் ஐயா கனி சாரை மறக்க முடியாது. அவரை நான் ஐயா என்று தான் அழைப்பேன். அவரையும் சசிகுமாரையும் அலுவலகத்தில் இருக்கும் போது நான் நேரில் சென்று சந்தித்து இருக்கிறேன்.‌ அந்தத் தருணத்திலிருந்து இருவரையும் பின் தொடர்கிறேன்.

இந்தப் படத்தில் நடிக்கும் நடிகர்கள் பற்றிய தேர்வு நடைபெறும் போது இயக்குநரின் பட்டியலில் கனி ஐயாவின் பெயரும் இடம் பெற்றிருந்தது.‌ அதன் பிறகு இயக்குநர் கனி சாருடன் பேசினார். அவரும் ஒப்புக்கொண்டு படப்பிடிப்புக்கு வருகை தந்தார். அவர் ஒரு நேர்த்தியான தொழில்முறை நடிகர்.‌

இந்தப் படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொண்டவுடன், ‘எனக்கு மூன்று வார கால அவகாசம் கொடுங்கள். நான் தற்போது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதனை நிறைவு செய்துவிட்டு, உங்கள் படத்தில் நடிக்கிறேன்’ என்றார். அதன் பிறகு அவர் கதாபாத்திரமாகவே மாறிவிட்டார். இப்படி ஒரு தீவிர பற்றுள்ள நடிகரா என நான் அவரை வியந்து பார்த்தேன்.‌

நான் ஒவ்வொரு நேர்காணலிலும் தவறாது குறிப்பிடும் விஷயம் ஒவ்வொரு படப்பிடிப்பின் போதும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வேன், கற்றுக் கொண்டே இருக்கிறேன் எனக் குறிப்பிடுவேன். அந்த வகையில் சமுத்திரக்கனி ஐயாவிடமிருந்து நடிப்பின் மீதான தொழில்முறையிலான பெரு விருப்பத்தை கற்றுக் கொண்டேன்.‌

இந்தப் படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக நான், சிம்ரன், பிரியா, பெசன்ட் ரவி ஆகியோர் இணைந்து பயணித்தோம்.‌ அப்போது என் போனில் ஒரு குரல் ஒலித்தது.‌ எங்கே இருக்கிறீர்கள் எனக் கேட்டார்.‌

நாங்கள் இந்த ஊரில் இருக்கிறோம் என சொன்னேன் நீங்கள் மட்டும் ஏன் தனியாக பயணிக்கிறீர்கள் நானும் உங்களுடன் இணைகிறேன் என சொன்னார் அந்த குரலுக்கு சொந்தக்காரர் சமுத்திரக்கனி. அவருக்கு இந்த தருணத்தில் மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இந்த ஆதரவிற்காகவும்,, எங்கள் மீது அன்பு செலுத்துவதற்காகவும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நானும் சிம்ரனும் இதுவரை ஆறு படங்களில் இணைந்து பணியாற்றி இருக்கிறோம். திரையுலகில் எனக்கு கிடைத்த அற்புதமான சக நடிகை. எனக்கு உற்ற நண்பி. அற்புதமான நடனக் கலைஞர். இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.‌ என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அவருடைய கதாபாத்திரத்திற்கும் நிறைய முரண்கள் இருக்கும். அதை நீங்கள் திரையில் பார்க்கும்போது தெரிந்து கொள்வீர்கள்.‌

இந்தப் படத்தில் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இருக்கும். இதுதான் இந்த படத்தில் சிறப்பம்சம் எனக் குறிப்பிடலாம். ஒவ்வொரு கதாபாத்திரத்திலும் நடித்திருக்கும் நடிகர்கள் திறமையாக நடித்திருப்பார்கள். இதை ரசிகர்கள் திரையரங்கில் பார்க்கும் போது நல்லதொரு அனுபவம் கிடைக்கும்.

பிரியா ஆனந்த்- திறமையான சக நடிகை படப்பிடிப்பு தளத்தில் அனைவரையும் உற்சாகமாக வைத்திருப்பார். படப்பிடிப்பு தளம் முழுவதும் மகிழ்ச்சியை பரவச் செய்வார்.

வனிதா விஜயகுமார்- என் உடன் பிறந்த சகோதரி போன்றவர். எப்போதுமே உற்சாகமாக இருப்பார்.

இந்த படத்தை எப்படி எல்லாம் விளம்பரப் படுத்த வேண்டும் என்பதில் நிறைய ஆலோசனைகளை கொடுத்துக் கொண்டே இருக்கிறார்.‌ அவர் இந்த படத்தில் நடித்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன்.‌

நடிகர்களை கடந்து ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், கலை இயக்குநர் செந்தில் ராகவன்… இருவரும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் அமைதியாகவே இருப்பார்கள் ஆனால் அவர்களது செயல் பேசும்.

யோகி பாபு, மோகன் வைத்யா, ஊர்வசி என பலருடன் இணைந்து நடித்த அனுபவம் மறக்க முடியாதது.‌

அருமையான மனிதரை இந்த படத்தில் சந்தித்தேன்.‌ அவர் என்னுடைய இன்ஸ்பிரேஷன். முழு படத்தையும் அவர்தான் உயர்த்தி பிடித்திருக்கிறார்.‌ அவர்தான் கார்த்திக். அவருக்கும் இந்த தருணத்தில் நன்றி சொல்கிறேன்.‌ அவரைப் பற்றி நான் கேள்விப்பட்டதற்கும், படப்பிடிப்பு தளத்தில் அவருடன் பழகியதற்கும் நிறைய வித்தியாசம் இருந்தது.‌

படப்பிடிப்பு தளத்தில் அவர் வருகை தந்தாலே உற்சாகம் பீறிடும். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்.

நான் மிகப்பெரிய அதிர்ஷ்டசாலி. இந்த நண்பர்கள் தினத்தின் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த நண்பர் என்னுடைய தந்தை தியாகராஜன்.‌ மிகச் சிறந்த மனிதர். தயாரிப்பாளர் சாந்தி தியாகராஜனுக்கும், எனது தங்கை பிரீத்தி தியாகராஜனுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அன்று ‘அந்தகன்’ படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ரசிகர்களுக்கு இந்தத் திரைப்படம் புதிய அனுபவத்தை வழங்கும், அனைவரும் வருகை தந்து வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

Prashanth and Thiagarajan speech at Andhagan Trailer launch

ராயன் A சர்டிபிகேட் ஆனாலும் A1 படம்..; ஆஸ்கர் அகாடமியில் தனுஷ் பிடித்த இடம்

ராயன் A சர்டிபிகேட் ஆனாலும் A1 படம்..; ஆஸ்கர் அகாடமியில் தனுஷ் பிடித்த இடம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ராயன் A சர்டிபிகேட் ஆனாலும் A1 படம்.. ஆஸ்கர் அகாடமியில் தனுஷ் பிடித்த இடம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 50 வது படத்தை இயக்கி தானே நாயகனாக நடித்திருந்தார் தனுஷ்.

தனது 50வது படத்தில் நாயகி இல்லை ஜோடி இல்லை டூயட் இல்லை என தனக்காக எதையும் செய்து கொள்ளாமல் கதையின் மீது நம்பிக்கை வைத்து ஒரு நல்ல ஆக்ஷன் விருந்து படைத்திருந்தார் தனுஷ்.

ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருந்த இந்த படத்தில் சந்தீப் கிஷன், காளிதாஸ், துஷாரா விஜயன், அபர்ணா பால முரளி, எஸ் ஜே சூர்யா, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்

இந்தப் படம் வெளியாகி பத்து நாட்களைக் கடந்த நிலையில் இன்றும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது..

இந்த படம் ‘ஏ’ சான்றிதழுடன் திரைக்கு வந்திருந்தாலும் ஏ சர்டிபிகேட் பெற்று அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

மேலும் ராயன் படத்தின் திரைக்கதை அகாடமி மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் நூலகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தனுஷின் ராயன் படத்திற்கு சர்வதேச அளவிலும் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது.

இதுவரை தனுஷ் நடித்து வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் ராயன் திரைப்படத்திற்கு தான் அதிகம்.

2024 ம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் ராயன் வசூலில் முதல் இடம் பெற்றுள்ளது.

இதற்கெல்லாம் நன்றி தெரிவித்து படத்தின் தயாரிப்பு நிறுவனம் மக்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

ராயன் திரைப்படம் இதுவரை 120 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

தமிழ் சினிமா வரலாற்றில் ஏ சான்றிதழ் பெற்று 100 கோடி வசூல் செய்த முதல் படம் இது என்றும் கூறப்படுகிறது.

Dhanush Raayan movie got honor

——–

அஜித் – விஜய்சேதுபதி – தனுஷ் வரிசையில் பிரசாந்த்.; ரசிகர்களுக்கு தியாகராஜனின் இன்ப அதிர்ச்சி.!

அஜித் – விஜய்சேதுபதி – தனுஷ் வரிசையில் பிரசாந்த்.; ரசிகர்களுக்கு தியாகராஜனின் இன்ப அதிர்ச்சி.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அஜித் – விஜய்சேதுபதி – தனுஷ் வரிசையில் பிரசாந்த்.; ரசிகர்களுக்கு தியாகராஜனின் இன்ப அதிர்ச்சி.!

ஒரு மாணவனுக்கு ஒரு சப்ஜெக்ட்டில் 100 மதிப்பெண் என்பது சாதாரண விஷயம் அல்ல.. அதுபோல கிரிக்கெட்டில் நூறு ரன்கள் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல..

அது போல தான் சினிமா துறையிலும் ஒரு கதாநாயகனுக்கு 100 படங்களை தொடுவது கடினமான ஒன்றாகும். ரஜினி கமல் சத்யராஜ் பிரபு கார்த்திக் சரத்குமார் உள்ளிட்ட பல நடிகர்கள் 150 படங்களை கடந்து விட்டனர்.

ஆனால் இன்றைய தலைமுறை நடிகர்களை பொருத்தவரை 50 படங்களை கடப்பதே அவர்களுக்கு பெரும் சாதனையாகவும் சவாலாகவும் இருந்து வருகிறது.

விஜய் நடிப்பில் உருவான சுறா படம் அவருக்கு 50 வது படமானது.. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் நடிகர் அஜித்துக்கு 50 வது படமாக அமைந்த மங்காத்தா மாபெரும் வெற்றி படமாக அமைந்தது.

விஜய் சேதுபதியின் மகாராஜா படம் அவருக்கு 50 வது படமாகும்.. அந்த படமும் பெரும் வெற்றியை பெற்றது.. கடந்த வாரம் வெளியான தனுஷின் 50வது படம் ‘ராயன்’ படம் அவருக்கு மாபெரும் வெற்றி படமாக அமைந்து விட்டது.

இந்த நிலையில் தியாகராஜன் இயக்கத்தில் உருவான அந்தகன் படம் நடிகர் பிரசாந்துக்கு 50வது படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

முன்பு ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தகன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென ஆகஸ்ட் 9ம் தேதியே அந்தகன் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

அதன்படி பிரஷாந்த் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அவரின் தந்தையும் இயக்குனருமான தியாகராஜன்.

Andhagan 50 Thiagarajan surprise for Prashanth fans

More Articles
Follows