கோடீ – புதிய அலைகளை டாலி தனஞ்செய்-க்கு உருவாக்கும்… – இயக்குனர் பரம்

கோடீ – புதிய அலைகளை டாலி தனஞ்செய்-க்கு உருவாக்கும்… – இயக்குனர் பரம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கோடீ – புதிய அலைகளை டாலி தனஞ்செய்-க்கு உருவாக்கும்… – இயக்குனர் பரம்

பரம் இயக்கத்தில் டாலி தனஞ்செய் நடிக்கும் ‘கோடீ’

திரையுலக பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! டாலி தனஞ்செயா நடிக்கும் புதிய படத்திற்கு ‘கோடீ’ என பெயரிடப்பட்டு, டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டு இருக்கிறது.

கன்னட தொலைக்காட்சியில் தனது புதிய சாதனைக்காக அறியப்பட்டவர் இயக்குநர் பரம். கலர்ஸ் கன்னட சேனலில் கன்னட மண்ணின் பாரம்பரிய கதைகளை வழங்குவதில் அவருக்கு இருந்த விரிவான அனுபவத்திலிருந்து கன்னட மண்ணின் சாரம்சம் நிறைந்த ஒரு கதையை இயக்குநர் பரம் எழுதி இருக்கிறார்.

யுகாதி பண்டிகையான இன்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘கோடீ’ படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

படத்தின் தயாரிப்பாளர்கள் ‘கோடீ’ எனும் படத்தின் தலைப்பை ஆக்கப்பூர்வமாக வடிவமைத்து வெளியிட்டுள்ளனர்.

டாலி தனஞ்செயாவின் வசீகரிக்கும் கண்களுடன் சுவாரசியமான அம்சங்களையும் இணைத்து, கதையின் தீவிரத்தையும், ஆழத்தையும் வெளிப்படுத்தும் வகையில் மடிக்கப்பட்ட 500 நோட்டுகளால் கடிதங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

‘கோடீ’ – ஒரு மில்லியன் கனவுகளை கொண்ட அன்றாட நபரை சுற்றி வருகிறார் என தலைப்பு தெரிவிக்கிறது.

இந்தப் படம் ஒரு சாதாரண மனிதனின் கனவுகளுக்காக பாடுபடும் உணர்ச்சிகளை ஆழமாக ஆராயக்கூடும் என தனஞ்செயா ஏற்கனவே சுட்டிக்காட்டி உள்ளார்.

ஹொய்சாலாவின் கடைசி பயணத்திற்குப் பிறகு.. ஒரு வருட இடைவெளிக்குப்பின் தனஞ்செயா கன்னட திரையுலகிற்கு திரும்பி இருக்கிறார்.

அவர் ‘கோடீ ‘ படத்தின் மூலம் புதிய அலைகளை உருவாக்கவிருக்கிறார். இந்தத் திரைப்படம் அவரது வாழ்க்கையில் பெரிய தருணத்தை குறிக்கும்.

இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் பரம். இதைப் பற்றி அவர் குறிப்பிடுகையில்…

”கடந்த ஆண்டு தொலைக்காட்சி சேனலில் இருந்து வெளியே வந்தவுடன் பெரிய திரையில் கதைகளை உயிர்ப்பிப்பதே என் இலட்சியமாக இருந்தது ” என்றார்.

இந்தி திரையுலகில் வெற்றியை ருசித்திருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜோதி தேஷ்பாண்டே இந்த படத்தை தற்போது கன்னடத்திலும் தயாரிக்கிறார்.

அருண் பிரம்மா ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு வாசுகி வைபவ்- நோபின் பால் ஆகிய இருவரும் இணைந்து இசையமைக்கிறார்கள்.

இப்படத்தின் தலைப்பு மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில், இதன் டீசர் எதிர்வரும் 13 ஆம் தேதியன்று வெளியிடப்படும் என படக் குழுவினர் அறிவித்துள்ளனர்.

Param and Daali Dhananjeya in Kotee

கலாம் கண்ட கனவு.; என்னைப் போல வாழாதீங்க.. ‘வங்காள விரிகுடா-வில் தமிழக தலைவர்கள்.. – குகன் சக்ரவர்த்தியார்

கலாம் கண்ட கனவு.; என்னைப் போல வாழாதீங்க.. ‘வங்காள விரிகுடா-வில் தமிழக தலைவர்கள்.. – குகன் சக்ரவர்த்தியார்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கலாம் சொன்ன கனவு.. என்னைப் போல வாழாதீங்க.. வங்காள விரிகுடா-வில் தமிழக தலைவர்கள்.. – குகன் சக்ரவர்த்தியார்

வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா..

*21 கிராப்ட்களை கையாண்டு இப்படத்தை தயாரித்து இயக்கி நடித்துள்ள குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது*

மாதா பிதா ஃபிலிம் பேக்டரி வழங்க, தமிழ் திரையுலகில் முதன்முறையாக
கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, ஒளிப்பதிவு, கலை, நடனம், சண்டை பயிற்சி (தனி), உடைகள், ஸ்டில்ஸ், ஒப்பனை, பின்னணி பாடகர், பின்னணி இசை, புரொடக்ஷன் டிசைனர், டைட்டிலிங், சிகை அலங்காரம், வெளிப்புற படப்பிடிப்பு தள நிர்வாகி, தயாரிப்பு, டைரக்ஷன் இவற்றுடன் கதாநாயகனாக குகன் சக்ரவர்த்தியார் நடித்திருக்கும் படம் ‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’.

நம் மக்களின் வாழ்வியலை படம்பிடிக்கும் அருமையான காவியமாக, அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா திங்கட்கிழமை அன்று சென்னை கலைஞர் அரங்கத்தில், படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்கள், திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

‘வங்காள விரிகுடா குறுநில மன்னன்’ இசைத்தட்டினை சிறப்பு விருந்தினர்கள் வெளியிட குகன் சக்வர்த்தியாரின் தாய் மற்றும் தந்தை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது குகன் சக்வர்த்தியாரின் பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டு சிறப்பாக கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வின் முக்கிய அம்சங்கள் வருமாறு…

எழுத்தாளர் இயக்குநர் டி கே சண்முக சுந்தரம் பேசியதாவது…

ஒரு இனிமையான விழா. 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன் சக்வர்த்தியார். திரைப்படக் கல்லூரியில் படித்தவர், அதனால் தான் 21 கிராப்ட்களை கையாண்டுள்ளார். அவரிடம் அதற்கான அறிவு இருக்கிறது. ஒளிப்பதிவு செய்துள்ளார், பாடல் எழுதியுள்ளார், தத்துவ பாடலும் பாடியுள்ளார் பல விதங்களில் அசத்தியுள்ளார். இந்தப்படம் என்ன ஜானர் எனத் தெரியவில்லை, மர்மக்கதையோ என்று நினைதேன்.

தலைப்பு வித்தியாசமாக பல சிந்தனைகளை தூண்டி விடுகிறது. ஆனால் சமூக சிந்தனையை பேசியிருப்பது டிரெய்லரில் தெரிகிறது. மன்னர்கள் ஆண்ட வங்காள விரிகுடா, இப்போது குகன் சக்வர்த்தியார் வசமாகியுள்ளது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையட்டும். ஒரு படைப்பு மக்களுக்கு பயன்பட வேண்டும், அம்மாதிரியான படைப்பாக இப்படைப்பு இருக்குமென நம்புகிறேன். குகன் சக்வர்த்தியாருக்கு வாழ்த்துகள்.

எழுத்தாளர் கலைமாமணி பிரபாகரன் பேசியதாவது…

முயற்சி திருவினையாக்கும் எனும் பழமொழிக்கு உகந்தவர் குகன் சக்வர்த்தியார். எப்போது சந்தித்தாலும் இப்படம் பற்றித்தான் சொல்லிக்கொண்டிருப்பார். இப்படத்திற்காக மிக கடுமையாக உழைத்துள்ளார்.

முத்துராமனின் மகன் கார்த்திக்கை பாரதிராஜா அழைத்து நடிக்க வைத்த போது, இனிமேல் நீ பபூன், ஒரு எண்டர்டெயினர், இயக்குநர் என்ன சொன்னாலும் அதைத்தட்டாமல், மக்களுக்கு பிடிக்கும் படி செய்ய வேண்டுமென சொன்னதாக சொல்வார்கள்.

அது போல் குகன் தன்னை மாற்றிக்கொண்டு இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார். நாம் நம்பும் விசயத்தில் நம்மை முழுமையாக ஒப்புக்கொடுக்க வேண்டும். அது போல் இப்படத்திற்காக உழைத்திருக்கும் குகன் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள், நன்றி.

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது…

இந்த மேடை மிக முக்கியமான மேடை, வெற்றி பெற்றவர்களை பற்றிப் பேசும் மேடையை விட வித்தியாசமான மேடை எனக் கருதுகிறேன். அதற்கு காரணம் மாப்பிள்ளை குகன் தான்.

அவருடன் பழக ஆரம்பித்த காலத்திலிருந்து, இன்று வரை ஒரு வெள்ளந்தியாக உற்சாகமாக இயங்கும் மனிதனாகவே அவரைப் பார்த்துள்ளேன். அவரது அயராத உழைப்பு தான் அவருக்கு இந்த உயரத்தை, மேடையை தந்துள்ளது. பல கஷ்டங்களுக்கு இடையில் இந்தப்படத்தை எடுத்துள்ளார். எத்தனை பிரச்சனை என்றாலும் குகன் எப்போதும் உற்சாகமாகவே இருப்பார்.

அது எப்படி என்று ஆச்சரியமாக இருக்கும். சினிமா எல்லோருக்கும் வெற்றியை தந்துவிடுவதில்லை, ஆனால் அதில் விடா முயற்சியாக இருந்து வெற்றி பெற்றுள்ளார் குகன். உழைப்பவன் என்றும் தோற்பதில்லை, வாழ்த்துகள்.

நெட்பிளிக்ஸ் தமிழ்நாடு சங்கர் பேசியதாவது…

குகனுக்கு எல்லையே கிடையாது, ஒரே ஒரு ஆள் எல்லாவற்றையும் செய்வது மிகப்பெரிய சாதனை. அவருக்கு இன்னமும் நிறைய திறமை இருக்கிறது, அவர் மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகள்.

தயாரிப்பாளர் ஜெசிகா பேசியாதாவது…

நம்மால் ஒரு துறையிலேயே சரியாக வேலை செய்ய முடியாமல் தடுமாறுகிறோம். இந்த நிலையில் 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன். அவரது திறமையை பாராட்டி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். இப்படம் மிகப்பெரிய வெற்றி பெற உங்கள் ஆதரவைத் தர வேண்டும், நன்றி.

மிராக்கல் மூவீஸ் தயாரிப்பாளர் திருநாவுக்கரசு பேசியதாவது…

இந்தப்படத்தில் 21 கிராப்ட்களையும் செய்து அசத்தியிருக்கிறார் குகன். படம் பார்த்தேன், அருமையான கருத்தை சொல்லியிருக்கிறார். பாடல்கள் அருமை.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்திடம் இப்படத்தை வெளியிட வேண்டி பேசினோம், அவர்கள் படம் பிடித்துள்ளது இன்னும் ஒரு வாரத்தில் வெளியீடு பற்றி அறிவிக்கிறோம் என நம்பிக்கை தந்துள்ளனர். எல்லோருக்கும் வாழ்த்துகள் நன்றி.

கருடானந்த சுவாமிகள் பேசியதாவது…

தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி. நாம் இருக்கும் துறையில் சிறப்பாக இயங்குவது தான் நம் சிறப்பு, அந்த வகையில் திரைத்துறையில் 21 கிராப்ட்களை கையாண்டு அசத்தியிருக்கிறார் குகன். குகனை எனக்கு பல காலமாகத் தெரியும், கடவுள் நம்பிக்கை இல்லையென்றாலும் மிகவும் நட்போடு பழகுபவர்.

ஒரு சந்திப்பில் வங்காள விரிகுடா படத்தை எனக்கு போட்டுக் காண்பித்தார், அப்துல் கலாமின் சில காட்சிகள் என்னை நெகிழச் செய்தன. ஒரு காலத்தில் பாக்யராஜ், டி ராஜேந்தர் என, எல்லா கலைகளையும் கையாளும் திறமையாளர்களைப் பார்த்திருக்கிறோம் ஆனால் இப்போது அப்படியில்லை, இன்றைய காலகட்டத்தில் 21 கிராப்ட்களை கையாண்டிருப்பது மிகப்பெரிய விஷயம். அதிலும் சாதித்து காட்டியுள்ளார் குகன். எனக்கு குரு ஸ்தாணத்தை தந்து என்னை வாழ்த்த அழைத்து வந்துள்ள குகனுக்கு என் வாழ்த்துகள்.

நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் உங்களை ஜெயிக்க வைக்க ஒரு மந்திரம் இருக்கிறது அது மாதா பிதா தான். தாய் தந்தையை போற்றுங்கள் உங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். எல்லோரும் இப்படத்திற்கு தங்கள் பரிபூரண ஆசிர்வாதத்தை தர வேண்டுகிறேன், நன்றி.

குகன் சக்கரவர்த்தியார் பேசியதாவது…

எனக்கு பிடித்த ஒரு விஷயத்தை உங்களிடம் கொண்டு வர நினைத்தேன், அது தான் இப்படம். பெரியார், அண்ணா, கலைஞர், ஸ்டாலின், அப்துல்கலாம் என அனைவரையும் ஒரே போஸ்டரில் கொண்டு வரும் ஐடியா தான் இந்தப்படம். அப்துல்கலாமின் கனவு காணுங்கள் எனும் கருத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது.

என்னை மாதிரி வாழாதீர்கள், இவர்கள் மாதிரி வாழுங்கள் என சொல்வது தான் இந்தப்படம். புரட்சித்தலைவர், புரட்சித்தலைவி, கலைஞர், அண்ணா எல்லோரும் வாழும் இடம் வங்காள விரிகுடா. அது போல் இந்தப்படமும் வாழும். இந்தப்படத்தில் முதல்வருக்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளேன். அப்துல் கலாம் மீது எனக்கு ஒரு அதிருப்தி இருக்கிறது என படத்தில் காட்சி வைத்துள்ளேன், அதை எல்லோரும் கண்டித்தார்கள்.

ஆனால் அது எதற்கு என படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். கலைஞர் பேசிய இந்த மேடையில் நானும் இன்று பேசுகிறேன் என்பதே எனக்கு பெருமை தான். காசு உள்ளவன் எல்லாம் படமெடுத்து விட முடியாது, அறிவு வேண்டும். நல்ல படம், அருமையான கதை, நல்ல பாடல்கள் என படம் நன்றாக வந்துள்ளது. படம் நன்றாக இருந்தால் நீங்கள் பாராட்டுவீர்கள். எந்த விஷயமும் எளிதாக நடந்து விடாது. நான் உழைக்கிறேன், பிழைக்கிறேன், வாழ்த்துங்கள், நன்றி.

Gugan Chakravarthiyar speech at Vangala Viriguda event

—-

இதற்குத்தானே காத்திருந்தாய் ரசிகா..; ‘பிரேமலு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ

இதற்குத்தானே காத்திருந்தாய் ரசிகா..; ‘பிரேமலு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

இதற்குத்தானே காத்திருந்தாய் ரசிகா..; ‘பிரேமலு’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி இதோ

ப்ளாக்பஸ்டர் ரொமான்ஸ் படமான “பிரேமலு”, ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

தென்னிந்தியா முழுவதும் பரபரப்பை கிளப்பிய பிளாக்பஸ்டர் திரைப்படமான “பிரேமலு” ஏப்ரல் 12, 2024 முதல், டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.

கிரிஷ் A D இயக்கத்தில் உருவான இந்தத் திரைப்படத்தில், நஸ்லென் மற்றும் மமிதா பைஜூ ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கிரீஷ் A D மற்றும் கிரண் ஜோசி இணைந்து எழுதியுள்ள இப்படத்திற்கு அஜ்மல் சாபு ஒளிப்பதிவு செய்துள்ளார், விஷ்ணு விஜய் இசையமைக்க, ஆகாஷ் ஜோசப் வர்கீஸ் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

பாவனா ஸ்டுடியோஸ் சார்பில் ஃபஹத் பாசில், திலீஷ் போத்தன், சியாம் புஷ்கரன் ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

GATE தேர்வுக்குத் தயாராவதற்காக ஹைதராபாத் நகருக்குச் செல்லும் பொறியியல் பட்டதாரி இளைஞனான சச்சினின் கதையை பிரேமலு விவரிக்கிறது.

ஹைதராபாத்தில் அவன், ஐடி துறையில் பணிபுரியும் ரீனுவைச் சந்திக்கிறான், அவர்கள் நண்பர்களாகிறார்கள்.

சச்சின் ரீனுவை ஒருதலையாகக் காதலிக்க ஆரம்பிக்க, அடுத்தடுத்து நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள், நம்மை ஒரு அழகான பயணத்திற்குக் கூட்டிச் செல்கிறது.

நஸ்லென், மமிதா, சங்கீத் பிரதாப், மற்றும் அகிலா பார்கவன், முதன்மைப் பாத்திரங்களில் அசத்தியுள்ளனர். “ஜேகே”யாக ஷியாம் மோகன் அனைவரையும் கவரும் அட்டகாச நடிப்பை வழங்கியுள்ளார்.

மீனாட்சி ரவீந்திரன், அல்தாஃப் சலீம், ஷமீர் கான் மற்றும் K S பிரசாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேத்யூ தாமஸ் ஒரு அழகான கேமியோவாக பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சியாம் புஷ்கரன் சிறு கதாபாத்திரத்தில் ரசிகர்களை மகிழ்விக்கிறார்.

ஏப்ரல் 12, 2024 முதல் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், கலக்கலான ரொமான்ஸ் காமெடி படமான ‘பிரேமலு’ படத்தைக் கண்டுகளியுங்கள்.

Blockbuster Premalu OTT release date is here

ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு கெட்டவங்கள ஒதுக்கிடுங்க.. – விஜய் ஆண்டனி

ஓட்டுக்கு பணம் வாங்கிட்டு கெட்டவங்கள ஒதுக்கிடுங்க.. – விஜய் ஆண்டனி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

*அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் தருவதை,வறுமை சூழ்நிலை கருதி, வாங்கி கொள்ளலாம் அதே நேரத்தில் நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்-நடிகர் விஜய் ஆண்டனி!*

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில், விநாயக் வைத்தியநாதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் மிருணாளினி ரவி நடித்துள்ள படம் ‘ரோமியோ’.. வரும் 11 ந்தேதி ரிலீசாக உள்ள இப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு கோவையில் நடைபெற்றது..

இதில் ரோமியோ படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி மற்றும் நாயகி மிருணாளினி ரவி ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்..

அப்போது பேசிய விஜய் ஆண்டனி குடும்பத்துடன் பார்க்கும் வகையில் இந்த படத்தை உருவாக்கி உள்ளதாக குறிப்பிட்ட அவர் குறிப்பாக மனைவிகள் பார்க்க வேண்டிய படம் என தெரிவித்த அவர் ஒவ்வொரு கணவனும் மனைவியை இந்த படத்திற்கு அழைத்து வர வேண்டும்.

ரோமியோ திரைப்படம் காதல் மற்றும் திருமணத்திற்குப் பிறகு கணவன் – மனைவி இடையே காதல் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து இந்தப் படம் பேசியிருக்கிறது.

படத்தின் நாயகி முதலிரவு காட்சியில் மதி அருந்துவது போன்ற வெளியிட்ட போஸ்டர் குறித்த கேள்விக்கு:

பதில் அளித்த விஜய் ஆண்டனி படத்தில் சிறிய காட்சியாக அதை வெளிப்படுத்தி உள்ளதாகவும்,இதில் கலாச்சார சீரழிவு போன்ற விஷயங்கள் புகுத்தபடவில்லை

பெண்கள் என்றுமே ஆண்களுக்கு மேலானவர்கள் என குறிப்பட்ட அவர்,ஆண்கள் நிறைய இடங்களில் தோல்வி அடையும் போது அவர்களை தேற்றுவது ஒரு தாய்,மனைவி போன்றவர்களே முக்கிய பங்கு வகிக்கிறார்கள்

சூட்டிங்கின் போது ஏற்பட்ட விபத்திற்கு பிறகு மனதளவில் இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.

நல்ல படங்களுக்கு எப்போதும் வரவேற்பு இருக்கிறது,அண்மையில் வெளியான சில படங்கள் இதற்கு எடுத்துகாட்டாக இருக்கிறது.

நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள அரசியல் கட்சி கேள்விக்கு:

தாம் அனைத்து கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்..

தற்போது அரசியல் கட்சியினர் ஓட்டுக்கு பணம் வழங்குவது குறித்த கேள்விக்கு:

ஓட்டுக்கு பணம் வழங்குவது, பெறுவது தவறாக இருந்தாலும்,வறுமை ,சூழ்நிலை கருதி ஓட்டுக்கு வழங்கப்படும் பணத்தை வாங்கி கொள்ளலாம்,
ஆனால் பணம் பெற்றதால் அந்த கட்சிக்குதான் ஓட்டு என்பதை முடிவு செய்யாமல்,நல்லவர்களுக்கு வாக்களிக்கலாம் என தெரிவித்தார்..

You sell your vote but vote for good candidate says Vijay Antony

பிரம்மாண்ட ‘அந்தகன்’… அவதாரங்கள் விரைவில்.; டாப் கியரில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

பிரம்மாண்ட ‘அந்தகன்’… அவதாரங்கள் விரைவில்.; டாப் கியரில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரம்மாண்ட ‘அந்தகன்’… அவதாரங்கள் விரைவில்.; டாப் கியரில் ‘டாப் ஸ்டார்’ பிரசாந்த்

நேற்று ஏப்ரல் 6.. தனது பிறந்தநாளை ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கொண்டாடினார் பிரஷாந்த். இந்த நிகழ்வில் ஏராளமான ரசிகர்கள் கலந்துக்கொண்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

நிகழ்ச்சியில் பேசிய நடிகர் பிரஷாந்த், “நான் எப்போதும் என் குடும்பமாக நினைக்கும் பத்திரிகையாளர்கள், ரசிகர்களுக்கு வணக்கம். எனது ஒவ்வொரு பிறந்தநாளன்று நான் காலம்காலமாக செய்வது, முதலில் என் பெற்றோரிடம் ஆசி பெறுவேன், பிறகு கோவிலுக்கு செல்வேன். அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அதுபோல் தான் இந்த வருட பிறந்தநாளும் அமைந்திருக்கிறது.

என் பிறந்தநாளன்று என் ரசிகர் மன்ற சகோதரர்கள் பல நற்பணிகளை செய்து வருகிறார்கள்.

ஆனால், இந்த வருடம் அவர்கல் பலருக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கி வருகிறார்கள். தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இந்த நற்பணியை செய்தவர்கள், தற்போது சென்னையில் என் பிறந்தநாளில் தொடங்கியிருக்கிறார்கள்.

அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும், அது நமக்கான பாதுகாப்பு. பத்திரிகையாளர் நண்பர்கள் இருசக்கர வாகனத்தில் செல்கிறார்கள், அவர்களுக்கு தெரியும் தலைக்கவசம் எவ்வளவு முக்கியம் என்பது, இருந்தாலும் இதை நான் ஒரு அறிவுரையாக இல்லாமல், ஒரு தகவலாக அவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டாலும் சற்று சிரமம் பார்க்காமல் தலைக்கவசம் அணியுங்கள், அது நமக்கு மட்டும் அல்ல நமது குடும்பத்திற்கு பாதுகாப்பானது. அதேபோல் நிறைய தண்ணீர் குடிங்க, பாராளுமன்ற தேர்தல் வருகிறது, அனைவரும் தவறாமல் ஓட்டு போடுங்க, ஓட்டு மிகவும் முக்கியமானது.” என்றார்.

’அந்தகன்’ படம் வெளியாவதில் தாமதம் ஏற்படுவது ஏன்? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரஷாந்த், “மிகப்பெரிய பொருட்ச்செலவில், மிக பிரமாண்டமான திரைப்படமாக ‘அந்தகன்’-னை உருவாக்கியிருக்கிறோம். அப்படிப்பட்ட படத்தின் வெளியீடும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே அதற்கான சரியான நேரத்திற்காக காத்திருக்கிறோம். நிச்சயம் விரைவில் அந்தகன் மிகப்பெரிய அளவில் வெளியாகும்.” என்றார்.

மேலும், மீண்டும் நீங்க எப்போது சாக்லெட் பாயாக வரப்போறீங்க? என்ற கேள்விக்கு பதில் அளித்த பிரஷாந்த், “நான் திரும்ப வந்துட்டேன், இனிமே என்னை தொடர்ந்து திரையில் பார்க்கப் போகிறீர்கள்.

சாக்லெட் பாயாக மட்டும் அல்ல பல அவதாரங்களில் விரைவில் என்னை பார்ப்பீர்கள். அதற்கான பணிகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” என்று உறசாகமாக பதில் அளித்தார்.

பிரஷாந்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் பேசுகையில்… “நான் தினமும் மாலையில் உடற்பயிற்சி செய்வேன், பிறகு குடும்த்துடன் நேரம் செலவிடுவேன், அதன் பிறகு பத்திரிகையாளர்களை சந்திப்பேன்,

இது தான் என்னுடைய வாழ்க்கை. அப்போது எனது பழைய அலுவலகத்தில் பெரிய மைதானம் இருக்கும், அதில் தான் நான் எப்போதுமே பத்திரிகையாளர்களை சந்திப்பேன். அப்படி என்னுடைய அந்த பழக்கத்தை பிரஷாந்தும் அவராகவே கத்துக்கிட்டார். நான் எதுவும் சொல்லவில்லை, அவரே எனது வழியை பின்பற்றி பத்திரிகையாளர்களிடம் நட்பாகவும், எளிமையாகவும் பழக ஆரம்பித்து விட்டார்.

அவருடன் எந்த நேரத்திலும் பத்திரிகையாளர்கள் நேரடியாக பேசலாம், அவர் மேனேஜர் எல்லாம் வைத்துக்கொள்ள மாட்டார். இதை நான் சொல்லிக் கொடுக்கவில்லை, அவராகவே கத்துக்கிட்டார்.

கதை தேர்வில் கூட நான் தலையிட மாட்டேன், அதனால் தான் பிரஷாந்த் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தினார். அவராகவே கதை கேட்பார், அந்த கதை பிடித்திருந்தால் என்னிடம் சொல்வார்.

நான் புதிய இயக்குநராக இருக்கிறாரே என்று சொன்னால், கதை கேளுங்கள் நன்றாக இருக்கிறது, என்பார். அப்படி தான் இயக்குநர் ஹரி உள்ளிட்ட பல புதிய இயக்குநர்களை பிரஷாந்த் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில், அவர் தற்போது பல புதிய படங்களில் நடிக்க இருக்கிறார்.

அதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஒரு சிறப்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பு வைக்க இருக்கிறோம், அதில் அவரது அடுத்தடுத்த படங்கள் குறித்து அறிவிப்போம்.” என்றார்.

Prashanth and Thiagarajan talks about Andhagan

TEENZ ஃபர்ஸ்ட் லுக்-க்கு சென்சார்.. ஆடியோ லாஞ்சுக்கு கின்னஸ்..; பாராட்டு மழையில் பார்த்திபன்

TEENZ ஃபர்ஸ்ட் லுக்-க்கு சென்சார்.. ஆடியோ லாஞ்சுக்கு கின்னஸ்..; பாராட்டு மழையில் பார்த்திபன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

TEENZ ஃபர்ஸ்ட் லுக்-க்கு சென்சார்.. ஆடியோ லாஞ்சுக்கு கின்னஸ்..; பாராட்டு மழையில் பார்த்திபன்

*இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு*

*திரையரங்கில் நான்கு காட்சிகளாக இசை வெளியிடப்பட்டு புதிய உலக சாதனை, டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார்*

*பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு பாராட்டு தெரிவித்த ‘டீன்ஸ்’ படக்குழு*

உலகிலேயே முதல் முறையாக திரையரங்குகளில் தணிக்கை சான்றிதழ் உடன் முதல் பார்வை வெளியிடப்பட்டு சாதனை படைத்த இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் முற்றிலும் மாறுபட்ட, குழந்தைகளை மையமாகக் கொண்ட சாகச திரில்லரான ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் சென்னையில் சனிக்கிழமை அன்று வெளியிடப்பட்டது.

டிரெய்லரை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்ட நிலையில், ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இசை சென்னை கமலா திரையரங்கில் நான்கு காட்சிகளாக தொடர்ந்து வெளியிடப்பட்டு புதிய உலக சாதனையை படைத்துள்ளது.

இதை தொடர்ந்து, ஒரே நாளில் ஒரே இடத்தில் அதிக இசை வெளியீட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட படம் என்பதற்கான சான்றிதழ் ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உலக சாதனைகள் சங்கத்தால் வழங்கப்பட்டது. பதிமூன்று குழந்தைகளை மையமாகக் கொண்ட கதை என்பதால் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த 13 இளம் வயதினருக்கு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘டீன்ஸ்’ படக்குழு நேரில் பாராட்டு தெரிவித்தது.

கால்டுவெல் வேள்நம்பி, டாக்டர் பாலசுவாமிநாதன், டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன், ரஞ்சித் தண்டபாணி மற்றும் இராதாகிருஷ்ணன் பார்த்திபன் ஆகியோர் இப்படத்தை தயாரித்துள்ளனர். பயாஸ்கோப் டிரீம்ஸ் எல் எல் பி மற்றும் அகிரா ப்ரொடக்ஷன்ஸ் பேனரில் ‘டீன்ஸ்’ தயாராகியுள்ளது. கீர்த்தனா பார்த்திபன் அக்கினேனி இதன் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் ஆவார்.

விரைவில் வெளியாகியுள்ள ‘டீன்ஸ்’ திரைப்படத்தை தமிழகம் எங்கும் உள்ள திரையரங்குகளில் (கோயம்புத்தூர் தவிர) சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது, கோயம்புத்தூர் வெளியீட்டு உரிமையை எல்மா பிக்சர்ஸ் என். எத்தில்ராஜ் பெற்றுள்ளார்.

இத்திரைப்படத்திற்காக இசை அமைப்பாளர் D. இமான் மற்றும் ஒளிப்பதிவாளர் காவ்மிக் ஆரி ஆகியோருடன் முதல் முறையாக இராதாகிருஷ்ணன் பார்த்திபன் இணைந்துள்ளார். ஆர். சுதர்சன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.

‘டீன்ஸ்’ இசை வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு…

விழாவில் பாராட்டு பெற்ற 13 இளம் சாதனையாளர்களின் சார்பாக இசைக் கலைஞர் லிடியன் நாதஸ்வரம் பேசியதாவது…

“எங்களை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்து கௌரவித்த பார்த்திபன் அவர்களுக்கு மிக்க நன்றி. ‘டீன்ஸ்’ திரைப்படம் பற்றி கூற வேண்டும் என்றால் இது பார்த்திபனின் கனவு.

அவரும் இசையமைப்பாளர் டி இமான் அவர்களும் முதல் முறையாக இணைந்துள்ளார்கள் பாடல்களை கேட்டேன், மிகவும் அருமையாக உள்ளன. உங்கள் அனைவரைப் போன்று நானும் இத்திரைப்படத்தை திரையரங்குகளில் காண ஆவலாக உள்ளேன்.”

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் பேசியதாவது…

“அனைத்தையும் புதுமையாக செய்பவர் பார்த்திபன். ‘டீன்ஸ்’ திரைப்படத்தையும் அவ்வாறே உருவாக்கியுள்ளார் எத்தனையோ புதிய திறமைகளை அவர் இப்படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. பார்த்திபனுக்கும் அவரது குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

‘டீன்ஸ்’ தயாரிப்பாளர்களில் ஒருவரான டாக்டர் பின்ச்சி ஸ்ரீநிவாசன் பேசியதாவது…

“நான் ஒரு குழந்தைகள் மருத்துவர். குழந்தைகளை மையப்படுத்திய ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் கதையை பார்த்திபன் எங்களிடம் சொல்லும் போதே நான்கு தயாரிப்பாளர்களுக்கும் மிகவும் பிடித்திருந்தது. சொல்லப்போனால் பார்த்திபனே ஒரு டீன் ஏஜர் தான். இத்திரைப்படத்தில் 13 டீன் ஏஜர்கள் உடன் பணியாற்றியதால் அவர் இன்னும் இளமையாக, அவர்கள் அனைவரின் உற்சாகத்தையும் தன்னகத்தே கொண்டு திகழ்கிறார்.

இசையமைப்பாளர் இமான் மிக அருமையான பாடல்களை இத்திரைப்படத்திற்கு தந்துள்ளார். சிறுவர்கள் மட்டுமில்லாது அனைத்து தரப்பினரும் பார்த்து ரசிக்கக்கூடிய இத்திரைப்படம் அனைவரின் ஆதரவையும் பெற்று வெற்றி பெறும் என்று நம்புகிறேன்.”

கவிஞர் மதன் கார்கி பேசியதாவது…

“தமிழ் சினிமாவுக்கு ஒரு புதுமையான படைப்பாக ‘டீன்ஸ்’ இருக்கும். பார்த்திபன் சார் இந்த கதையை என்னிடம் விவரிக்கும் போதே அவ்வளவு புதுமையாக இருந்தது. அதை திரையில் பார்க்க ஆவலாக உள்ளேன். ஒவ்வொரு பாடலையும் ஒவ்வொரு விதமாக இமான் இசையமைத்துள்ளார். ஒரு புது இசையமைப்பாளரின் படைப்புகள் போல பாடல்கள் அவ்வளவு பிரஷ்ஷாக உள்ளன. படத்தில் பணியாற்றிய இளம் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.”

இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் பேசியதாவது…

“புதுமை என்றாலே பார்த்திபன் தான். குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது அத்தனை சுலபமான விஷயம் இல்லை. ஆனால் பார்த்திபன் அதை சாதித்து காட்டியுள்ளார். கடின உழைப்பாளியும் இறைபக்தி அதிகம் கொண்டவருமான இமான் இனிமையான பாடல்களை இப்படத்திற்கு வழங்கி உள்ளார். படத்தை பார்த்துவிட்டு இதில் பங்காற்றிய ஒவ்வொருவரையும் தனித்தனியாக வாழ்த்த காத்திருக்கிறேன், நன்றி.”

இளம் நடிகர் விக்ரம் பேசியதாவது…

“சினிமா ஒரு ஆசிரியர் என்றால் அதன் பேரன்பை பெற்ற மாணவர்களில் முதன்மையானவர் பார்த்திபன் சார். ‘டீன்ஸ்’ திரைப்படத்திற்கு உங்கள் அனைவரின் ஆதரவையும் தந்து மாபெரும் வெற்றி அடைய வைக்க வேண்டுகிறேன், நன்றி.”

நடிகை அக்ஷயா உதயகுமார் பேசியதாவது…

“தனது ஒவ்வொரு படத்தின் போதும் அவரது அடுத்த படம் என்னவாக இருக்கும் என்று அனைவரையும் யோசிக்க வைப்பவர் பார்த்திபன் சார். . ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன. இப்படம் கட்டாயம் வெற்றி அடையும் என்று நம்புகிறேன்.”

நடிகர் புகழ் பேசியதாவது…

“குழந்தைகளை வைத்து படம் எடுப்பது என்பது சவாலான விஷயம். பார்த்திபன் சார் அதை சாதித்து காட்டியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரை பார்த்த உடனே திரைப்படத்தை முழுமையாக பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ஒரு குழந்தையாக நான் நடிக்க ஆசைப்படுகிறேன், நன்றி.”

நடிகை வனிதா விஜயகுமார் பேசியதாவது…

“என்னுடைய மகள் பார்த்திபன் சாரிடம் அசிஸ்டெண்டாக பணிபுரிகிறார் என்பது மிகவும் பெருமையான விஷயம். டிரெய்லரை பார்த்த உடனேயே இது கட்டாயமாக திரையரங்குகளில் பார்த்து ரசிக்க வேண்டிய திரைப்படம் என்பது புரிகிறது. இதில் நடித்துள்ள குழந்தைகள் உள்ளிட்ட அனைத்து கலைஞர்களுக்கும் என்னுடைய வாழ்த்துகள்.”

இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசியதாவது…

“பார்த்திபன் சார் என்னுடைய மானசீக குருவாக ஏற்றுக் கொண்டுள்ளேன். சாதனை மேல் சாதனைகளாக படைத்து இளம் இயக்குநர்களுக்கு உற்சாகமாகவும் போட்டியாகவும் திகழ்கிறார்.

‘அஞ்சலி’க்கு பிறகு இத்தனை சிறுவர்கள் நடித்துள்ளது ‘டீன்ஸ்’ திரைப்படத்தில் தான் என்று நினைக்கிறேன். டிரெய்லர் மிகவும் ரசிக்கத்தக்க வகையில் உள்ளது இப்படத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் படக்குழுவினர் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.”

சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது…

“பார்த்திபன் சார் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் மற்றும் இயக்குநர். நான் ஒரு டீனேஜராக இருந்தபோது அவரது ‘புதிய பாதை’ திரைப்படத்தை பார்த்து ரசித்தேன். இப்போது அவரது ‘டீன்ஸ்’ திரைப்படத்தை நான் வெளியிடுகிறேன்.

இந்த திரைப்படத்தில் நடித்த டீனேஜர்களுக்கு 40 வயதாகும் போது அன்றைய டீனேஜர்கள் குறித்தும் பார்த்திபன் ஒரு படம் இயக்குவார் என்பது நிச்சயம். அந்த அளவுக்கு தன்னை அவர் இளமையாகவே வைத்துக் கொண்டுள்ளார். ஒரு திரைப்படத்தின் விநியோக உரிமையை வாங்கும்போது அதை எவ்வாறு புரொமோஷன் செய்ய வேண்டும் என்று நான் யோசித்து திட்டமிடுவது வாடிக்கை. ஆனால் பார்த்திபன் சார் திரைப்படத்திற்கு அவ்வாறு எதுவும் செய்ய தேவை இல்லை. எங்களை விட சிறப்பாக அவரே அனைத்து விதமான புரொமோஷன்களையும் செய்து கொண்டிருக்கிறார். இப்படம் கண்டிப்பாக வெற்றி அடையும்.”

நடிகர் விதார்த் பேசியதாவது…

“இப்படத்தின் டிரெய்லரும் பாடல்களும் அவ்வளவு அருமையாக உள்ளன.படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய பேசுகிறேன் நன்றி வணக்கம். ‘டீன்ஸ்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் நிறைய பேசுகிறேன்.”

இயக்குநர் பேரரசு பேசியதாவது…

“இத்திரைப்படத்தில் அனைத்துமே நிறைவாக அமைந்துள்ளன. ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய வாழ்த்துகள். பார்த்திபன் சாரின் ‘புதிய பாதை’யே இன்னும் பழைய பாதையாகவில்லை, 33 வருடங்களுக்கு பின்னாலும் இன்னும் புதுமையாகவே உள்ளது ஆனால் அவர் மேலும் பல புதிய பாதைகளை போட்டுக்கொண்டே செல்கிறார்.”

இயக்குநர் சரண் பேசியதாவது…

“பார்த்திபன் சார் எப்போதும் உணர்ச்சி வசப்பட மாட்டார். உணர்ச்சி தான் அவர் வசப்படும். ‘டீன்ஸ்’ படத்தின் மூலம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்தையே தமிழுக்கு அவர் வழங்கியுள்ளார். அவருக்கும் அவரது குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள்.”

நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது…

“புதுமைகளின் பிறப்பிடம் பார்த்திபன் சார். அவர் என்ன செய்தாலும் வித்தியாசமாக இருக்கும். அதிலும் ‘டீன்ஸ்’ திரைப்படம் மிகவும் புதிதாக உள்ளது. குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்.”

நடிகர் யோகி பாபு பேசியதாவது…

“பார்த்திபன் சார் உடன் பணியாற்ற வேண்டும் என்று நீண்ட நாட்களாக அவரிடம் கேட்டு வந்தேன். இறுதியாக ‘டீன்ஸ்’ படத்தில் அந்த ஆசை நிறைவேறி உள்ளது. அவருடன் இன்னும் நிறைய திரைப்படங்களில் பணியாற்ற ஆவலாக உள்ளேன், நன்றி.”

இயக்குனர் நடிகர் கே பாக்யராஜ் பேசியதாவது…

“நாளைய சூப்பர் ஸ்டார்களாக வளரப்போகும் ‘டீன்ஸ்’ படத்தில் நடித்துள்ள 13 இளம் கலைஞர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் வாழ்த்துகள். என்னுடன் உதவி இயக்குநராக பணிபுரிந்த பார்த்திபன் இவ்வளவு பெரிய உயரத்தை தொட்டு இருப்பது மிகவும் பெருமை. எப்போதுமே வித்தியாசமாகவும் புதுமையாகவும் சிந்திப்பவர் பார்த்திபன். அவரது இந்த ‘டீன்ஸ்’ திரைப்படம் மாபெரும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன், நன்றி.”

நடிகர் தம்பி ராமையா பேசியதாவது…

“‘டீன்ஸ்’ திரைப்படத்தை காண்பதற்கு நான் மிகவும் ஆவலாக காத்திருக்கிறேன். நடிகர், இயக்குநர் என்பதையும் தாண்டி பார்த்திபன் சார் ஒரு மிகச்சிறந்த கவிஞர். இந்த படத்தில் ஏழு பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். எதை செய்தாலும் புதுமையாக செய்யும் பார்த்திபன் சார் பதிமூன்று முத்துக்களை இப்படத்திற்காக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார். அவர்கள் அனைவரும் நாளைய திரை வானில் சிறகடித்து பறக்க போவது உறுதி. இமானின் பாடல்கள் மிகவும் அருமையாக உள்ளன, கடின உழைப்புக்கு சொந்தக்காரர் அவர். இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைய வாழ்த்துகிறேன்.”

இசையமைப்பாளர் D. இமான் பேசியதாவது…

“இப்படி ஒரு இசை வெளியீட்டு விழாவை இதுவரை நான் பார்த்ததில்லை. அதற்காக பார்த்திபன் சாருக்கு நன்றி. இப்படத்தில் புதுமையான விஷயங்களை நிறைய முயற்சித்துள்ளோம். முதலில் ஒன்று அல்லது இரண்டு பாடல்கள் போதும் என்று இருந்த நிலையில் தற்போது அது ஏழு பாடல்களாக வளர்ந்துள்ளது. பார்த்திபன் சாரும் நானும் எப்போதோ இணைந்து பணியாற்றி இருக்க வேண்டியது, அது இப்போதுதான் கைகூடி உள்ளது. அவருடன் பணியாற்றியது மிகச்சிறந்த அனுபவம், நன்றி.”

Parthibans Teenz audio launch made Guinness record

More Articles
Follows