தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
சுதந்திர தினத்தை முன்னிட்டு பாலாஜி மற்றும் நிகிலா விமல் நடித்துள்ள ஒன்பது குழி சம்பத் ஆன்லைனில் வெளியானது.
ரகுபதி இயக்கியுள்ள இந்த படத்தை திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் இப்படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் பார்த்தால் காப்புரிமை சட்டம் பாயும் என எச்சரித்துள்ளார்.
அதுபற்றிய விவரம் வருமாறு…
தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பார்த்தாலோ அல்லது டெலிகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பக்கங்களில் பகிர்ந்தால் அவர்களின் மீது காப்புரிமை சட்டம் பாயும் என தெரிவித்துள்ளார்.
இதனால் சட்டத்திற்கு புறம்பான இணையதளங்களில் படம் பார்ப்பவர்களுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை மற்றும் 3,00,000 வரை அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ…
Onbathu Kuzhi Sampath Producer warning statement