தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
கன்னட சினிமாவில் உள்ள ஹீரோக்களில் ஒருவர் நிகில் குமாரசாமி.
இவர் இறுதியாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் முன்னாள் இந்தியப் பிரதமர் தேவ கடவுடாவின் பேரன் ஆவார்.
அதாவது கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி கவுடாவின் மகன் தான் இவர்.
இவருக்கு இன்று (ஏப்ரல்17) பெங்களூர் அருகில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது.
சுமார் 100 நபர்கள் இந்த திருமணத்தில் கலந்துக் கொண்டார்களாம்.
கிட்டதட்ட 35 கார்களுக்கு அனுமதி வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் திருமணத்தில் கலந்து கொண்டவர்கள் யாரும் மாஸ்க் அணியவில்லை என தெரியவந்துள்ளது.
மேலும் யாவரும் சமூக விலகலைக் கடைபிடிக்கவில்லை என்ற சர்ச்சையும் கூடவே எழுந்துள்ளது.
கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் பலரும் அவர்களது குடும்பத் திருமணங்களைத் தள்ளி வைத்துள்ளனர்.
இப்படியான சூழ்நிலையில் முன்னாள் முதல்வர், மற்றும் பிரதமரின் குடும்பத் திருமணம் பாதுகாப்பு இல்லாமல் நடைபெற்றது குறித்து கர்நாடகாவில் கடும் சர்ச்சை எழுந்துள்ளது.
கர்நாடகாவில் மட்டும் கொரோனாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No Social Distancing at Nikkil Kumarasamy marriage