தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
லைகா-ரஜினி-முருகதாஸ் ஆகியோரது பிரம்மாண்ட கூட்டணியில் உருவாகவுள்ள படம் தலைவர் 166.
இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் எஸ்.ஜே. சூர்யா மற்றும் யோகிபாபு நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய, இதன் முதற்கட்ட படப்பிடிப்புகள் மும்பையில் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்குகிறது.
சூட்டிங் தொடங்கும் அன்றே பட பர்ஸ்ட் லுக்கையும் வெளியிடவுள்ளனர்.
இந்நிலையில் ரஜினியின் மகளாக நிவேதா தாமஸ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
இவர் கமலின் பாபநாசம் படத்தில் அவரின் மகளாக நடித்திருந்தார் என்பது தங்களுக்கு நினைவிருக்கலாம்.
Nivetha Thomas likely to play Rajinis daughter in Thalaivar 166