இந்தியாவை விட்டு கொரோனாவை விரட்ட ஒரே வழி…; நித்யானந்தாவின் நியூ ஐடியா

nithyanandaபாலியல் தொல்லை, கொலை, கொள்ளை, ஆட்கடத்தல் என பல்வேறு வழக்குகளில் சிக்கியவர் சாமியார் நித்தியானந்தா.

அழகான இளம் பெண்களுடன் எப்போதும் உல்லாசமாகவே இருந்து வருகிறார்.

ஆனாலும் காவல்துறைக்கே டிமிக்கி கொடுத்து தலைமறைவாக உள்ளார்.

ஓரிரு ஆண்டுகளாக கைலாசா என்ற ஒரு புதிய தீவில் வாழ்ந்து வருவதாக அறிவித்தார். தானே அந்த நாட்டின் அதிபர் என்றும் புதிய கரன்சியை அறிமுகப்படுத்தினார்.

எவர் வேண்டுமானாலும் தன் நாட்டிற்கு வரலாம் எனவும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தீவு இந்தோனேஷியா / நியூசிலாந்து நாட்டின் அருகில் உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் அந்த தீவுகளை அவர் விலைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்திருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இவரின் புதிய வீடியோ ஒன்றில்… “தான் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தால் கொரோனா இந்தியாவை விட்டு ஓடும்” என தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Nithyananda idea for corona pandemic ends

Overall Rating : Not available

Latest Post