ஒரு வழியாக புதுச்சேரியில் புது(மை)..; சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

ஒரு வழியாக புதுச்சேரியில் புது(மை)..; சபாநாயகர் அறையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Pondy MLAமே மாதம் 7ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக என். ரங்கசாமி பதவி ஏற்றுக் கொண்டார்.

ஆனால் இவரை தவிர எவருமே அமைச்சர்களாக பங்கேற்கவில்லை.

பாஜக துணை முதல்வர் & 2 அமைச்சர்கள் பதவி கேட்டதால் என்ஆர் காங் தரப்பில் அதிருப்தி நிலவியது.

இதனிடையில் கொரோனா தொற்று காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வந்தார் முதல்வர் ரங்கசாமி.

இதனால் புதுச்சேரி அரசியலில் குழப்பமே நீடித்து வந்தது. கொரோனா சூழலில் கூட அரசு நிவாரணமோ நலத்திட்டமோ அறிவிக்கவில்லை.

இந்த நிலையில் ஒரு வழியாக 3 வாரங்களுக்கு பிறகு புதுச்சேரியில் தற்காலிக சபாநாயகரான லட்சுமி நாராயணனுக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இதனை தொடர்ந்து புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி ஏற்கும் விழாவும் நடைபெற்றது.

சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் நடந்தது. வழக்கமாக சட்டசபையில்தான் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா நடைபெறும்.

ஆனால் இந்த முறை கொரோனா பரவல் காரணமாக சட்டசபையில் உள்ள சபாநாயகர் அறையில் எளிய முறையில் விழா நடந்தது.

முதல் நபராக முதலமைச்சர் ரங்கசாமி எம்எல்ஏவாக பதவி ஏற்று செய்து கொண்டார்.

அவருக்கு தற்காலிக சபாநாயகர் லட்சுமிநாராயணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

இவரை தொடர்ந்து எம்எல்ஏக்கள் தனித்தனியே சபாநாயகர் அறைக்கு வந்து எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

என்ஆர்.காங்கிரஸ், பா.ஜ.க, திமுக, காங்கிரஸ், சுயேட்சை எம்எல்ஏக்கள் ஆகியோரும் எம்எல்ஏக்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

மக்களால் தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்களோடு மத்திய அரசால் (பாஜக) நியமிக்கப்பட்ட 3 நியமன எம்எல்ஏக்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பையொட்டி சட்டசபை வளாகத்துக்குள் வெளியாட்கள் அனுமதிக்கப்படவில்லை.

எம்எல்ஏக்கள் பதவியேற்கும்போது அவர்களின் குடும்பத்தினர் மட்டும் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் பதவியேற்பு விழாவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Newly elected Pondy MLA’s sworned

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் லிஸ்ட்..: டிடி ஷிவானி பவித்ரா ஆல்யாவை முந்தி முதலிடத்தில் ரம்யா

அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகள் லிஸ்ட்..: டிடி ஷிவானி பவித்ரா ஆல்யாவை முந்தி முதலிடத்தில் ரம்யா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

RamyaPandian2020ம் ஆண்டில் தமேல் சேனல் டிவி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட டாப் 20 நடிகைகளின் பட்டியலை சென்னை டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது.

இதில் முதலிடத்தில் ரம்யா பாண்டியன் இடம் பெற்றுள்ளார்.

ராஜூ முருகன் இயக்கி தேசிய விருது பெற்ற திரைப்படமான ‘ஜோக்கர்’ படத்தில் நடித்து பிரபலமானவர் இவர்.

விஜய் டிவியின் குக் வித் கோமாளி சீசன் 1, கலக்கப்போவது யாரு மற்றும் பிக் பாக்ஸ் 4-வது சீசன் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் உள்ளார்.

2. பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் ரோஷ்னி ஹரிபிரியன் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

3. உங்களில் யார் அடுத்த பிரபு தேவா மற்றும் குக்வித் கோமாளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பவித்ரா லட்சுமி.

4. டிவி தொகுப்பாளினி & நடிகை நக்ஷத்ரா நாகேஷ்.

5. ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சத்யா சீரியலில் அசத்தும் ஆயிஷா.

6. பகல் நிலவு சீரியல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ஷிவானி நாராயணன்.. பிக் பாஸ் 4 ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பிரபலமானார்.

7. சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா. இவர் சீரியல் நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

8. விஜய் டிவியில் ஆங்கரிங் செய்து ரசிகர்களை கவர்ந்தவர் டிடி என்ற திவ்யதர்ஷினி. இவர் கணவரிடமிருந்து விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார்.

9. கிகி விஜய்… மானாட மயிலாட, நம்ம ஊரு கலரு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்.

10. தெலுங்கு மற்றும் தமிழ் மொழி திரைப்படங்களில் நடித்தவர் சாந்தினி தமிழரசன்.

11. அஞ்சனா ரங்கன், சைத்ரா ரெட்டி , பிரியங்கா குமார், வித்யா பிரதீப், ஆஷா கெளடா, ஷபனா ஷாஜகான், டெல்னா டேவிஸ், ஸ்ரேயா அஞ்சன், சம்யுக்தா மற்றும் ஹேமா பிந்து உள்ளிட்ட 20 நடிகைகள் இதில் இடம் பெற்றுள்ளனர்.

Ramya Pandian wins most desirable tv artist in 2020

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

ட்விட்டர் பக்கமே வர முடியல..; சூர்யா ரசிகர்களுக்கு பயப்படும் பாண்டிராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

suriya pandirajபாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்தை தற்காலிகமாக ‘சூர்யா 40’ என்றே அழைக்கின்றனர்.

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.

மேலும் நடிகர் சத்யராஜ், திவ்யா துரை, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இமான் இப்படத்துக்கு இசையமைப்பதன் மூலம் முதன் முறையாக சூர்யாவுடன் இணைகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கொரோனா ஊரடங்கால் இதன் சூட்டிங் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று சூர்யாவின் தம்பி கார்த்தி பிறந்தநாளை முன்னிட்டு TWITTER SPACEல் கலந்துக் கொண்டார் இயக்குனர் பாண்டிராஜ்.

அப்போதும் சூர்யா ரசிகர்கள் அவரிடம் ‘சூர்யா 40’ அப்டேட் குறித்து கேட்டுக் கொண்டே இருந்தனர்.

படத்தை பற்றி எதுவும் சொல்லக்கூடாது.
படத்தின் தலைப்பு முதல் அனைத்தும் சிறப்பாக வந்துள்ளது.

சூர்யா சார் ரசிகர்கள் அப்டேட் கேட்டுட்டே இருக்காங்க.. ட்விட்டர் பக்கமே வர முடியல..” என தெரிவித்தார் பாண்டிராஜ்.

Director Pandiraj reply to Suriya fans

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க..; பிரபல ஊடகத்திற்கு கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட் அட்வைஸ்

கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க..; பிரபல ஊடகத்திற்கு கொரோனாவிலிருந்து மீண்ட காளி வெங்கட் அட்வைஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய்யுடன் தெறி, தனுஷுடன் மாரி, கொடி, சிம்புவுடன் ஈஸ்வரன், சூர்யாவுடன் சூரரைப்போற்று, ஜெயம்ரவியுடன் மிருதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளவர் காளி வெங்கட்.

45க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் இவர்.

இவருக்கு சில நாட்களுக்கு முன் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இவர் கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்…

“இது ஒரு விழிப்புணர்வு வீடியோ தான். நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டேன்.

இருமல், மூச்சுத் திணறல் எல்லாமே அறிகுறிகளும் இருந்தன. ஆக்ஸிஜன் லெவல் ரொம்ப கம்மியா இருந்ததால ஹாஸ்பிட்டல்ல அட்மிட் ஆக சொன்னாங்க.

சரி அட்மிட் ஆகலாம்ன்னு முடிவு பண்ணி ஹாஸ்பிட்டல்ல இடமில்லை.

டாக்டர் முருகேஷ் பாபுதான் ரொம்ப உதவியா இருந்தாரு. அவரோட அட்வைஸ் கேட்டு தான் நான் நடந்துகிட்டேன்.

கொரோனா வராம பார்த்துக்குறதுதான் முக்கியம். பதற்றமாக கூடாதுனு சொல்றாங்க. அதானல வராம பாதுகாத்துக்குங்க, பத்திரமா இருங்க”

என வீடியோ பதிவிட்டுள்ளார் காளி வெங்கட்.

இதை ஒரு ஊடகம் பகீர் பரபரப்பு தகவல் என செய்தியாக வெளியிட்டது.

அதை பார்த்த நடிகர் காளி வெங்கட் தன் ட்விட்டரில் இதை கண்டித்துள்ளார்.

இதோ அந்த பதிவு..

1.8M followers இருக்காங்க கொஞ்சம் பொறுப்போட செய்தி போடுங்க,முதல்ல வீடியோவ பாருங்க,தொற்று எனக்கு வந்தது மார்ச் மாதம்,அந்த அனுபவத்த இப்போ வீடியோவா போட்ருக்கேன்,அதுல என்ன #பகீர் இருந்தது உங்களுக்கு,எனக்கு தெரிஞ்ச மருத்துவர் இருக்கிற மருத்துவமனைக்கு போனேன் அங்க படுக்கை இல்ல அவ்ளோதான் https://t.co/JtVUcPQYfg

Actor Kaali Venkat shared experience of battling covid 19

IMG_20210526_142122

PSBB பாலியல் : 27 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு பதட்டம்..; குற்றம் இழைத்தவர்கள் எச்சாதியினராயினும் தண்டிக்கப்படனும்.. – கமல்

PSBB பாலியல் : 27 ஆண்டுகளுக்கு முன்னரே எனக்கு பதட்டம்..; குற்றம் இழைத்தவர்கள் எச்சாதியினராயினும் தண்டிக்கப்படனும்.. – கமல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Kamal (2)பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வோம் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிக்கை விடுத்துள்ளார்.

அதில்..

“ஆசிரியரே மாணவிகளிடம் அத்துமீறிய பத்மா சேஷாத்ரி பள்ளி விவகாரம் மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.

முன்னரே புகார் அளித்தும் பள்ளி இவ்விவகாரத்தில் போதிய கவனம் செலுத்தவில்லை எனும் குற்றச்சாட்டு நமது கல்வி நிறுவனங்களின் மீதான நம்பிக்கையைக் குலைக்கிறது.

தமிழக அரசு இந்த விவகாரத்தில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். வழக்கு விசாரணைக்கு பள்ளி நிர்வாகமும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும்.

இந்த விவகாரம் வெடித்ததை அடுத்து வேறு சில பள்ளிகளில் நிகழ்ந்த, நிகழும் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

தமிழக அரசு உடனடியாக பிரத்யேக விசாரணைக் குழுவினை அமைத்து இந்தக் குற்றச்சாட்டுகளைப் போர்க்கால அவசரத்தில் விசாரிக்க வேண்டும்.

இரண்டு பெண் பிள்ளைகளின் தகப்பனாக குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றிய எனது பதட்டமே 27 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த ‘மகாநதி’. இன்றும் அந்த பதட்டம் குறைந்தபாடில்லை.

கண்ணை இமை காப்பது போல நாம் நம் கண்மணிகளைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கிறோம்.

ஆன்லைன் வகுப்பு போன்ற இணைய வசதிகளை நம் பிள்ளைகள் கையாளும்போது பெற்றோரும் மிகுந்த கவனத்துடன் சரிபார்க்க வேண்டும்.

பிள்ளைகள் சொல்லும் பிரச்சனைகளுக்குக் காது கொடுக்க வேண்டும். அவர்களது அச்சத்தைப் போக்கி அவர்களுக்குத் துணையாக இருக்கவேண்டும்.

இந்தப் பிரச்சனையை குறுகிய கால அரசியல் ஆதாயத்திற்காக சாதிப் பிரச்சனையாகத் திருப்பும் முயற்சி பல தரப்பிலும் நிகழ்வதைக் காண்கிறேன்.

குற்றத்தைப் பேசாமல், குற்றத்தின் தீவிரத்தைப் பேசாமல் பிரச்சனையை மடைமாற்றினால் அது பெரும்பாலும் குற்றவாளிகளுக்கே சாதகமாக முடிந்துவிடும் அபாயம் இருக்கிறது.

குற்றமிழைத்தவர்கள் எச்சாதியினராயினும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும்.

ஓர் அறிவுச் சமூகமாக நாம் அனைவருமே போராடி நீதியை நிலைநாட்ட வேண்டும்.

MNM leader Kamal Haasan on PSBB school issue

5 வருசமாச்சு.. நிறைய பேர் பண்றாங்க..; பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்

5 வருசமாச்சு.. நிறைய பேர் பண்றாங்க..; பாலியல் வழக்கில் கைதான ஆசிரியர் ராஜகோபாலன் வாக்குமூலம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் பேரில் சென்னை பத்ம சேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு ராஜகோபாலன் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கு முன்னதாக, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கொடுத்த வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நங்கநல்லூரில் உள்ள ராஜகோபாலன் வீட்டிலிருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆனால் அதிலுள்ள வாட்ஸ் அப் மேசேஜ்களை ராஜகோபாலன் டெலிட் செய்துள்ளார்.

ஆனாலும் சைபர் க்ரைம் போலீசாரின் உதவியுடன் டெலிட் செய்யப்பட்ட மெசேஜ்களை போலீசார் திரும்ப மீட்டனர்.

இந்த விசாரணையில்… கடந்த 5 ஆண்டுகளாக 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

மேலும் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியுள்ளார்.

இரவில் வாட்ஸ்அப்பில் சாட் செய்யும்படி மாணவிகளை கட்டாயப்படுத்தி இருக்கிறார்.

மேலும் மாணவிகளின் அந்தரங்க போட்டோக்களை அனுப்ப சொல்வாராம்.

இதே பள்ளியைச் சேர்ந்த மேலும் சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

இவை ராஜகோபாலன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் ராஜகோபாலனை காவலில் எடுத்து விசாரிக்க அசோக்நகர் மகளிர் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜகோபாலனால் பாதிக்கப்பட்ட மாணவிகளும் அவர்களது பெற்றோர்களும் 94447 72222 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க முன்வர வேண்டும் என போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

More Articles
Follows