மதுரையில் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு கோயில்.; கும்பாபிஷேகத்தில் முதல்வர் & துணை முதல்வர் பங்கேற்பு

மதுரையில் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு கோயில்.; கும்பாபிஷேகத்தில் முதல்வர் & துணை முதல்வர் பங்கேற்பு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மறைந்த முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர் & ஜெயலலிதாவுக்கு மதுரையில் கோயில் கட்டப்பட்டுள்ளது.

திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட டி.குன்னத்தூர் பகுதியில், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் ஏற்பாட்டின் பேரில் இந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது.

இந்த கோயிலை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 12 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

இந்த கோயிலில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு தலா 400 கிலோ எடையில் முழு வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது.

இந்த கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நடைபெற்ற பூஜையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து, நடைபெற்ற கோ பூஜையில் பசுவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சேர்ந்து உணவளித்தனர்.

New Temple for Ex Chief Ministers MGR and Jayalalitha

ராஜஸ்தானில் ஸ்வெட்டர்.. அஜித் கால் ஜவ்வு கிழிந்தது..; மீண்டும் ரகளையில் தல-தளபதி ரசிகர்கள்

ராஜஸ்தானில் ஸ்வெட்டர்.. அஜித் கால் ஜவ்வு கிழிந்தது..; மீண்டும் ரகளையில் தல-தளபதி ரசிகர்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் பொங்கலை முன்னிட்டு திரையரங்குகளில் ஜனவரி 13ல் ரிலீஸ் ஆனது.

இந்த திரைப்படம் நேற்று ஜனவரி 29ல் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆனது.

இதில் காதல் கோட்டை பட காட்சியை தன் காதல் போல விஜய் சொல்வார்.

அப்போது மாளவிகா.. ‘ராஜஸ்தானில் ஸ்வெட்டரா.? என கலாய்ப்பார்.

இப்போது இணையத்தளத்தில் படம் வெளியாகிவிட்டதால் படத்தை நிறுத்தி நிறுத்தி பொறுமையாக பார்த்து வருகின்றனர்.

அப்படி ஒரு காட்சியை ஜூம் செய்து பார்த்து இருப்பார்கள் போல.. அதுவே தற்போது பிரச்னையாகிவிட்டது.

‘மாஸ்டர்’ படத்தில் ஒரு ஃபைட் சீனில் விஜய் கையில் வாலியுடன் எதிரிகளை அடித்து நொறுக்குவார்.

அப்போது, விஜய்க்கு பின்புறம் டீக்கடையில் இரண்டு வார இதழ்களின் வால் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கும்.

அதில் ஒரு அஜித் பட போஸ்டர் இருக்கும்.

அதில்… “அஜித் குதித்தார் கால் ஜவ்வு கிழிந்தது” என்ற வாசகம் அச்சிடப்பட்டு இருக்கும்.

இதனால் அஜித் ரசிகர்கள் ஆவேசமடைந்தனர்.

அஜித்தை விஜய் அசிங்கப்படுத்திவிட்டார் என அவரை திட்டி ட்ரென்ட் செய்து வருகின்றனர்.

அவர்களை அடுத்து விஜய் ரசிகர்களும் அஜித்தை திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

இதனால் இணையங்களில் சண்டை போட்டு வருகின்றனர் தல & தளபதி ரசிகர்கள்.

Again Vijay and Ajith fans clash due to Master movie scenes

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா – சத்யராஜ்

பாண்டிராஜ் இயக்கத்தில் முதன்முறையாக இணையும் சூர்யா – சத்யராஜ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

‘சூரரைப் போற்று’ படத்துக்குப் பிறகு, சூர்யா நடிக்கவுள்ள படத்தை பாண்டிராஜ் இயக்கவுள்ளார்.

இப்பட நாயகியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

இசையமைப்பாளராக இமான் பணிபுரியவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதில் சூர்யாவுடன் சத்யராஜ் நடிப்பதை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது படக்குழு.

சூர்யா – சத்யராஜ் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது குறிப்பிடத்தக்கது.

Suriya and Sathyaraj team up in Pandiraj direction

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 4வது முறையாக இணையும் சிம்பு & கௌதம் மேனன்

ஐசரி கணேஷ் தயாரிப்பில் 4வது முறையாக இணையும் சிம்பு & கௌதம் மேனன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu gautham menon (2)மாநாடு & பத்து தல ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிலம்பரசன்.

இதில் கௌதம் வாசுதேவ் மேனன், பத்து தல படத்தில் சிம்புக்கு வில்லனாக நடிக்கிறார் என்பதை பார்த்தோம்.

‘பத்து தல’ படப்பிடிப்பு மாநாடு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்த கூட்டணி மீண்டும் இணைகிறது.

ஆம்.. மீண்டும் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்ஸ்டர்நேஷனல் தலைவர் ஐசரி கணேசன் தயாரிக்கிறார்.

சிம்பு – கவுதம் மேனன் கூட்டணியில் வெளியான ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

‘விண்ணைத் தாண்டி வருவாயா பட இரண்டாம் பாகம் எப்போது என்ற கேள்வி எழுந்த நிலையில் அப்பட தொடர்ச்சியாக ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற 12 நிமிடக் குறும்படத்தை இயக்கினார் கௌதம் மேனன்.

இதில் சிம்பு & த்ரிஷா நடித்திருந்தனர்.

Simbu and Gautham Menon joins 4th time

அதர்வா தம்பியை ஹீரோவாக்க கதை கேட்டு வரும் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர்

அதர்வா தம்பியை ஹீரோவாக்க கதை கேட்டு வரும் ‘மாஸ்டர்’ படத் தயாரிப்பாளர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

atharva brotherகடந்த சில மாதங்களுக்கு முன் மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகளுக்கும் நடிகர் அதர்வாவின் தம்பியும் முரளியும் மகனுமான ஆகாஷ் என்பவருக்கும் திருமணம் நடந்தது.

இந்நிலையில் தன்னுடைய மருமகனும் நடிகர் அதர்வாவின் தம்பியுமான ஆகாஷ் என்பவரை விரைவில் ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளாராம் சேவியர்.

இதற்காக விஜய்சேதுபதியின் ஆஸ்தான இயக்குனர் சீனுராமசாமியிடம் கதை கேட்டுக் கொண்டிருக்கிறாராம் சேவியர் பிரிட்டோ.

Atharvaa’s brother Aakash turns hero

கல்யாணமாச்சா? நெற்றி வகிடில் ஏன் குங்குமப் பொட்டு..? ரசிகரை சந்தேகத்தை தீர்த்த ஷனம் ஷெட்டி

கல்யாணமாச்சா? நெற்றி வகிடில் ஏன் குங்குமப் பொட்டு..? ரசிகரை சந்தேகத்தை தீர்த்த ஷனம் ஷெட்டி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Sanam Shettyநடிகை சனம் ஷெட்டியும் பிக்பாஸ் தர்ஷனும் காதலித்தனர்.

பின்னர் தர்ஷன் தன்னை காதலித்து ஏமாற்றியதாகவும், திருமணம் செய்ய மறுப்பதாகவும் சனம் புகார் கொடுக்க அது அந்த சமயத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இருவரும் பின்னர் பிரிந்தனர்.

இந்த நிலையில் பெரும்பாலும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் ஷனம் தன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.

இவர் பிக்பாஸில் இருந்த போதும் சேலை கட்டும் தருணங்களில் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டு வைத்து இருப்பார்.

இதனால் சனம் ஷெட்டிக்கு திருமணம் ஆகிவிட்டதா? ஏன் நெற்றி வகிடில் குங்குமப் பொட்டை வைத்திருக்கிறார் என ரசிகர்கள் குழம்பினர்.

ஒரு ரசிகர் இதை ஷனம் ஷெட்டியிடம் கேட்டார்.

அதற்கு அவர் பதிலளிக்கையில்…

ஆஹா.. இதே கேள்வியைத்தான் நிறைய பேர் கேட்கிறாங்க.. எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..,

உங்கள் ஆசியுடன் விரைவிலேயே திருமணம் ஆகும் என நினைக்கிறேன்.

எங்க குடும்பத்தில் உச்சந்தலை வகிடில் குங்குமப் பொட்டு வைப்பது இயல்பானது.

திருமணம் ஆனவர், ஆகாதவர் என அனைவரும் வைப்போம் என பதிலளித்துள்ளார்.

மற்றொரு ரசிகரோ… அவங்க (ஷனம்) கன்னடர் நண்பரே, கர்நாடகாவில் திருமணம் ஆகாத பெண்களும் நெற்றி வகிடில் குங்குமம் வைக்கும் வழக்கும் உள்ளது என தெளிவாக விளக்கம் அளித்துள்ளார்.

Bigg Boss sanam shetty married or not ?

More Articles
Follows