பகவதி பாலா இயக்கத்தில் புதுமுகங்களின் ‘இளம் ஜோடி’

பகவதி பாலா இயக்கத்தில் புதுமுகங்களின் ‘இளம் ஜோடி’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

மஞ்சுளா கிருஷ்ணப்பா வழங்க சி. எம்.கே. புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ஓசூர் கிருஷ்ணப்பா தயாரித்துள்ள படம்தான் ” இளம் ஜோடி”.

புதுமுகங்கள் விஜய் கிருஷ்ணப்பா , பிரியங்கா ஜோடியுடன் அனு கிருஷ்ணா, ஆதிஷ் பாலா, மீரா கிருஷ்ணன், பயில்வான் ரங்கநாதன், பெஞ்சமின, வைகாசி ரவி, கர்ணா ராதா, ஜூனியர் அசோகன், போண்டாமணி, அம்பானி சங்கர், புரோட்டா முருகேசு, பட்டு மாமி ஆகியோருடன் பகவதி பாலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

தீப்பொறி நித்யா சண்டைப் பயிற்சியையும், தஷி இசையில் சுதந்திரதாஸ், கவிதா குப்புசாமி, ஏகம்பவாணன் பாடல்களையும், ராம்நாத் படத்தொகுப்பையும், பவர் சிவா நடன பயிற்சியையும் கவனித்துள்ளனர்.

” இளம் ஜோடி” படத்தின் கதை. திரைக்கதை, வசனம் எழுதி ஒளிப்பதிவையும் கவனித்து, படத்தையும் இயக்கியுள்ள பகவதி பாலா படத்தைப் பற்றி கூறியதாவது…

” பணம் படைத்தவர்கள் மத்தியில் ஜாதியும் மதமும் கைகோர்த்து சிரிக்கிறது.

பணம் இல்லாதவர்களிடம்தான் இந்த ஜாதியும் மதமும் அரிவாள், வேல்கம்பு கொண்டு அவர்களின் வாழ்க்கையை சின்னா பின்னமாக்குகிறது என்பதை வீரம் கலந்த இளமை துள்ளலுடனும், அனல் தெறிக்கும் வசனத்துடனும், விறுவிறுப்பான சண்டை காட்சிகளுடனும், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பெங்களூரில் இந்தப் படத்தை வளர்த்துள்ளோம்.” என்று பகவதி பாலா கூறியுள்ளார்.

New faces joins for Director Baghavathi Bala’s Ilam Jodi

‘பிரேக்கிங் நியூஸ் 2’ கொடுக்க இணைந்த டிவி ஸ்டார்ஸ்

‘பிரேக்கிங் நியூஸ் 2’ கொடுக்க இணைந்த டிவி ஸ்டார்ஸ்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பெரிய திரையுலகம் போலவே குறும்பட உலகமும் இன்னொருபக்கம் விரிவாகி வருகிறது.

சில குறும்படங்கள் திரைப்படங்களுக்கான முன்னோட்டமாக அமைந்து இயக்குநருக்குத் திரைப்பட வாய்ப்புகளைத் தேடிக் கொடுக்கின்றன.

இச்சூழலில் சஸ்பென்ஸ் திரில்லராக ‘பிரேக்கிங் நியூஸ் 2’ என்கிற குறும் படம் ஒன்று உருவாகி இருக்கிறது.

இப்படத்திற்குக் கதை திரைக்கதை எழுதி சுகன் இயக்கியிருக்கிறார்.

இதில் பிரவீன் பிரதான வேடம் ஏற்று நடித்துள்ளார் .

விஜய் டிவியின் ‘பாரதி கண்ணம்மா’, ‘ஈரமான ரோஜாவே ‘ தொடர்களின் நடித்தவர்.

நாயகியாக நடித்துள்ள அர்ச்சனாவும் சின்னத்திரை பிரபலம் தான்.

இன்று குணச்சித்திரவேடங்களில் திரைப்படங்களில் கலக்கிக் கொண்டிருக்கும் ‘கடைக்குட்டி சிங்கம்’ புகழ் தீபா சங்கர் நடித்துள்ளார்.

‘மாஸ்டர்’படத்தில் விஜய்யை கைது செய்யும் இன்ஸ்பெக்டராக நடித்த சண்முகம் அழுத்தமான பாத்திரம் ஏற்றுள்ளார்.

இவர்கள் தவிர சுந்தர்,பிரதோஷ், பிரகாஷ், பிரபா, ஞானபிரகாஷ், ஸ்ரீவித்யா, பூங்கொடி அரசி, ராஜேஷ், பரமா, யோகராஜ், சந்துரு ,நிவேதா, மகாலட்சுமி, அனிதா, தீபா, மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தை ரத்னா சினிமாஸ் தயாரித்துள்ளது .

இசை- விபின்,ஒளிப்பதிவு – இளையராஜா , எடிட்டிங்- அர்ஜுன் – ராஜ்குமார், வசனம்- அருள், ஸ்பெஷல் எஃபெக்ட்- முருகன் , டைட்டில் -கணபதி, மக்கள் தொடர்பு- சக்தி சரவணன்.
நாட்டில் நிகழும் குற்றச் சம்பவங்களை மையமாக வைத்து பரபரப்பான சஸ்பென்ஸ் த்ரில்லர் குறும் படமாக இது உருவாகி உள்ளது .

இதன் இயக்குநர் சுகன் ஏற்கெனவே ‘பிரேக்கிங் நியூஸ்’ என்ற பெயரில் இயக்கிய குறும்படம் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து வெற்றி பெற்றது.

‘பிரேக்கிங் நியூஸ்’ தலைப்பில் தொடர்ந்து வரிசையாகக் திரைப்படங்களை எடுக்கும் எண்ணத்தில் உள்ளனர் இயக்குநர், அடுத்ததாக இயக்கியிருக்கும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெறும் என நம்புகிறது படக்குழு . இத்தொடர் வரிசையில் இருபது கதைகள் தன்னிடம் உள்ளதாகக் கூறுகிறார் இயக்குநர் சுகன்.

படத்தின் கதையைக் கேட்டுப் பிடித்துப் போனதால் மன்னர் திரைப்படத்தின் தயாரிப்பாளர் இக்குறும்படத்தைத் தயாரித்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

‘பிரேக் நியூஸ் 2’ கனிமொழி விரைவில் வலைத்தளங்களில் கலக்கப்போகிறது.

Breaking News 2 Trailer

Top 2 tv stars joins for Breaking News short film

அமீரா தஸ்தூர் நடிப்பை, புகழந்து பாராட்டிய பிரபுதேவா & ஆதிக் ரவிச்சந்திரன்

அமீரா தஸ்தூர் நடிப்பை, புகழந்து பாராட்டிய பிரபுதேவா & ஆதிக் ரவிச்சந்திரன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

அழகு தேவதை அமீரா தஸ்தூர் போன்ற நாயகி, முன்னணி நடிகரான பிரபுதேவா மற்றும் அவரது அடுத்த தமிழ்ப்படமான “பஹிரா” படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் போன்றோரிடமிருந்து, நடிப்பு திறமைக்காக பெரும் பாராட்டுக்களை பெறுவது பெரும் சாதனைகளில் ஒன்றாகும்.

அமீரா நடிகர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக “பஹீரா” படத்தில் நடித்துள்ளார். உலகம் முழுக்கவே கொண்டாடப்படும் நடிகரான பிரபுதேவா அவர்களுடன் இணைந்து நடிப்பது, அவருக்கு இயல்பிலேயே மிகக்கடினமாக இருந்தது.

அவற்றையெல்லாம் கடந்து, தற்போது தனது கதாப்பத்திரத்தை சிறப்பாக செய்ததாக முன்னணி நடிகரான பிரபுதேவா மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோரிடமிருந்து, பெரும் பாராட்டுக்களை குவித்தது அவருக்கு திரை
வாழ்வில் கிடைத்த பொன்மகுடமாகும்.

இதனை குறித்து இயக்குநர் ஆதிக் கூறுகையில்…

அமீரா தஸ்தூர் இப்படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மொழி அவருக்கு முழுதாக தெரியாதென்றாலும், மாஸ்டர் ( பிரபுதேவா) உடன் அழுது நடிக்கும் உணர்ச்சிகரமான காட்சியில் தனது அற்புதமான நடிப்பு திறமையை வெளிப்படுத்தி, அசத்தியுள்ளார். அவர் கண்டிப்பாக சினிமாவில் மிகப்பெரிய இடத்தை பிடிப்பார் என்றார்.

சென்னயில் இன்று நடைபெற்ற மிகப்பிரமாண்டமான விழாவில், இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. இன்று மாலை இணையத்தில், இப்பட டிரெய்லர் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

Prabhu Deva and Adhik praises Amyra’s acting in Bhagheera

JUST IN எவர் கிரீன் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடன் மரணம்

JUST IN எவர் கிரீன் சூப்பர் ஹிட் பாடல்களை எழுதிய கவிஞர் பிறைசூடன் மரணம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

45 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்த் திரைப்பட பாடலாசிரியராகவும் கவிஞராகவும் தமிழ் மொழி அறிஞராகவும் பல முக்கியமான பங்களிப்புகளை தமிழ்ச் சமூகத்துக்கு வழங்கியவர் கவிஞர் பிறைசூடன்

திரைத்துறையில் 2000 பாடல்களுக்கு மேல் பாடல்களை எழுதியுள்ளார்.

நடந்தால் இரண்டடி… ஆட்டமா தேரோட்டமா…
சைலன்ஸ் காதல் செய்யும் நேரமிது.. பாடல்களை எழுதியிருக்கிறார்.

பக்தி பாடல்கள் 5000க்கும் எழுதியவரும், சிறந்த ஆன்மீகவாதியும், இலக்கியவாதியுமான , கவிஞானி பிறைசூடன் (வயது 65) இன்று (8.10.2021) மாலை 4.30 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

அவருக்கு மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் உள்ளனர்.

இவர் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் செயலாளராகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய மகன் தயா பிறைசூடன் இசையமைப்பாளராக உள்ளார்.

முகவரி
எண்:1
ஜகதாம்பாள் தெரு
பெரியார்நகர்
நெசப்பாக்கம்
சென்னை 600078
போன்:
9840461666
8248500972

பிறைசூடன் பற்றிய தகவல்கள்…

1956 பிப்ரவரி 6 அன்று திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் பிறந்தவர் பிறைசூடன்.

1985-ல் ‘சிறை’ என்ற படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்கு பாடல் எழுதினார்.

1991இல் ’என் ராசாவின் மனசிலே’ படத்தில் ‘சோலப் பசுங்கிளியே’ பாடலுக்காக சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை வென்றவர் இவர் பிறைசூடன்’.

விஜயகாந்த் நடித்த ‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலும் பிறைசூடன் எழுதியதே.

‘இதயம்’ படத்தில் ‘இதயமே இதயமே’ பாடலும் ‘கலகலக்கும் மணியோசை’ (ஈரமான ரோஜாவே), ’காதல் கவிதைகள் படித்திடும் நேரம்’ (கோபுர வாசலிலே) என்ற பாடல்களின் பட்டியல் நீளும்.

பிரசாந்த் & ரோஜா நடித்த ‘செம்பருத்தி’ படத்தில் நான்கு பாடல்களை எழுதினார்.

ரஜினிக்கு ’ராஜாதி ராஜா’ படத்தில் ‘மீனம்மா மீனம்மா’ பாடலை எழுதினார் பிறைசூடன்.

‘பணக்காரன்’ படத்துக்காக பிறைசூடன் எழுதிய ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல் திருமண மேடைக் கச்சேரிகளில் தவறாமல் இடம் பிடிக்கும்.

1990களில் தேவா, எஸ்.ஏ.ராஜ்குமார், ஆதித்யன் இசையில் அதிக பாடல்களை எழுதினார் பிறைசூடன். ‘அமரன்’ படத்தில் ஆதித்யன் இசையில் நான்கு பாடல்களை எழுதினார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் ‘தெனாலி’ படத்தில் ‘போர்க்களம் அங்கே’ என் காதல் ஏக்கப் பாடலை எழுதினார்.

திரைப் பாடல்களைத் தாண்டி நிறைய பக்திப் பாடல்களை எழுதியுள்ளார். அவருடைய கவிதைகள் ‘தாலாட்டு முதல் தாலாட்டுவரை’ என்னும் தலைப்பில் நூலாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

Popular lyricist Pirai Soodan passes away

JUST IN வந்துட்டான்யா வந்துட்டான்யா… வடிவேலு பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லைகா

JUST IN வந்துட்டான்யா வந்துட்டான்யா… வடிவேலு பட பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட லைகா

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ள இத்திரைப்படத்திற்கு
“நாய் சேகர் ரிட்டன்ஸ்” என்று படத்தின் தலைப்பினை அறிவித்தது லைக்கா நிறுவனம்

திரைப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் ஆகியவற்றை லைக்கா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது

நகைச்சுவை நடிகர் வடிவேலு கதாநாயகனாக நடிக்கும் இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

மேலும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளனர். டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

Vaigai Puyal Vadivelu – Director Suraj’s new film title is out

நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா & ஆஷா சரத்

நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்கத்தில் ஆண்ட்ரியா & ஆஷா சரத்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில் நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும் புரொடக்‌ஷன் No.3

தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குனர் பாபி ஆண்டனி இயக்குனராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது.

நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

உடன் ஷா ரா, ஜப்பான் குமார், வினோதினி, பால சரவணன், யுவலக்‌ஷ்மி ஆகியோர் நடிக்கின்றனர்.

படத்திற்கு ஒளிப்பதிவை அகில் ஜார்ஜ் மேற்கொள்ள, ரான் ஈதன் யோஹன் இசையமைக்கிறார்.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்…

தயாரிப்பு – சுஜாதா விஜய்குமார் (ஹோம் மூவி மேக்கர்ஸ்)
இயக்கம் – பாபி ஆண்டனி
ஒளிப்பதிவு – அகில் ஜார்ஜ்
இசை – ரான் ஈதன் யோஹன்
படத்தொகுப்பு – சரத்குமார்
வசனம் – பாபி ஆண்டனி, ஆண்டனி பாக்யராஜ், சவரி முத்து
கலை – தினேஷ் குமார்
காஸ்டியும் டிசைனர் – அம்ரிதா ராம் (ஆண்ட்ரியா ஜெரிமியா), நவாதேவி ராஜ்குமார்
சண்டைப்பயிற்சி – GN முருகன்
எக்சிகியுடிவ் புரொடுயுசர் – சாய்
புரொடக்‌ஷன் எக்சிகியுடிவ் – சக்கரதாள்வார் G
மக்கள் தொடர்பு – சதிஷ் (AIM)

இன்று இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இனிதே துவங்கியது.

Andreah and Asha sarath joins for a new film

More Articles
Follows