சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய வரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’

சமுதாய சீர்கேடுகளை சரிசெய்ய வரும் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nenjukkulla Nee Nirainchirukka movie stillsமுதல் படம் இயக்கும் இயக்குனர்கள் பலரும் குறிவைப்பது கமர்ஷியலான வெற்றியை மட்டும் தான்.

ஆனால் வெகுசிலர் மட்டுமே தாங்கள் இத்தனை காலமாக மனதில் சுமந்து கொண்டிருந்த சமூக பாரத்தை, காலம் காலமாக தொடரும் சமூக அவலத்தை தம் முதல் படத்தின் மூலம் வெளி உலகிற்கு தெரிவித்துவிட மாட்டோமா என உள்ளுக்குள் நெருப்பாக கனன்று கொண்டு இருப்பார்காள்.

அப்படிப்பட்டவர்கள் தான் ‘நெஞ்சுக்குள்ள நீ நிறைஞ்சிருக்க’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் அறிமுகமாகும் இரட்டை இயக்குனர்களான சம்பத்குமாரும் கோனூர் ராஜேந்திரனும்.

இதில் A.சம்பத்குமார் ‘வெங்காயம்’ படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியவர். R.G.ராஜேந்திரன் அவரது நண்பராக இருந்து இந்தப்படத்தில் இயக்குனராக மாறியுள்ளார்.

சிவஹரி அமீதா ஜோடியாய் நடிக்க, லராய் C. சர்சன் இசையமைத்துள்ளார்.
மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப்படம் பற்றி சம்பத்குமார் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

“முழுக்க முழுக்க மலையும் மலைசார்ந்த பகுதிகளிலும் மட்டுமே இந்தப்படம் படமாக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணமும் உண்டு.

எவ்வளவோ நாகரிக வளர்ச்சிகள் வந்துவிட்டதாக நாம் பீற்றிக்கொண்டாலும் கூட, இன்னும் அடிப்படை வசதிகள் கூட சென்றடையாத மக்கள் எவ்வளவோ பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அந்த மக்களின் அவலத்தைத்தான் அழகான காதல் கதை மூலம் சொல்ல முயற்சித்திருக்கிறோம்.

மலை மீது வசிக்கிறான் மாமன் மகன். மலை அடிவாரத்தில் வசிக்கிறாள் அத்தை மகள். இருவருக்கும் காதல்.

ஆனால் பெண்ணின் தகப்பனோ, மலை மீது இருக்கும் மாப்பிள்ளைக்கு பெண்ணை தரமாட்டேன் என்று, மலையடிவாரத்திலேயே வசதியான மாப்பிள்ளையாக பார்க்கிறார்.

இதை மீறி இந்த காதல் கைகூடுவதும், இயற்கை ரூபத்தில் விதி அவர்கள் வாழ்வில் விளையாடுவதும் தான் இந்தப்படத்தின் கதை. இது ஒரு உண்மை சம்பவமும் கூட.

Nenjukkulla Nee Nirainchirukka stills

சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகாவை சேர்ந்த பாலமலை என்கிற பகுதியில் தான் சுமார் 60 நாட்களாக இதன் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறோம்.

அடிவாரத்தில் இருந்து மலையில் நடந்தே சென்று 14 கிமீ தூரத்தில் படப்பிடிப்பு நடத்தியுள்ளார்கள்.

தலைச்சுமையாக படக்குழுவினர் கொண்டுபோன உணவுப்பொருட்கள் வெகு சீக்கிரம் தீர்ந்துவிட்டன.

அதனால் அங்கே மலையில் வசிப்பவர்கள் சமைப்பதையே தாங்களும் சாப்பிட்டு படப்பிடிப்பை நடத்தி வந்தது உண்மையிலேயே புது அனுபவம் என்கிறார் சம்பத்குமார்.

இந்தப்படத்தில் இடம் பெரும் க்ளைமாக்ஸ் பாடலில் இந்த பகுதி மக்கள் படும் அவலங்களை எல்லாம் படமாக்கியுள்ளார்கள்.

இதனால் நெகிழ்ந்துபோன அந்த பகுதி மக்கள், எங்களது இத்தனை வருட கஷ்டங்களை சினிமாவாக வெளிக்கொண்டு வருகிறீர்கள் என நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்ததோடு, படக்குழுவினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தாங்களே மனமுவந்து செய்து கொடுத்தார்களாம்.

Nenjukkulla Nee Nirainchirukka movie stills 2

“நாட்டில் சட்டங்களும் திட்டங்களும் இயற்றப்பட்டுத்தான் இருக்கின்றன. ஆனால் அதை செயல்படுத்துவதில் தான் சிக்கல் நீடிக்கிறது. இதற்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறி பயனில்லை.

நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் தான்” என்கிற கருத்தை அழுத்தமாக வலியுறுத்தும் படமாக இது இருக்கும் என்கிறார் சம்பத்குமார்.

“ஷங்கர் போன்ற இயக்குனர்கள் இந்த உலகின் பிரமாண்டத்தை எல்லாம் திரைப்படத்தில் கொண்டுவந்து மகுடம் சூட்டிவிட்டார்கள்.

அதேபோல சினிமாவின் அடித்தளமும் யதார்த்தமாக, அமையவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.

அதுமட்டுமல்ல, சினிமாவால் சமுதாய சீர்கேடுகளை நூறு சதவீதம் சரிசெய்ய முடியும் என்பதை நான் ஆணித்தரமாக நம்புகிறேன். அதுதான் என்னுடைய முதல் படமாக இதை துணிந்து எடுக்க காரணம்” என்கிற சம்பத்குமார்.

Nenjukkulla Nee Nirainchirukka movie stills

தனது கருத்தை சொல்வதற்கு குறுக்கீடுகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே இந்தப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் மாறியுள்ளார்.

படம் சம்பந்தப்பட்ட வேலைகள் அனைத்தும் முடிவடைந்து ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

வரும் அக்-21ஆம் தேதி ரிலீஸ் செய்யும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

சம்பத்குமார் மற்றும் சஞ்சய் காந்தி இருவரும் இணைந்து இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.

சீனுராமசாமி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷின் புதிய படம்

சீனுராமசாமி இயக்கத்தில் ஆர்.கே.சுரேஷின் புதிய படம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rk suresh policeவிநியோகஸ்தர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் ஆர். கே. சுரேஷ்.

வில்லனாக அறிமுகமான இவர் தற்போது படங்களில் நாயகனாக நடிக்க துவங்கிவிட்டார்.

இவரது தயாரிப்பில் வெளியான தர்மதுரை படம் நல்ல வசூலையும் பலரது பாராட்டுக்களையும் அள்ளியது.

இப்படத்தின் வெற்றி குறித்து ஸ்டூடியோ 9 ஆர்.கே.சுரேஷ் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது…

‘மக்க கலங்குதப்பா ‘பாடலுக்கு தாங்களே நடனமாடியும் குடும்பத்துடன் நடனமாடியும், குழுவாக நடனமாடியும் பலவாறாக யூடியூபில் பதிவேற்றி அவற்றை லட்சணக்கணக்கான பார்வையாளர்கள் பார்க்க வைத்துள்ளார்கள்.

இப்படி ‘தர்மதுரை’ படத்துக்கு மக்களே உருவாக்கிய பல ப்ரோமோ பாடல்கள் கலக்கி வருகின்றன.

இப்படி வீடியோக்களை பதிவிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து மகிழும் தயாரிப்பாளர் ஸ்டுடியோ 9 சுரேஷ், அவர்களைப் பாராட்டவும் அங்கீகரிக்கவும் விரும்புகிறார்.

பதிவேற்றிய ஆர்வலர்களை தேர்வு செய்து, ‘தர்மதுரை’படத்தின் 75வதுநாள் விழா மேடையில் திரைப்பிரபலங்கள் மத்தியில் அங்கீகரிக்கவும் பாராட்டவும் நடனத்திறமையுள்ளவர்களுக்கு விழாமேடையிலேயே ஆட வாய்ப்பளிக்கவும் எண்ணியுள்ளார்.

இதற்காக திறமையான ஆட்டக்காரர்கள் அந்தப்பாடலுக்கு நடனம் ஆடி வீடியோக்களை பதிவேற்றக் கேட்டுக்கொள்கிறார்.

rk suresh police

மேலும் தான் நடிக்கும் படங்கள் பற்றி ஆர்.கே.சுரேஷ் கூறியதாவது…

‘தனிமுகம்’ என்கிற படம் இப்போது தொடங்கப் பட்டிருக்கிறது. இயக்குபவர் சஜித். இவர், பிரபல மலையாள இயக்குநர் ஷாஜி கைலாஸின் இணை இயக்குநர்.

இருவேறு முகம் காட்டி, நடிப்புத்திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதை.

கதாநாயகனாகவே நடிப்பது என்பது என் கொள்கையல்ல. பிற நாயகர்கள் படங்களில் நல்ல நடிப்பு வாய்ப்புள்ள கதைகளிலும் நடிப்பேன்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் புதிய படத்தில் முக்கிய வேடம் ஏற்றுள்ளேன்.

சரவண ஷ்க்தி இயக்கத்தில் ஒரு படத்திலும் கதை நாயகனாக நடிக்கிறேன்.

சீனுராமசாமி இயக்கத்தில் ஒரு படம். இவை தவிர, புதிதாக சில படங்களும் இருக்கின்றன” என்றார்.

மெசேஜ் சொல்ல வரும் ‘போலீஸ்’ சிவகார்த்திகேயன்

மெசேஜ் சொல்ல வரும் ‘போலீஸ்’ சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

sivakarthikeyan police kaaki sattaiசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ வெளியாகி 10 நாட்களை கடந்துள்ள நிலையில், படத்தின் வசூல் ரூ. 36 கோடியை நெருங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது ஆஸ்திரேலியா சென்றுள்ள சிவகார்த்திகேயன் சென்னை திரும்பியதும் மோகன்ராஜா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நவம்பர் 11ஆம் தேதி துவங்கவிருக்கிறது.

பெயரிடப்படாத இப்படத்தின் சூட்டிங் மலேசியா, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளதாம்.

காக்கி சட்டை படத்திற்கு மீண்டும் இப்படத்தில் போலீஸாக நடிக்கிவிருக்கிறாராம்.

இப்படம் தனி ஒருவன் பாணியிலான சோஷியல் மெசேஜ் கலந்த படமாக இருக்குமாம்.

‘தனுஷின் வளர்ச்சி; சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு’ – சிம்பு ஓபன் டாக்

‘தனுஷின் வளர்ச்சி; சிவகார்த்திகேயனுக்கு ஆதரவு’ – சிம்பு ஓபன் டாக்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

simbu stillsகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தனக்கென ஓர் இடத்தை தமிழ் சினிமாவில் பிடித்திருப்பவர் சிம்பு.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள அச்சம் என்பது மடமையடா வருகிற நவம்பரில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இவரது சமீபத்திய பேட்டியில் தனுஷின் வளர்ச்சி குறித்து பேட்டியளித்துள்ளார்.

“தனுஷ் பெரிய உயரத்துக்கு போனால் எனக்கென்ன? நான் என் வேலையை சரியாக பார்க்கிறேனா? என்பதுதான் எனக்கு முக்கியம்.

அவர் என்னைவிட பெரிய ஆளாக வளர்ந்தால், நல்ல விஷயம்தானே.

அவரும் தமிழ் சினிமாவில் உள்ள ஒரு சகநடிகர். அவர் நல்ல உயரத்திற்கு போவதில் என்ன தவறு உள்ளது” என்றார்.

மற்றொரு பேட்டியில் சிவகார்த்திகேயனின் கண்ணீர் பிரச்சினைக்கு ஆதரவு அளித்தது குறித்து கேட்கப்பட்டதற்கு…

“என்னுடைய வாலு படத்திற்கு பெரும் பிரச்சினை ஏற்பட்டது. அதுபோல் பீப் பாடல் பிரச்சினையும் பெரியளவில் உருவெடுத்தது.

அந்த சமயத்தில் எனக்கு யாரும் ஆதரவு கொடுக்கவில்லை.

என் நிலைமை சிவகார்த்திகேயனுக்கு வந்துவிடக் கூடாது என்பதற்காக ஆதரவு அளித்தேன்” என தெரிவித்துள்ளார்.

விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் மோதும் அபிஷேக்பச்சன்

விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் மோதும் அபிஷேக்பச்சன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

abhishek bachchan ajithமணிரத்னம் இயக்கிய ராவணன் படம், ஹிந்தியில் ராவண் என்ற பெயரில் வெளியாகியது.

இதில் விக்ரம், ஐஸ்வர்யாராய், அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

தற்போது விக்ரமை தொடர்ந்து அஜித்துடன் ஒரு படத்தில் இணையவிருக்கிறாராம் அபிஷேக் பச்சன்.

சிவா இயக்கும் தல 57 படத்தில் வில்லன் வேடத்தில் ஒரு பிரபல ஹிந்தி நடிகர் நடிக்கவுள்ளார் என்பதை தெரிவிந்திருந்தோம் அல்லவா.

அந்த கேரக்டரில் நடிக்கதான் அபிஷேக்கிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

இவை உறுதியாகும் பட்சத்தில், விரைவில் இதன் சூட்டிங் தொடங்கும் எனத் தெரிகிறது.

வடஇந்திய ரசிகர்களை குறிவைத்து இந்த கேரக்டருக்கான கூடுதல் பலம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷங்கரை மீறியும் வெளியாகும் ரஜினியின் ‘2.ஓ’ படங்கள்

ஷங்கரை மீறியும் வெளியாகும் ரஜினியின் ‘2.ஓ’ படங்கள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

rajini 2 point O shooting spotரஜினிகாந்த் நடித்து வரும் ஷங்கரின் 2.ஓ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் கெடுபிடிகள் உள்ளது.

படம் தொடர்பான எந்தவொரு புகைப்படமும் இணையத்தில் லீக்காகி விடக்கூடாது என ஷங்கர் கண்காணித்து வருகிறார்.

ஆனால், அதனையும் மீறி ஒரு புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரு காட்டுப்பகுதியில் ரஜினிகாந்த், ஒயிட் அண்ட் ஒயிட் உடையில் பளிச்சென தோன்றுகிறார்.

இந்த புகைப்படத்தை ரஜினி ரசிகர்கள் ஆர்வமுடன் பகிர்ந்து வருகின்றனர்.

More Articles
Follows