நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை..; வாழ வைத்த தெய்வங்களை நெகிழ வைத்த ரஜினி

Neenga illama Naan illa Rajinis thanks note for 45 Years of Rajinism45 வருடங்கள்…. ஒரு துறையில் ஒருவர் இத்தனை வருடங்களாக முன்னணியில் இருப்பது எல்லாம் யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாது.

அதுவும் பலத்த போட்டிகள் நிறைந்த சினிமா உலகில்.. அதுவும் சினிமா ஹீரோவுக்கு உரித்தான சிவப்பான முகம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை தகுதியும் இல்லாத ஒருவர் 45 வருடங்கள் சூப்பர் ஸ்டாராக இருக்க முடியுமா?

எல்லாவற்றையும் செய்து காட்டி இன்றளவும் மங்காத நட்சத்திரமாக வலம் வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.

இயக்குனர் சிகரம் கே. பாலசந்தர் அவர்களால் ரஜினிகாந்த் என்று பெயரிடப்பட்டு ‘அபூர்வ ராகங்கள்’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியானது. இந்த 2020 ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி வந்தால் திரையுலகிற்கு வந்து 45 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் ரஜினிகாந்த்.

இதனையடுத்து 45 வருட கொண்டாட்ட காமன் டிபியை தென்னிந்திய திரை பிரபலங்களை வைத்து ரஜினி ரசிகர்கள் வெளியிட்டு இணையத்தை தெறிக்க விட்டனர்.

இன்று (ஆகஸ்ட் 9) ரஜினியின் 45 ஆண்டுகள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, மோகன்லால், மம்மூட்டி, சிவகார்த்திகேயன், சௌந்தர்யா ரஜினி, அர்ச்சனா, ராகவா லாரன்ஸ் தொடங்கி முன்னணி நடிகர்கள் ஒன்றிணைந்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

கிட்டதட்ட 100க்கும் மேற்பட்டபிரபலங்கள் இதை வெளியிட்டனர். இதை ரஜினி ரசிகர்கள் அதிகளவில் பகிர்ந்த வருகின்றனர்.

இந்த நிலையில் இதுகுறித்து ரஜினி பதிவிட்டுள்ளதாவது…

“என்னுடைய திரையுலகப் பயணத்தின் நாற்பத்தைந்து ஆண்டுகள் நிறைவு பெறும் இந்நாளில், என்னை வாழ்த்திய நல் இதயங்களுக்கும், என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும், என்னுடைய இதயம் கனிந்த நன்றி.
#நீங்கள்_இல்லாமல்_நான்_இல்லை”.

என பதிவிட்டுள்ளார்.

Neenga illama Naan illa Rajinis thanks note for 45 Years of Rajinism

Overall Rating : Not available

Latest Post