தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
திரையரங்க கட்டணம் 25 சதவீதம் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த மல்ட்டி பிளக்ஸ் திரையரங்குகளில் என்னென்ன வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் அரசு அறிவித்துள்ளது.
உணவகங்களுடன் கூடிய மால்களில் செயல்பட்டுவரும் மல்ட்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வரிகளுடன் சேர்த்து 207 ரூபாய் கட்டணமாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உணவகங்கள் இல்லாமல் 3 திரையரங்குகளுக்கு மேல் இருக்கின்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் வரிகளுடன் சேர்த்து 164 ரூபாய் வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த இருவகை மல்ட்டி பிளக்ஸ்களிலும் 15 வகையான நவீன வசதிகள் செய்து கொடுக்கப்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது அதன்படி…
1. திரையரங்கில் முழுமையான குளிர்சாதன வசதி இருக்கவேண்டும்
2. 800 இருக்கைகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்
3. அமரும் பார்வையாளர் இருக்கை 20 அங்குலம் இருக்க வேண்டும்
4. இரு வரிசைகளுக்கான இடைவேளி 41.5 அங்குலம் இருக்க வேண்டும்
5. 100 சதவீதம் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்
6. டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்படவேண்டும்
7. டி.டி.எஸ். ஒலி அமைப்பு இருக்க வேண்டும்
8. மெயின் ஸ்பீக்கர்கள் 3 இருக்க வேண்டும்
9. three way speeckers இருக்க வேண்டும்
10. sround sound systam இருக்க வேண்டும்
11. நவீன கழிவறை வசதி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்
12. குளிர்சாதன வசதி செய்யப்பட்ட லாபி இருக்க வேண்டும்
13. நுழைவு சீட்டு கணினிமுறையில் வழங்கப்பட வேண்டும்
14. இணையத்தில் நுழைவு சீட்டு வழங்க வேண்டும்
15. நுழைவு சீட்டை வீடுகளுக்கு சென்று தரும் வசதி இருக்க வேண்டும்
5 வகையான வசதிகள் மட்டும் கொண்ட மல்டிபிளக்ஸ் திரையரங்குகளுக்கு வரிகளுடன் சேர்த்து 147 ரூபாய் கட்டணமாக வசூலிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
1. திரையரங்கில் முழுமையான குளிர்சாதன வசதி இருக்க வேண்டும்
2. 800 இருக்கைகளுக்கு குறைவாக இருக்கலாம்
3. ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்
4. டிஜிட்டல் முறையில் படம் திரையிடப்பட வேண்டும்
5. டி.டி.எஸ் ஒலி அமைப்பு இருக்க வேண்டும்
மேற்கண்ட வசதிகள் இல்லாத திரையரங்குகள் மல்ட்டி பிளக்ஸ் என்று கூறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் அது சட்டவிரோதம் என தெரிய வந்துள்ளது.