தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் ஒரு டஜன் நடிகைகள்

தளபதி 63 படத்தில் விஜய்யுடன் இணையும் ஒரு டஜன் நடிகைகள்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Nearly 12 main Actress join with Vijay in Thalapathy 63ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய்.

இப்படத்திற்கு தற்காலிகமாக தளபதி 63 என்று பெயரிட்டுள்ளனர்.

இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க, கதிர், விவேக், யோகிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

முக்கிய கேரக்டரில் பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் நடிப்பார் எனவும் கூறப்படுகிறார்.

இதில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்து வருகிறார் விஜய்.

எனவே கால்பந்து வீராங்கனைகளாக ஏகப்பட்ட பிரபல நடிகைகளும் இணைந்துள்ளனர்.

ஏற்கனவே இந்துஜா, ரெபா மோனிகா ஜான், ஆத்மிகா, ரோபோ சங்கரின் மகள் கமிட் இருந்தனர்.

தற்போது 96 படத்தில் விஜய்சேதுபதியின் மாணவியாக நடித்த வர்ஷா பொல்லாம்மாவும் இணைந்துள்ளார்.

விஜய்யின் அக்காவாக தேவதர்ஷினியும் நடிக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

Nearly 12 main Actress join with Vijay in Thalapathy 63

இசை & டிரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட ‘என்ஜிகே’ படக்குழுவினர்

இசை & டிரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட ‘என்ஜிகே’ படக்குழுவினர்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

NGK Trailer and Songs will be out on 29th April 2019சூர்யா நடிப்பில் செல்வராகவன் உருவாக்கியுள்ள படம் என்ஜிகே.

யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தை ட்ரீம்ஸ் வாரியர் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதில் சூர்யாவுடன் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

கடந்த ஏப்., 12ம் தேதி முதல் சிங்கிள் டிராக் பாடலாக தண்டல்காரன் என்ற பாடலை வெளியிட்டனர்.

இப்படம் மே 31-ந்தேதி திரைக்கு வரவுள்ள நிலையில் வருகிற ஏப்., 29ம் தேதி, அனைத்து பாடல்கள் மற்றும் டிரைலரை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

NGK Trailer and Songs will be out on 29th April 2019

தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ சங்கர் உதவி

தங்க மங்கை கோமதி மாரிமுத்துக்கு ரோபோ சங்கர் உதவி

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

Robo Shankar announces 1 lakh cash reward for Gomathi Marimuthuகத்தார் நாட்டின் தலைநகர் தோஹா மாநிலத்தில் ஆசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டிகள் நடைபெற்றது.

இதில் 800 மீ ஓட்டத்தில் தங்கப் பதக்கம் வென்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளவர் தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து என்பது நாம் அறிந்த ஒன்றுதான்.

மிகவும் ஏழ்மையில் நிலையில் இருந்து இந்த சாதனையை புரிந்த இவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் கோமதி மாரிமுத்துவிற்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்துள்ளார் நடிகர் ரோபோ சங்கர்.

இது தொடர்பாக ஒரு வீடியோவும் வெளியிட்டுள்ளார். அதில்…

தமிழ் பெண் கோமதி மாரிமுத்து ஆசிய தடகளப் போட்டியில் தங்கம் வென்றிருக்கிறார். ஒரு தமிழனாக, ஒரு இந்தியனாக இது மகிழ்ச்சியை தருகிறது.

நான் கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்து தன்னம்பிக்கையோடு உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன். என்னைப் போல் கோமதியும், இந்த உயரத்தை பிடித்திருக்கிறார்.

எனவே என்னால் முடிந்த சிறு பரிசாக ஒரு லட்சம் ரூபாய் வழங்குகிறேன்.

நம் எல்லைச் சாமிகளான ராணுவ வீரர்கள் நாட்டுக்காக தியாகம் செய்தபோது குறிப்பாக தமிழ்நாட்டு வீரர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்தேன்.

அப்போது அவர்கள் நம்மோடு இல்லையே என்ற வருத்தம் மனசுக்குள் இருந்தது.

ஆனால் கோமதிக்கு மன நிறைவோடும், மகிழ்ச்சியோடும் கொடுக்கிறேன். அவர் இன்னும் பல விருதுகளை வெல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்.

Robo Shankar announces 1 lakh cash reward for Gomathi Marimuthu

களவாணி – 2 படத்திற்கு ‘பகுதி’ தடை மட்டும் நீங்கியுள்ளது..!

களவாணி – 2 படத்திற்கு ‘பகுதி’ தடை மட்டும் நீங்கியுள்ளது..!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (1)களவாணி 2 படத்தை நடிகர் விமல் தயாரிப்பதாக கூறி மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலனிடமிருந்து 13.10.2017-ல் பணத்தை பெற்று கொண்டு காப்பி ரைட் ஒப்பந்தம் செய்து கொடுத்தார். ஆனால் சொன்னபடி படத்தை தன் பெயரில் தயாரிக்காமல் இயக்குநர் சற்குணம் தயாரிப்பது போல் சித்தரித்து இருந்தார். படத்தின் காப்பிரைட் உரிமையை பெற்றிருந்த மெரினா பிக்சர்ஸ் சிங்காரவேலன், படத்தின் தமிழக விநியோக உரிமையை தனலட்சுமி பிக்சர்ஸ் என்ற நிறுவனத்திடம் வழங்கி இருந்தார்.

படத்தின் தமிழக விநியோக உரிமை தங்களிடம் தரப்படாமல் இருந்ததால் தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தை அணுகி 6 வார இடைக்கால தடை பெற்றிருந்தது. இந்த வழக்கில் எதிர்மனுதாரராக சிங்காரவேலன், விமல், சற்குணம், ஆகியோர் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக மூன்றாம் எதிர்மனுதாரர் இயக்குநர் சற்குணம் நீதிமன்றத்தை அணுகி விமல் செய்து கொடுத்த ஒப்பந்தத்திற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எனவும், அதனால் தடையில் இருந்து தனக்கு மட்டும் விலக்கு அளிக்க மனு அளித்தார்.

அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் இயக்குநர் சற்குணம் மட்டும் படத்தை வெளியிட தடையில்லை எனவும், மற்றவர்கள் வெளியிட தடை நீடிப்பதாகவும், கூடுதல் ஆவணங்களுடன் மனுதாரர் மனுதாக்கல் செய்து வழக்கை நடத்தி கொள்ளலாம் எனவும் தீர்ப்பளித்துள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் நீதிமன்றத்தில் அப்பீல் மனு செய்ய உள்ளது. வழக்கு முடியும் வரை படத்தை வெளியிட்டால், தாங்கள் செலுத்திய பணத்திற்கு நீங்கள் தான் பொறுப்பு என்று படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்கிரீன் சீன் நிறுவனத்திற்கும், கஸ்தூரி பிலிம்ஸ் நிறுவனத்திற்கும், முன்னணி தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும், வெளிநாடு விநியோகஸ்தர்களுக்கும் நோட்டீஸ் அனுப்ப தனலட்சுமி பிக்சர்ஸ் நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

படத்திற்கு ‘பகுதி’ தடை மட்டுமே நீங்கி இருப்பதால் பட வெளியீட்டிற்கு தொடர்ந்து முட்டுக்கட்டை நீடிக்கும் நிலை உருவாகியுள்ளது.

அசத்திட்டீங்க அகோரி; காஞ்சனா 3 சூட்டிங்கில் ஆம்புலன்ஸ் வைத்து நடித்து கொடுத்த சம்பத் ராம்

அசத்திட்டீங்க அகோரி; காஞ்சனா 3 சூட்டிங்கில் ஆம்புலன்ஸ் வைத்து நடித்து கொடுத்த சம்பத் ராம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Projectராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் ‘காஞ்சனா 3’ கடந்த வெள்ளிக்கிழமை வெளியாகி மாபெரும்
வெற்றி பெற்றுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் இரண்டு பாகங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்ததால்,
‘காஞ்சனா 3’ படத்திற்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்க, படமும் மிகப்பெரிய பொருட்ச்செலவில்
பிரம்மாண்டாக தயாரிக்கப்பட்டுள்ளது.

படம் வெளியான மூன்று நாட்களிலேயே ரூ.60 கோடியை வசூலித்து பெரும் சாதனைப் படைத்திருக்கிறது.
இதற்கு காரணம் படத்தின் மீது இருந்த எதிர்ப்பார்ப்பு ஒரு பக்கம் இருக்க, படத்தில் இடம்பெற்ற
வித்தியாசமான கதாபத்திரங்களும், அவர்களது நடிப்பும் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

காஞ்சனா முதல் பாகத்தில் வில்லனாக நடித்த சம்தம் ராம், ‘காஞ்சனா 3’ யில் அகோரியாக
வித்தியாசமான வேடத்தில் நடித்து அசத்தியிருக்கிறார்.

ரஜினி, கமல், அஜித், விஜய் என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த
சம்பத் ராம், தொடர்ந்து பல படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வர, ’காஞ்சனா
3’ அவர் நடித்திருக்கும் அகோரி கதாபாத்திரம், அவரையே மறைத்துவிட்டு புதிய சம்பத் ராமை பார்க்க
வைக்கிறது.

கூன் வளைந்த முதுகோடு, படம் முழுவதும் குணிந்தபடியே நடித்திருக்கும் சம்பத் ராமின் நடிப்பும், அவரது
அகோரி வேடமும் படத்தில் முக்கிய பங்குபெறுவதோடு, படத்தின் திருப்புமுனையாக அமைந்திருப்பதால்,
அவரது வேடத்திற்கும், அதில் அவர் நடித்த விதத்திற்கும் பாராட்டு குவிந்து வருகிறது.

இந்த வேடத்திற்காக பெரிய நடிகர் ஒருவரிடம் முதலில் பேசியிருக்கிறார்கள், சில காரணங்களால் அந்த
நடிகர் நடிக்க முடியாமல் போக, சம்பத் ராமுக்கு அகோரி வேடம் போட்டு மேக்கப் டெஸ்ட்
எடுத்திருக்கிறார்கள். அப்போது அவரை பார்த்த ராகவா லாரன்ஸ், ”இவரே சரியா இருக்கிறாரே, இவரை நடிக்க
வச்சிரலாம்”, என்று கூறி சம்பத் ராமை நடிக்க வைத்திருக்கிறார்.

முதல் முறையாக வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதால், நடிப்பையும் வித்தியாசமாக கொடுக்க
வேண்டும் என்று நினைத்த சம்பத் ராம், அந்த வேடத்திற்காக ரொம்பவே மெனக்கட்டதோடு, அந்த
கதாபாத்திரன் நடை, பாவனை, டயலாக் டெலிவரி உள்ளிட்ட அனைத்திலும் கவனம் செலுத்தி, நிஜ
அகோரியாகவே மாறி லாரன்ஸ் முன்பு நின்று பர்பாமன்ஸ் செய்ய, அவர் அசந்துவிட்டாராம்.

பிறகு சம்பத்
ராமின் போஷன் முடிந்த பிறகு, அவரை லாரன்ஸ் எங்கு பார்த்தாலும், ”அசத்திட்டிங்க, சூப்பரா வந்திருக்கு..”
என்று பாராட்டுவாராம்.

ராகவா லாரான்ஸின் பாராட்டு சந்தோஷத்தை கொடுத்தாலும், ரசிகர்களின் வரவேற்பு எப்படி இருக்குமோ,
என்று பயந்த சம்பத் ராம், படம் வெளியான பிறகு பெரும் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார். சென்ற
இடமெல்லாம் அவரை அடையாளம் கண்டு ரசிகர்கள் பாராட்டி வருகிறார்களாம்.

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு ‘காஞ்சனா 3’யிலும் அந்த அகோரி வேடத்தில் சம்பத் ராம் தான்
நடித்திருப்பதால், தற்போது தெலுங்கு சினிமாவை அவரது நடிப்பு குறித்து பாராட்டி வருகிறது.

அதேபோல்,
மலையாளத்தில் நேரடியாக தமிழில் வெளியான ‘காஞ்சனா 3’ கிடைத்திருக்கும் வரவேற்பை போல, சம்பத்
ராமின் அகோரி வேடத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருவதால், விரைவில் தெலுங்கு மற்றும்
மலையாள சினிமாவில் சம்பத் ராம் முக்கிய நடிகராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா நடிக்கும் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கும் சம்பத் ராம்,
அப்படத்தின் சண்டைக்காட்சியில் ஈடுபட்ட போது விபத்துக்கு உள்ளாகி உடல் நிலை முடியாமல் போனாலும்,
படப்பிடிப்பை முழுவதுமாக முடித்துக் கொடுத்துவிட்டு சென்னை திரும்பியவர், திடீர் உடல் நிலை பாதிப்பால்
அவதிப்பட, மருத்துவமனையில் பரிசோதித்த பிறகே அவரது நெஞ்சில் ரத்தம் கட்டியிருப்பது தெரிய
வந்திருக்கிறது.

உடனே மருத்துவர்கள் அவரை அட்மிட் ஆக சொல்லியிருக்கிறார்கள். ஆனால், அன்றைய
தினத்தில் தான் காஞ்சனா 3 படப்பிடிப்பு இருப்பதோடு, சம்பத் ராம் இடம்பெறும் அந்த காட்சியில் கோவை
சரளா, ஸ்ரீமன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களும் இருப்பதால், தனக்காக அவர்கள் காத்துக் கொண்டிருக்க
கூடாது என்று, அந்த வலியையும் பொருட்படுத்தாமல் நடிக்க கிளம்பியிருக்கிறார். மருத்துவர்கள் எவ்வளவோ
அறிவுறுத்தியும், நடிப்புக்கு முதலிடம் கொடுத்தவர், நெஞ்சு வலியை தாங்கிக் கொண்டு அந்த காட்சியில்
நடித்திருக்கிறார்.

இதை அறிந்த லாரன்ஸ், அவருக்காக ஆம்புலன்ஸ் ஒன்றையும் படப்பிடிப்பில் தயார்
நிலையில் வைத்திருந்தாராம்.

கடவுள் அருளால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல், சம்பத் ராம்,
நல்லபடியாக நடித்து முடித்துவிட்டு பிறகு மருத்துவமனையில் அட்மி ஆகி சிகிச்சை பெற்றிருக்கிறார்.

தற்போது, எப்போதும் போல பூரண உடல் நிலையுடன் ஆக்டிவாக மீண்டும் படப்பிடிப்புகளில்
பிஸியாகியிருக்கும் சம்பத் ராம், பிரபு சாலமன் இயக்கத்தில் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில்
உருவாகும் படத்தில் நடித்து வருவதோடு, சத்யசிவா இயக்கத்தில் உருவாகும் புது படம் ஒன்றிலும் முக்கிய
வேடத்தில் நடித்து வருகிறார். சத்யசிவா இயக்கி வெளியீட்டுக்கு தயராக உள்ள ‘1945’ படத்திலும் சம்பத்
ராம் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். விஜய் ஆண்டயின் ’கொலைகாரன்’ படத்திலும் நடித்திருக்கிறார்.

இப்படி முன்னணி இயக்குநர்கள் பலரது படங்களில் பல முக்கியமான வேடங்களில் நடித்து வரும் சம்பத்
ராம், படத்திற்கு படம் தனது நடிப்பு திறமையை நிரூபிப்பதோடு, வில்லனாக மட்டும் இன்றி நல்ல குணச்சித்த
வேடம் உள்ளிட்ட அனைத்து கதாபாத்திரங்களிலும் தன்னால் நடிக்க முடியும் என்பதையும் நிரூபித்து
வருகிறார்.

தளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.?

தளபதி 63 படத்தில் பவர்புல்லான கேரக்டரில் ஷாரூக்கான்.?

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

New Project (6)சென்னையில் கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்ற போது பாலிவுட் நடிகர் ஷாரூக்கான் வந்திருந்தார்.

அப்போது அவரை மைதானத்திற்கு சென்று சந்தித்தார் டைரக்டர் அட்லீ. அதன்பின்னர் தனியாகவும் சந்தித்து பேசினார்.

தற்போது அட்லி இயக்கி வரும் தளபதி 63 படதில் ஷாரூக்கானை நடிக்க வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடந்தாக கூறப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் விஜய் படத்தில் ஷாரூக்கான் நடிப்பது பற்றிய செய்திகள் வைரலாகி வருகின்றன.

இப்படத்தில் ஒரு பவர்புல்லான நெகட்டிவ் கேரக்டரில் (ஒரு கெஸ்ட் ரோலில்) ஷாரூக்கான் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் உறுதியான தகவல்கள் எதுவும் வரவில்லை.

இதற்காக ஷாரூக்கானுக்கு ஒரு பெரும தொகையை ஏஜிஎஸ் நிறுவனம் தர சம்மதம் சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

More Articles
Follows