வனிதாவிடம் மன்னிப்பு கேட்ட நாஞ்சில் விஜயன்..; சூர்யா தேவிக்கும் நாஞ்சில் விஜயனுக்கும் என்ன தொடர்பு..?

nanjil vijayan vanithaகடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி பீட்டர்பால் என்பவரை மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் வனிதா.

தன்னை சட்டப்படி விவாகரத்து பெறாமல் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன் போலீசில் புகாரளித்தார்.

இதனை அடுத்து ஹெலனுக்கு ஆதரவாக யூடியூப் சேனல் சூர்யா தேவி, லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் ஆதரவளித்தனர்.

இதனால் இந்த விவகாரம் சர்ச்சையானது.

அப்போது சூர்யா தேவிக்கும் விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கும் தொடர்பு இருப்பதாக வனிதா தெரிவித்தார்.

அதனால் நாஞ்சில் விஜயனும் வனிதாவுக்கு மோதல் உருவானது.

இந்த வேளையில் சூர்யா தேவியுடன் நாஞ்சில் விஜயன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டார் வனிதா.

கையில் மதுக்கோப்பையுடன் இருப்பதுதான் தமிழ் கலாச்சாரமா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதனையடுத்து நாஞ்சில் விஜயன் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வனிதா…, “நாஞ்சில் விஜயன் எனக்கு போன் செய்து பேசினார். நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொன்னார்.

அவரை நான் நேரில் சந்தித்தது கூட இல்லை. எனக்கும் அவருக்கும் எந்த பிரச்னையுமில்லை. இவை அனைத்துக்கும் காரணம் சூர்யா தேவிதான். இடையில் கஸ்தூரி உள்ளே புகுந்து இருக்கும் சூழ்நிலையை தவறாக பயன்படுத்தி இருக்கிறார்.

என பதிவிட்டுள்ளார் நடிகை வனிதா.

Overall Rating : Not available

Latest Post