‘என் கேரக்டர் குட்டி ரஜினி மாதிரி…’ மேகி விழாவில் பாண்டியராஜன் பேச்சு

My character is like Kutty Rajini says Pandiyarajanமேகி’ படத்தின் ஒரு பாடலும், முதல் பார்வை போஸ்டரும் வெளியிடப்பட்டது. விழாவில் அப்பட குழுவினர் பேசியதாவது:-

பாத்திமா பாபு பேசும்போது,

மேகி படத்தைத் தயாரிக்கும் சனம் ஷெட்டிக்கு வாழ்த்துக்கள். பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது நடிகர் கமல்ஹாசனிடம் இந்நிகழ்ச்சியில் நீங்கள் யாராக இருக்க விரும்புவீர்கள் என்று கேட்டபோது, தர்ஷனாக இருக்க விரும்புகிறேன் என்று கூறினார்.

அதன்பிறகு தான் நான் தர்ஷனைக் கவனிக்க ஆரம்பித்தேன். அப்போதுதான் ‘குறை ஒன்றும் இல்லை‘ என்ற பாடல் வரிகளுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறான் என்பது புரிந்தது. நிச்சயம் இந்நிகழ்ச்சியின் வெற்றியாளனாக வருவான்.

என் வீட்டிலும் எல்லோருக்கும் அவரைப் பிடிக்கும். தர்ஷன் பிக் பாஸ் -3 யிலிருந்து வெளியே வந்ததும் என்னுடைய மகனாக தத்தெடுக்கப் போகிறேன்.

தற்போதுள்ள சூழலில் திரைப்படம் தயாரிப்பது என்பது சவாலான விஷயம். அதைத் துணிச்சலாக சனம் ஷெட்டி செய்திருக்கிறார். தர்ஷனை தேர்ந்தெடுத்தது புத்திசாலியான விஷயம்.

அவரிடம் ஒரு நாயகனுக்கு உரித்தான அனைத்தும் இருக்கிறது. இன்று முதல் பார்வை மட்டும் தான் வெளியாகியிருக்கிறது. படப்பிடிப்பு மேகாலயா போன்ற இடங்களுக்குச் சென்று நடத்தவிருக்கிறார்கள் என்றார்.

சனம் ஷெட்டி பேசும்போது..

இப்படத்தின் முக்கிய சராம்சம்.. சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக ‘மேகி’ இருக்கும் என்பதால் இப் படத்தைத் தயாரிக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.

தர்ஷனை முதல்முறை விளம்பர படப்பிடிப்பில் தான் பார்த்தேன். அங்கு பலரும் இவர் பார்ப்பதற்கு கதாநாயகன் மாதிரி இருக்கிறார்கள் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். உடனே அவரிடம் அணுகி ஆடிஷனுக்கு வாங்க என்று அழைத்தேன். நான் நினைத்தது போலவே தர்ஷன் பொருத்தமாக இருந்தார்.

அவர் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியில் இருப்பதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அவர் வெளியே வந்ததும் படிப்பிடிப்பு தொடர்ந்து நடக்கும்.

மேலும், பல பேர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டாலும் அனைவரின் இதயத்தையும் கவர்ந்தது தர்ஷன் மட்டும் தான். படப்பிடிப்பிலும் அப்படி தான் இருந்தார்.

எங்கள் அனைவரையும் கவர்ந்தார். எனக்கும் அவரை மிகவும் பிடிக்கும். அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் – 3 நிகழ்ச்சியின் தலைப்பு வெற்றியாளராக வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். கதைப்படி கதாநாயகி மேகாலயாவைச் சேர்ந்த பெண் என்பதால் அங்கு படப்படிப்பு நடத்தினோம்.

அனிதா அலெக்ஸ் தயாரிப்பில் ‘எதிர்வினை ஆற்று’ என்ற படத்திலும் நடித்து வருகிறேன். அப்படத்தின் பாடலும் விரைவில் வெளியாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று 14 படங்களில் நடித்திருக்கிறேன்.

ஆனால், தயாரிப்பு என்று வரும்போது பல தடைகளைத் தாண்டி வரவேண்டும் என்கிற அனுபவம் கிடைத்தது. இப்படத்திற்கு எனக்கு பக்கபலமாக இருக்கும் என்னுடைய கோ தயாரிப்பாளர் திருவிற்க்கு நன்றி கூற வேண்டும்.

நடிகர் பாண்டியராஜனை அணுகி இப்படத்தில் பணியாற்ற அழைத்தோம். அவரும் மேகாலயா வரை வந்து சாப்பாடு, போக்குவரத்து போன்ற சிரமங்களுக்கிடையேயும் எங்களுடன் சகஜமாக குடும்பத்தில் ஒருவர் போல் பழகினார்.

எனக்கும் அவருக்கும் இப்படத்தில் நிறைய காட்சிகள் இருக்கிறது. அவரை எதிர்க்கும் காட்சிகளில் நான் கொஞ்சம் பயந்தேன். ஆனால், அவர் வசனத்தில் என்ன உள்ளதோ அதை தயங்காமல் பேசு என்று என்னை ஊக்குவித்தார்.

பாத்திமா பாபு என் அழைப்பை ஏற்றுக் கொண்டு இந்த விழாவிற்கு வந்து சிறப்பித்ததற்கு நன்றி என்றார்.

நடிகர் பாண்டியராஜன் பேசும்போது,

இந்நிகழ்ச்சிக்கு நான் வருவதற்கு முக்கிய காரணம்.. ஷூட்டிங்கில் என்னை , என் வீட்டில் உள்ளவர்கள் போல் பார்த்துக் கொண்டார்கள்.

இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம், உடைகள் எல்லாமே குட்டி ரஜினிகாந்த் மாதிரி மாற்றியிருக்கிறார்கள்.

அதேபோல் படக்குழுவினர் அனைவரும் ஈகோ இல்லாமல் நன்றாக பழகினார்கள். இவர்கள் எல்லோரும் வெற்றியை நோக்கி உள்ளார்கள். இவர்கள் வெற்றியடைய வாழ்த்துக்கள்

முறைப்படி வயலின் வாசிக்க கற்றுக்கொண்டு தான் சினிமாவுக்கு வந்தேன். ‘நெத்தியடி’ படத்திற்கு நான் தான் இசையமைத்தேன். அதன்பிறகு வேறு எந்த படத்திற்கும் என்னை யாரும் இசையமைக்க கேட்டதில்லை.. என்றார்.

மைக்கேல் பேசும்போது,

இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தது போல் இருந்தது. சனம் ஷெட்டி என்னுடைய தோழி மற்றும் இப்படத்தில் என்னுடைய கதாபாத்திரமும் பிடித்திருந்ததால் இக்கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டேன்.

எனக்கும் சனம் ஷெட்டிக்கும் சண்டைக் காட்டிகள் இருக்கிறது என்றார்.

நடிகர்கள்:-

‘பிக் பாஸ் -3′ புகழ் தர்ஷன், சனம் ஷெட்டி, பாண்டியராஜன், ரமேஷ் திலக், கருணாகரன், அர்ஜுனன், அபிஷேக், பிரவின் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:-

இயக்கம் – ராதாகிருஷ்ணன்.G
இசை – சாம் சி.எஸ்.
ஒளிப்பதிவு – கிரிக் வாஹின்
சண்டை பயிற்சி – தினேஷ் சுப்பராயன்
கலை – உமா ஷங்கர்
நடனம் – விஜயராணி
தயாரிப்பு – திரு @ சனம் ஷெட்டி
தயாரிப்பு நிறுவனம் – ரீலிங் பக்ஸ் புரொடக்க்ஷன் பிரைவேட் லிமிடெட்.

நிகழ்ச்சியின் இறுதியில், இப்படத்தின் முதல் பாடலை நடிகர் பாண்டியராஜன் வெளியிட்டார். முதல் பார்வை போஸ்டரை பாத்திமா பாபு, அனிதா அலெக்ஸ், நடிகர் பாண்டியராஜன் ஆகியோர் வெளியிட்டனர்.

Overall Rating : Not available

Latest Post