இசையமைப்பாளர் குமரன் இயக்கிய ‘நோ கொரோனா மூவ்மென்ட்’

இசையமைப்பாளர் குமரன் இயக்கிய ‘நோ கொரோனா மூவ்மென்ட்’

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

S Kumaranகடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது.

பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி இசையமைப்பாளரும் இயக்குனருமான எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற பெயரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இயக்கியுள்ளார்.

தெருவில் சுற்றும் பிச்சைக்காரர் ஒருவர் கூட, முக கவசம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை பாதசாரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இந்த குறும்படம் தயாராகியுள்ளது.

இந்த குறும்படத்தை சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ அமைப்புடன் சேர்ந்து உருவாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். இந்த குறும்படத்தை நடிகர்கள் சுஹாசினி மணிரத்னம் & காளி வெங்கட் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். களவாணி படத்தின் வெற்றிக்கு பக்கபலமான பாடல்களை கொடுத்தவர்..

தேநீர் விடுதி, கேரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களின் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியவர்..

இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறிவித்துள்ள சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன்.

சென்னை அசோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இவரது இந்த முயற்சிக்கு ஊக்கம் கொடுத்து இந்த குறும்படத்தை தயாரிக்க பக்கபலமாக இருந்தது சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வு தொண்டு நிறுவனம்.

2003ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கணினி துறையில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துள்ளது.

அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் குறித்தே அறியாமல் இருந்த கிராமத்து மாணவர்களை கணிப்பொறி அறிவியலை கற்க வைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளது.

2007ல் சங்கர நேத்ராலாயாவுடன் இணைந்து பலருக்கு இலவச கண் சிகிச்சை அளித்துள்ளது.

இயற்கை மூலிகைகள், மற்றும் ஆர்கானிக் பண்ணைகளை உருவாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியில் ஊக்கமுடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த வருடம் முதல் கொரோனா பொது முடக்கத்தால் உணர்வின்றி தவித்த 200-க்கும் மேற்பட்ட மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது.

மேலும் கொரோனா பாதிப்பால் தங்களது பெற்றோர்களை இழந்து ஆதரவற்று நிற்கும் சிறுவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களை பாதுகாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது.

அந்தவகையில் ‘நோ கொரோனா மூவ்மென்ட்’ என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒன்றரை நிமிடம் கொண்ட இந்த குறும்படத்தை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனுடன் இணைந்து உருவாகியுள்ளது.

Music Director Kumaran’s No corona movement

வாக்களித்தவர்கள் இளிச்சவாயர்கள்.? : ரங்கசாமியை ரவுண்ட் கட்டும் பாஜக.. அலட்சியமான அரசியல்வாதிகள்.!

வாக்களித்தவர்கள் இளிச்சவாயர்கள்.? : ரங்கசாமியை ரவுண்ட் கட்டும் பாஜக.. அலட்சியமான அரசியல்வாதிகள்.!

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

,

கொரோனா காலத்திலும் தங்கள் உயிரை பணயம் வைத்து வாக்குச் சாவடிக்கு வந்து தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்கள் புதுச்சேரி மக்கள்.

மாநில வாக்குப்பதிவும் 80% நெருங்கியது.

தேர்தல் முடிவின் படி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் 10 இடங்களிலும் பாஜக 6 இடங்களிலும் வென்று ஆட்சியை பிடித்தது.

மே 7ஆம் தேதி என் ரங்கசாமி மட்டும் முதல்வராக பதவியேற்றார். ஆனால் அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை.

இதனால் சட்டசபை எப்போது கூடும்? எனத் தெரியவில்லை.

இந்த கேப்பில் துணை முதல்வர் மற்றும் 2 அமைச்சர்கள் பதவியை கேட்டது பாஜக.

துணை முதல்வர் பதவி என்பது இதுவரை புதுச்சேரியில் கிடையாது என பேட்டியளித்தார் முதல்வர் ரங்கசாமி.

அடுத்த நாளே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு முதல்வர் ரங்கசாமி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். (ஒரு மாநில முதல்வர் தன் மாநில அரசு & தனியார் மருத்துவமனைகளை நம்பவில்லை என்பது வேறுகதை. அப்படி என்றால் மக்கள் நிலை?)

இந்த சந்தடி சாக்கில்தான் பாஜக தன் வேலையை காட்ட ஆரம்பித்தது.

திடீரென தன் கட்சி சார்பில் 3 நியமன எம்.எல்.ஏக்களை நியமித்தது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இப்போது 6+3=9 எம்எல்ஏக்கள் என பலம் கூடியது.

இவர்களுடன் சுயேட்சை எம்எல்ஏக்களில் 2-3 பேரை தங்கள் பக்கம் இழுத்து வருகிறது.

இதனால் சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்து வருகிறது.

அப்போது தான் மே 17ஆம் தேதி குணமாகி சென்னையில் இருந்து புதுச்சேரி திரும்பினார் ரங்கசாமி.

ஆனாலும் பாஜகவின் சதிகளால் ரங்கசாமி தலைமையிலான அமைச்சர்கள் இன்னமும் பதவியேற்கவில்லை.

தேர்தல் முடிவு வந்து 3 வாரங்கள் ஆகியும் புதுச்சேரி மாநில நிர்வாகம் முடங்கிக் கிடக்கிறது.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் தொற்றும் புதுச்சேரி & காரைக்காலில் வேகமாக பரவி வருவதால் பலர் உயிரிழக்கின்றனர்.

இதனை கட்டுப்படுத்த அரசும் இல்லை.. அமைச்சரும் இல்லை.. எந்த முயற்சியும் இல்லை.

கொரோனா ஊரடங்கால் மஞ்சள் ரேசன் கார்டு மக்களும் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். அவர்களுக்கு அரிசி உள்ளிட்ட எந்த நிவாரணமோ வந்து சேரவில்லை.

திமுக காங்கிரஸ் கட்சிகளும் மற்ற அரசியல்வாதிகளும் மக்கள் நலனில் அலட்சியமாகவே உள்ளனர்.

வாக்களித்தவர்கள் இளிச்சவாயர்கள்.? என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது..

Worst Politicians and Ruling Party in Puducherry

காலை 7 முதல் மதியம் 1 வரை மட்டுமே.; காய்கறி-பழங்கள் விற்பனைக்கு அரசு ஏற்பாடு

காலை 7 முதல் மதியம் 1 வரை மட்டுமே.; காய்கறி-பழங்கள் விற்பனைக்கு அரசு ஏற்பாடு

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தமிழகத்தில் நாளை மே 24 முதல் தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இதுநாள் வரை அனுமதிக்கப்பட்ட மளிகை & காய்கறி கடைகளுக்கு கூட நாளை முதல் அனுமதியில்லை என அரசு அறிவித்துவிட்டது.

அதே சமயம் நாளை முதல் பால் கடைகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க்குகள், உணவகங்கள் இயங்கலாம்.

இந்நிலையில் நாளை காலை 7 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொதுமக்களுக்கு காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப்படும் என தமிழக வேளாண்துறை அறிவித்துள்ளது.

உள்ளாட்சி துறை மற்றும் கூட்டுறவுத் துறை மூலம் காய்கறிகள், பழங்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விநியோகம் செய்யப்படவுள்ளது.

சென்னைக்கு ஒரு நாளைக்கு 1160 மெட்ரிக் டன் காய்கறிகள் தேவையாக உள்ளன.

சென்னையில் மட்டும் 1,610 வாகனங்கள் மூலம் முழு ஊரடங்கு காலத்தில் காய்கறிகள், பழங்கள் விநியோகம் ஆகும்

தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 2,775 வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விநியோகம் என கூறப்பட்டுள்ளது.

காய்கறிகள் மற்றும் பழங்கள் விநியோகம் தொடர்பான தகவல் தெரிந்து கொள்ள 044 2225 3884 என்ற தொலைபேசி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Mobile carts helplines to supply fruits and vegetable during lockdown in TN

‘போட்டும் போகட்டுமே’ இசை: கொரோனா நெருக்கடியில் நம்பிக்கை தரும் பாடல்

‘போட்டும் போகட்டுமே’ இசை: கொரோனா நெருக்கடியில் நம்பிக்கை தரும் பாடல்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

arjun dasநீங்களும் உங்கள் குடும்பத்தினரும் நலமாக பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

இந்த வீடியோவின் போஸ்டர், பிரமோ வீடியோவைத் தவிர நான் கடந்த சில காலமாக வேறெதுவும் பகிரவில்லை.

உண்மையச் சொன்னால், எனக்கு வேறதையும் பகிரும் மனநிலை இல்லை. உலகம் முழுவதும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளைப் பார்க்கும்போது இது மாதிரியான நிகழ்வுகளில் ஈடுபட மனமில்லை.

இந்த வீடியோவையும் கூட இன்னொரு தருணத்தில் பகிர்ந்திருக்கலாம்.

ஆனால், இதை உருவாக்குவதன் பின்னணியில் நிறைய பேரின் கடினமான உழைப்பு இருக்கிறது.
இந்த கடினமான நேரத்தில் இந்த வீடியோ உங்கள் ஆன்மாவிலிருந்து நிம்மதியைக் கொணர்ந்து முகத்தில் மகிழ்ச்சியைக் கொண்டு வரச் செய்யும்.

இந்தப் பாடலுக்கு அற்புதமான வரிகளைக் கொடுத்த விஷ்ணுவுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். லாவன்யா உங்களுடன் பணியாற்றியது இனிமையான அனுபவத்தைத் தந்தது. அழகான காட்சிகளைக் கொடுத்தமைக்கு பிரிட்டோவுக்கு நன்றி.

எடிட்டிங்கில் கைவண்ணம் காட்டிய ஆகாஷுக்கும், பாடலுக்கு குரல் மூலம் உயிர் கொடுத்த ஜென் மற்றும் சத்யாவுக்கும் நன்றி. அசோக் மாஸ்டரும் அவரது குழுவினர் தெறிக்கவிட்டுள்ளனர். ஸ்ருதி ஆடைவடிவமைப்பில் அசத்தியிருக்கிறார்.
ரியல் ஒர்க்ஸ் ஸ்டூடியோஸ் விஷுவல் எபெக்ஸில் கலக்கியிருக்கிறது.

லோகி, நீங்கள் தான் நான் இதை உருவாக்கக் காரணம். மிகுந்த நன்றி.

ஓர் இசை ஆல்பத்தை உருவாக்குவது போல் எனக்குத் தோன்றவில்லை ஏடோ ஒரு குறும்படம் எடுப்பதுபோல், சினிமா காட்சி எடுப்பது போல் இருந்தது.

ஒரு திரைப்படத்தை இந்தக் குழுவுடன் சேர்ந்து பணியாற்ற விரும்புகிறேன்.
எங்களுக்கு முழு ஆதரவு கொடுத்தமைக்கு திங்க் மியூசிக்கு நன்றி.
இந்த கடினமான காலகட்டத்தைக் கடக்க அதீத அன்பை உங்களுக்கு உரித்தாக்குகிறேன்.

இரட்டை மாஸ்க் அணிந்து கொள்ளவும், சானிட்டைசர்கள் பயன்படுத்தவும், சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும். இறையருள் நிறையட்டும்.

அன்புடன் அர்ஜூன்

எல்லா சுரங்கத்தின் முடிவிலும் ஒரு வெளிச்சம் தெரியும். சில சுரங்கங்கள் நீண்ட பாதையைக் கொண்டிருக்கும். ஆனால், ஒளி தெரிவது நிச்சயம். ’போட்டும் போகட்டுமே’, பாடல் அன்பு, நம்பிக்கை, மனஉறுதி, வலிமையை வலியுறுத்துகிறது.

உண்மையான அன்பு எல்லாவற்றையும் வெல்லும். இது உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.

லாவன்யா திரிபாதி (ஹீரோயின்)

தைரியமாக இருக்கவும்…
’போட்டும் போகட்டும்’ பாடல் அதைத்தான் வலியுறுத்துகிறது.

அன்பானவர்களை இழப்பது மிகப்பெரிய துயரம். ஆனாலும் நம்பிக்கையை இழக்கக் கூடாது. இதுவும் கடந்து போகும் என்ற எண்ணம் வேண்டும்.

இசையமைப்பாளர் சத்யா மற்றும் ஜென்

மிகக் கடினமான, துரதிர்ஷ்டமான, கொடுமையான காலகட்டத்தில் போட்டும் போகட்டும் மக்களுக்கு நம்பிக்கையை விதைக்கும் என நம்புகிறேன்.

சுரங்கத்தின் முடிவில் ஒளி இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இயக்குநர் லோகி

Actor Arjun Das in Pottum Pogattume corona awareness song

பாபா மீது ஆக்சன் எடுக்கலேன்னா மருத்துவ வசதிகளை கலைச்சிடுங்க..; இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

பாபா மீது ஆக்சன் எடுக்கலேன்னா மருத்துவ வசதிகளை கலைச்சிடுங்க..; இந்திய மருத்துவ சங்கம் கண்டனம்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

baba ramdevகொரோனா என்ற கொடிய வைரசால் எந்த வயதினராலும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

மருத்துவர்களும், செவிலியர்களும் இரவு, பகல் பாராமல் தங்கள் உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை காப்பாற்றி வருகின்றனர்.

இதனால் கொரோனா தடுப்பூசிக்கும் அது தொடர்பான மருந்துக்களுக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்தியாவின் பிரபல யோகா குரு ராம்தேவ் என்பவர், நவீன மருத்துவத்துவத்தையும், (அலோபதி) மருத்துவர்களையும் அவமதிக்கும் விதமாக பேசிய வீடியோ ஒன்று இணையங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்.. “நவீன மருத்துவமான அலோபதி மருந்துகளை சாப்பிட்டதால் தான் ஆயிரக்கணக்கானோர் இறந்து விட்டனர்

அலோபதி முட்டாள்தனமானது. ரெம்டெசிவிர், பிளாஸ்மா தெரபி் உள்ளிட்ட மருந்துகள் கொரோனாவை குணப்படுத்த இருந்து தவறிவில்லை. ” என சர்ச்சைக்குரிய வகையில் பேசி உள்ளார்.

இந்த நிலையில் பாபா ராம்தேவ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

“பாபா ராம்தேவின் கருத்துகள் பொதுமக்களை தவறாக வழிநடத்தும் வகையில் உள்ளது.

இதற்கு முன்பே அவர் சுகாதாரத் துறை அமைச்சர் முன்னிலையில் நவீன மருத்துவர்களை கொலைகாரர்கள் என பாபா பேசினார்.

பாபா ராம்தேவும், அவரது கூட்டாளி பாலகிருஷ்ணாவும் உடல்நிலை சரியில்லாத போது அலோபதி சிகிச்சை பெற்றுக்கொள்கின்றனர்.

பாபா ராம்தேவின் குற்றச்சாட்டை ஏற்று நவீன மருத்துவ வசதிகளை கலைத்துவிட வேண்டும், அல்லது அவர் மீது தொற்று நோய்கள் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும்.”

இவ்வாறு இந்திய மருத்துவ சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

Indian medical council against Baba Ramdev

இசையில் தொடங்கி திரையில் தடம் பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்

இசையில் தொடங்கி திரையில் தடம் பதிக்கும் ஸ்வாகதா கிருஷ்ணன்

தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்

swagatha krishnanஜோதிகா, விதார்த் நடிப்பில் உருவான காற்றின் மொழி படத்தில் ‘டர்ட்டி பொண்டாட்டி’, பார்ட்டி படத்தில் ஜிஎஸ்டி, ஜடா படத்தில் அனிருத்துடன் இணைந்து அப்படிப் பாக்காதடி, வஞ்சகர் உலகம் படத்தில் கண்ணனின் லீலை உள்ளிட்ட நிறைய பாடல்களைப் பாடிய ஸ்வாகதா கிருஷ்ணன் தான் திரைக்கு வரும் அந்தக் குயில்.

திரைத்துறைக்குள் ஏற்கெனவே நுழைந்துவிட்டாலும் பின்னணிப் பாடகியாக மட்டுமே உலா வந்தவர் ஸ்வாகதா. ஆனால், அவர் இசையமைத்து, பாடி, நடித்து வெளியிட்ட அடியாத்தே என்ற ஆல்பம் அவருக்கு புதிய ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.

அந்த ரசிகர்கள் அவரின் குரலுடன் சேர்த்து நடிப்புக்காகவும் கிடைத்தவர்கள்.

ஸ்வாகதா இசையமைத்து, பாடி, நடித்த அடியாத்தே பாடலை கெளதம் வாசுதேவ் மேனன், யுவன் ஷங்கர் ராஜா, ரா. பார்த்திபன், விக்னேஷ் சிவன், இயக்குனர் திரு, அசோக் செல்வன், பாடகி சின்மயி, ஹரீஷ் கல்யாண் உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.

இது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது அவர் நடிப்பில் உருவான காயல் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவிடைந்துவிட்டது.

ஜே ஸ்டுடியோஸ் ஜேசு சுந்தரமாறன் தயாரிப்பில் தமயந்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஸ்வாகதா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

சாதி மறுப்புத் திருமணத்தை எதிர்க்கும் பெற்றோர்களால், பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளைப் பற்றி பேசும் கருவைக் கொண்ட அழுத்தமான படமாக உருவாகி இருக்கிறது காயல்.

முழுக்க முழுக்க கடல் சார்ந்த இடங்களான பாண்டிச்சேரி, நாகப்பட்டினம், வேளாங்கன்னி, ராமேஸ்வரம் போன்ற பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு, படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்றுள்ளது.

பாடகி நடிகையான பின்னணி:

தான் நடிகையாக முழுமுதற் காரணம் தனது சகோதரி நடிகை மாயா என்கிறார் ஸ்வாகதா.

நடிப்பதற்கு உடலையும் மனதையும் தகுதிபடுத்திக் கொள்ளுமாறு சகோதரி சொன்னதைக் கேட்டு அதற்கானப் பணிகளில் இறங்கியிருக்கிறார்.

நடிப்பு ரீதியாக தன்னை செம்மைப்படுத்திக் கொள்ள ஆதிசக்தி லெபாரட்டரி ஆஃப் தியேட்டரில் தன்னை இணைத்துக் கொண்ட ஸ்வாகதா அங்கு பயிற்சி பெற்றார்.

பின்னர் ஆனந்த் சாமி என்ற தியேட்டர் ஆர்டிஸ்டிடமும் நடிப்பு பழகினார்.

கடந்த ஜனவரி பிப்ரவரி மாதங்களில் ஸ்வாகதா தமிழில் ஒரு படம், தெலுங்கில் ஒரு படம் என இரண்டு படங்களில் ஒப்பந்தமானார்.

அந்தவேளையில் தான், பிப்ரவரி இறுதியில் அவருக்குப் தமயந்தியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது. தமயந்தி, ஸ்வாகதாவிடம் நடிக்க விருப்பமுள்ளதா எனக் கேட்டுள்ளார். வாய்ப்பைத் தவறவிடாத ஸ்வாகதா தமயந்தியிடம் கதை கேட்டிருக்கிறார்.
ஒரு கவிஞரின் கதையில் இசைக்குயில் நடிகையாக ஒப்பந்தமான கதை இதுதான்.

பின்னர், நேரடியாக படப்பிடிப்புக்குச் சென்றுவிட்டனர். குறுகிய காலத்தில் கடலோரப் பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்தது. திரைக்குப் புதிது என்பதால் ஆரம்ப நாட்களில் சிறு பதற்றம் இருந்தாலும் தனது இயக்குநர் பக்கபலமாக இருந்தால் காயல் படப்பிடிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்ட மகிழ்ச்சியில் இருக்கிறார் ஸ்வாகதா கிருஷ்ணன்.

ஸ்வாகதா மூன்றாவதாக ஒப்பந்தமான ’காயல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முதலில் முடிந்துவிட்டது.

மற்ற இரண்டு படங்களில் படப்பிடிப்புக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்.

Singer Swagatha turns heroine

More Articles
Follows