தமிழ் சினிமா அப்டேட்ஸ் களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள Filmi Street App - ஐ டவுன்லோட் செய்யுங்கள்
தமிழ் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் இசையமைப்பாளர் அம்ரீஷ், முன்னாள் நடிகை ஜெயசித்ராவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் அம்ரீஷ்.
அண்மையில் சார்லி சாப்ளின் 2 படத்திற்கு இசையமைத்தார். இந்த படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘சின்ன மச்சான் செவத்த மச்சான்’ பாடல் சமீபத்தில் வெளியானது.
யூடியூபில் மட்டும் சுமார் 53 லட்சம் பார்வையாளர்கள் இப்பாடலைக் கண்டு களித்திருக்கிறார்கள். தனது இசையில் வெளியான சார்லி சாப்ளின் 2 படத்தின் சின்ன மச்சான் பாடல் சூப்பர் ஹிட்டானதால் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார் அம்ரீஷ்.
இப்ப தமிழ், தெலுங்குனு அரை டஜன் படங்கள் இவர் கைவசம் இருக்கு. அதுல பிரபுதேவா மாஸ்டரோட ‘யங் மங் ஜங்’கும் அடக்கம்.’
இவர் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் தேதி கீர்த்தி ஹன்ஷா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில், அம்ரீஷ் – கீர்த்தி தம்பதிகளுக்கு நேற்று மதியம் 2.20 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
Music director Amrish and Keerthi blessed with girl baby